tamilkurinji logo
 

ஸ்ரீ வல்லக்கோட்டை முருகன் திருக்கோயில்,


ஸ்ரீ வல்லக்கோட்டை முருகன் திருக்கோயில்

First Published : Wednesday , 21st October 2009 11:17:06 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


அறுனகிரிநாதர் இத்தலத்தை "கோடை நகர் " என்று திருப்புகழில் குறிப்பிடுகிறார். முருகன் வள்ளி தெய்வானையுடன் "ஏழு" அடி உயரத்தில் கம்பீரமாக ,தெய்வீகமாக காட்சி அளிக்கிறார்.வல்லக்கோட்டை சென்னைக்கு மேற்கே உள்ளது.பாரிமுனையிலிருந்து 51 கி. மீ தூரத்தில் மேற்கிலும், தாம்பரத்திலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவிலும் ,ஸ்ரீபெரும்புதூரிலிருந்து தெற்கே சுமார் 13 கிமீ தொலைவில் உள்ளது.தற்போதைய பெயர் : வல்லக்கோட்டை

மூலவர் : கோடை ஆண்டவர்

தல விருட்சம் : பாதிரி

தரிசன நேரம் : காலை 5.30 மணி முதல் 1 மணி வரை மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை

விசேஷ பூஜை : பரணி, கார்த்திகை மற்றும் முருகனுக்குரிய அனைத்து விசேஷ நாட்களிலும் விசேஷ பூஜை நடக்கிறது.

தொலைபேசி : 91- 411- 272 225

வல்லக்கோட்டை முருகனைப் போற்றி வாரியார் சுவாமிகள் ஆசுகவியாகப் பின்வரும் பாடலை இயற்றிப் பாடினார்.

மகிழ்தரு பகவான் போற்றும்
வரதநா யகனே போற்றி
திகழ்தரு மயிலா போற்றி
செஞ்சுடர் வேலா போற்றி
அகமகிழ் யானை வள்ளி
அணைதரும் அரைசே போற்றி
புகழ்தரு வல்லக் கோட்டை
புனிதனே போற்றி போற்றி

பொதுவாக ஏழு சுரம், திருக்குறளுக்கு ஏழு சீர், ஏழு கடல், ஏழு முனிவர், ஏழு மாதாக்கள், ஏழு பிறப்பு என்பர். இத்தல முருகன் ஏழடி உயரம். இத்தலத் திருப்புகழ் ஏழு. அருணகிரியாரை அடையாளம் காட்டி அழைத்த தலமிது.தமிழகத்தில் எங்கும் காண இயலாத பிரம்மாண்டமான தோற்றத்துடன் முருகன் இந்த வல்லக்கோட்டை தலத்தில் எழுந்தருளியுள்ளான். பகீரதனால் அமைக்கப்பெற்ற ஆலயம். இந்திரன் இத்தலத்திற்கு வந்து அனது வஜ்ராயுதத்தை ஊன்றி திருக்குளம் உண்டாக்கி இத்தீர்த்தத்தினால் முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டான்.மேலும் தலவரலாற்றை பாட்காஸ்ட்டில் கேட்டு மகிழுங்கள்

மேலும் இத்தலத்தை ப்ற்றி கேட்க கீழே க்ளிக் செய்யவும்
    Tags :    
ஸ்ரீ வல்லக்கோட்டை முருகன் திருக்கோயில், ஸ்ரீ வல்லக்கோட்டை முருகன் திருக்கோயில், ஸ்ரீ வல்லக்கோட்டை முருகன் திருக்கோயில்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 அருள்மிகு சுப்ரம்ண்யசுவாமி திருக்கோவில்,எட்டுகுடி
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டம் எட்டுகுடியில் உள்ளது அருள்மிகு சுப்ரம்ண்யசுவாமி திருக்கோவில்.நாகப்பட்டினம் நகரிலிருந்து தென்மேற்காக சீராவட்டம் என்னும் பிரிவு சாலையிலிருந்து மேற்கே 4 கீ.மீ தொலைவில் உள்ளது எட்டுகுடி. ‎மூலவர் முருகப்பெருமான் மூவிரு முகங்களுடனும், பன்னிரு கரங்களுடனும் திருவாட்சியுடன் வடக்கு பார்த்த மயிலின்

மேலும்...

 அருள்மிகு வக்ரகாளியம்மன் திருக்கோயில் திருவக்கரை - நட்ராஜ்
அருள்மிகு வக்ரகாளியம்மன் திருக்கோயில் திருவக்கரை கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்). திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம்.ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்) என்று போற்றப்படும் சிவன்,பார்வதி,பெருமாள் ஆகிய மூன்று கடவுளரும் அருள் தரிசனம் வழங்கும் அற்புத பதி.வடக்கு நோக்கிய வக்ர

மேலும்...

 ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை சமெத முல்லைவனநாதர் திருகோவில் திருக்கழுகாவுர் - நட்ராஜ்
வெட்டாற்றின் கரையில் பாபநாசம் - சாலிய மங்கலம் சாலையில் அமைந்துள்ள அழகிய கிராமம் திருக்கருகாவுர். கும்பகோணத்திலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இக்கிராமத்தில் ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை சமெத முல்லைவனநாதர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். தஞ்சாவுர் மற்றும் கும்பகோணத்திலிருந்து இத்திருக்கோவிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் அதிகமுண்டு.தற்போதய பெயர் : திருக்கருகாவுர் -(திருக்கழுகாவுர்

மேலும்...

 ஸ்ரீ திருமேனீஸ்வரர் திருக்கோவில், கோவுர் - நட்ராஜ்
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் ஐந்து (ஸ்ரீ திருமேனீஸ்வரர் திருக்கோவில், கோவுர்) ஸ்ரீ திருமேனீஸ்வரர் திருக்கோவில், கோவுர் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்). சென்னையிலிருந்து சுமார் 21 மைல் தொலைவில் குன்றத்தூர் செல்லும் பாதையில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message
That’s a very good point, Houston will not deal with Boras, or at least they ha87&n#v21e;t since the Beltran debacle. Many 2009 first rounders will be Boras Corp. clients though so, who knows.
By Lena
2017-07-07 18:20:41
 

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in