tamilkurinji logo


 

இவர்கள் வாழ்வில் ஒளி பிறப்பது எப்போது? - பி.தமிழ்முகில் நீலமேகம்,Tamil kavithai

Tamil,kavithai
இவர்கள் வாழ்வில் ஒளி பிறப்பது எப்போது? - பி.தமிழ்முகில் நீலமேகம்

First Published : Tuesday , 23rd April 2013 12:30:47 AM
Last Updated : Tuesday , 23rd April 2013 12:30:47 AM
இவர்கள் வாழ்வில் ஒளி பிறப்பது எப்போது? - பி.தமிழ்முகில் நீலமேகம்,Tamil kavithai அன்றலர்ந்த புத்தம்புது மலர்கள்
அனலில் தகிக்கும்
கொல்லனின் உலையாய்
மாறியிருந்தது-
அந்தத் தொழிற்சாலை !!! – ஆம் !!
இங்கே புது மலர்கள்
அனல் வீசும் நெருப்புப் பெட்டிகள்
தயாரிக்கின்றன !!!
அதிகாலை தன் வயிற்றுப்
பசிக்கு வீட்டிலிருக்கும்
பழையதை ஈந்துவிட்டு
துவக்கும் அன்றைய தினம் –
தாள்கட்டுகள் குச்சிகள்
சில்லு அட்டைகள்
பசை கிண்ணங்கள்
அச்சுக் கட்டைகள் என்று இவற்றுடனேயே கழிகிறது !!!
நேர்த்தியாய் அடுக்கிய தாள்கட்டுகளை
அழகிய தீப்பெட்டிகளாய் உருவாக்கி
காய வைத்து குரோஸ் கணக்கிட்டு
கட்டி அடுக்கும் வரை ஓய்வதில்லை !
ஆனால் அதன் பின்
அம்மலர்களின் முகத்தில் புன்னகையில்லை !!!
காலையில் அழகாய் மொட்டவிழ்ந்து
மாலையில் - சருகாய் துவண்டு காய்வது
மறுநாள் மீண்டும் மலர்வது...
இங்ஙனம் அன்றாடம் மலர்வதும் சருகாவதும்
இப்பிஞ்சுகட்கு விதிக்கப்பட்ட ஒன்றோ ??
ஒளியேற்ற துணைபுரியும்
தீப்பெட்டிகளும் தீக்குச்சிகளும்
உருவாக்கும் இவர்தம் வாழ்வில்
ஒளி பிறக்கும் காலமும் தான் எப்போது ?
இவர்கள் உலகிற்கே வழிகாட்டும் ஒளிப்பந்தங்கள் ஆவதெப்போது ??

- பி.தமிழ்முகில் நீலமேகம்    Tags :    
இவர்கள் வாழ்வில் ஒளி பிறப்பது எப்போது? - பி.தமிழ்முகில் நீலமேகம்,Tamil kavithai இவர்கள் வாழ்வில் ஒளி பிறப்பது எப்போது? - பி.தமிழ்முகில் நீலமேகம்,Tamil kavithai இவர்கள் வாழ்வில் ஒளி பிறப்பது எப்போது? - பி.தமிழ்முகில் நீலமேகம்,Tamil kavithai
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 விழியழகா? கவியழகா? - ”கவியன்பன்” கலாம்
கண்ணைப் பற்றியே கவிதையை எழுதகண்ணை மூடிநான் கணநேரம் அயரவிண்ணத் தாண்டி வந்தாய்; உன்றன்கண்ணைப் பார்த்ததில் கவிதைத் தோற்றதே!கண்ணைக் காணவே கவிதை ஊறமண்ணைக் காணுமுன் முழுநிலா வடிவம்கண்ணை விட்டும் காணோம்; என்றன்கண்ணை ஈர்த்தது கவிதைக் கண்ணே!கருவிழிப் படலம் கண்ணின் வேலாய்ஒருவழிச் செயலால் உள்ளம்

மேலும்...

 காதல் - பாலகணேசன்
கண்களாக நீ கண்ணீராக நான் தெரியாமல் கூட அழுதுவிடாதே நான் உன்னை விட்டு பிரிந்துவிடுவேன்- பாலகணேசன்

மேலும்...

 காதலால் சாதலா? - ”கவியன்பன்” கலாம்
வினோதமான இவ்வுலகைவிட்டு நீ விடை பெற்றவினோதினி,மனசாட்சி உள்ளவர்களின்மனத்தினில் ஆட்சி புரிகின்றாய், நீ!உன் மீது வீசப்பட்ட அமிலத்தால்உன் உடல் கருகியது போலவெஉள்ளார்ந்த பாசமுடையோரின்உள்ளங்களும் வெந்தனவே...!ஒருதலைக் காதலுக்குதறுதலைகளின் விடையாகஅமிலத்தை வீசென்றுஉமிழ்ந்து சொன்னதுஉலகச் சினிமா தானேசீரழிக்கும் சினிமாவால்ஊரழிந்து போகு முன்புவழிகளை அடைத்திடும்வழிகள் அரசின் வழியேபழிகள் பெருகிடாமல் விழிப்பீர்!பெற்றவர்

மேலும்...

 காதலால் சாதலா? - கமல்
விநோதினி – வினோதம் நீ முடவன் கூட கொம்பு தேனுக்கு ஆசைப்படலாம் படிக்காக மடையனொருவன் படித்த தேவதைக்கு ஆசைப்படலாமா ஏழையின் வீட்டில் எழுந்த (வினோத) நிலா (நீ) அமிலத்தால் கருகிய பலா நீ அமிலத்தால் உன் முகமழிந்தது – நின் மரணத்தால் என் அகமழுதது நீ உயிரோடு இருந்திருந்தால் ஒவ்வொரு நாளும் இறந்திருப்பாய் சொர்கத்தில் நீ

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in