tamilkurinji logo


 

தியாகம்,Tamil kavithai

Tamil,kavithai




தியாகம்

First Published : Wednesday , 21st November 2012 02:17:05 AM
Last Updated : Wednesday , 21st November 2012 02:17:05 AM




தியாகம்,Tamil kavithai தீயகம் களைவதே
....தூயநல் தியாகமாம்
ஐயமில் விருப்பமும்
....ஆங்குதான் உதயமாம்

சோம்பலின் எதிரியாம்
....சொர்க்கத்தைத் தருவதாம்
காண்பதில் அரியதாம்
....கர்ப்பத்தில் உரியதாம்

தூய்மையின் பிறப்பிடம்
....தியாகத்தின் உறைவிடம்
தாய்மையின் சிறப்புதான்
....தரணிக்கே முதலிடம்

விழுப்புண் போலவே
...வியர்வை விழவே
உழைக்கும் தந்தையும்
....உயர்வின் தியாகி


தோணியாய்க் கரைசேர்க்கத்
...தோழமையின் உணர்வுடன்
ஏணியாய் இருந்தார்கள்
....ஏற்றிவிட்ட தியாகிகள்

வானத்தின் தியாகமதை
....வடித்துவைக்கும் மேகமழை
தானத்தின் செடிகளெலாம்
....தியாகவிதை வீசியதே

பசித்தவரின் துயரத்தைப்
....பசித்திருக்கும் பயிற்சியினால்
ருசித்துணரும் தியாகத்தை
.....ருசித்தவர்தான் உணர்ந்திடுவர்

இறையின் கட்டளை
....இறுதிக் கடமையை
முறையாய்ச் செய்வதும்
....முழுமைத் தியாகமே

-- ”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்



    Tags :    
தியாகம்,Tamil kavithai தியாகம்,Tamil kavithai தியாகம்,Tamil kavithai
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முகவரிகள்
தாயின் தேகம்தூயநல் தியாகம்மேயும் கருவறைஆயுளின் முகவரிதந்தை காட்டும்விந்தை ஊட்டும்சிந்தனை வழிகள்சிறப்பின் முகவரிகள்அகரம் கற்பித்துஅகிலம் காண்பித்தஆசானின் இதயம்சிகரத்தின் முகவரிஉயிர்ப்போல் ஒட்டிபயிர்போல் வளர்க்கும்உற்ற நண்பன்பற்றின் முகவரிதொழிலிலும் வணிகத்திலும்எழிலுடன் ஏற்றம்பெறமொழிப் புலமைவிழித்திரை முகவரிதாய்க்குப் பின்னர்வாய்த்திட்ட அர்ப்பணிப்பில்மனைவி என்பவள்துணையாய் முகவரிபேர்சொல்லப் பிள்ளையாய்ஊர்சொல்லி வாழ்த்திடவேபெயருடன் இணையும்பிள்ளைகள் முழு முகவரிகள்வீடும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in