tamilkurinji logo


 

பன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயில் - எம்.ரிஷான் ஷெரீப்,poem

poem




பன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயில் - எம்.ரிஷான் ஷெரீப்

First Published : Monday , 25th June 2012 07:25:09 AM
Last Updated : Monday , 25th June 2012 07:25:09 AM




பன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயில் - எம்.ரிஷான் ஷெரீப்,poem வானக் கரிய வாவியில் மின்னி நீந்திடும்
சிலவேளை
வீழ்வதாய்ப் போக்குக் காட்டும்
ஊணுண்ணிப் பட்சியென மீன்கொத்தி நிலா
மேற்கிலிருந்து கிழக்காய் நகர்ந்து நகர்ந்து கொத்திட
காலையில் செவ்வாகாயம் வெறிச்சோடிக் கிடக்கும்

இடித்திடித்துக் கொட்டிய
நேற்றின் இரவை நனைத்த மழை
உனதும் எனதுமான ஏகாந்தப் பொழுதொன்றை
நினைவுறுத்திக் கொண்டேயிருந்ததில்
அச்சமுற்றிருந்தேன் நான்

மின்சாரம் தடைப்பட்டெங்கும்
அந்தகாரம் மேவிய பொழுதில் கண்மூடி
விழித் திரைக்குள் உனையிறக்கியிருந்தேன்
உதறப்பட்ட காலத்தின் துளிகளோடு
உன் மீதான எனது சினங்களும்
ஆற்றாமைகளும் வெறுப்பும்
விலகியோடிப் போயிருக்கவேண்டும்
நினைத்துக் கொண்டேயிருந்தேன் உன்னையே

அப் பாடலைப் பாடியபடி
அச் செல்லப் பெயரால் எனை விளித்தபடி
பிரகாசத்தையள்ளி வீசுமுன் குரலையும் கேட்டேன்
அங்குமிங்குமசையும் ஊஞ்சல்
அந்தரத்தில் சரணடையும் ஆவல்
அக் கணத்து மனநிலையை என்சொல்வேன்

அகழ்வுகளுக்குள் தேடினால் அர்த்தமற்ற நம்
சச்சரவுகளின் நூலாம்படை திரண்டுகிடக்கும்
எமக்கெதிரான
எல்லாப் புழுதிகளுமெழும்பிக் கட்டிய மதிலதன்
அத்திவாரத்தில் இருவரில்
எவரது அன்பைப் போட்டு மூடினோம்

இனித் தவறியும் ஒருவரையொருவர்
நினைத்தலோ பார்த்தலோ கதைத்தலோ
ஆகாதெனும் விதியை நிறுவிச் சலனங்களை
விழுங்கிச் செறிக்க முடியாது
விழி பிதுங்கி நிற்கும் நம் துயர் பொழுதுகள்
யுகங்களாகத் தொடர
வேண்டியிருந்தோமா

பிரிவின் அன்றை
இருவரும் எப்படியோ வாழ்ந்து கடந்தோம்
சர்வமும் நிகழ்ந்து முடிந்தது பூமியில் அன்றும்
பின்வாசல் சமதரைப் புல்வெளி
நிலவின் பால் குடித்தரும்பிய
பன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயிலில்
இரவின் சாயல் துளியேதுமில்லை

- எம்.ரிஷான் ஷெரீப்



    Tags :    
பன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயில் - எம்.ரிஷான் ஷெரீப்,poem பன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயில் - எம்.ரிஷான் ஷெரீப்,poem பன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயில் - எம்.ரிஷான் ஷெரீப்,poem
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 விழியழகா? கவியழகா? - ”கவியன்பன்” கலாம்
கண்ணைப் பற்றியே கவிதையை எழுதகண்ணை மூடிநான் கணநேரம் அயரவிண்ணத் தாண்டி வந்தாய்; உன்றன்கண்ணைப் பார்த்ததில் கவிதைத் தோற்றதே!கண்ணைக் காணவே கவிதை ஊறமண்ணைக் காணுமுன் முழுநிலா வடிவம்கண்ணை விட்டும் காணோம்; என்றன்கண்ணை ஈர்த்தது கவிதைக் கண்ணே!கருவிழிப் படலம் கண்ணின் வேலாய்ஒருவழிச் செயலால் உள்ளம்

மேலும்...

 இவர்கள் வாழ்வில் ஒளி பிறப்பது எப்போது? - பி.தமிழ்முகில் நீலமேகம்
அன்றலர்ந்த புத்தம்புது மலர்கள் அனலில் தகிக்கும் கொல்லனின் உலையாய் மாறியிருந்தது- அந்தத் தொழிற்சாலை !!! – ஆம் !! இங்கே புது மலர்கள் அனல் வீசும் நெருப்புப் பெட்டிகள் தயாரிக்கின்றன !!! அதிகாலை தன் வயிற்றுப் பசிக்கு வீட்டிலிருக்கும் பழையதை ஈந்துவிட்டு

மேலும்...

 காதல் - பாலகணேசன்
கண்களாக நீ கண்ணீராக நான் தெரியாமல் கூட அழுதுவிடாதே நான் உன்னை விட்டு பிரிந்துவிடுவேன்- பாலகணேசன்

மேலும்...

 காதலால் சாதலா? - ”கவியன்பன்” கலாம்
வினோதமான இவ்வுலகைவிட்டு நீ விடை பெற்றவினோதினி,மனசாட்சி உள்ளவர்களின்மனத்தினில் ஆட்சி புரிகின்றாய், நீ!உன் மீது வீசப்பட்ட அமிலத்தால்உன் உடல் கருகியது போலவெஉள்ளார்ந்த பாசமுடையோரின்உள்ளங்களும் வெந்தனவே...!ஒருதலைக் காதலுக்குதறுதலைகளின் விடையாகஅமிலத்தை வீசென்றுஉமிழ்ந்து சொன்னதுஉலகச் சினிமா தானேசீரழிக்கும் சினிமாவால்ஊரழிந்து போகு முன்புவழிகளை அடைத்திடும்வழிகள் அரசின் வழியேபழிகள் பெருகிடாமல் விழிப்பீர்!பெற்றவர்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in