yearly Viruchigam,Viruchigam 2012 rasibalan ஜோதிடம் , ராசி பலன் , தினபலன் , வார பலன் , ஆண்டு பலன் 2010 , ஆணடுபலன் 2011, "கர" வருட தமிழ் ஆண்டுபலன் , குருபெயர்ச்சி பலன் , சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் , வாஸ்து , நியூமராலஜி , எண்கணிதம் , Jothidam , Astrology , Vasthu , Neumerology , Rasi Balan 2010,Rasi Balan 2011 Balan, Weekly Raasi Balan, Guru Balan , Sani Balan , Dai Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji
tamilkurinji logo
 


ஜோதிடம் >>> ஆண்டுபலன் 2012 - English new year

20883

Viruchigam

Sunday , 1st January 2012 01:18:44 PM

விருச்சிகம்: Viruchigam


விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய.

சாமர்த்தியமாகப் பேசுவதிலும் செயல்படுவதிலும் வல்லவரான விருச்சிக ராசி நேயர்களே!

பிரதான கிரகங்களில் குரு மே மாத பெயர்ச்சிக்குப் பிறகு நல்ல பலன்களைத் தரும் வகையில் உள்ளனர். ஏழரைச் சனி ஆரம்பத்திருக்கிறது. ராகு,கேதுவின்
அமர்வும் அவ்வளவு சரியாக இல்லை. குருவின் பலத்தால் பணவரவைத் தடுக்கும் விஷயங்கள் கட்டுப்படும். போதுமான அளவுக்கு பணம் வரும். விரயச்சனியால் ஏற்படும் செலவுகள் குறையும். அனுபவம் இல்லாத பணிகளில் ஈடுபடக் கூடாது. மூத்த சகோதர, சகோதரிகள் நீங்கலாக மற்ற உறவினர்களால் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் இருக்கும். வீடு, வாகன வகையில் பராமரிப்பு செலவு கூடும். பயணங்களில் மிதமான வேகம் பின்பற்ற வேண்டும். தாயின் அன்பு, ஆசி எப்பொழுதும்போல் உண்டு. புத்திரர்கள் நண்பரைப்போல இணக்கமாக நடந்து கொள்வர். ஒருவர் கருத்து மற்றவருக்கு உதவும் வகையில் இருக்கும். பூர்வ சொத்தில் கிடைக்கிற வருமானத்தின் அளவு உயரும். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நிறைவேறும். எதிரிகளால் வருகிற தொல்லைகளை சரிசெய்ய தகுந்த மாற்று உபாயங்களை பின்பற்ற வேண்டும். உடல்நிலை தொந்தரவு தருகிற கிரகநிலை உள்ளது. ஆரம்பத்திலேயே தகுந்த சிகிச்சை, சீரான ஓய்வு உடல்நலம் பெற உதவும். குடும்பத்தின் முக்கிய தேவைகளை நிறைவேற்ற சேமிப்பு பணம் செலவாகும்.

கணவன், மனைவி பொறுமையுடன் செயல்படுவதால் சச்சரவு வளர்க்காமல் தவிர்க்கலாம். நண்பர்களிடம் கடன் பெறுவது, கொடுப்பது ஆகிய செயல்களை தவிர்ப்பது நல்லது. சிலர் வீடு, பணியிட மாற்றம் பெறுவர். விலை மதிப்புள்ள பொருள் இரவல் கொடுப்பது, பிறர் பொருளை பாதுகாப்பது ஆகிய செயல்களை தவிர்க்கவும். வெளியூர் பயணங்களை முக்கியத்துவம் கருதி மேற்கொள்வது நல்லது. திருமண முயற்சி வருட பிற்பகுதியில் நிறைவேறும். மே மாதம் வரை நிலைமையை சமாளிக்க கஷ்டப்பட்டாலும், அம்மாதத்தில் நடக்கும் குருபெயர்ச்சி உங்களுக்கு யம்மா என்று ஆச்Œரியப்படும் வகையில் நல்ல பலன் வழங்கும்.

தொழிலதிபர்கள்:

மருத்துவமனை, லாட்ஜ், ஓட்டல், டிராவல்ஸ், டிபார்ட்மென்டல் ஸ்டோர், நிதி, கல்வி நிறுவனம், பால்பண்ணை, அரிசி ஆலை, அச்சகம் நடத்துவோர், டெக்ஸ்டைல்ஸ், பிளாஸ்டிக், மின்சார மின்னணு சாதனம், வாகன உதிரிபாகம், காகிதம், தோல், கட்டுமானப் பொருள் உற்பத்தி செய்பவர்கள் ஆண்டின் முற்பகுதியில் சுமாரான லாபமும், பிற்பகுதியில் குருவின் ஸ்தானம் மற்றும் பார்வை பலத்தால் கூடுதல் லாபமும் பெறுவார்கள். அதிக உழைப்பும், சிக்கனச்செலவும் பொருளாதார நிலையில் ஏற்பட இருக்கும் சிரமங்களை பெருமளவில் குறைக்கும். உபதொழிலில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. தொழிலதிபர் சங்கங்களில் பதவி வகிப்போருக்கு சக நிர்வாகிகளுடன் கருத்து வேறுபாடு வரலாம்.

வியாபாரிகள்:

நகை, ஜவுளி, மளிகை, தோல், பிளாஸ்டிக், காய்கறி, பழம், மின்சார, மின்னணு சாதனங்கள், பால்பொருள், வாகனம், ஆட்டோமொபைல் உதிரி பாகம், கட்டுமானப் பொருள், அழகு சாதனம், ஸ்டேஷனரி, மருந்து, பாத்திர வியாபாரிகளுக்கு விற்பனையில் சராசரி நிலைமையும் சுமாரான லாபமும் இருக்கும். வருட பிற்பகுதியில் குருவின் நிலையால் அதிக லாபம் கிடைக்கும். அளவான கொள்முதல் செய்வதால் முதலீட்டு தேவைகளை குறைக்கலாம். சரக்கு வாகன வகையில் பராமரிப்பு, பாதுகாப்பில் கூடுதல் கவனம் நன்மை தரும்.

பணியாளர்கள்:

அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியிடத்தில் உள்ள சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவது நன்மை தரும். பணியில் வருகிற
குளறுபடிகளை தாமதமின்றி சரிசெய்வதால் நிர்வாகத்தின் கண்டிப்பைத் தவிர்க்கலாம். மே மாதம் வரை சக பணியாளர்களிடம் கருத்து வேறுபாடு இருந்தாலும், பின் விலகி நல்ல அபிப்பிராயம் ஏற்படும். ஓவர்டைம் போன்ற சலுகைகள் குறையும் என்பதால், வருமானத்தில் சற்று இடிக்கும். வழக்கமான சலுகைகள் கிடைக்கும்.

பெண்கள்:

பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை பின்பற்றுவதில் குழப்பமான மனநிலை கொள்வர். பணிகள் தாமதம் ஆவதால் நிர்வாகத்தின் கண்டிப்பை எதிர்கொள்ள நேரிடும். வருட பிற்பகுதியில் பணி நிலைமை சீராகும். குடும்பப் பெண்கள் பிறந்த வீட்டுப்பெருமையை கணவரிடம் விவாதித்து பிரச்னையை கிளறக்கூடாது. வீட்டுச்செலவுக்கு சிரமமாக இருக்கும். சிக்கனம் அவசியம். சுயதொழில் புரியும் பெண்கள் சுமாரான லாபம் பெறுவர். புதிய கிளைகளை துவங்கும் முயற்சியை யோசித்து செய்வது நலம்.

மாணவர்கள்:

மாணவர்கள் கவனக்குறைவால் படிப்பில் பின்தங்க நேரிடும். கூடுதல் முயற்சியால் தரதேர்ச்சியை தக்கவைக்கலாம். படிப்புக்கான பணவசதி பெற தாமதமாகும். சக மாணவர்களுடன் படிப்பு தவிர்த்த, பிற விவாதம் கூடாது. பயணங்களில் பாதுகாப்பு நடைமுறை பின்பற்றுவது நல்லது.

அரசியல்வாதிகள்:

உங்களிடம் நன்மை பெற்ற சிலர் நன்றி மறந்து செயல்படுவர். அவர்கள் புதியவர்களை நாடிச்சென்று உதவுவதால், உங்களுக்கு சில சிரமங்கள் ஏற்படும். எதிரிகளின் கெடுசெயல் உங்களை மனம் தளர வைத்தாலும், மாற்றுத்திட்டம் தீட்டி வெற்றி பெறுவீர்கள். பொது விவகாரங்களில் சமரசம் பேசும் தருணங்களில், இருதரப்பு கருத்துக்களையும் மதித்து செயல்பட வேண்டும். இதனால் பகை வராது.

விவசாயிகள்:

சாகுபடி செய்ய அதிக செலவு ஏற்படும். சுமாரான மகசூல் இருக்கும். கால்நடை வளர்ப்பில் கிடைக்கிற பணம் குடும்பத்தேவைகளை நிறைவேற்ற பெருமளவில் உதவும்.

சர்ப்ப சாந்தி செய்து கொள்ளவும். சனிக்காக சனிக்கிழமைதோறும் சாயங்காலத்தில் நல்லெண்ணெய் விளக்கேற்றவும்.

வருட முன்பகுதியில் குரு பிரீதி செய்யவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9.

திசை: கிழக்கு, வடகிழக்கு, தெற்கு.

தெய்வம்: சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி.


  Tags : Viruchigam, ,2012, ,rasibalan, ,aandubalan, ,aandupalan, ,varudapalan, ,varudabalan, ,ராசிபலன், ,ஆண்டுபலன், ,வருடபலன்,Viruchigam,Viruchigam,2012,rasibalan






















மகளிர்













பிற ராசிகளுக்கான பலன்கள்








Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in