tamilkurinji logo


 

பத்திக்கிட்டு எரியும் பெட்ரோல் பிரச்சனை - சுழல் நாகராஜ்,
பத்திக்கிட்டு எரியும் பெட்ரோல் பிரச்சனை - சுழல் நாகராஜ்

First Published : Thursday , 31st May 2012 03:09:47 AM
Last Updated : Thursday , 31st May 2012 03:16:28 AM
பத்திக்கிட்டு எரியும் பெட்ரோல் பிரச்சனை - சுழல் நாகராஜ், இன்றைய மக்கள் தங்களின் போக்குவரத்துக்கு பெரும்பாலும் பயன்படுத்தும் வாகனங்களாக டூவிலரும்,காரும் உள்ளன. அதுவும் டூவீலர் இல்லாத குடும்பங்களே இல்லையெனக்கூறலாம். ஆதலால் பெட்ரோலின் தேவைப்பாடு அதிகரித்துள்ளது. ஆனால் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போவதால் எல்லோருக்கும் டீசல் கார்களை வாங்கும் எண்ணம் வந்துவிட்டது. எனவே இனி வரும் மாதங்களில் டீசல் சப்ளையை விஞ்சி தேவை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பெட்ரோல் கார்களைவிட டீசல் காரின் விற்பனை அதிகரித்துள்ளது.

டீசல் பயன்பாடு எல்லை மீறி அதிகரிக்கும் நிலை உருவாகி உள்ளதால் எதிர்காலத்தில் டீசல் பற்றாக்குறை ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒரு லிட்டர் டீசல் விற்பனையில் ரூபாய். 13.50 வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்பது இந்த இடத்தில் நினைவு கூற வேண்டும்.

ஆக டீசல் விற்பனை அதிகரிக்க அதிகரிக்க பொதுத்துறை நிறுவனங்களின் வருவாய் இழப்பும் அதிகரித்துக் கொண்டே போகும். இதனால் மத்திய அரசின் மானியச் சுமையும் கடுமையாக உயர்ந்து நிதிப் பற்றாக்குறையும் அதிகரித்து விடும். என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே மத்திய அரசு டீசல் பயன்பாடு அதிகரிக்கும் போது டீசல் விலையை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். அப்போழுது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து மக்கள் சிரமத்திற்கு ஆளாகக் கூடும். எனவே மத்திய அரசு பெட்ரோலின் விலையேற்றத்தைக் கட்டுபடுத்தி டீசல் மற்றும்  பெட்ரோல் விலையின்   மாறுபாடு அதிகம் இல்லமல் இருந்தால் பெட்ரோலின் உபயோகம் அதிகமாய் விடும்.

இது இப்படியிருக்க பெட்ரோல் கிணறுகள் வேறு வறண்டு வருவாதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெட்ரோல் இன்னும் எத்தனை நாளைக்கு?

உலகம் முழுவதும் இது வரை கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வளத்தையும் அதன் சாராசரி உற்பத்தியையும் ஒப்பிட்டுப் பாக்கும் போது இன்னும் 40 வருடங்களுக்கு எண்ணெய் கிடைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

உலகம் எங்கும் சுமார் 1.24 லட்சம் கோடி பீப்பாய் எண்ணெய் இருப்பு உள்ளது. இதில் சவுதி அரேபியா 21.03 சதவீதமும் ஈரான் 11.2 சதவீதமும் இருப்பு வைத்துள்ளன. பெட்ரோல் உற்பத்தியில் சவுதி அரோபியா முன்னிலையில் உள்ளது.

உலகம் முழுவதும் உற்பதியாகும் மொத்த பெட்ரோலில் 25%அமெரிக்கா பயன்படுத்துகிறது. சீனா 9.3 %, ஜப்பான் 5.8%, இந்தியா 3.3%, ரஷ்யா 3.2%, ஜெர்மனி 2.8 %, பிரேசில் 2.4 % என்ற கணக்கில் பெட்ரோல் பயன்படுத்தப்படுகின்றன. வறண்டு வரும் பெட்ரோல் கிணறுகளை மனதில் வைத்து மாற்று எரிபொருள் சக்தி கண்டுபிடித்தால் தான் இனிவரும் சந்ததியர்களுக்கு மோட்டர் வாகனங்களின் பயன்பாடு இருக்கும். இல்லையென்றால் நம் மூதையர்கள் போல் இனிவரும் சந்ததியர்களும் மாட்டு வண்டிகட்டித் தான் அலுவலகம் போகவேண்டியது வரும்.    Tags :    
பத்திக்கிட்டு எரியும் பெட்ரோல் பிரச்சனை - சுழல் நாகராஜ், பத்திக்கிட்டு எரியும் பெட்ரோல் பிரச்சனை - சுழல் நாகராஜ், பத்திக்கிட்டு எரியும் பெட்ரோல் பிரச்சனை - சுழல் நாகராஜ்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மனஅழுத்தத்தை விரட்டி எப்போதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்
எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு நம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் சந்தோஷத்தை எப்படி ஏற்படுத்தி கொள்வது என்பதைத் தான் நாம் சரியாக புரிந்து கொள்வதில்லை. அதனால் தான்  நமக்குள்ளேயே இருக்கிற சந்தோஷத்தை வெளியே தேடிக்கொண்டிருக்கிறோம்எப்போதும் சந்தோஷமாக, சிரித்துக் கொண்டு

மேலும்...

 தீபாவளி --- சிந்தனைக்குச் சில வினாக்கள்!!
இரண்யாட்சதன் பூமியை பாயாகச் சுருட்டினான் என்றால், பக்தத் தமிழா! அந்தப் பூமி தமிழ்நாடு மட்டுமா? அல்லது ஆந்திரா, கேரளா, கருநாடகம் இணைந்த திராவிட நாடு மட்டுமா? அல்லது அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இணைந்த பாரத புண்ணிய பூமியாம் இந்திய நாடு

மேலும்...

 எச்சரிக்கை - தெரியாத நம்பர்ல இருந்து மிஸ்டு கால் வந்தா கூப்பிடாதீங்க
மிஸ்டுகால் கொடுத்து அந்த எண்ணை தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களின் ரகசியங்களை திருடி மோசடியில் ஈடுபடும் நைஜீரியர்களை பிடிக்க சர்வதேச போலீசாரின் உதவியை தமிழக போலீசார் நாடி உள்ளனர். தகவல் தொழில் நுட்பம் வளர்ந்து வருகிறது. அதற்கேற்ப செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேலும்...

 எதிர்கால இளைஞர்கள் அடிமைகளாக…… - Selvignairu
கற்கை நன்றே கற்கை நன்றேபிச்சை புகினும் கற்கை நன்றேஎன்ற பழந்தமிழ்ப் பாடல் கூட பிச்சை எடுத்தாவது கற்க என்று சொல்லியுள்ளதே தவிர கடன் வாங்கியேனும் கற்க என்று சொல்லவில்லைபிச்சை எடுப்பவன் திரும்ப செலுத்த வேண்டியதில்லைஆனால் கடன் வாங்கியவன் திரும்பக் கொடுத்தே ஆகணும்இலவசமாக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in