sanibalan Viruchigam,Viruchigam ஜோதிடம் , ராசி பலன் , தினபலன் , வார பலன் , ஆண்டு பலன் 2010 , ஆணடுபலன் 2011, "கர" வருட தமிழ் ஆண்டுபலன் , குருபெயர்ச்சி பலன் , சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் , வாஸ்து , நியூமராலஜி , எண்கணிதம் , Jothidam , Astrology , Vasthu , Neumerology , Rasi Balan 2010,Rasi Balan 2011 Balan, Weekly Raasi Balan, Guru Balan , Sani Balan , Dai Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji
tamilkurinji logo
 


19696

Viruchigam

Sunday , 13th November 2011 02:59:02 PM

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - 15-11-2011 முதல் 2-11-2014 வரை

விருச்சிகம்:


இதுவரை உங்கள் ராசிக்கு பதினோராம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் இப்போது உங்களுடைய விரய ஸ்தானமான பனிரண்டாமிடத்தில் சஞ்சரிக்கிறார். இதையே ஏழரைச் சனி என்று குறிப்பிடுவர். பனிரண்டாமிடம் என்பது விரய ஸ்தானமாகும். அங்கு சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் உங்களுக்கு நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது. மன மகிழ்ச்சி இருக்காது . படுத்தல்கள் இருக்கத்தான் செய்யும். விரயச் சனியானவர் உங்களைஅலைக்கழித்து தொல்லைப்படுத்துவார். மக்களால் சில பிரச்னைகள் சூழும். வாழ்க்கைத்துணைவரின் உடல்நலனில் கவனம் தேவை.

வீண்விரயம் ஏற்படும். தேவையில்லாத, அனாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வது நல்லது. கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வதும் அவசியமாகும். மேலும் இந்தச் சனிப் பெயர்ச்சிக் காலத்தில் ரிஷபத்திலும், கடகத்திலும் குரு உலவும் நிலை அமைவதாலும், பெரும்பாலான காலம் சனி குருவின் பார்வையைப் பெறுவதாலும் நற்பலன்களும் உண்டாகும் என்று உறுதியாகச் சொல்லலாம். மேலும் ஜனன கால ஜாதகப்படி இந்த நேரத்தில் யோக பலம் உள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானாலும் கவலைப்படத் தேவையில்லை. என்றாலும் சனிப் பிரீதி அவசியம் செய்யவேண்டும்.

15-11-2011 முதல் 10-10-2012 வரை செல்வ நிலையில் அபிவிருத்தி காண வாய்ப்பு உண்டாகும். மதிப்புக்கும் அந்தஸ்துக்கும் குறைவிராது. சுப காரியங்கள் நிகழும். வாழ்க்கைத்துணைவரால் நலம் பெறுவீர்கள். மக்கள் நலனுக்காகச் செலவு செய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். பொறியியல் துறை லாபம் தரும். 17-5-2012 முதல் குரு 7-ஆமிடம் மாறுவதால் பொருள்வரவு கூடும். வாழ்க்கைத்துணைநலம் சீராகும். கூட்டுத் தொழிலில் அபிவிருத்தி காணலாம். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். 26-6-2012 முதல் நீண்ட நாளைய எண்ணங்கள் ஈடேற வழிபிறக்கும். காரியத்தில் வெற்றி கிட்டும்.

11-10-2012 முதல் 4-11-2013 வரை அலைச்சல் அதிகமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். பயணத்தின்போதும், வண்டி, வாகனங்களைப் பயன்படுத்தும்போதும் எச்சரிக்கை தேவை. பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். 23-12-2012 முதல் கால் பாதம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படும். பயணத்தின்போது பொருள் காணாமல் போகும். வீண்செலவுகளும் இழப்புகளும் கூடும். கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது அவசியமாகும். தூக்கம் கெடும். மனதில் ஏதேனும் பயம் இருக்கும். தொழிலில் விரும்பத்தகாத இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். 31-5-2013 முதல் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். மக்களால் மன அமைதி கெடும். இருப்பிடத்தில் மாற்றம் செய்து கொள்வீர்கள். அந்த மாற்றமும் திருப்திகரமாக அமையாது. குரு, சனி, ராகு ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்ளவும்.

5-11-2013 முதல் 1-11-2014 வரை பண வரவு அதிகரிக்கும் நேரமிது. குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். விருந்து, உபசாரங்களில் பங்கு கொள்வீர்கள். மக்கள் நலம் சீராகும். நூதன கண்டுபிடிப்புகளின் மூலம் புகழும் பொருளும் கிடைக்கும். புத்திசாலித்தனம் வெளிப்படும். 19-6-2014 முதல் தொலைதூரத் தொடர்பால் அதிகம் நலம் உண்டாகும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். சொத்துக்கள் சேரும். மதிப்பு உயரும். முயற்சி வீண்போகாது. ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். தெய்வப் பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். கறுப்பு, கருநீல நிறப்பொருட்களால் ஆதாயமிராது. தொழிலாளர்கள், விவசாயிகள், போக்குவரத்து இனங்களைச் சேர்ந்தவர்கள், சுரங்கப் பணியாளர்கள் ஆகியோர் தங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றி வருவது நல்லது. 12-7-2014 முதல் ஏற்றுமதி-இறக்குமதி இனங்கள் லாபம் தரும். அந்நிய மொழி, மதக்காரர்களால் நலம் உண்டாகும். குறுக்கு வழிகளில் பணம் சேரும். மக்களால் சில பிரச்னைகள் தலைதூக்கும் என்றாலும் சமாளித்து விடுவீர்கள்.

மொத்தத்தில் விரயச்சனி காலத்தில் பொருள் நஷ்டம், பண நஷ்டம் ஏற்படுவதைத் தடுக்க முடியாது. எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது அவசியமாகும். வீண் விவகாரங்களில் தலையிடவேண்டாம். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். சனிக்குரிய பிரீதி, பரிகாரங்களைத் தொடர்ந்து செய்து வரவும்.

பரிகாரம்:

1. சனியால் ஏற்படும் தொல்லைகள் தீர சனியின் குருவான கால பைரவருக்கு அஷ்டமி திதிக்களில் உளுந்து வடைமாலை சாற்றி வணங்கிடவும்.

2. மகுடேஸ்வரர் கோவிலுக்குச் சென்று தோஷ பரிகாரங்களை உரிய முறையில் செய்து கொள்ளவும்.

3. பிரதி சனிக்கிழமை சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டு 9 முறை வலம் வந்து வணங்கவும்.

5. திருநள்ளாறு, குச்சானூர், ஏரிக்குப்பம் முதலிய இடங்கலில் எழுந்தருளியுள்ள சனீஸ்வரரை தரிசித்து பரிகார வழிபாடுகளைச் செய்யவும் .


  Tags : Viruchigam, ,சனிப், ,பெயர்ச்சிப், ,பலன்கள், ,-, ,15-11-2011, ,முதல், ,2-11-2014, ,வரை, , Viruchigam,Viruchigam




























மகளிர்















பிற ராசிகளுக்கான பலன்கள்








Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in