tamilkurinji logo
 

பணம் சேர்க்க சிறந்த வழி என்ன?,


பணம் சேர்க்க சிறந்த வழி என்ன?

First Published : Tuesday , 24th February 2009 03:07:34 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM




Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303

பணம் சேர்க்க சிறந்த வழி என்ன?,



பணம் தேவைப்படாதவர்கள் இந்த உலகத்தில் யாருமே இருக்க முடியாது. அப்படி யாரும் இருந்தால் இதைத் தொடர்ந்து படிக்காது வேறு வேலை இருந்தால் பாருங்கள். ஏனென்றால் பணத்தைப்போலவே நேரமும் பொன்னானது. சரி இனி பணம் தேவைப் படுபவர்கள் தொடர்ந்து படியுங்கள்.

பணம் சம்பாதிக்க ஒரு வழி வேலை செய்வது ..நன்றாகக் கவனியுங்கள் பணம் சம்பாதிக்கத்தான் . பணம் சம்பாதிப்பது என்பது வேறு பணம் சேர்ப்பது அல்லது சேமிப்பது என்பது வேறு.

பணம் சம்பாதிக்க நம்மில் பலர் ஒன்ரிற்கு மேலான வேலை ..வீட்டில் வேலை வெளியில் வேலை என்று வேலை வேலை என்றே ஓடித்திரிவார்கள். இறுதியில் மிஞ்சியது என்ன என்றால்..? அவர்களும் மேற்கூரையைப்பார்த்து எங்களைப் போலவே யோசிப்பார்கள். நானும் உங்களைப் போலவே தான்.

இத்தனை காலங்கள் உழைத்தது என்னாயிற்று என்று ..என்னால் இன்று வரை கண்டு பிடிக்கவே முடியவில்லை. ஒவ்வொரு வருட வக்கேஷனிலும் (vaccation) நாடு நாடாகத் தேசாந்திரியாகச் சுற்றியதில் ஆகட்டும் , ஆள் பாதி ஆடை பாதி என்று யாரோ சொன்ன தத்துவத்தை சிரமேற்கொண்டு டீக்காக உடுத்தி சிங்காரித்துத் திரிந்ததில் ஆகட்டும், நண்பர்களுடன் சேர்ந்து ..அவன் அவன் தான் ..என்ற புகழ் மொழிக்கு மயங்கி பணத்தை அள்ளி விட்டுச் செலவழித்ததில் ஆகட்டும்.. இன்று வரை நாம் சொந்தமாக நாமாக வாழ்ந்திருக்கின்றோமா என்ற கேள்விக்கு எப்போதாவது பதில் தெரியக்கூடுமாயின் ..சிலவேளை கடந்த காலங்களின் காரியங்களுக்கு செலவுக்கணக்கு சரியாய் இருக்கலாம்.

செலவுக்கணக்குகளே கடந்த காலங்களை நிரப்பும் போது எப்படி சேமிப்பு இருக்கக் கூடும். சேமிப்பு மட்டுமா..? சேமிப்புத் தரும் எதிர்காலப் பாதுகாப்பு.. மன நிம்மதி...

காலங் கடந்தாயினும் சேமிப்பு என்னும் எண்ணம் மனதில் இழையோடுவதே பெரிய காரியம்... இல்லையென்றால் இவ்வாறு குந்தியிருந்து அதைப்பற்றியே மணிக்கணக்காகா..நாட்கணக்காக சிந்தித்துக் கொண்டிருந்திருக்க என்னால் முடிந்திருக்குமா..?

சிந்தித்ததனால்தானே நானும் பணமும் கட்டிப்புரண்டு அடித்துக் கொண்ட இந்த சுவாரஷ்யமான கதையே உருவாகியிருக்கின்றது....

முன்னுரை இத்துடன் போதும் என்று நினைக்கின்றேன்.. இன்னும் தொடர்ந்தால் உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் போரடிக்க ஆரம்பித்து விடும்.. ஏனெனில் என்னால் இவ்வளவு சீரியஸ் ஆக எப்போதும் எழுத முடிவதில்லை..

(தொடரும்)

இவரது மற்ற பதிவுகளைக் காண :காசே தான் கடவுளடா



    Tags :    
பணம் சேர்க்க சிறந்த வழி என்ன?, பணம் சேர்க்க சிறந்த வழி என்ன?, பணம் சேர்க்க சிறந்த வழி என்ன?,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கேமரா முன்பு குழந்தை பெற்ற ஸ்வேதா மேனன் - வீடியோ
கேமரா முன்பு குழந்தை பெற்ற ஸ்வேதா மேனன் - வீடியோ பார்க்க இங்கே கிளிக்கவும்

மேலும்...

 ஹிந்து பத்திரிக்கையில் என்னை பாராட்டி வந்தக்கட்டுரை
இன்று ஹிந்து பத்திரிக்கையில் என்னைப்பற்றி ஒரு கட்டுரை வந்துள்ளது. காரணம் உலகசினிமா. ஆயிரக்கணக்கான சதுர அடியில் ஆடம்பரமான உள் அலங்காரங்கள் எதுவுமின்றி ஒரு பொட்டிக்கடை போன்று பத்துக்கு பத்தில் கடை நடத்தி வரும் எனக்கு இவ்வளவு பெரிய பாராட்டா !!!!!!!!!!!!!!!!! நான் ஒரு கதை சொல்லி. என்னிடம்

மேலும்...

 அன்புள்ள இயக்குனர் பாலா அவர்களுக்கு…
அன்புள்ள இயக்குனர் பாலா அவர்களுக்கு, உங்களின் படங்களை எப்போதும் ஆவலுடன் எதிர்பார்த்து ரசிக்கும் பல ரசிகர்களில் நானும் ஒருவன். நான் அதிகம் ரசிக்கும் தலைவர் படத்திற்கு அடுத்த படியாக இருக்கும் படங்கள் உங்கள் படங்கள் தான். எப்போது உங்கள் படம் அறிவிப்பு வந்தாலும்

மேலும்...

 விந்துக்குள் விந்தை - நிலா மலர்கள்
இறைவனுடைய படைப்பில் எல்லாமே அதிஅற்புதமும் விந்தைகளும் நிறைந்தது, அதில் விந்து ஒரு விந்தையானது, இதைத்தான் இறைவன் கூறுகிறான் உன் பிறப்பை பற்றி நீ சிந்தித்தால் என்னைப் பற்றி அறிந்துக் கொள்வாய் என்று கூறுகிறான். இதில் ஆழமான அர்த்தம் உள்ளது.மனிதன் செழுத்தும் ஒரு சொட்டு விந்தில் பல்லாயிரக் கணக்கான

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in