tamilkurinji logo


 

அனைவருக்கும் உணவில்லை - ஆனால் ஹால்மார்க் நகை உண்டு...
,
அனைவருக்கும் உணவில்லை - ஆனால் ஹால்மார்க் நகை உண்டு...

First Published : Thursday , 5th January 2012 10:10:16 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM
அனைவருக்கும் உணவில்லை - ஆனால் ஹால்மார்க் நகை உண்டு... , சமீபத்திய இந்தியாவின் உணவு நிலை குறித்து ஐ.நா அறிக்கை ஒன்றை அண்மையில் தாக்கல் செய்தது. அதில் இந்தியாவில் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களில் இருபத்தி மூன்று கோடிக்கும் அதிகமான பேர் ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் நிகழும் மரணங்களில் முப்பத்தி மூன்று சதவித பெரியவர்களும், ஐம்பது சதவித குழந்தைகளும் பட்டினி மற்றும் ஊட்டச்சத்துக் குறைவால் இறக்கின்றனர் என்கிறது தகவல்.


மேலும் - ஆறு கோடி குழந்தைகள் வயதுக்கேற்ற வளர்ச்சியின்றியும், இரண்டரை கோடி குழந்தைகள் உயரத்திற்கு ஏற்ற எடையின்றியும், ஐந்தரை கோடி குழந்தைகள் வயதுக்கு ஏற்ற எடையின்றியும் இருப்பதாக குறிப்பிடுகிறது. "இந்தியாவுக்கு ஆப்பிரிக்கா மேல் " என்று சொல்லக்கூடிய அளவு நிலைமை மோசமாக உள்ளது.

இது இப்படி இருக்க - அரசின் முன்னுள்ள, இந்தியாவின் மானத்தையே கப்பலேற்றக்கூடிய வறுமை மற்றும் பட்டினி சாவுகள் குறித்து துளியும் கவலை கொள்ளாத அரசு - அடிப்படை சுகாதார வசதியோ, சீரான குடிநீர் விநியோகம் போன்றவற்றை எல்லாம் கண்டு கொள்ளாத அரசு, இடைத்தரகர்களால் விவசாயிகள் சுரண்டப்படுவதையும் கண்டு கொள்ளாத அரசு - மக்களின் அத்தியாவசிய தேவையான, மிக மிக முக்கியமான தங்கத்தை மக்கள் வாங்கி ஏமாறுவதாக கருதி புது சட்டம் ஒன்றை இயற்ற தயாராகி உள்ளது.

வாடிக்கையாளர்கள் தரம் குறைந்த தங்க நகைகளை வாங்கி பாதிப்புக்குள்ளாவதை தடுக்கும் வகையில், இனி,"ஹால்மார்க்' முத்திரை கொண்ட தங்க ஆபரணங்களை மட்டுமே விற்க வேண்டும் என்கிற திட்டத்தை கொண்டு வர, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. (ரெம்ப முக்கியம்)
நாட்டில், சில தங்க ஆபரண விற்பனை மையங்கள், தரம் குறைந்த நகைகளை விற்பனை செய்து வருகின்றன. எனினும், பல நிறுவனங்கள் தங்கத்தின் தரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும், "ஹால்மார்க்' முத்திரை கொண்ட, நகைகளை விற்பனை செய்கின்றன.

இந்நிலையில், தரம் குறைந்த ஆபரணங்களால், நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவதை தடுக்கும் நோக்கத்தில், மத்திய அரசு அனைத்து தங்க விற்பனை நிலையங்களும், "ஹால்மார்க்' முத்திரை கொண்ட நகைகளையே விற்க வேண்டும் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவை குழு, இத்திட்டத்திற்கு நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

 இதைத் தொடர்ந்து, இந்திய தர நிர்ணய சட்டத்தில், திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது.
பல வித உணவு பொருட்களை ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்த அகற்ற மறுத்து, செயற்கையான விலை ஏற்ற இறக்கங்களுக்கு காரணமான அரசு என்று யாரும் சொல்லிவிடக் கூடாதென்று - மக்களின் முகத்தில் புன்னகையை பார்க்க, பொன் நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை தருகிறது போலும்.

அரசுக்கு இதன் மூலம் வருமானம் கிடைக்க போகிறது. இன்றைக்கு ஊருக்கு நான்கு கடை - ஹால்மார்க் ஷோரூமாக இருக்கிறது. எல்லா கடைகளும் ஹால்மார்க் ஷோரூமாக மாறுகையில் - அரசுக்கு வரி வருவாய் தானே. சரி. ஹால்மார்க் ஷோரூம்கள் எல்லாம் நம்பகமானது தானா? நகைக்கடைகளின் விளம்பரங்களிலேயே - ஒருவரை ஒருவர் பித்தலாட்டக்காரர்களாக தானே காட்டுகிறார்கள்.

நமது நண்பர் - தமிழகத்திலேயே மிக குறைவான சதவிதத்தில் ஹால்மார்க் தரும் நிறுவனத்தில் நகை வாங்கினார். விற்க வேண்டிய சூழல் வந்தது. அவரின் நண்பர்கள் பொற்கொல்லராக இருக்கின்ற காரணத்தால் - நகை உருக்கி விற்று பார்ப்போம் என்று கருதி இருக்கிறார். நகையை முழுமையாக உருக்கினால் தான் - தங்கத்தின் கேரட்டை துல்லியமாக கணிக்க முடியும். அப்படி உருக்கி - கேரட் பார்த்தபோது - 91.6 இருக்க வேண்டிய தங்கம் 91.3 கேரட்டே இருந்தது.

"இதை ஏமாற்று வேலை என்று சொல்ல முடியாது. இது தயாரிப்பு நிலையில் அவர்களும் அறியாமல் நிகழக்கூடியவை. 91.0 க்கும் குறைவாக இருந்தால் ஏமாற்று வேலை எனலாம்" என்று மழுப்பினார் ஒரு நகைக் கடையில் பணிபுரிபவர். எது எப்படி இருந்தாலும் அரசு எதற்கு முக்கியத்துவம் தர வேண்டுமோ அதற்கு முக்கியத்துவம் தருவது இல்லை.
வறுமைக்கோட்டுக்காக நிர்ணயிக்கப்பட்ட அளவு நகர்ப்புறங்களில் முப்பத்தி இரண்டு ரூபாயும், கிராமப்புறங்களில் இருபத்தியாறு ரூபாயும் சம்பாதிக்க முடிந்தவர்களெல்லாம் வறுமைக்கோட்டு மேலே இருப்பவர்கள் என்று சொன்ன புத்திசாலிகள் வாழுகிற நாடு. ஏழை மக்களின் உணவு தானியங்களுக்காக வழங்கப்படும் மானியங்களை பெருமளவு குறைப்பது, ரேசன் கடைகளை முற்றுமுழுவதுமாக நீக்குவது என்பதன் நோக்கத்தோடு தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று சாமானியர்களின் வயிற்றில் அடிக்கும் போக்கு தொடர்கிறது.

"உலோகத்துக்கு தரும் மரியாதையை கூட மனிதர்களுக்கு - ஏழைகளாக இருப்பதால், தர யோசிக்கிறது அரசு" என்று தான் சொல்ல வேண்டும்.

- ஓசை    Tags :    
அனைவருக்கும் உணவில்லை - ஆனால் ஹால்மார்க் நகை உண்டு... <br>, அனைவருக்கும் உணவில்லை - ஆனால் ஹால்மார்க் நகை உண்டு... <br>, அனைவருக்கும் உணவில்லை - ஆனால் ஹால்மார்க் நகை உண்டு... <br>,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பணிவோம், உயர்வோம்!
பிறர் தவறு செய்தால், ஏன் இப்படி செய்தார் என்று சிந்தித்து நேரத்தை வீணாடிக்கக் கூடாது.சோர்வடைந்து காணப்படும் எவரையும் பார்த்து ஏன் உடல்நலம் சரியில்லையா? என்ன ஆயிற்று என்றெல்லாம் கேட்கக் கூடாது.பிறர், உங்களுக்குச் செய்யும் உதவிகளை மனதில் வைத்து நன்றி பாராட்டுங்கள்.யாரிடமும் சம்பளம்

மேலும்...

 மனஅழுத்தத்தை விரட்டி எப்போதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்
எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு நம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் சந்தோஷத்தை எப்படி ஏற்படுத்தி கொள்வது என்பதைத் தான் நாம் சரியாக புரிந்து கொள்வதில்லை. அதனால் தான்  நமக்குள்ளேயே இருக்கிற சந்தோஷத்தை வெளியே தேடிக்கொண்டிருக்கிறோம்எப்போதும் சந்தோஷமாக, சிரித்துக் கொண்டு

மேலும்...

 திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்
 எப்போதும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும் பெண்கள் கூட திருமணத்திற்கு பிறகு சதை போட்டு விடுகிறார்கள்.ஏன் ஒரு பெண் திருமணம் ஆன பிறகு மட்டும் குண்டாகிறாள்? இதற்காக ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 10 வருடங்களாக

மேலும்...

 முதுமை பற்றிய பொன் மொழிகள்
மூப்பை வெல்ல உண்மையான வழி, உள்ளத்தின் இளமையை போற்றிப் பாதுகாப்பதே.முதுமை எய்துவது ஒரு கெட்டப் பழக்கம். வேலையில் முனைந்திருக்கும் மனிதனுக்கு அதற்கு அவகாசம் இல்லைஇலக்கியங்கள் இளமையில் உற்சாகத்தையும், முதுமையில் மகிழ்ச்சியும் கொடுக்கின்றன.முதுமையை முன்னிட்டு முன்னதாகச் செய்யும் பாதுகாப்புகளில் சிறந்தது கல்வி.வாழ்நாட்களின் இனிய

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in