tamilkurinji logo


 

செயற்கை அங்கம் பொருத்தப்பட்ட உலகின் முதலாவது தவளை,




செயற்கை அங்கம் பொருத்தப்பட்ட உலகின் முதலாவது தவளை

First Published : Thursday , 2nd April 2009 10:27:14 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM




Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303

செயற்கை அங்கம் பொருத்தப்பட்ட உலகின் முதலாவது தவளை,




உலகின் முதலாவது செயற்கை அங்கமொன்று பொருத்தப்பட்ட தவளை என்ற பெருமையை தென் ஆபிரிக்கத் தவளையொன்று பெறுகின்றது.

நாயொன்றால் கடிக்கப்பட்டு ஒரு காலை இழந்த நிலையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த இத் தவளைக்கு, தென் ஆபிரிக்க ஜொஹன்னஸ்பேர்க் நகரிலுள்ள மிருக வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உலோகத்திலான செயற்கைக் கால் பொருத்தப்பட்டது.

மேற்படி சத்திர சிகிச்சைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட வன வாழ்க்கை நிபுணர் ஆன் மியர்ன்ஸ் விபரிக்கையில், செயற்கைக்கால் பொருத்தப்படாவிட்டால் தவளை அசைய முடியாமல் இறக்க நேரிடும் என்பதை உணர்ந்தே இந்த சத்திர சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்ததாகக் கூறினார்.

இந்த சத்திர சிகிச்சை வெற்றியளிக்குமா என்பது குறித்து முதலில் சந்தேகமாகவே இருந்தது. ஆனால் செயற்கைக் கால் தவளையின் இயல்பான அசைவுக்கு ஏற்ற வகையில் கச்சிதமாக பொருந்தியுள்ளமை எக்ஸ்ரே படங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து ஆறுதலாக உள்ளது என அவர் தெரிவித்தார்.


மருத்துவமனை பராமரிப்பிலுள்ள தவளை தற்போது தேறி வருவதாக ஆன் மியர்ன்ஸ் கூறினார்.

தகவல்:-எம்.ரிஷான் ஷெரீப்



    Tags :    
செயற்கை அங்கம் பொருத்தப்பட்ட உலகின் முதலாவது தவளை, செயற்கை அங்கம் பொருத்தப்பட்ட உலகின் முதலாவது தவளை, செயற்கை அங்கம் பொருத்தப்பட்ட உலகின் முதலாவது தவளை,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பணிவோம், உயர்வோம்!
பிறர் தவறு செய்தால், ஏன் இப்படி செய்தார் என்று சிந்தித்து நேரத்தை வீணாடிக்கக் கூடாது.சோர்வடைந்து காணப்படும் எவரையும் பார்த்து ஏன் உடல்நலம் சரியில்லையா? என்ன ஆயிற்று என்றெல்லாம் கேட்கக் கூடாது.பிறர், உங்களுக்குச் செய்யும் உதவிகளை மனதில் வைத்து நன்றி பாராட்டுங்கள்.யாரிடமும் சம்பளம்

மேலும்...

 மனஅழுத்தத்தை விரட்டி எப்போதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்
எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு நம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் சந்தோஷத்தை எப்படி ஏற்படுத்தி கொள்வது என்பதைத் தான் நாம் சரியாக புரிந்து கொள்வதில்லை. அதனால் தான்  நமக்குள்ளேயே இருக்கிற சந்தோஷத்தை வெளியே தேடிக்கொண்டிருக்கிறோம்எப்போதும் சந்தோஷமாக, சிரித்துக் கொண்டு

மேலும்...

 திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்
 எப்போதும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும் பெண்கள் கூட திருமணத்திற்கு பிறகு சதை போட்டு விடுகிறார்கள்.ஏன் ஒரு பெண் திருமணம் ஆன பிறகு மட்டும் குண்டாகிறாள்? இதற்காக ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 10 வருடங்களாக

மேலும்...

 முதுமை பற்றிய பொன் மொழிகள்
மூப்பை வெல்ல உண்மையான வழி, உள்ளத்தின் இளமையை போற்றிப் பாதுகாப்பதே.முதுமை எய்துவது ஒரு கெட்டப் பழக்கம். வேலையில் முனைந்திருக்கும் மனிதனுக்கு அதற்கு அவகாசம் இல்லைஇலக்கியங்கள் இளமையில் உற்சாகத்தையும், முதுமையில் மகிழ்ச்சியும் கொடுக்கின்றன.முதுமையை முன்னிட்டு முன்னதாகச் செய்யும் பாதுகாப்புகளில் சிறந்தது கல்வி.வாழ்நாட்களின் இனிய

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in