sanibalan Simmam,Simmam ஜோதிடம் , ராசி பலன் , தினபலன் , வார பலன் , ஆண்டு பலன் 2010 , ஆணடுபலன் 2011, "கர" வருட தமிழ் ஆண்டுபலன் , குருபெயர்ச்சி பலன் , சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் , வாஸ்து , நியூமராலஜி , எண்கணிதம் , Jothidam , Astrology , Vasthu , Neumerology , Rasi Balan 2010,Rasi Balan 2011 Balan, Weekly Raasi Balan, Guru Balan , Sani Balan , Dai Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji
tamilkurinji logo
 


19702

Simmam

Sunday , 13th November 2011 03:03:31 PM

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - 15-11-2011 முதல் 2-11-2014 வரை

சிம்மம்:


இதுவரை கன்னி ராசியில் சஞ்சரித்துவந்த சனிபகவான் இப்போது நடைபெற இருக்கும் சனி பெயர்ச்சியில் சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த பெயர்ச்சியின் இரண்டரை ஆண்டு காலமும் உங்களுக்கு ஏற்றமானதாக இருக்கும். முதலாவதாக உங்கள் ஆரோக்கியம் அபிவிருத்தி அடையும். நோய் நொடிகள் ஏற்பட்டாலும் உடனுக்குடன் குணமாகும். உள்ளத்திலும் ஊக்கமும் ஏற்பட்டு புதிய எழுச்சியுடன் காணப்படுவீர்கள். முயற்சியில் வேகமும் செயலில் தீவிரமும் கூடும். உழைக்கும் ஆற்றல் உங்களுக்கு அதிகமாவதால், கடினமாக உழைத்து பல சாதனைகளைப் புரிவீர்கள். எடுத்த காரியத்தில் எளிதில் வெற்றி பெறுவீர்கள். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். சமுதாய முன்னேற்றப் பணிகளில் ஈடுபடுவீர்கள். நிலபுலங்கள் சேரும். மேலதிகாரிகள், முதலாளிகளின் நல்லெண்ணங்களுக்குப் பாத்திரமாகி, உயர் பதவியைப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களால் நலம் உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும்.

தகவல் தொடர்பு இனங்கள் லாபம் தரும். 6-ஆம் வீட்டோன் 3-ல் தன் உச்ச ராசியில் இருப்பதால் எதிர்பாராத தனப்பிராப்தியைப் பெறுவீர்கள். 7-ஆம் வீட்டோன் வலுத்திருப்பதால் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நிகழும். பங்கு வர்த்தகம் லாபம் தரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும்.

சிறுசிறு பயணங்களை அடிக்கடி மேற்கொள்ளவும் அதனால் அனுகூலம் பெறவும் வாய்ப்பு உருவாகும். கூட்டுத் தொழிலில் அபிவிருத்தி காணலாம். பிற மொழி, மத, இனக்காரர்களால் அனுகூலம் உண்டாகும். பொது ஜனத்தொடர்பு வலுக்கும். உயர்பதவிகள், பொறுப்புகள் தேடிவரும்.

சனிபகவானின் பார்வை பலம்தான் அவரது சஞ்சார பலத்தைவிட சக்தி வாய்ந்தது. சனிபாகவான் தன்னுடைய 3,7, 10ம் பார்வயால், உங்களுடைய பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானம், விரய ஸ்தானம் ஆகிய ஸ்தானங்களைப் பார்க்கிறார். இந்தப் பார்வை நல்ல பார்வை என்பதால், உங்களுக்கு யோக பலன்கள் அதிக அளவில் நடைபெறும்.

15-11-2011 முதல் 10-10-2012 வரை புதிய சொத்துக்கள் சேரும். பெற்றோரால் நலம் பல பெறுவீர்கள். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். தொலைதூரத் தொடர்பு பயன்படும். உடன்பிறந்தவர்கள் நலம் கூடப் பெறுவார்கள். அயல்நாட்டுத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும். 16-5-2012 முதல் 4-8-2012 வரை சனி வக்கிரமாக இருப்பதால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் விழிப்புத் தேவை.

கண், வாய், முகம் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். உடல்நலனில் கவனம் தேவைப்படும். அதன்பிறகு சனி துலாத்துக்கே திரும்பி வந்துவிடுவார். துலாம் சர ராசி என்பதாலும் உபசய ராசி என்பதாலும் சுக்கிரனின் ராசி என்பதாலும் வெற்றி வாய்ப்புக்கள் தேடிவரும். சுபபலன்கள் தொடரும்.

11-10-2012 முதல் 4-11-2013 வரை புதியவர்களது நேசம் கிடைக்கும். அயல்நாட்டு வர்த்தகம் பெருகும். போக்குவரத்து, ஏற்றுமதி-இறக்குமதி, தோல், கறுப்பு நிறப்பொருட்கள் ஆகியவற்றின் மூலம் ஆதாயம் கிடைக்கும். தந்தை வழி பாட்டனாரால் நலம் பெறுவீர்கள். பயணம் செய்வதில் ஆர்வம் கூடும். வெளிநாட்டுப் பயணத்திட்டம் சிலருக்கு இந்த நேரத்தில் கைகூடும். சூதாட்டம், பங்கு மார்க்கெட், மற்றும் ஸ்பெகுலேஷன் துறைகள் மூலம் பெரும் பணம் கைக்கு வந்து சேரும். குறுக்கு வழிகளில் செல்வம் சேரும் நேரமிது. ரேடியோ, வீடியோ, டி.வி., பத்திரிகை போன்ற தகவல் தொடர்பு இனங்கள் மூலமாகவும் ஆதாயம் பெருகும். நூதன கண்டுபிடிப்புகளின் மூலம் பெயரும் புகழும் பெறுவீர்கள்.

5-11-2013 முதல் 1-11-2014 வரை மகப்பேறும் மக்களால் பாக்கியமும் பெறும் நேரமிது. ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும்.

புத்திசாலித்தனம் பளிச்சிடும். மந்திர-தந்திர-யந்திர சாஸ்திரங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் வருமானம் கூடப் பெறுவார்கள். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் உண்டாகும். பி.எஃப், பென்ஷன், உயில் போன்ற இனங்களால் ஆதாயம் கிடைக்கும்.

செல்வச் செழிப்புக் கூடும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும். சுப காரியச் செலவுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் பதவிச் சிறப்பு உண்டாகும். ஊதிய உயர்வு, இடமாற்றம் ஆகியவை கிடைக்கும். அரசுப்பணிகள் லாபம் தரும்.

மொத்தத்தில் இந்தச் சனிப் பெயர்ச்சிக் காலத்தில் வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கைத் தரம் நிச்சயமாக உயரும். இந்த நல்ல நேரத்தைச் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


  Tags : Simmam,Simmam,Simmam






















மகளிர்













பிற ராசிகளுக்கான பலன்கள்


















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in