tamilkurinji logo


 

அறிவினை அறிவாய்,Tamil kavithai

Tamil,kavithai




அறிவினை அறிவாய்

First Published : Saturday , 8th September 2012 04:16:02 AM
Last Updated : Saturday , 8th September 2012 04:16:02 AM




அறிவினை அறிவாய்,Tamil kavithai அறிவுக்கும் ஆசைக்கும் போட்டியென்றால் ஆங்கே
நெறியான  வாழ்வை நினை.
பகுத்தாயும் கல்வி பலன்தரும் என்றும்
தொகுத்தாயும் பண்பைத் தொடர்.

தாயிடம் பெற்றதுத்  தான்முதற் கல்வியாம்
ஆயுதம் போலாம் அறிவு.

இருளாம் சினத்தையும்  இல்லாமல் செய்யும்
அருளாம் அறிவை அடை.

இயற்கை உணர்வால் இறையவன் தந்த
இயற்கை அறிவாய் இயம்பு.

ஆறறிவுக் கிட்டியும் ஐயறிவாய் வாழும்நீ
வேறறிவு பேணா விலங்கு.
பல்வித ஆற்றல் படித்தல் அனைத்துமே
கல்விதான் என்பதைக் காண்.
எழுதல்  படித்தல்  எவரிடமி  ருப்பின்  
பழுதில்   அறிவுப்   பயன்.
ஆழ்மன நம்பிக்கை ஆன்மீக மார்க்கறிவு
வாழ்வதர்க் கான வழி
கற்றலும் கேட்டலும் கண்களாய் எண்ணியே
பெற்றவுன் பட்டறிவைப் பேண்

-- ”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்



    Tags :    
அறிவினை அறிவாய்,Tamil kavithai அறிவினை அறிவாய்,Tamil kavithai அறிவினை அறிவாய்,Tamil kavithai
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in