tamilkurinji logo


 

அமலால் நிறையும் ரமலான் - ”கவியன்பன்” கலாம்,Ramadan

Ramadan




அமலால் நிறையும் ரமலான் - ”கவியன்பன்” கலாம்

First Published : Thursday , 19th July 2012 09:27:04 PM
Last Updated : Thursday , 19th July 2012 09:27:04 PM




அமலால் நிறையும் ரமலான் - ”கவியன்பன்” கலாம்,Ramadan பசித்திருந்து தனித்திருந்து விழித்திருக்கும் மாதம்

         படைத்தவனின் அருளதிகம் பொழிகின்ற மாதம்

கசிந்துருகித் துதித்திட்டால் ஈடேற்றும் மாதம்

          கறையான பாவங்கள் கரைந்தோடும் மாதம்

பசித்தவரின் பட்டினியை யுணர்த்தவ்ரும் மாதம்

          பயபக்தி யாதென்றுச் சோதிக்கும் மாதம்

வசிக்கின்ற ஷைத்தானை  விலங்கிலிடும் மாதம்

          வறியவர்க்கு ஈந்திடவே “ஃபித்ராவின்” மாதம்

 
குடலுக்கு மோய்வாக்கி குரானோதும் ரமலான்

          குற்றங்கள் தடுத்துவிடும் கேடயமாம் ரமலான்

*திடலுக்கு வருவதற்குச் சேமிக்கும் ரமலான்*

          திண்ணமுடன்  சுவனத்தைப் பெற்றிடத்தான் ரமலான்

உடலுக்கும் பயிற்சியாக்கும் நெறிமுறைகள்  ரமலான்

         உயிர்க்குள்ளே உணவானச் சுடராகும் ரமலான்

கடலுக்குள் மீன்போல கல்புக்குள் ரமலான்
         கர்த்தனவ னறியுமிர கசியம்தான்  ரமலான்

ஷைத்தான் = இறைவனால் சபிக்கப்பட்டு நம் இரத்த நாளங்களில் ஓடிக்கொண்டிருக்கும் நம்மை வழிகெடுக்கும் ஒரு தீயசக்தி.
 
ஃபித்ரா = நோன்பில் ஏற்பட்டத் தவறுகட்குப் பரிகாரமாகவும் ஏழைகளின் உணவுத் தேவைக்கு நோன்புப் பெருநாளைக்கு முன்னதாகக் கொடுக்கப்பட வேண்டிய தர்மம்
 
குர்-ஆன் = இறைவன் வழங்கிய இறுதி வேதம்
 
கல்பு = ஹ்ருதயம்; உள்ளம்
 
ரமலான் = இஸ்லாமிய ஐந்து கடமைகளில் ஒன்றான  (வைகறை முதல் அஸ்தமனம் வரை) நோன்பிருக்கும் மாதம்
 *திடலுக்கு = மஹ்ஷர் என்னும் judgement day ground
 
 
- ”கவியன்பன்” கலாம்



    Tags :    
அமலால் நிறையும் ரமலான் - ”கவியன்பன்” கலாம்,Ramadan அமலால் நிறையும் ரமலான் - ”கவியன்பன்” கலாம்,Ramadan அமலால் நிறையும் ரமலான் - ”கவியன்பன்” கலாம்,Ramadan
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 விழியழகா? கவியழகா? - ”கவியன்பன்” கலாம்
கண்ணைப் பற்றியே கவிதையை எழுதகண்ணை மூடிநான் கணநேரம் அயரவிண்ணத் தாண்டி வந்தாய்; உன்றன்கண்ணைப் பார்த்ததில் கவிதைத் தோற்றதே!கண்ணைக் காணவே கவிதை ஊறமண்ணைக் காணுமுன் முழுநிலா வடிவம்கண்ணை விட்டும் காணோம்; என்றன்கண்ணை ஈர்த்தது கவிதைக் கண்ணே!கருவிழிப் படலம் கண்ணின் வேலாய்ஒருவழிச் செயலால் உள்ளம்

மேலும்...

 இவர்கள் வாழ்வில் ஒளி பிறப்பது எப்போது? - பி.தமிழ்முகில் நீலமேகம்
அன்றலர்ந்த புத்தம்புது மலர்கள் அனலில் தகிக்கும் கொல்லனின் உலையாய் மாறியிருந்தது- அந்தத் தொழிற்சாலை !!! – ஆம் !! இங்கே புது மலர்கள் அனல் வீசும் நெருப்புப் பெட்டிகள் தயாரிக்கின்றன !!! அதிகாலை தன் வயிற்றுப் பசிக்கு வீட்டிலிருக்கும் பழையதை ஈந்துவிட்டு

மேலும்...

 காதல் - பாலகணேசன்
கண்களாக நீ கண்ணீராக நான் தெரியாமல் கூட அழுதுவிடாதே நான் உன்னை விட்டு பிரிந்துவிடுவேன்- பாலகணேசன்

மேலும்...

 காதலால் சாதலா? - ”கவியன்பன்” கலாம்
வினோதமான இவ்வுலகைவிட்டு நீ விடை பெற்றவினோதினி,மனசாட்சி உள்ளவர்களின்மனத்தினில் ஆட்சி புரிகின்றாய், நீ!உன் மீது வீசப்பட்ட அமிலத்தால்உன் உடல் கருகியது போலவெஉள்ளார்ந்த பாசமுடையோரின்உள்ளங்களும் வெந்தனவே...!ஒருதலைக் காதலுக்குதறுதலைகளின் விடையாகஅமிலத்தை வீசென்றுஉமிழ்ந்து சொன்னதுஉலகச் சினிமா தானேசீரழிக்கும் சினிமாவால்ஊரழிந்து போகு முன்புவழிகளை அடைத்திடும்வழிகள் அரசின் வழியேபழிகள் பெருகிடாமல் விழிப்பீர்!பெற்றவர்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in