tamilkurinji logo
 

கைகலத்த காக்கியும் கருப்பும் - டாஸ்மாக் கபாலி,


கைகலத்த காக்கியும் கருப்பும் - டாஸ்மாக் கபாலி

First Published : Sunday , 22nd February 2009 12:34:20 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM








ஆக்ஸிடென்ட்னா ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணலாம்., ஆனா ஆம்புலன்ஸே ஆக்ஸிடென்ட் ஆனா யாருக்கு போன் பண்றது. அந்த கதயில சந்தி சிரித்துவிட்டது சட்டமும் நீதியும். தமிழகத்திற்கே கேவலம் விளைவித்த இந்தகசமுசா கலகம் நடந்தேறியது டாஸ்மாக் கடையில் அல்ல.

நீதிகிடைக்கும் என சில ஏ(ழை)மாளிகள் கால்கடுக்க காத்திருந்து கடைசியில் கருப்பு கோட்டு கணவான்கள் காசுக்கு வேசம்போட்டு கயவர்களை காப்பாற்றும் அந்த இடத்தில், அதாங்க நம்ம சூனா சாமிய குணியவச்சி கும்முனாங்கெல்ல அந்த உயர்நீதிமன்றத்தில்.

காக்கிகள் ஒருபக்கம் கல்வீச மறுபுறம் கருப்புகள் கல்வீச மண்றவளாகம் போர்களமாகி ரணகளமாகியது.
வழக்கம்போல எவன் செத்தாலும்,எவன் அழிந்தாலும் உற்சாகத்தோடு படம்பிடிக்கும் மீடியாக்கள் தங்கள் பணிகளை செய்ய நேரலையிலும்,கோணலலையிலும் ஒருநாள் பொழுதை அங்கேயே ஓட்டி விட்டனர்.

இந்த சான்ஸை பயன்படுத்தி பழைய கடுப்பை வைத்து முகம்தெரியாத யாரோ சிலர் தலைமை நீதிபதியின் தோசைக்கல் தலையில் கொத்துபரோட்டா போட்டுவிட, ஸான்ட்விச் பிரட்டில் இருந்து வழியும் ஜாம் போல நீதியின் தலையில் இருந்து இரத்தம் கொட்ட அனைவரும் பரபரப்பு ஆனார்கள்.

அப்பறம் ஆளாளுக்கு பேட்டி கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.நம்ம சூனாசாமி வைத்த வெடி நினைத்ததை விட நன்றாகவே வெடித்துவிட்டது. நிச்சயம் இதற்கு அம்மாவிடம் பரிசும் பாராட்டுப் பத்திரமும் உண்டு.
காவல்துறையை கையில் வைத்திருக்கும் கலைஞர், வழக்கம் போல அய்யகோ! என் ஆட்சியை கலைக்க சதி என கூப்பாடு போடுகிறார். ஆக கலைஞர் ஆட்சி வந்தால் பஸ்மறியல்,கடையடைப்பு, பந்த் போன்றவை இலவச இணைப்பாக கூடவே வந்துவிடும்,கலைஞர் ஆட்சியில் பிளேடு வச்சிருக்கறவன் பியூன மெரட்டுவான்,கத்தி வச்சிருக்குறவன் கலக்டர மெரட்டுவான் என்பது 100% உண்மை.

இவ்ளோ நடந்தும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகச்சீராக இருக்கிறது என்று சொல்வது தான் ஆஸ்கார் விருது காமெடி.

- டாஸ்மாக் கபாலி

இவரது மற்ற பதிவுகளைக் காண :கழுதை



    Tags :    
கைகலத்த காக்கியும் கருப்பும் - டாஸ்மாக் கபாலி, கைகலத்த காக்கியும் கருப்பும் - டாஸ்மாக் கபாலி, கைகலத்த காக்கியும் கருப்பும் - டாஸ்மாக் கபாலி,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கேமரா முன்பு குழந்தை பெற்ற ஸ்வேதா மேனன் - வீடியோ
கேமரா முன்பு குழந்தை பெற்ற ஸ்வேதா மேனன் - வீடியோ பார்க்க இங்கே கிளிக்கவும்

மேலும்...

 ஹிந்து பத்திரிக்கையில் என்னை பாராட்டி வந்தக்கட்டுரை
இன்று ஹிந்து பத்திரிக்கையில் என்னைப்பற்றி ஒரு கட்டுரை வந்துள்ளது. காரணம் உலகசினிமா. ஆயிரக்கணக்கான சதுர அடியில் ஆடம்பரமான உள் அலங்காரங்கள் எதுவுமின்றி ஒரு பொட்டிக்கடை போன்று பத்துக்கு பத்தில் கடை நடத்தி வரும் எனக்கு இவ்வளவு பெரிய பாராட்டா !!!!!!!!!!!!!!!!! நான் ஒரு கதை சொல்லி. என்னிடம்

மேலும்...

 அன்புள்ள இயக்குனர் பாலா அவர்களுக்கு…
அன்புள்ள இயக்குனர் பாலா அவர்களுக்கு, உங்களின் படங்களை எப்போதும் ஆவலுடன் எதிர்பார்த்து ரசிக்கும் பல ரசிகர்களில் நானும் ஒருவன். நான் அதிகம் ரசிக்கும் தலைவர் படத்திற்கு அடுத்த படியாக இருக்கும் படங்கள் உங்கள் படங்கள் தான். எப்போது உங்கள் படம் அறிவிப்பு வந்தாலும்

மேலும்...

 விந்துக்குள் விந்தை - நிலா மலர்கள்
இறைவனுடைய படைப்பில் எல்லாமே அதிஅற்புதமும் விந்தைகளும் நிறைந்தது, அதில் விந்து ஒரு விந்தையானது, இதைத்தான் இறைவன் கூறுகிறான் உன் பிறப்பை பற்றி நீ சிந்தித்தால் என்னைப் பற்றி அறிந்துக் கொள்வாய் என்று கூறுகிறான். இதில் ஆழமான அர்த்தம் உள்ளது.மனிதன் செழுத்தும் ஒரு சொட்டு விந்தில் பல்லாயிரக் கணக்கான

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in