tamilkurinji logo


 

ஆசை - “கவியன்பன்” கலாம்,Tamil kavithai

Tamil,kavithai
ஆசை - “கவியன்பன்” கலாம்

First Published : Tuesday , 19th June 2012 06:57:14 PM
Last Updated : Tuesday , 19th June 2012 06:57:14 PM
Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303

ஆசை - “கவியன்பன்” கலாம்,Tamil kavithai பற்றற்றத் துறவியும்
பற்றறுக்கப் பிறக்கும்
ஈரெழுத்து மந்திரம்
ஈர்த்திடும் தந்திரம்

தன்னம்பிக்கை மரத்தின்
தகர்க்கவியலாத ஆணிவேர்

வாழ்க்கை வணிகத்தின்
வட்டியில்லா முதலீடு

தாம்பத்திய இசையில்
தார்மீகச் சுருதி

அளவுக்கு மிஞ்சினால்
அஃதே நஞ்சாகும்
அளவோடிருந்தால்
ஆசையுன்னிடம் தஞ்சமாகும்

கடவுள் பக்திக்கும் ஆசை
காதலைச் சொல்லிடும் ஆசை
படிப்பின் பிடிப்பிலும் ஆசை
பணத்தின் தேடலும் ஆசை

ஆசையின்றி அகிலமும் அசையாது
ஆசைப்படுதல் ஆக்கத்தின் விசையாகும்

 - “கவியன்பன்” கலாம்    Tags :    
ஆசை - “கவியன்பன்” கலாம்,Tamil kavithai ஆசை - “கவியன்பன்” கலாம்,Tamil kavithai ஆசை - “கவியன்பன்” கலாம்,Tamil kavithai
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 விழியழகா? கவியழகா? - ”கவியன்பன்” கலாம்
கண்ணைப் பற்றியே கவிதையை எழுதகண்ணை மூடிநான் கணநேரம் அயரவிண்ணத் தாண்டி வந்தாய்; உன்றன்கண்ணைப் பார்த்ததில் கவிதைத் தோற்றதே!கண்ணைக் காணவே கவிதை ஊறமண்ணைக் காணுமுன் முழுநிலா வடிவம்கண்ணை விட்டும் காணோம்; என்றன்கண்ணை ஈர்த்தது கவிதைக் கண்ணே!கருவிழிப் படலம் கண்ணின் வேலாய்ஒருவழிச் செயலால் உள்ளம்

மேலும்...

 இவர்கள் வாழ்வில் ஒளி பிறப்பது எப்போது? - பி.தமிழ்முகில் நீலமேகம்
அன்றலர்ந்த புத்தம்புது மலர்கள் அனலில் தகிக்கும் கொல்லனின் உலையாய் மாறியிருந்தது- அந்தத் தொழிற்சாலை !!! – ஆம் !! இங்கே புது மலர்கள் அனல் வீசும் நெருப்புப் பெட்டிகள் தயாரிக்கின்றன !!! அதிகாலை தன் வயிற்றுப் பசிக்கு வீட்டிலிருக்கும் பழையதை ஈந்துவிட்டு

மேலும்...

 காதல் - பாலகணேசன்
கண்களாக நீ கண்ணீராக நான் தெரியாமல் கூட அழுதுவிடாதே நான் உன்னை விட்டு பிரிந்துவிடுவேன்- பாலகணேசன்

மேலும்...

 காதலால் சாதலா? - ”கவியன்பன்” கலாம்
வினோதமான இவ்வுலகைவிட்டு நீ விடை பெற்றவினோதினி,மனசாட்சி உள்ளவர்களின்மனத்தினில் ஆட்சி புரிகின்றாய், நீ!உன் மீது வீசப்பட்ட அமிலத்தால்உன் உடல் கருகியது போலவெஉள்ளார்ந்த பாசமுடையோரின்உள்ளங்களும் வெந்தனவே...!ஒருதலைக் காதலுக்குதறுதலைகளின் விடையாகஅமிலத்தை வீசென்றுஉமிழ்ந்து சொன்னதுஉலகச் சினிமா தானேசீரழிக்கும் சினிமாவால்ஊரழிந்து போகு முன்புவழிகளை அடைத்திடும்வழிகள் அரசின் வழியேபழிகள் பெருகிடாமல் விழிப்பீர்!பெற்றவர்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in