tamilkurinji logo


 

"தேசியம் வெங்காயம்" - K.R.P.செந்தில்,




"தேசியம் வெங்காயம்" - K.R.P.செந்தில்

First Published : Wednesday , 28th January 2009 11:29:35 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM




Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303

என்னால் எந்த செய்தியையும் படிக்க முடியவில்லை ..

ரத்தம் கொதிக்கிறது , இந்திய அரசாங்கத்தின் துணையோடு ஸ்ரீலங்கா அரசாங்கம் நடத்தும் படுகொலைகளை பற்றிய செய்திகள் கண்ணில் ரத்தம் வர வைக்கிறது,

விடுதலைப்புலிகள் என்ன செய்கிறார்கள் ?

எதற்காக இன்னும் பின் வாங்குகிறார்கள் ?

உண்மையில் அவர்களின் பலம் குறைந்துவிட்டதா?

இந்த கேள்விகள் ஒருபுறம் இருக்க, தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அடிக்கும் கூத்து... தாங்கமுடியலே ... என் உறவுகள் படும் அவலம்கண்டு சாப்பிடவே முடியவில்லை... இதற்கு முடிவுதான் என்ன... ?

அட தமிழ்நாட்டு அறிவிலிகளே .. விடுதலைப்புலிகளை பற்றி அவதூறு பேசும் மடையர்களே ... அவர்கள் எதற்காக ஆயுதம் ஏந்தவேண்டும் ... எத்தனையோ வாய்ப்பு கிடைத்திருக்கும்.... ஐரோப்பிய நாடுகளில் அவர்கள் சொகுசாக வாழ ...

அதனைவிடுத்து எதற்காக உயிரைகொடுத்து போராட வேண்டும் .. அந்த சகோதர, சகோதரிகளுக்கும் நம்மைபோல் வாழ ஆசை இருக்காதா என்ன?

திரு.ராஜிவ்காந்தி அவர்களின் படுகொலையில் இன்னும் அவிழ்க்கபடாத மர்மங்கள் இருப்பதாக செய்திகள் வரும்போது அதையெல்லாம் காங்கிரஸ்காரன் படிக்கிறது இல்லையா?

நானும் ஒரு காங்கிரஸ் குடும்பத்திலிருந்து வந்தவன்தான் ... அதற்காக கண்ணைமூடிக்கொண்டு எதைவேண்டுமானாலும் பேசலாமா.. ஒரு இன உணர்வு வேண்டாம் .. நமக்கெல்லாம் சொரணை வேண்டாம்..

அட இலங்கையில் தமிழன் தனிநாடு கேட்கிறது தப்புன்னே வச்சுக்குவோம்.. அவங்களுக்குள்ளே அதை தீர்மானித்துக்கொள்ள விடவேண்டியத்தானே.. இந்திய அரசாங்கத்துக்கு தலையிட உரிமை இருக்குன்னு சொன்னா ... ரெண்டு பக்கமும் நடுநிலையா பேசு..

பாகிஸ்தான் கிட்ட பேச வக்கு இல்லாத .. காங்கிரஸ்காரன் இலங்கைக்கு மட்டும் ஏன் ஓடி.. ஓடிப்போய் உதவுரே ...

இலங்கை தமிழனின் பூர்வீக நாடு .. சிங்களன் வந்தேரியவன் ...

தமிழ்நாட்டு மக்களே .... தமிழனுக்காக அழவேண்டாம் ...... மனிதநேயம் கொண்டு பாருங்கள் ....

மக்களே இப்படியே விட்டோம்ன்னு வச்சுக்கோங்க... அப்புறம் நாமளும் சொந்த நாட்டுலேயே பிச்சைதான் எடுக்கணும்...

சுதந்திர போராட்ட காலம் தொட்டு இன்றுவரை இந்திய இறையாண்மைக்கு தமிழனால ஏதாவது பாதிப்பு வந்திருக்கா?

கர்நாடகா தண்ணி தரமுடியாதுன்னு சொல்றான் .. கேரளாகாரன் கடலுக்கு போனாலும் போகலாம், ஆனா தமிழ்நாட்டுக்கு தரமட்டோம்ன்னு சொல்றான். ஆனா நம்மால ஹோகனேக்கல் திட்டத்தக்கூட நிறைவேத்த முடியல.. இவ்வளவிற்கும் அது நம்ம எடத்துல இருக்கு...

தயவு செய்து வரும் தேர்தலில் காங்கிரஸ் ,தி.மு.க. , ௮.தி.மு.க. ,தே.மு.தி.க, பா.ம.க போன்ற காட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள்....

இவர்கள் நம்மையும் அடகு வைத்துவிடுவார்கள் ....

தமிழனை அழிக்க இந்தியாவே ஆயுதம் அனுப்பும்போது ... தேசியமாவது ... வெங்காயமாவது.....

இக்கட்டுரை பற்றிய தங்கள் விமர்சனங்களை பதிவு செய்ய : வாசகர் கருத்து

**கட்டுரைகளில் இடம் பெறும் கருத்துக்கள் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்தே தவிர தமிழ்குறிஞ்சியின் கருத்தல்ல.



    Tags :    
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பணிவோம், உயர்வோம்!
பிறர் தவறு செய்தால், ஏன் இப்படி செய்தார் என்று சிந்தித்து நேரத்தை வீணாடிக்கக் கூடாது.சோர்வடைந்து காணப்படும் எவரையும் பார்த்து ஏன் உடல்நலம் சரியில்லையா? என்ன ஆயிற்று என்றெல்லாம் கேட்கக் கூடாது.பிறர், உங்களுக்குச் செய்யும் உதவிகளை மனதில் வைத்து நன்றி பாராட்டுங்கள்.யாரிடமும் சம்பளம்

மேலும்...

 மனஅழுத்தத்தை விரட்டி எப்போதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்
எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு நம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் சந்தோஷத்தை எப்படி ஏற்படுத்தி கொள்வது என்பதைத் தான் நாம் சரியாக புரிந்து கொள்வதில்லை. அதனால் தான்  நமக்குள்ளேயே இருக்கிற சந்தோஷத்தை வெளியே தேடிக்கொண்டிருக்கிறோம்எப்போதும் சந்தோஷமாக, சிரித்துக் கொண்டு

மேலும்...

 திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்
 எப்போதும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும் பெண்கள் கூட திருமணத்திற்கு பிறகு சதை போட்டு விடுகிறார்கள்.ஏன் ஒரு பெண் திருமணம் ஆன பிறகு மட்டும் குண்டாகிறாள்? இதற்காக ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 10 வருடங்களாக

மேலும்...

 முதுமை பற்றிய பொன் மொழிகள்
மூப்பை வெல்ல உண்மையான வழி, உள்ளத்தின் இளமையை போற்றிப் பாதுகாப்பதே.முதுமை எய்துவது ஒரு கெட்டப் பழக்கம். வேலையில் முனைந்திருக்கும் மனிதனுக்கு அதற்கு அவகாசம் இல்லைஇலக்கியங்கள் இளமையில் உற்சாகத்தையும், முதுமையில் மகிழ்ச்சியும் கொடுக்கின்றன.முதுமையை முன்னிட்டு முன்னதாகச் செய்யும் பாதுகாப்புகளில் சிறந்தது கல்வி.வாழ்நாட்களின் இனிய

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in