tamilkurinji logo


 

ஏழு படிகள் ஏறு!,
ஏழு படிகள் ஏறு!

First Published : Tuesday , 15th May 2012 11:45:56 PM
Last Updated : Tuesday , 15th May 2012 11:45:56 PM
ஏழு படிகள் ஏறு!,

ஏழு படிகள் ஏறு!

வாழும் கலைகள் கூறும்

ஏழு படிகள் ஏறு!

சூழும் வெற்றி ஓங்கும்

தாழ்வு மனப்பான்மை நீங்கும்

உடல் எனும் வீடு

உன்னிடம் தூய்மை தேடும்

அடித்தாலும் பிடித்தாலும் குடும்பம்

நடித்தாலும் நகைத்தாலும் குடும்பம்

மடித்தாலும் மடங்காத மரமே குடும்பம்

வெடித்தாலும் விலகாத வேரே குடும்பம்

கல்வி எனும் ஒளிச்சுடரும்

பல்விதமாய் எங்கும் படரும்

ஒருவர் பின் ஒருவராய்ப் பற்றும்

அஞ்சல் ஓட்டம் போல் தொற்றும்

கற்றதைக் கற்பித்தல்; மாசிலா மனதைப்

பெற்றதை ஒப்பித்தல்!

தொழில் எனும் பூஞ்சோலை

எழில் கூட்டிடும் உன்வேலை

சமுதாயச் சேவை; அன்புக்கு

அமுதாய்த் தேவை

இரை தேடும் உன்னை

இறை தேடி வருவான் முன்னே

உள்ளத்தின் ஒளி அறியும் கலை

பள்ளத்தினின்றும் வெளிவரும் நிலை

குறட்பா (மரபுக் கவிதை)

உடலை நலமுடன் ஓம்புதல் உன்றன்

கடமை யெனநீ கருது.

கொடுக்கும் உறவே குறைவின்றி மீளும்

குடும்பம் அதுவென கொள்.

கற்றதனால் நன்மையாம் கற்றதைக் கற்பித்தல்

மற்றவரை நேசித்தல் மாண்பு

செய்யும் தொழிலதைச் செவ்வனே செய்வதால்

பெய்யும் புகழோ பெரிது

சேவை பெரிதென செய்தல் படைப்பினத்

தேவை யுணர்ந்துநீ தேடு

பொருளைத் திரட்டப் புறப்படும் நேரம்

அருளைப் பொழிவான் அவன்

ஆன்மீகம் கற்றலும் ஆழ்மனம் நோக்குதலும்

மேன்மேலும் ஆற்றல் மிளிர்

"கவியன்பன்" கலா    Tags :    
ஏழு படிகள் ஏறு!, ஏழு படிகள் ஏறு!, ஏழு படிகள் ஏறு!,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 அன்பு - "கவியன்பன்" கலாம்
மனக்கேணியின் வற்றாத ஊற்று உயிர்க் கயிற்றால் உணர்வு வாளியைக் கட்டி கண்களாம் குடங்களில் ஊற்று கண்ணீராகும் அன்பு ஊற்று அள்ளிக் கொடுத்தால் அளவின்றித் திருப்பிக் கிடைக்கும் சூட்சமம் பக்தி, பாசம், நட்பு, காதல் பற்பல கிளைகள் கொண்ட அற்புத மரத்தின் ஆணிவேர் பூமிச் சுற்றவும் பூமியைச் சுற்றியும் பூர்வீக அச்சாணி அரசனும் அடிமையாவான் கிழவனும் மழலையாவார் தட்டிக் கேட்கும் அதிகாரம்; எட்ட முடியாத

மேலும்...

 அன்று - இன்று - "கவியன்பன்" கலாம்
அன்று: கன்னத்தில் முத்தமிட்டு கட்டியணைத்து உச்சிதனை முகர்ந்து உச்சந்தலையில் ஓதி சென்றுவா மகனே ”வென்றுவா மகனே” என்றுதான் புகழந்த தாய் அன்றுதான் கண்டோம் இன்று: “ஏழு மணியாச்சுடா எழுந்து வா சனியனே” கோபத்தில் வாயைக் கொப்பளித்து சாபத்தில் காலைச் சாப்பாட்டை அளித்து விரட்டியடிக்கும் வீரத்தாய்(?) இன்று அன்று: தாய்பாடும் தாலாட்டும் நோய்போகும் நல்மருந்தும் வாய்பாடும் மனக்கணக்கும் வாய்த்தது நமக்கு அன்று இன்று: தொடர்நாடகம் தருகின்ற தொல்லைக் காட்சியும் பக்கவிளைவுகளின் பக்கமே இழுக்கும் மருந்தும் கணிதப்பொறி,கைப்பேசி, கணினிகளால் மனக்கணக்கும் வாய்பாடும் வாயைவிட்டும் போய்விட்ட கொடுமைகள் அன்று: ”தமிழுக்கும் அமுதென்று

மேலும்...

 உயிர் மீது வைக்கப்பட்ட "செக்" - அன்புடன் அருணா
உயிர் மீது வைக்கப்பட்ட "செக்" போலச் சிரித்துக் கொண்டு உடல் நுழைந்தது நோய்...... எனககே தெரியாமல் என் உயிரைப் பிடித்து இழுத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் ஏழு கடல் தாண்டி ஏழுமலை தாண்டி ஏழு வானம் தாண்டி ஏழு நிறம் கொண்ட கண்ணாடிப் பேழையில் வைத்துப் பூட்டிச் சாவியைத் தொலைக்கும் கனவை அடிக்கடிக் கண்டது மனம்...... - அன்புடன் அருணா

மேலும்...

 என் பழைய மொழி - கலில் ஜிப்ரான்
நான் பிறந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தன.. நான் தொட்டிலில் இருந்தபடி என் புதிய உலகத்தை ஆச்சர்யம் கலந்த ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.. என் அம்மா, செவிலித் தாயிடம் கேட்டாள்.. "எப்படி இருக்கிறான் என் மகன்..??" அவள் சொன்னாள்.. "ரொம்ப நன்றாக இருக்கிறான்.. நான் இதுவரை மூன்று முறை பாலூட்டி விட்டேன்.. இவ்வளவு மகிழ்ச்சியான ஒரு குழந்தையை நான் இதுவரை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in