tamilkurinji logo


 

"தமிழீழம்" ஒரு பார்வை - K.R.P.செந்தில்,
"தமிழீழம்" ஒரு பார்வை - K.R.P.செந்தில்

First Published : Friday , 16th January 2009 05:21:34 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM
தற்போதைய இலங்கை நிலவரம் யாருக்கும் மிகச்சரியாக தெரியாத சூழ்நிலையில் , செய்திகளில் நாம் அறியும் நிலவரம் மிகுந்த கவலை அளிக்கிறது , விடுதலைப்புலிகளை எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு சிங்கள அரசாங்கத்துக்கு ஆதரவு தரும் காங்கிரஸ் அரசாங்கம் மனிதபிமான அடிப்படையில்கூட வாய்திறக்க மறுக்கிறது.

ஆறரைகோடி தமிழ்நாட்டு மக்கள் உள்ளக்குமுறலை வெளிக்காட்ட முடியாமல் தவிக்கிறார்கள் ,விடுதலை சிறுத்தைகள் தலைவர் திரு. திருமாவளவன் அவர்கள் சாகும்வரை உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.

தமிழீழ மக்களுக்கு ஆதரவாக போராட இந்த வழிமுறையை மட்டுமே கடைபிடிக்கக்கூடிய நிர்பந்தத்தை அரசாங்கம் நமக்கு ஏற்படுத்தி விட்டது (இல்லை என்றால் திரு.சீமான் மற்றும் கொளத்தூர் மணி மாதிரி மற்றவர்களும் கம்பி என்னவேண்டும் அல்லவா ).

ஆனால், திருமாவின் போராட்டத்துக்கு ஒருவேளை அரசு செவிசாய்க்காமல் போகுமே ஆனால் நிலைமை என்ன ஆகும் என நினைக்கையில் பெரும் கவலையாக இருக்கிறது. தமிழக முதல்வர் விரைந்து ஒரு நல்லமுடிவை எட்டவேண்டும் , மேலும் திருமா அவர்களை சமாதனப்படுத்தி உண்ணாநிலையை கைவிடசொல்லவேண்டும்.

புலிகளின் போர்த்தந்திரம் உலகம் அறிந்த ஒன்று , அவர்கள் மரணத்தை வென்றவர்கள் ,நிச்சயம் இது தமிழீழம் அடைவதற்கான இருதிப்போராகத்தான் இந்த போர் அமையும் , இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இலங்கை இராணுவம் பெருத்த உயிர் இழப்புகளை சந்தித்தபின்னும் மீதம் உள்ளவர்களையாவது பாதுகாக்காமல் முல்லைத்தீவை கைப்பற்றியே தீருவேன் என்று கொக்கரிக்கிறது , என்னை பொறுத்தவரை மனித உயிர்கள் (அது சிங்களனோ ,தமிழனோ ) முக்கியம் வன்முறை எப்போதும் தீர்வு ஆகாது அது மென்மேலும் வளர்ந்து ஆரம்பித்தவனையே அழித்துவிடும் அப்படியொரு நிலைமைதான் இலங்கைக்கு வந்திருக்கிறது.

எப்படியிருந்தாலும் இந்த விடுதலை போராட்டத்தின் மூலகாரணம், இந்தியா தமிழர்களுக்கு ஆரம்பத்தில் கொடுத்த ஆதரவுதான். ஆனால், அதே இந்தியா இப்போது சிங்கள அரசாங்கத்துக்கு எல்லாம் கொடுக்கிறது . தமிழர்கள் நம் தொப்புள்கொடி உறவுகள் , நாளை தனிநாடு ஒன்று உருவானால் அவர்கள் இந்தியாவுக்கு ஆதரவாகத்தான் இருப்பார்கள். ஆனால், நிச்சயம் இலங்கை அரசால் நமக்கு எப்போதும் தலைவலிதான்.

ஒருவேளை தமிழீழம் அடைந்தபின் சிங்கப்பூர் அரசாங்கம் அமைந்தபோது திரு .Lee kuan yew அவர்கள் எடுத்த அமெரிக்க ஆதரவைபோல் புலிகளும் எடுத்தால் அதுவும் இந்தியாவுக்கு பெருத்த பின்னடைவாகத்தான் இருக்கும்.

திரு.ராஜீவ் காந்தி அவர்களின் படுகொலை ஒன்றை மட்டுமே காரணம் காட்டுவது , தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு உதவாது.

இந்தியா பாகிஸ்தான் அரசாங்கத்தால் சந்திக்கும் எண்ணற்ற பிரச்சினைகள் ,இழப்புகள் இவற்றிற்கெல்லாம் இன்றுவரை வெறும் அறிக்கை மட்டுமே வெளியிடுகிறோம், சமீபத்திய மும்பை தாக்குதல்களில் எத்தனைபேரை நாம் இழந்திருக்கிறோம்.

திருமதி .இந்திராகாந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டபோது எத்தனை அப்பாவி சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

இதெல்லாம் சாதரணமாக போய்விட்டது ஆனால், அரசாங்கத்தை கையில் வைத்திருக்கும் தெம்பில் புலிகளை அழிக்க உதவுவதாக நினைத்துக்கொண்டு, அப்பாவிகள் சாவதை அனுமதிப்பது நல்லதில்லை.

எதிர்காலத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் என்றொரு கட்சி இல்லாமல் போய்விடும். இன்னும் சிலமாதத்தில் தேர்தலை சந்திக்கபோகும் காங்கிரஸ் இப்போதாவது திருந்தாவிடில் ஒரு ஓட்டுகூட அவர்களுக்கு கிடைக்கபோவதில்லை.

எனவே மதிப்பிற்குரிய கலைஞர் அவர்களே காங்கிரசை கழட்டிவிடுங்கள், உங்கள் பின்னால் நாங்கள் நிற்போம் ...........

நன்றி..

- K.R.P.செந்தில்

**கட்டுரைகளில் இடம் பெறும் கருத்துக்கள் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்தே தவிர தமிழ்குறிஞ்சியின் கருத்தல்ல.    Tags :    
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பணிவோம், உயர்வோம்!
பிறர் தவறு செய்தால், ஏன் இப்படி செய்தார் என்று சிந்தித்து நேரத்தை வீணாடிக்கக் கூடாது.சோர்வடைந்து காணப்படும் எவரையும் பார்த்து ஏன் உடல்நலம் சரியில்லையா? என்ன ஆயிற்று என்றெல்லாம் கேட்கக் கூடாது.பிறர், உங்களுக்குச் செய்யும் உதவிகளை மனதில் வைத்து நன்றி பாராட்டுங்கள்.யாரிடமும் சம்பளம்

மேலும்...

 மனஅழுத்தத்தை விரட்டி எப்போதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்
எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு நம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் சந்தோஷத்தை எப்படி ஏற்படுத்தி கொள்வது என்பதைத் தான் நாம் சரியாக புரிந்து கொள்வதில்லை. அதனால் தான்  நமக்குள்ளேயே இருக்கிற சந்தோஷத்தை வெளியே தேடிக்கொண்டிருக்கிறோம்எப்போதும் சந்தோஷமாக, சிரித்துக் கொண்டு

மேலும்...

 திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்
 எப்போதும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும் பெண்கள் கூட திருமணத்திற்கு பிறகு சதை போட்டு விடுகிறார்கள்.ஏன் ஒரு பெண் திருமணம் ஆன பிறகு மட்டும் குண்டாகிறாள்? இதற்காக ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 10 வருடங்களாக

மேலும்...

 முதுமை பற்றிய பொன் மொழிகள்
மூப்பை வெல்ல உண்மையான வழி, உள்ளத்தின் இளமையை போற்றிப் பாதுகாப்பதே.முதுமை எய்துவது ஒரு கெட்டப் பழக்கம். வேலையில் முனைந்திருக்கும் மனிதனுக்கு அதற்கு அவகாசம் இல்லைஇலக்கியங்கள் இளமையில் உற்சாகத்தையும், முதுமையில் மகிழ்ச்சியும் கொடுக்கின்றன.முதுமையை முன்னிட்டு முன்னதாகச் செய்யும் பாதுகாப்புகளில் சிறந்தது கல்வி.வாழ்நாட்களின் இனிய

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in