tamilkurinji logo


 

நல்ல காலம் பொறந்திடுச்சி,




நல்ல காலம் பொறந்திடுச்சி

First Published : Wednesday , 4th August 2010 02:46:33 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM




Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303

நல்ல காலம் பொறந்திடுச்சி, குடிசை வீடுகள் எல்லாம் கோபுரங்களாக மாறப் போகின்றன‌
விலைவாசி உயர்வு குறையப் போகிறது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலையும் குறையப் போகிறது.
காவிரியில் இனி தண்ணீர் வற்றாமல் ஓடும்
முல்லைப் பெரியார் அணையின் உயரம் உயர்த்தப்படும்
இலங்கை தமிழர் பிரச்சனை முடிவுக்கு வந்து விடும்....
ஆம், தமிழர்களின் தன் மானம் காக்க,தமிழனின் கொடி உலகெங்கும் கொடிகட்டி பறக்க‌
இந்தியாவிலேயே முதன் முறையாக பாலிவுட்டுக்கு சவால் விடும் வகையில் ரூ.150 கோடியில், நமது தமிழக முதல்வர் கூட வாழ்த்து செய்தி அனுப்பிய,
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் எந்திரன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் நிர்வாகத் தலைநகர் கோலாலம்பூருக்கு வெளியே அமைந்துள்ள புத்ரஜெயா சர்வதேச கன்வென்சன் மையத்தில் நடந்துள்ளது.

அவதார், டெர்மினேட்டர் போன்ற படங்களுக்கு அனிமேட்ராக்ஸ் செய்த அமெரிக்காவில் உள்ள ஸ்டான்வின்ஸ்டைன் என்னும் ஸ்டுடியோவில் எந்திரன் பட அனிமேட்ராக்ஸ் வேலைகள் நடந்து வருகிறது.

ஊடகங்களுக்கு ஒரு மாதத்திற்கான தீனி கிடைத்து விட்டது.
எந்திரன் ஜெயிக்குமா? தோற்குமா? படத்தின் ஹைலைட் யார் ரஜினியா,ஐஸ்வர்யாவா?
ஏ.ஆர் ரகுமானின் இசை நன்றாக வந்திருக்கிறதா?
பன்ச் டயலாக் என்ன? அரசியலுக்கு ரஜினி வருவது போன்ற வச‌னமோ, சமிக்சையோ, இந்த படத்தில் இருக்கிறதா?‌ என்று எதையாவது எழுதி அல்லது ஒளிபரப்பி மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துவார்கள்.

தினகரனும், சன் குழுமத்தின் நான்கு மாநில மொழி அலைவ்ரிசையும்,ஒரு படி மேலே போய் எந்திரன் படத்தின் இசை வெளியானதிலிருந்து மக்கள் சமைத்து சாப்பிடுவதைக் கூட மறந்துவிட்டதாக செய்தி ஒளிபரப்புவார்கள்.

முதல் பத்தியை மீண்டும் படியுங்கள். இன்னுமா உங்களுக்கு விளங்கவில்லை நல்ல காலம் பொறந்திடுச்சி ஆம், தமிழர்களின் தன் மானம் காக்க,தமிழனின் கொடி உலகெங்கும் கொடிகட்டி பறக்க உதித்துவிட்டான் எந்திரன் மன்னிக்கவும் உதித்துவிட்டார் எந்திரன். நான் மிகைப்படுத்தி சொல்வதாக எண்ணினால் 1.08.2010 தினகரன் நாளிதழைப் பார்க்கவும்

- பிரகாஷ் ஜோ



    Tags :    
நல்ல காலம் பொறந்திடுச்சி, நல்ல காலம் பொறந்திடுச்சி, நல்ல காலம் பொறந்திடுச்சி,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பணிவோம், உயர்வோம்!
பிறர் தவறு செய்தால், ஏன் இப்படி செய்தார் என்று சிந்தித்து நேரத்தை வீணாடிக்கக் கூடாது.சோர்வடைந்து காணப்படும் எவரையும் பார்த்து ஏன் உடல்நலம் சரியில்லையா? என்ன ஆயிற்று என்றெல்லாம் கேட்கக் கூடாது.பிறர், உங்களுக்குச் செய்யும் உதவிகளை மனதில் வைத்து நன்றி பாராட்டுங்கள்.யாரிடமும் சம்பளம்

மேலும்...

 மனஅழுத்தத்தை விரட்டி எப்போதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்
எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு நம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் சந்தோஷத்தை எப்படி ஏற்படுத்தி கொள்வது என்பதைத் தான் நாம் சரியாக புரிந்து கொள்வதில்லை. அதனால் தான்  நமக்குள்ளேயே இருக்கிற சந்தோஷத்தை வெளியே தேடிக்கொண்டிருக்கிறோம்எப்போதும் சந்தோஷமாக, சிரித்துக் கொண்டு

மேலும்...

 திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்
 எப்போதும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும் பெண்கள் கூட திருமணத்திற்கு பிறகு சதை போட்டு விடுகிறார்கள்.ஏன் ஒரு பெண் திருமணம் ஆன பிறகு மட்டும் குண்டாகிறாள்? இதற்காக ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 10 வருடங்களாக

மேலும்...

 முதுமை பற்றிய பொன் மொழிகள்
மூப்பை வெல்ல உண்மையான வழி, உள்ளத்தின் இளமையை போற்றிப் பாதுகாப்பதே.முதுமை எய்துவது ஒரு கெட்டப் பழக்கம். வேலையில் முனைந்திருக்கும் மனிதனுக்கு அதற்கு அவகாசம் இல்லைஇலக்கியங்கள் இளமையில் உற்சாகத்தையும், முதுமையில் மகிழ்ச்சியும் கொடுக்கின்றன.முதுமையை முன்னிட்டு முன்னதாகச் செய்யும் பாதுகாப்புகளில் சிறந்தது கல்வி.வாழ்நாட்களின் இனிய

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in