tamilkurinji logo


 

குழந்தை எனும் கவிதை- ”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்,
குழந்தை எனும் கவிதை- ”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்

First Published : Sunday , 6th May 2012 08:23:08 AM
Last Updated : Sunday , 6th May 2012 08:23:08 AM
குழந்தை எனும் கவிதை- ”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம், உயிரும் மெய்யும்
கலந்திருக்கும்
உன் புன்னகை மொழி ...!

இசைக்கருவிகள்
மழலை ஒலி முன்னே
மண்டியிடுகின்றன!

மலர்கள்
இதழ்களை விரிக்கின்றன
உன் சுவாசத்தை
அவைகளின் வாசமாக்கி
வசப்படுத்திக் கொள்ள..!

அல்லும் பகலும்
அழகூட்டும் உன் விழிகளால்
விண்மீன்கள் வெட்கித்துத்
தோல்வியை ஒப்புக்கொள்கின்றன..!

கருவறையில் நீ பெற்றக்
கதகதப்பை உன்னிடம்
காற்றும் கடன் கேட்கும்

விஞ்சும் பட்டு மேனியைக்
கொஞ்சம் தொட்டுப் பார்க்கக்
கெஞ்சும் மலர்த்தோட்ட்ம்!

ப்ரசவத்தில் கதறினாள்
உன் தாய்
நீ பிறந்ததும் அவள்மீது
பட்ட உன் பார்வையால்
பட்டெனப் புன்னகைச் சிதறினாள்
தாயின் மயக்கம் தீர்த்த
சேயே, மருத்தவச்சி நீயே!

துன்பத்திற்குப் பின்னர்
இன்பம் எனும் தத்துவம்
புரிய வைத்த புத்தகம் நீ!

அற்புதங்கள் காட்டும்
இறைவனின் பேரற்புதம் நீ!

உன் புன்னகை இதழ்களில்
தேன் உண்ணத் துடிக்கின்றன
வையகத்தின் வண்ணத்துப் பூச்சிகள்!

அம்மா அழகென்றால்
நீ “அம்மா” என்றழைப்பதில்
அழகும் அழகு பெறுகின்றது;
தமிழும் அழகு பெறுகின்றது! .


முத்தமெனும்

முத்திரை பதிக்க

சின்னம் தான்

கன்னம்

நித்தமும் அதில்

முத்தமிட்டாலும்

செல்லுபடியாகும்

திண்ணம்நாவெனும்

உமிழ்மை

எழுதுகோல்

வரையும்

அன்பெனும்

மடல்கள்

இதழ்கள்


இதயமெனும்

இணையத்தினை

திறக்க உதவும்

கடவுச்சொல்

உனது பெயர்ச்சொல்


மின்னஞ்சலின்

மின்னல்

வேகத்தினையும்

மிஞ்சும் உன்

கன்னக் குழி

புன்னகை மொழி


மிருதுவான உன் உடலே

விசைப்பலகையாய்

அசைத்திடும் என் விரல் பட்டதும்

இசைத்திடும் இனிய பாடலே

மழலை மொழியிலே


”வலிமா ”விருந்துண்ண

வாய் தவித்தாலும்

கலிமா சொல்லும் உன்

மழலை தான்

எனக்கு விருந்தாகும்


பஞ்சு பாதங்கள் பட்டதும்

நெஞ்சின் பாரங்கள் விட்டதும்

பிஞ்சு மருத்துவரின்

அக்குபஞ்சர் வைத்தியமோ


அடம்பிடித்தும் அழுகின்ற நீயே

படம்பிடித்தால் சிரிக்கின்றாயே


உதைக்கின்றாய் உன்காலால்

கதைக்கின்றாய் உன்மழலையால்

விதைக்கின்றாய் பாசத்தை

அதையே சொல்வோம் கவிதை என்றே...

- ”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்    Tags :    
குழந்தை எனும் கவிதை- ”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம், குழந்தை எனும் கவிதை- ”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம், குழந்தை எனும் கவிதை- ”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 அம்மா அபி கவிதை
நான் கருவாய் இருந்த போது தொட்டு தொட்டு ரசித்தவளே!உன் அழகிய முகத்தை பார்க்க என்னை பத்து மாதம் காத்திருக்க வைத்தவளே!நான் உனக்குள் இருந்த அந்த ஒவ்வொரு நொடியும் உன்னை காண தவம் கிடந்தேனே!என்னை சிறிது சிறிதாய் கற்பனையில் செதுக்கியவளே!முதன் முதலில் இவ்வுலகில்

மேலும்...

 ஹைக்கூ கவிதைகள்
கவிதைகள்1.   காவி வேட்டி கட்சி வேட்டி இன்றைய ஜனநாயகம் ...... 2.   கல்லூரி போகாத கட்டிட கலை நிபுணர் துக்கனாம் குருவி ...... 3.   உழவன் எழுதிய  கவிதை வியர்வை ......... 4.   லட்சங்கள் உள்ளே லட்சியங்கள் வெளியே  கல்லூரி ......5.   அரசு உத்தியோகம் பேரனும் தாத்தாவனான் வேலை வாய்ப்பு அலுவலங்கள் முன் ...... 6.   கோட்டைக்கு போனவன் கோட்டை விட்டான் வாக்குறுதி

மேலும்...

 எதிர்பார்ப்பு
கருவும் உருவாகிக் காண எதிர்பார்ப்புகருமை முகில்கூடும் காட்சி எதிர்பார்ப்புபெருகும் விலைவாசி பேரம் எதிர்பார்ப்புஉருகும் நிலைபோக உண்மை எதிர்பார்ப்புபடிக்கும் பருவத்தில் பண்பின் எதிர்பார்ப்புஅடிக்கும் தருவாயில் அன்பின் எதிர்பார்ப்புதுடிக்கும் உடலும்தோள் தொங்க எதிர்பார்ப்புவடிக்கும் கவிதைக்கு வார்த்தை எதிர்பார்ப்புநகைக்கும் சிரிப்புக்கு நாடே எதிர்பார்ப்புபகைக்கும் குணத்திற்குப் பாவம்

மேலும்...

 விழியழகா? கவியழகா? - ”கவியன்பன்” கலாம்
கண்ணைப் பற்றியே கவிதையை எழுதகண்ணை மூடிநான் கணநேரம் அயரவிண்ணத் தாண்டி வந்தாய்; உன்றன்கண்ணைப் பார்த்ததில் கவிதைத் தோற்றதே!கண்ணைக் காணவே கவிதை ஊறமண்ணைக் காணுமுன் முழுநிலா வடிவம்கண்ணை விட்டும் காணோம்; என்றன்கண்ணை ஈர்த்தது கவிதைக் கண்ணே!கருவிழிப் படலம் கண்ணின் வேலாய்ஒருவழிச் செயலால் உள்ளம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in