tamilkurinji logo


 

அன்பு - "கவியன்பன்" கலாம்,
அன்பு - "கவியன்பன்" கலாம்

First Published : Wednesday , 25th April 2012 12:27:32 PM
Last Updated : Tuesday , 24th April 2012 11:59:06 PM
Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303

அன்பு - மனக்கேணியின்
வற்றாத ஊற்று
உயிர்க் கயிற்றால்
உணர்வு வாளியைக் கட்டி
கண்களாம் குடங்களில் ஊற்று
கண்ணீராகும் அன்பு ஊற்று

அள்ளிக் கொடுத்தால்
அளவின்றித் திருப்பிக்
கிடைக்கும் சூட்சமம்

பக்தி, பாசம், நட்பு, காதல்
பற்பல கிளைகள் கொண்ட
அற்புத மரத்தின் ஆணிவேர்

பூமிச் சுற்றவும்
பூமியைச் சுற்றியும்
பூர்வீக அச்சாணி

அரசனும்
அடிமையாவான்
கிழவனும்
மழலையாவார்

தட்டிக் கேட்கும் அதிகாரம்;
எட்ட முடியாத தூரம்
தட்டிக் கொடுக்கும்
அன்புப் பெருக்கால்
எட்ட முடியும் நெருக்கம்

பிள்ளைகளின் கிறுக்கல்களை
பிழைகளைப் பொறுக்கையிலே
இழையோடும் அன்பால்
அழைக்கப்படுவர் பின்னர்
ஓவியனாக; இன்றேல்
பாவியாக

அன்பும் இசையும்
என்பும் அசைக்கும்
உருவமிலா உணர்வு
ஏழு ஸ்வரங்கட்குள்
இசையும் அடங்கும்
வாழும் வரம்புக்குள்
விசையாய் அன்பு அடங்கும்

அடிமைப்படுத்தும் முத்தம்
அன்பு இசையின் ச்ப்தம்;
சப்தத்தின் இசைகளைப் போல
முத்தத்தின் வகைகளும் பல

புன்னகைக் கீற்று
அன்பென்னும் காற்று
அணைத்தல் இடியுடன்
பாச மேகங்களைக் கூட்டும்
நேச முத்த மழைக் கொட்டும்

அன்பின் தூது
முத்த மடல்
அனுப்பி வைக்க
ஏங்கும் உடல்


அடைக்கின்றத் தாழ்களின்றித் திறந்த உள்ளம்
அதனுள்ளே பொங்குகின்ற அன்பு வெள்ளம்
தடையின்றி வெளியாகும் அன்பு ஊற்று
தாகமெலாம் தீர்ந்திடவே அருந்திப் போற்று
படைத்தவனின் அன்பினிலே நூறில் ஒன்றே
படைப்பினங்கள் வைக்கின்ற அன்பு என்றே
கிடைத்திட்ட வாய்ப்பான வாழ்வை யோசி
கிளைகளையும் கேண்மையையும் அன்பால் நேசி    Tags :    
அன்பு - அன்பு - அன்பு -
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வரமும்! சாபமும்!- அன்புடன் மலிக்கா
வழுக்காமல் செல்லும்வரைக்குமே வாழ்க்கை! வழுக்கியபின் வாழ்வுயென்பது செயற்கை! வாழ்க்கையில் எப்போதோ செய்[த]யும் தவறு வெளிப்படநேர்ந்தால்! வாழ்நாள் முழுவதும் வாழ்க்கை விரக்தியடைந்ததுபோல் வேடிக்கை காட்டும்! பலவேளை வெருச்சோடிய பாலைவனமாக்கி வேதனையிலும் ஆழ்த்தும்! வாழ்வு வசந்தமான வரம்! வழுக்கிட நேர்ந்தால் வாழ்நாளெல்லாம் சாபம்! வாழ்வு வரமாவதும்,,, சாபமாவதும் ,,, வாழ்வோரிடமே!… - அன்புடன் மலிக்கா, பஃஹ்ரைன்.

மேலும்...

 இவைகளின் காரணகர்த்தா எது?
தரணியில் பலயிடங்களில்தலைவிரித்தாடுகிறது காமக்களியாட்டம்களியாட்டத்திற்க்கு பலியாகிறதுதளிர்களின் உடல்களும் உயிர்களும்பெண்மைகளின் மானங்களும் மென்மைகளும்இளம் பிஞ்சுகள்இளமை மொட்டுகள்கன்னியர்கள்கண்ணகிகள்வயது வித்தியாசமில்லாமல்வல்லூருகளின்  விளையாட்டில்மானமும் உயிரும் மல்லுக்கு நிற்கிறதுநித்தம் நித்தம்மோகத்தீயிற்க்கு இரையாகிகாமக்கொடுர கண்களில் சிக்கிசிக்கிமுக்கி கல்லாய் கைகளின் மாட்டிசின்னாப்பின்னாமாகி சிதைகிறார்கள்சிலபல வேளை சின்னா பிணமாகிறார்கள்கண்டனங்களும் போராட்டங்களும் நடந்துகொண்டேதானிருக்கிறதுஆனால்பெண்கள் காமத்தால் சுட்டெரிக்கபடுவதும்பெண்மைகள்

மேலும்...

 சந்திப்பின் நிகழ்வில்..
பனிக்கொட்டும் இரவில்படர்ந்திருந்த மெளனங்கள்மெல்ல கலைகிறதுமேகத்தோடு சேர்ந்து கொ[கெ]ஞ்சலோடுஆழ்மனக்கிடங்கில் அமுங்கிடமுடியாமல்ஆழிப்பேரலைபோல்அடித்துக்கொண்டு கிடக்கும் அந்நிகழ்வுகள்அதரங்களில் ஓரத்தில்வழிந்தோட துடித்த நிலையில்அந்நேரத்தில் அதிசயமாய்அசைந்தாடிய அனிச்சமலரோடுஅசையமறுத்த இமைகளுக்குள்ளிருந்துஅசைந்தாடியது கருவிழிகள் அச்சத்தால்விரசப் பார்வை உரசி உரசிஉயிரை உருக்கத் தொடங்கஒளியோடு நிலா உலாவரும் நேரத்தில்ஒளிந்துக்கொள்ள இடம்தேடியது வெட்கம்தன்னையறியாது தலையசைக்கும்தவிப்புகளை தவிடுபொடியாக்கிதனிமைக்கு விடைக்கொடுக்கஎண்ணிய

மேலும்...

 தீப ஒளித் திருநாள் வாழ்த்து
புத்தாடைப் பூணும்; புதுசுகம் காணுமேமத்தாப் பொளிரும்; மனைகள் மிளிருமேதித்திக் குமின்பம்; திகட்டாத அன்புமாய்எத்திக் குமுள்ளதோர் இந்தியர் நாள்இல்லார்க்கு மின்முகமா யீந்து மகிழ்வுடன்எல்லாரும் பெற்றிடும் இன்னா ளின்பத்தைப்பாரிலுள்ள இந்தியர்க்குப் பங்காய்த் தருவதால்நேரி லருளும் சிறப்பு.இன்றுபோல் இன்பமாய் என்றுமே வாழ்ந்திடநன்றுபல பெற்று நலங்களும் சூழ்ந்திடஇச்சங்கம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in