tamilkurinji logo


 

உண்மை அறியும் பொய்கள். - தீபிகா,
உண்மை அறியும் பொய்கள். - தீபிகா

First Published : Monday , 12th March 2012 09:31:20 PM
Last Updated : Monday , 12th March 2012 09:31:20 PM
உண்மை அறியும் பொய்கள். - தீபிகா,

சமாதானம் தருவிக்கப்பட்டதாய்

சொல்லப்படுகிற எனது நிலத்தில்

வீதிகளை விழுங்கிக்கொண்டு வளர்ந்திருக்கிற

விளம்பர மரங்களின் நிழலில்

நாய்களுடன் சேர்ந்து

வீடுகள் பறிக்கப்பட்ட உடல்களும்

படுத்துக் கிடக்கின்றன.

 

திரும்பிப் பெறமுடியா இழப்புக்களோடு

திரிகிற சனங்களின் முகங்களில்

படரமுடியாத மகிழ்ச்சியின் ரேகைகள்

மிச்சமிருக்கும் வாழ்க்கையை

எதிர்பார்ப்புகளற்று செலவு செய்கின்றன.

 

சிறைப்பிடித்து காட்சிக்கு வைத்திருக்கும்

மிருகக்காட்சிச் சாலை விலங்குகளை

பார்க்கும் ஆவல் நிறைந்த

அதே கண்கள்

குளிர்சாதனப் பேரூந்துகளில் வந்திறங்கி

கும்மாளமிட்டபடி ஊரெங்கும்

மிடுக்குடன் அலைந்து திரும்புகின்றன.

 

மொட்டையடிக்கப்பட்டிருக்கும் நந்தவனங்களில்

இறக்கைகள் பிடுங்கப்பட்ட

வண்ணத்துப்பூச்சிகள்

இயலாமைகளோடு மெல்ல மெல்ல

ஊர்ந்து திரிகின்றன.

 

இனிமேல் தேன் சேகரிக்க

அனுமதிக்கப்படாத அவைகள்

வயிறு நிறைப்பதற்காக

கைவிடப்பட்ட வெளிகளில்

அங்கும் இங்கும் அலைகின்றன.

 

நட்சத்திரங்களற்ற வானத்தில்

குழந்தைகள் தேடிக்கொண்டிருக்கும்

அவர்களின் தந்தைமார் பற்றி

எந்தப் பதிலையும் கொடுக்காதவர்கள்

நீச்சல் தடாகங்களையும் , பூங்காக்களையும்

அவர்களுக்கு பரிசளிக்கிற காட்சியை

படமெடுத்துக் கொண்டு போகிறார்கள்.

 

பகலில் சமாதானம் விற்கப்படும்

எங்கள் நகரத் தெருக்களில்

இரவில்,

நாய்கள் அமளியாய் குரைக்கையில்

சாளரங்களை சாத்திக்கொண்டு

எல்லா இதயங்களும்

எப்போதும் போலவே படபடக்கின்றன.

 

துப்பாக்கிகள் கோடு கிழித்திருக்கிற

வெளித்தெரியாத வட்டங்களுக்குள்

குடியிருக்கிற எங்கள் சனங்கள்

இப்போ

தாம் எந்தப் பயங்களுமற்று

மகிழ்வுடன் குடி வாழ்ந்து கொண்டிருப்பதாய்

வெளியே சொல்ல கேள்விப்படுகிறார்கள்.

- தீபிகா    Tags :    
உண்மை அறியும் பொய்கள். - தீபிகா, உண்மை அறியும் பொய்கள். - தீபிகா, உண்மை அறியும் பொய்கள். - தீபிகா,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 எதிர்பார்ப்பு
கருவும் உருவாகிக் காண எதிர்பார்ப்புகருமை முகில்கூடும் காட்சி எதிர்பார்ப்புபெருகும் விலைவாசி பேரம் எதிர்பார்ப்புஉருகும் நிலைபோக உண்மை எதிர்பார்ப்புபடிக்கும் பருவத்தில் பண்பின் எதிர்பார்ப்புஅடிக்கும் தருவாயில் அன்பின் எதிர்பார்ப்புதுடிக்கும் உடலும்தோள் தொங்க எதிர்பார்ப்புவடிக்கும் கவிதைக்கு வார்த்தை எதிர்பார்ப்புநகைக்கும் சிரிப்புக்கு நாடே எதிர்பார்ப்புபகைக்கும் குணத்திற்குப் பாவம்

மேலும்...

 ஏழு படிகள் ஏறு!
ஏழு படிகள் ஏறு! வாழும் கலைகள் கூறும் ஏழு படிகள் ஏறு! சூழும் வெற்றி ஓங்கும் தாழ்வு மனப்பான்மை நீங்கும் உடல் எனும் வீடு உன்னிடம் தூய்மை தேடும் அடித்தாலும் பிடித்தாலும் குடும்பம் நடித்தாலும் நகைத்தாலும் குடும்பம் மடித்தாலும் மடங்காத மரமே குடும்பம் வெடித்தாலும் விலகாத வேரே குடும்பம் கல்வி எனும் ஒளிச்சுடரும் பல்விதமாய் எங்கும் படரும் ஒருவர் பின்

மேலும்...

 திலீபன் வழியில் நாங்கள் தமிழர்கள் - தமிழ் தேவன்
உணவு நன்னீர் உண்டிட

மேலும்...

 சுதந்திரம் காப்போம்
பிழைக்க வந்தவன் உழைத்த நம்மில் ஒற்றுமையின்மை யுணர்ந்து கற்று தந்தான் பாடம் அடிமை சங்கிலி அணிவித்து; உண்மை உள்ளத்தை உறுத்த வீறு கொண்டெழுந்தோரின் உயிர் பறித்தான்; துயர் நிறைந்த பாரதப் புதல்வர்கள் புற்றீசலாய் புறப்பட்டனர்! உறக்கம் மறந்து உணவு மறந்து உயிர் துறந்து உயிர் கொடுத்தனர் சுதந்திரத்துக்கு! ஆனால் உண்மை நிலை தினசரிகளில் தலைப்புச் செய்தி வரலாறு காணாத பாதுகாப்பு!! சுதந்திர தினத்தை சுதந்திரமாய் கொண்டாட இயலாத நிலை இன்று! தீவிரவாதமும் பயங்கரவாதமும் “மத” வாதமும் இளம்பிள்ளை வாதமாய் இன்னும் தொடர்கின்றது; பெற்ற சுதந்திரத்தை பேனிக் காப்பது நம் கடமை உணர்வீர்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in