tamilkurinji logo


 

அன்பேதான் கடவுளாம் அறிவதும் நன்றே! - புலவர் சா இராமாநுசம்,




அன்பேதான் கடவுளாம் அறிவதும் நன்றே! - புலவர் சா இராமாநுசம்

First Published : Tuesday , 3rd April 2012 10:15:44 PM
Last Updated : Tuesday , 3rd April 2012 10:15:44 PM




அன்பேதான் கடவுளாம் அறிவதும் நன்றே! - புலவர் சா இராமாநுசம்,



கற்றிலன் ஆயினும் கேட்டலும் நன்றே
   கற்றாரின் சொற்களை ஏற்றலும் நன்றே!
பெற்றவர் தமையென்றும் பேணுதல் நன்றே
    பெரியோரைத் துணையாகக் காணுதல் நன்றே!
உற்றவர் துயர்கண்டே நீக்குதல் நன்றே
    உண்மையை மறைக்காமல் உரைப்பதும் நன்றே!
அற்றவர் அழிபசி தீர்தலும் நன்றே
     அன்பேதான் கடவுளாம் அறிவதும் நன்றே!

வழியலா வழிசென்று வாழ்வதும் தீதாம்
    வைதாரைப் பதிலுக்கு வைவதும் தீதாம்!
பழிவர எச்செயலும் செய்வதும் தீதாம்
    பாதகர் தம்முடன் பழகலும் தீதாம்!
இழிகுணம் ஒருவர்க்கு என்றென்றும் தீதாம்
    இல்லாரை எள்ளுதல் மிகமிகத் தீதாம்!
விழியெனக் கல்வியை அறியாமை தீதாம்
    வீண்காலம் போக்குதல் வாழ்வுக்கே தீதாம்!

எண்ணியே எச்செயலும் செய்திட வேண்டும்
     எண்ணாமல் ஆபத்தில் உதவிட வேண்டும்!
கண்ணியம் வார்த்தையில் என்றுமே வேண்டும்
    கடமையைத் தவறாது செய்திட வேண்டும்!
புண்ணியம் எதுவென்று அறிந்திட வேண்டும்
    புகழ்பெறப் பிறரைப் புகழ்ந்திட வேண்டும்!
பெண்ணினம் தன்னையே போற்றிட வேண்டும்
     பிறர்வாழ தான்வாழ நினைத்திட வேண்டும்!

                      - புலவர் சா இராமாநுசம்



    Tags :    
அன்பேதான் கடவுளாம் அறிவதும் நன்றே! - புலவர் சா இராமாநுசம், அன்பேதான் கடவுளாம் அறிவதும் நன்றே! - புலவர் சா இராமாநுசம், அன்பேதான் கடவுளாம் அறிவதும் நன்றே! - புலவர் சா இராமாநுசம்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 அம்மா அபி கவிதை
நான் கருவாய் இருந்த போது தொட்டு தொட்டு ரசித்தவளே!உன் அழகிய முகத்தை பார்க்க என்னை பத்து மாதம் காத்திருக்க வைத்தவளே!நான் உனக்குள் இருந்த அந்த ஒவ்வொரு நொடியும் உன்னை காண தவம் கிடந்தேனே!என்னை சிறிது சிறிதாய் கற்பனையில் செதுக்கியவளே!முதன் முதலில் இவ்வுலகில்

மேலும்...

 இயற்கை
அந்த சொல் கேட்ட அந்த நொடி !நினைவு வரும் அந்த காட்சி !மனதில் உதிக்கும் ஒர் புத்துணர்ச்சி !தூய்மையான சுவாசக் காற்று !மனதிற்கு நிம்மதி தரும் ஒர் உணர்வு.!அத்துடன் பழகிக் பாருங்கள்!உங்களையே உங்களுக்கு பிடிக்கும். S. ABARAJITHAAIX ‘A’DON BOSCO  MATRIC.

மேலும்...

 நட்பு
நட்பு என்பது ஒரு கடல்!அதில் முழ்கினால் எழுவது மிக கடினம்!எழுவதற்கான தகுதிகள் சிலருக்கே உண்டு!நட்பு இணைப்பிரியா தொல்லை!அதில் சின்ன சின்ன சண்டைகளும் சிறு சிறு தொல்லைகளும் உண்டு!இந்த சண்டைகளும், தொல்லைகளும் இல்லையெனில் நட்பில் பயனில்லை!இதை நாங்கள் உணர்ந்து விட்டோம் நீங்கள் உணர

மேலும்...

 வானம்:
எல்லை இல்லா ஒர் அதிசயம் வானம்அதற்க  ஈடு  இணை இல்லை .ரசிக்க முடியாத அழகு அது நம் வாழ்வின் அர்த்ததை உணர்த்தும் அழகு வானம்வாழ்வுக்கு முடிவு உண்டு ஆனால் முயற்சிகளுக்கு முடிவில்லை.இவ்வுலகத்தை பாதுகாக்கும் மிகப்பெரிய போர்வை இப்பூமியில் இதுவரை அதற்கு ஈடு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in