tamilkurinji logo


 

உலகில் தமிழர் உள்ள வரை உன் பாடல் ஒலிக்கும் ! கவிஞர் இரா .இரவி,Poem

Poem




உலகில் தமிழர் உள்ள வரை உன் பாடல் ஒலிக்கும் ! கவிஞர் இரா .இரவி

First Published : Wednesday , 27th June 2012 08:20:22 AM
Last Updated : Wednesday , 27th June 2012 08:20:22 AM




உலகில் தமிழர் உள்ள வரை உன் பாடல் ஒலிக்கும் ! கவிஞர் இரா .இரவி,Poem சிறு கூடல் பட்டியில் பிறந்த கண்ணதாசனே !
பெரும் பாடல் புலவனே ! கவியரசனே !

எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து
எட்டா உயரம் இலக்கியத்தில் அடைந்தவனே !

கவிதை கதை கட்டுரை வடித்தவனே !
கற்கண்டு எழுத்தில் சகல கலா வல்லவனே !

எந்த நாளும் எனக்கு அழிவில்லை என்றவனே !
எந்த நாளும் அழிவின்றி மக்கள் மனங்களில் நின்றவனே !

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் என்றவனே !
அந்த பறவை போலவே வாழ்ந்து காட்டியவனே !

அச்சம் என்பது மடமையடா என்றவனே !
அச்சம் இன்றி துணிவுடன் வாழ்ந்தவனே !

ஆறடி நிலமே சொந்தமடா என்றவனே !
அற்புத வாழ்வியல் தத்துவம் உரைத்தவனே !

உலகம் பிறந்தது எனக்காக என்றவனே !
உலகில் பிறந்து உணர்வில் கலந்தவனே !

வீடு வரை உறவு வீதி வரை மனைவி !
வாழ்வின் நிலையாமையை உணர்த்தியவனே !

ஆசையே அலை போல என்றவனே !
ஆசையை அடக்க அறிவுறுத்தியவனே !

காலத்தைக் கடந்து நின்றவனே !
காலத்தால் அழியாத பாடல் படைத்தவனே !

கல்வெட்டு வரிகளை மனங்களில் பதித்தவனே !
கவிஞன் என்ற சொல்லிற்கு பெருமை சேர்த்தவனே !

உலகம் உள்ளவரை உன் பெயர் நிலைக்கும் !
உலகில் தமிழர் உள்ள வரை உன் பாடல் ஒலிக்கும் !

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி



    Tags :    
உலகில் தமிழர் உள்ள வரை உன் பாடல் ஒலிக்கும் ! கவிஞர் இரா .இரவி,Poem உலகில் தமிழர் உள்ள வரை உன் பாடல் ஒலிக்கும் ! கவிஞர் இரா .இரவி,Poem உலகில் தமிழர் உள்ள வரை உன் பாடல் ஒலிக்கும் ! கவிஞர் இரா .இரவி,Poem
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இவர்கள் வாழ்வில் ஒளி பிறப்பது எப்போது? - பி.தமிழ்முகில் நீலமேகம்
அன்றலர்ந்த புத்தம்புது மலர்கள் அனலில் தகிக்கும் கொல்லனின் உலையாய் மாறியிருந்தது- அந்தத் தொழிற்சாலை !!! – ஆம் !! இங்கே புது மலர்கள் அனல் வீசும் நெருப்புப் பெட்டிகள் தயாரிக்கின்றன !!! அதிகாலை தன் வயிற்றுப் பசிக்கு வீட்டிலிருக்கும் பழையதை ஈந்துவிட்டு

மேலும்...

 காதலால் சாதலா? - கமல்
விநோதினி – வினோதம் நீ முடவன் கூட கொம்பு தேனுக்கு ஆசைப்படலாம் படிக்காக மடையனொருவன் படித்த தேவதைக்கு ஆசைப்படலாமா ஏழையின் வீட்டில் எழுந்த (வினோத) நிலா (நீ) அமிலத்தால் கருகிய பலா நீ அமிலத்தால் உன் முகமழிந்தது – நின் மரணத்தால் என் அகமழுதது நீ உயிரோடு இருந்திருந்தால் ஒவ்வொரு நாளும் இறந்திருப்பாய் சொர்கத்தில் நீ

மேலும்...

 ஆசை முகம் - ”கவியன்பன்” கலாம்
ஈற்றெதுகை இணைபோல் இன்சுவை ஈரிதழ்கள் போற்றுகின்ற மடிப்பும் புதுக்கவிதை போலிங்கு ஏற்றமுடன் இருக்கும் இடுப்பழகில் காணும்நான் தோற்றுவிட்டேன் காதலியே தொடவுமில்லை ஆசைமுகம்! நேர்நேர் நிரைநிரை அசையாக நேர்காண் பார்வையில் அசையாது நேர்கொண்டு ஈர்க்கும் ஆசைமுகம் நேர்கொண்டு முடிய நேர்கொண்ட சீர்காணும் வெண்டளை விரவினால் பேர்கொண்டு சொல்வர் வெண்பாவாய் நேர்வகிடு எடுத்தப் பின்னலினால்தான் சீர்கொண்டு அழைப்பர்ப் பெண்பாலாய்! .. அசைசீர் யாப்புக்கு அழகாம் தொடை அசையும் இடுப்புக்கு அழகாம்

மேலும்...

 பொங்கல் பொங்குவதெப்போது? - ஆல்ப‌ர்ட், அமெரிக்கா.
நிலை மாடங்கள் நெற்றியில் காப்புக்கட்டல்!குலை நடுங்கும் மார்கழிக் குளிரில் நீராடல்!களைந்திட்ட குப்பைகளை உறைவிடத்தில்பழையன பொசுக்கிப் போகிப் பொங்கல்!பச்சரிசி மாக் கரைத்து, காவிக்கட்டி வைத்துகச்சிதமாய் இல்லமெலாம் வண்ணக்கோலமிட்டுமிச்சமில்லாமல் உறைவிடத்தை நிறைவிடமாக்கிஉச்சி வகிடெடுத்த பெண்களின் கைவண்ணம்மெச்சி, சூரியப் பொங்கலுக்கு உகந்த நேரத்தைக் கணிப்பர்! மண்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in