sanibalan Thulam,Thulam ஜோதிடம் , ராசி பலன் , தினபலன் , வார பலன் , ஆண்டு பலன் 2010 , ஆணடுபலன் 2011, "கர" வருட தமிழ் ஆண்டுபலன் , குருபெயர்ச்சி பலன் , சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் , வாஸ்து , நியூமராலஜி , எண்கணிதம் , Jothidam , Astrology , Vasthu , Neumerology , Rasi Balan 2010,Rasi Balan 2011 Balan, Weekly Raasi Balan, Guru Balan , Sani Balan , Dai Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji
tamilkurinji logo
 


19698

Thulam

Sunday , 13th November 2011 03:00:07 PM

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - 15-11-2011 முதல் 2-11-2014 வரை

துலாம்:


இதுவரை உங்கள் ராசிக்கு விரயஸ்தானத்தில் சஞ்சரித்துவந்த சனிபகவான் இப்போது ஜென்மஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இதற்குமுன் விரயஸ்தானத்தில் இருந்தபடி உங்களுக்கு கடுமையான பலன்களைக் கொடுத்த சனி பகவான் இனி இரண்டாவது இரண்டரையில் அதாவது ஜென்ம ஸ்தானத்தில் பிரவேசிப்பது எப்படியிருக்கும் என்பதைப் பார்க்கலாம்.

இதுகாறும், குடும்பத்திற்காகவும், தன்னை அண்டியிருக்கும் பெற்றோர், சகோதர சகோதரிகளுக்காகவும், மாமன், அத்தை, பாட்டி. தாத்தா இவர்களுக்காகவும் ஏதோ ஒரு வகையில் விரயம் செய்து , கடன் காட்சி என்று அவஸ்தையுற்றிருந்தால், இவற்றுக்கு ஒரு விமோசன காலம் பிறந்துவிட்டது. கடன்கள் பைசலாகும். நஷ்டங்கள் மறைந்து தன வரவுகள் பெருகி கடன் நிவாரணம் கிடைத்து நிம்மதி காண்பீர்கள். வருவாய் பெருகி சொத்துக்களின் மேல் உள்ள கடன்களைத் தீர்த்து பத்திரங்களை மீட்பீர்கள். தன வரவு தாராளமாகக் கிடைத்து உங்களை பெருத்த மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

வீண் விரயங்கள் இனிமேல் இருக்காது. உடல்நலமும் சீராகும். மன பலம் கூடும். சுகானுபவம் உண்டாகும். உற்சாகமாக நடைபோடுவீர்கள். நல்ல இடமாற்றம் உண்டாகும். தொழிலிலும் மாற்றத்தைக் காண்பீர்கள். பயணம் செய்வதில் ஆர்வம் கூடும். அயல்நாட்டுத் தொடர்பால் பயன் பெறுவீர்கள். கலைஞானம் உண்டாகும். வெளிநாட்டுப் பயணத்திட்டம் சிலருக்குக் கைகூடும். சொத்துக்கள் சேரும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். மகன் அல்லது மகளுக்கு வெளியூர், வெளிநாட்டில் வேலை கிடைக்கும். அலைச்சலும் உழைப்பும் அதிகமானாலும் கூட அதனால் பயனும் அதிகமாகும்.

15-11-2011 முதல் 10-10-2012 வரை அந்தஸ்தும் மதிப்பும் செல்வாக்கும் உயரும். செல்வ நிலையில் அபிவிருத்தி காணலாம். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். சுப காரியங்கள் நிகழும். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் நலம் பெருகும். கூட்டாளிகள் உதவுவார்கள். நிலபுலங்களால் வருமானம் கிடைக்கும். கொடுக்கல்-வாங்கல், ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். முக்கியப் பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்கும். மந்திர-தந்திர-யந்திர சாஸ்திரங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள். பெரியவர்கள், தனவந்தர்கள் ஆகியோரது ஆசிகளும் ஆதரவும் கிடைக்கும். 16-5-2012 முதல் 4-8-2012 வரையிலும் உள்ள காலத்தில் சற்று எச்சரிக்கை தேவை. எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் உண்டாகும். மக்கள் நல முன்னேற்றத்துக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். மருத்துவச் செலவுகளும் கூடும். ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபடலாகாது. அதன்பிறகு நிலைமை சீராகும்.

11-10-2012 முதல் 4-11-2013 வரை அந்நிய மொழி, மத, இனக்காரர்களால் அனுகூலம் பெற வாய்ப்பு உண்டாகும். பயணத்தால் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். திடீர்ப் பொருள்வரவுக்கு இடமுண்டு. வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் மேன்மை அடையும். சிலருக்கு வெளிநாட்டு வேலை இந்த நேரத்தில் கிடைக்கும். போக்குவரத்து இனங்கள் லாபம் தரும். கலைத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். 23-12-2012 முதல் அலைச்சல் சற்று அதிகரிக்கவே செய்யும். கூட்டாளிகளால் பிரச்னைகள் ஏற்படக் காரணம் உண்டு; விழிப்புடன் இருக்கவும். வாழ்க்கைத்துணை நலன் கவனிக்கப்பட வேண்டிவரும்.
31-5-2013 முதல் உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் விசேடமான நன்மைகளை எதிர்பார்க்கலாம். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். முயற்சி வீண்போகாது. தெய்வப் பணிகள் நிறைவேறும். பெரியவர்கள் உங்களுக்கு ஆசி புரிவதுடன், ஆதரவும் தருவார்கள். உடல்நலம் சீராகவே இருந்துவரும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். தொலைதூரப் பயணம் ஆக்கம் தரும்.

5-11-2013 முதல் 1-11-2014 வரை முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். தகவல் தொடர்பு இனங்கள் லாபம் தரும். உழைப்பு வீண்போகாது. எதிர்ப்புக்கள் இருக்குமென்றாலும் சமாளிப்பீர்கள். உடல்நலம் அவ்வப்போது கவனிக்கப்பட வேண்டிவரும். தேவைகளைச் சமாளிக்கச் சிலர் கடன்வாங்க வேண்டிவரும். மக்களாலும் வாழ்க்கைத்துணைவராலும், பங்குதாரர்களாலும் பிரச்னைகள் சூழும். சொத்துக்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடவும். குறுக்கு வழிகளில் பிரவேசிக்கலாகாது. செய்து வரும் தொழிலில் முழுக்கவனம் தேவை. பெரியவர்கள், தனவந்தர்கள், மேலதிகாரிகள், முதலாளிகள் ஆகியோருடன் சுமுகமாகப் பேசிப் பழகுவது அவசியமாகும். இல்லையென்றால் அவர்களது கோபத்துக்கு ஆளாகி, சங்கடப்பட நேரும். பணம் கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை.

மொத்தத்தில் ஜென்ம சனியாக வரும் சனி பகவான் கஷ்டங்களைக் கொடுக்காமல் போக மாட்டார். ஆனாலும் நியாயவாதியான சனி பகவான், நம்முடைய செயல்பாடுகளைப் பார்த்துத்தான் நமக்குரிய பலன்களைக் கொடுக்கின்றார், என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆத்மார்த்தமான சனி வழிபாட்டின் மூலம் எதையும் தாங்கி சமாளித்துவிடலாம்.

பரிகாரம்:

1. வழிபாடுகள் வகையில் மகாலட்சுமி பூஜை, சங்கடஹர சதுர்த்தி, வைகாசி விசாக வழிபாடு, அருட்பெருஞ்சோதி வள்ளல் பெருமாள் வழிபாடு, பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி, பைரவர்,காளி வழிபாடு உகந்தது.

2. பாபனாசம் 108 சிவலிங்க வழிபாட்டு ஸ்தலம் திருவாரூர் தசரத சக்கரவர்த்தி வழிபட்ட சனீஸ்வரர், இங்குள்ள ராஜதுர்க்கை புதுக்கோட்டை புவனேஸ்வரி, பஞ்சமுக ஆஞ்சனேயர் தில்லை காளி இவர்களின் ஸ்தலங்களுக்கு சென்று குறிப்பாக அர்ச்சனை, ஆராதனை, அன்னதானம் செய்து உள்ளன்புடன் சனி, வெள்ளிக் கிழமைகளில் வழிபடுவது உத்தமம்.

3. ஸ்ரீரங்கம், ஸ்ரீபெரும்புதூர், திருநாராயணபுரம் ஆகிய இடங்களில் எழுந்தருளிய உடையவரையும், தாயாரையும், நாராயணனையும் தரிசிக்கவேண்டும்.

4. மடப்பள்ளி , மங்கலகிரி( விஜயவாடா) பாகை நரசிம்மரை தரிசிக்கவேண்டும்.

5. இவை தவிர பிரசித்தி பெற்ற சனீஸ்வரனின் திருத் தலங்களான குச்சானூர், திருநள்ளாறு, திருவண்ணாமலை- வேலூர் சாலையில் அமைந்துள்ள ஏரிக்குப்பம் ஆகிய இடங்கலில் எழுந்தருளியுள்ள சனீஸ்வர பகவானை தரிசனம் செய்து வரவும்.

6. தினசரி காக்கைக்கு அன்னமிடல், சனிக்கிழமைதோறும் சனீஸ்வரருக்கு எள்தீபம் ஏற்றுதல் இவைகளையும் விடாது செய்து வரவும்.


  Tags : Thulam, ,சனிப், ,பெயர்ச்சிப், ,பலன்கள், ,-, ,15-11-2011, ,முதல், ,2-11-2014, ,வரை, , Thulam,Thulam























மகளிர்


Tamil Web Tv




பிற ராசிகளுக்கான பலன்கள்




திருமதி சுஜா என் காதலி தமிழ் சினிமா திருமதி சுஜா என் காதலி தமிழ் சினிமா திருமதி சுஜா என் காதலி தமிழ் சினிமா திருமதி சுஜா என் காதலி தமிழ் சினிமா திருமதி சுஜா என் காதலி தமிழ் சினிமா திருமதி சுஜா என் காதலி தமிழ் சினிமா
செளந்தர்யா Full Length Tamil Movie தேன் குழல் முறுக்கு இறா மாங்காய் தொக்கு மீன் பிரியாணி Chicken Green Chilli Fry Cabbage and Paneer Roll
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in