tamilkurinji logo


 

பயணங்கள் - ”கவியன்பன்” கலாம்,Tamil kavithai Payanam

Tamil,kavithai,Payanam




பயணங்கள் - ”கவியன்பன்” கலாம்

First Published : Friday , 20th April 2012 10:26:40 PM
Last Updated : Friday , 20th April 2012 10:26:40 PM




Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303

பயணங்கள் - ”கவியன்பன்” கலாம்,Tamil kavithai Payanam

தந்தையின் விந்தும் கருவறை நோக்கித்

   தனிமையில் முதன்முதற் பயணம்

முந்தவும் பின்னே இறையருள் கொண்டு

    முயற்சியால் வென்றதும் பயணம்

பந்தென ருண்டு பக்குவத் திங்கள்

      பத்தினில் கருவறைப் பயணம்

வந்திடும் தருணம் வந்ததும் நலமாய்

     வையகம் கண்டதும் பயணம்

 

கருவறைப் பயண மிருந்ததை மறந்து

      கனவினில் மிதந்திடும் நீயும்

ஒருமுறை எழும்பித் தீர்ப்பினைக் காணும்

     உறுதியை நம்பியே மரணம்

வருவதும் பயணம்அதுவரை உலகில்

     வாழ்வதும் நிலையிலாப் பயணம்

பருவமும் மாறி வளர்சிதை மாற்றம்

     படிப்பினைக் கூறிடும் பயணம்

 

மடியினில் சாய்ந்து தாயுடன் பயணம்

    மகிழ்வுடன் தந்தையின் தோளில்

நடைதனைப் பழக்கும் நண்பனாய் வந்த

    நடைபயில் வண்டியில் பயணம்

தடைகளை யுடைத்துப் புரளவும் முயன்று

    தவழவும் வாய்த்ததும் பயணம்

விடைகளாய் அறிவும் தெளிந்திடப் பள்ளி

     வகுப்பினிற் சேர்ந்ததும் பயணம்

 

பிழைப்பினை நாடித் தாயகம் விட்டுப்

      பிரிந்ததும் சுவையிலாப் பயணம்

உழைப்பினப் பொருத்து ஊரெலாம் மாறி

     உலகினில் உழலுதற் பயணம்

தழைத்திடும் இளமைப் பருவமே எமக்குத்

     தந்திடும் துணையுடன் பயணம்

அழைத்திடும் காலம் வரும்வரை நாமும்

     அவனியில் உலவுதல் பயணம்

 

மனிதனாய் வாழ நல்வழித் தேடி

    மார்க்கமும் பயிலுதல் பயணம்

புனிதமாய்க் கருதும் புகலிடம் தேடி

     புறப்படல் அருள்நிறைப் பயணம்

இனிவரும் மறுமை இனியதாய் அமைய

   இறைவனை வழிபடும் பயணம்

கனியென நினைத்த வாழ்க்கையிற் பின்னர்

    கசந்திடும் பயணமே மரணம்!



    Tags :    
பயணங்கள் - ”கவியன்பன்” கலாம்,Tamil kavithai Payanam பயணங்கள் - ”கவியன்பன்” கலாம்,Tamil kavithai Payanam பயணங்கள் - ”கவியன்பன்” கலாம்,Tamil kavithai Payanam
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சொல்லாமலே இருந்திருப்பேன் தெரிந்திருந்தால் - உமா மலர்
உன் கைகோர்த்து நடந்த அந்த குளிர்ந்த இரவு உன் மடி சாய்ந்து உறங்க ஏங்கிய அந்த நாட்கள் உன்னை மட்டுமே நினைத்து தலையணயை கட்டி கழித்த அந்த இரவுகள் உன்னுடன் மட்டுமே செல்ல பிடித்த தொலை தூர பயணங்கள் உன் பிரிவை தாங்க முடியாமல் யாருமறியாமல் அழுத

மேலும்...

 முடிவில் ஆரம்பமாகும் பயணங்கள் ........ - துரை.ந.உ
ஒட்டு மொத்த குடும்பமும் ஒரு தோளின் மேல். தாங்கிப் பிடிக்கும் நடுகல்லாய்த் தலைமகன் நான். சன்னல் கதவுக்கு ஒன்று வாசல் காலுக்கு இரண்டென வீட்டுக்கே மூச்சுத் திணறும் கூட்டமாய்க் கூட்டுக் குடும்பம் மணம் முடித்த அவளுடன் மனம் விடுத்துப் பேசவே... வந்தவளுடன் தனிமையில் தொந்தரவின்றிப் பேசவே... வாரம் ஒன்று முழுதாய் ஆனது மண வாழ்வைத் தெடங்கவே மாதம் மூன்றுக்கும் மேலானது இயந்திர உலகில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in