tamilkurinji logo


 

திருட்டின் திறவுகோல் இருட்டு!!,




திருட்டின் திறவுகோல் இருட்டு!!

First Published : Monday , 9th April 2012 12:51:09 AM
Last Updated : Monday , 9th April 2012 12:51:09 AM




திருட்டின் திறவுகோல் இருட்டு!!,

ஏன்மாற்ற மில்லையென்று வாக்க ளித்தால்
      ஏமாற்றம் தானிங்கு மிச்ச மாச்சு
தான்மட்டும் வாழ்வதற்கு வசதி யெல்லாம்
      தாராளம் செய்துகொண்டத் தனியார் வர்க்கம்
வான்முட்டும் விலைவாசி ஏற்றம் கண்டோம்
       வாக்குறுதி மட்டும்தான் தூங்கக் கண்டோம்
நான்மட்டும் சொல்லவில்லை நாடே சாட்சி
      நாடோறும் மின்வெட்டால் காணும் காட்சி

திருடனுக்குத் திறவுகோலாய் இருட்டே ஆச்சு
      தமிழகமே திருந்தாமல் இருட்டின் ஆட்சி
தருவதெல்லாம் விலையில்லாப் பண்ட மென்றால்
      தந்திடுக மின்சாரம் மட்டும் போதும்
வருவதெல்லாம் எங்கேதான் மூழ்கிப் போச்சு
      வளமில்லா நாடென்றா வாகிப் போச்சு?
ஒருவருக்கும் வாக்குரிமை அறியா நாட்டில்
       உள்ளளவும் தமிழகமும் வறுமைக் கோட்டில்

-”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்



    Tags :    
திருட்டின் திறவுகோல் இருட்டு!!, திருட்டின் திறவுகோல் இருட்டு!!, திருட்டின் திறவுகோல் இருட்டு!!,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in