tamilkurinji logo


 

இலங்கையை இரண்டாகப் பிரித்துக் கொடுங்கள் ! கவிஞர் இரா .இரவி,
இலங்கையை இரண்டாகப் பிரித்துக் கொடுங்கள் ! கவிஞர் இரா .இரவி

First Published : Thursday , 22nd March 2012 10:00:16 PM
Last Updated : Thursday , 22nd March 2012 10:00:16 PM
இலங்கையை இரண்டாகப் பிரித்துக் கொடுங்கள் ! கவிஞர் இரா .இரவி, முள்ளிவாய்க்காலில் படுகொலைகள் புரிந்து 
முள் என தைத்தான் தமிழர் உள்ளங்களில் !

அனாதைஇல்லம் ஆலயம் பள்ளி மருத்துவமனை
அனைத்தின் மீதும் வானிலிருந்து குண்டு பொழிந்தான !

முதியவர் பண்கள் குழந்தைகள் அனைவரையும்
மூர்க்கத்தனமாக  கொன்று குவித்தான் !

பாதுக்காப்பு வளையம் என்று சொல்லி மக்களைக் குவித்து
பாதுகாப்பாக ராணுவம் நின்று  கொன்றுக்  குவித்தான்  !

மனித உரிமை மீறல்கள் அத்து
மீறல்கள் நடந்தது 
மனிதாபிமானமற்ற படு  கொலைகள் நடத்தினான் !

கொத்துக் குண்டுகளை அப்பாவி மக்கள் மீது 
கொத்துக்  கொத்தாக வீசிக் கொன்றான் !

தடை செய்யப்பட்ட ரசாயணக் குண்டுகளை
தடையின்றி
ப் பயன்படுத்தி சாகடித்தான் !

கத்தியால் குத்திக் கிழித்து சித்திரவதைச் செய்து
கடைசியில் உயிர் பறித்தான்    கொடூரன் !

பச்சிளம் பாலகன் கண் முன்னே அவனது
பாதுகாவலர்களைக் கொன்று பாலகனையும் கொன்றான் !


செத்தப் பிணங்கள் மீதும் எத்தி மிதித்து
சாவை உறுதி செய்து சந்தோசப் பட்டான் !

விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று
வீதியில் சுட்டு வீழ்த்திச் சென்றான் !


அப்பாவி மக்களை அழித்துக் கொன்றான்
அடப் பாவி அவன் இதயம் இல்லாதவன் !

கவிதை எழுதினோம் கட்டுரை எழுதினோம்
கண்டனம் செய்தோம் கண்டுகொள்ள வில்லை அன்று !

சேனல் நான்கு தொலைக்காட்சி உலகின்
செவிட்டை நீக்கி கேட்க, பார்க்க வைத்தது !

தமிழ் இனத்தை அழித்த கொலைபாதகன்  ராஜபட்சே
தரணியில் இன்னும் வாழ்வது தமிழருக்கு இழுக்கு !

பாவத்தின் பரிசாகப் புற்று நோய் வந்துவிட்டது
பாவி அவன் நோயால் சாகக்
கூடாது !

அய் .நா. மன்றமே முன் நின்று உடன்
அவனை சாகும் வரை
தூக்கிலிடுங்கள் !
 
எட்டு நாட்டு ராணுவ உதவியுடன் கூட்டாக
எம்மக்களை ஈவு இரக்கமின்றிக் கொன்றவன்  !

ஜெயித்து விட்டதாக கொக்கரித்த
க் கொடியவனுக்கு
ஜெனிவா தீர்மானத்தில் தொடங்கியது தோல்வி !


இங்கு தமிழன் கறி கிடைக்கும்  என்ற சிங்களனோடு
இனி தமிழன் இணைந்து வாழ முடியாது !

பிரிந்து வாழ்வதே இருவருக்கும் நல்லது
சேர்ந்து வாழ்வது இனி சாத்தியமற்றது !

இலங்கையை இரண்டாகப் பிரித்துக் கொடுங்கள்
ஈழத்தமிழரையும் சிங்களரையும் தனித்தனியே வாழ விடுங்கள்  !     Tags :    
இலங்கையை இரண்டாகப் பிரித்துக் கொடுங்கள் ! கவிஞர் இரா .இரவி, இலங்கையை இரண்டாகப் பிரித்துக் கொடுங்கள் ! கவிஞர் இரா .இரவி, இலங்கையை இரண்டாகப் பிரித்துக் கொடுங்கள் ! கவிஞர் இரா .இரவி,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இவர்கள் வாழ்வில் ஒளி பிறப்பது எப்போது? - பி.தமிழ்முகில் நீலமேகம்
அன்றலர்ந்த புத்தம்புது மலர்கள் அனலில் தகிக்கும் கொல்லனின் உலையாய் மாறியிருந்தது- அந்தத் தொழிற்சாலை !!! – ஆம் !! இங்கே புது மலர்கள் அனல் வீசும் நெருப்புப் பெட்டிகள் தயாரிக்கின்றன !!! அதிகாலை தன் வயிற்றுப் பசிக்கு வீட்டிலிருக்கும் பழையதை ஈந்துவிட்டு

மேலும்...

 புத்தாண்டு வாழ்த்துக்கள் ! கவிஞர் இரா .இரவி.
வரும் ஆண்டு வளமான ஆண்டாகட்டும் !வறுமை ஏழ்மை இல்லாத ஆண்டாகட்டும் !இயற்கையின் சீற்றம் இல்லாத ஆண்டாகட்டும் ! இயற்கை சீரான மழை  தரும் ஆண்டாகட்டும் ! வஞ்சியருக்கு ஏற்றம் தரும் ஆண்டாகட்டும் ! வாலிபருக்கு மகிழ்ச்சித் தரும் ஆண்டாகட்டும் !முதியோருக்கு இன்பம் தரும் ஆண்டாகட்டும் !மூத்தோருக்கு மதிப்புத் தரும் ஆண்டாகட்டும்

மேலும்...

 உலகில் தமிழர் உள்ள வரை உன் பாடல் ஒலிக்கும் ! கவிஞர் இரா .இரவி
சிறு கூடல் பட்டியில் பிறந்த கண்ணதாசனே !பெரும் பாடல் புலவனே ! கவியரசனே !எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துஎட்டா உயரம் இலக்கியத்தில் அடைந்தவனே !கவிதை கதை கட்டுரை வடித்தவனே !கற்கண்டு எழுத்தில் சகல கலா வல்லவனே !எந்த நாளும் எனக்கு

மேலும்...

 நேசி.....!!!!! - "கவிராசா" ஆறுமுகம்
யாரையும் புரிந்து கொண்டு நேசிநேசித்த பின்  புரிந்துகொள்ள முயற்றிக்காதேவலி உனக்கு மட்டும் இல்லைநீ  நேசித்த இதயத்துக்கும்தன்-  "கவிராசா" ஆறுமுகம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in