tamilkurinji logo


 

ஒரு தேர்ந்த பைத்தியக்காரனைப்போல்... - கே.ஆர்.பி.செந்தில்,




ஒரு தேர்ந்த பைத்தியக்காரனைப்போல்... - கே.ஆர்.பி.செந்தில்

First Published : Saturday , 24th March 2012 05:33:42 AM
Last Updated : Saturday , 24th March 2012 05:33:42 AM




ஒரு தேர்ந்த பைத்தியக்காரனைப்போல்... - கே.ஆர்.பி.செந்தில், ஒரு தேர்ந்த பைத்தியக்காரனைப்போல்
எப்போதும்
நடந்து கொள்கிறார்கள்
அரசியல்வாதிகள்..

அடிவருடிகள்
அடிமைகள்
அல்லக்கைகள்
தமிழுக்கு சோறுபோடும் பிச்சைக்காரர்கள்
பிறந்தது முதலே தமிழ்ப்புடுங்கிகள்
என மூளை மழுங்கிய கூட்டம் சூழ
தலைவன் கடவுளாக
தலைவனின் பெரிய வீடு
சின்ன 'வூ'டு உபகடவுளாக
பிள்ளைகள்
பேரப்பிள்ளைகள்
மற்றும்
மாவட்டம்
வட்டம்
பகுதிக்கடவுளாக..
 
தலைவிக்கு வேறு வடிவம்
காக்கும் காளிக்கு
அன்னை மேரிக்கு
தைரிய லட்சுமிக்கு
சகலமும் ப்ளெக்ஸ் மயம்..
 
பெரியார்
அண்ணா
காமராஜர்
பகுத்தறிவு
வெங்காயம்..

ஒரு தேர்ந்த பைத்தியக்காரனைப்போல்
எப்போதும்
நடந்து கொள்கிறார்கள்
அரசியல்வாதிகள்
நேற்று அவர்களுடன்
இன்று இவர்களுடன்
நாளையும் தலைவர் விருப்பம்தான்
கொள்ளைதான்
கொள்கை என்றானபின்
கூவிக் கூவி
தலைவனை புகழும்  
அடிமைகள்தான் பாவம் ..

- கே.ஆர்.பி.செந்தில்



    Tags :    
ஒரு தேர்ந்த பைத்தியக்காரனைப்போல்... - கே.ஆர்.பி.செந்தில், ஒரு தேர்ந்த பைத்தியக்காரனைப்போல்... - கே.ஆர்.பி.செந்தில், ஒரு தேர்ந்த பைத்தியக்காரனைப்போல்... - கே.ஆர்.பி.செந்தில்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நட்பு
நட்பு என்பது ஒரு கடல்!அதில் முழ்கினால் எழுவது மிக கடினம்!எழுவதற்கான தகுதிகள் சிலருக்கே உண்டு!நட்பு இணைப்பிரியா தொல்லை!அதில் சின்ன சின்ன சண்டைகளும் சிறு சிறு தொல்லைகளும் உண்டு!இந்த சண்டைகளும், தொல்லைகளும் இல்லையெனில் நட்பில் பயனில்லை!இதை நாங்கள் உணர்ந்து விட்டோம் நீங்கள் உணர

மேலும்...

 விழியழகா? கவியழகா? - ”கவியன்பன்” கலாம்
கண்ணைப் பற்றியே கவிதையை எழுதகண்ணை மூடிநான் கணநேரம் அயரவிண்ணத் தாண்டி வந்தாய்; உன்றன்கண்ணைப் பார்த்ததில் கவிதைத் தோற்றதே!கண்ணைக் காணவே கவிதை ஊறமண்ணைக் காணுமுன் முழுநிலா வடிவம்கண்ணை விட்டும் காணோம்; என்றன்கண்ணை ஈர்த்தது கவிதைக் கண்ணே!கருவிழிப் படலம் கண்ணின் வேலாய்ஒருவழிச் செயலால் உள்ளம்

மேலும்...

 இவர்கள் வாழ்வில் ஒளி பிறப்பது எப்போது? - பி.தமிழ்முகில் நீலமேகம்
அன்றலர்ந்த புத்தம்புது மலர்கள் அனலில் தகிக்கும் கொல்லனின் உலையாய் மாறியிருந்தது- அந்தத் தொழிற்சாலை !!! – ஆம் !! இங்கே புது மலர்கள் அனல் வீசும் நெருப்புப் பெட்டிகள் தயாரிக்கின்றன !!! அதிகாலை தன் வயிற்றுப் பசிக்கு வீட்டிலிருக்கும் பழையதை ஈந்துவிட்டு

மேலும்...

 காதல் - பாலகணேசன்
கண்களாக நீ கண்ணீராக நான் தெரியாமல் கூட அழுதுவிடாதே நான் உன்னை விட்டு பிரிந்துவிடுவேன்- பாலகணேசன்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in