sanibalan Risabam,Risabam,சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - 15-11-2011 முதல் 2-11-2014 வரை ஜோதிடம் , ராசி பலன் , தினபலன் , வார பலன் , ஆண்டு பலன் 2010 , ஆணடுபலன் 2011, "கர" வருட தமிழ் ஆண்டுபலன் , குருபெயர்ச்சி பலன் , சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் , வாஸ்து , நியூமராலஜி , எண்கணிதம் , Jothidam , Astrology , Vasthu , Neumerology , Rasi Balan 2010,Rasi Balan 2011 Balan, Weekly Raasi Balan, Guru Balan , Sani Balan , Dai Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji
tamilkurinji logo
 


19699

Risabam

Sunday , 13th November 2011 03:00:40 PM

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - 15-11-2011 முதல் 2-11-2014 வரை

ரிஷபம்:


இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருந்துவந்த சனி பகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் அதாவது துலா ராசியில் சஞ்சரிக்கப் போகிரார். இந்த ஆறாமிடத்து சனி பகவான் உங்களுக்கு பல நன்மைகளை செய்யப் போகிறார். பல ஆதாயங்கள் கிடைக்கும் நேரமிது. எதிரிகளை வெல்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். மனோபலம் கூடும். தன்னம்பிக்கை பெருகும். நோய்நொடி உபத்திரவங்கள் குறையும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். தொழிலில் விசேடமான வளர்ச்சியைக் காணலாம். கடன் உபத்திரவம் நீங்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பொது நலப்பணியாளர்கள், அரசியல்வாதிகள், கலைஞர்கள் ஆகியோர் வெற்றி நடைபோடுவார்கள். புனிதப் பயணம் மேற்கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும்.

15-11-2011 முதல் 10-10-2012 வரை நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். இயந்திரப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். விவசாயிகளுக்குச் செழிப்பான சூழ்நிலை உருவாகும். பொது நலப்பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும். வழக்கில் வெற்றி கிட்டும். வாழ்க்கைத்துணைவரின் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரலாம்.

16-5-2012 முதல் 25-6-2012 வரை எதிர்பாராத ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். தாய் நலம் சிறக்கும். மக்களால் அனுகூலம் உண்டாகும். மந்திர, தந்திர சாஸ்திரங்களில் ஈடுபடுவீர்கள்.

26-6-2012 முதல் 4-11-2013 வரை உடல்நலம் சீராகும். வாழ்க்கை வசதிகள் கூடும். நூதனமான பொருட்களின் சேர்க்கை நிகழும். நவீன விஞ்ஞானத்துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். பயணம் சம்பந்தப்பட்ட இனங்கள் லாபம் தரும். கறுப்பு நிறமுள்ளவர் உங்களுக்கு உதவுவார்.

5-11-2013 முதல் 1-11-2014 வரை எதிர்பாராத பொருள் சேர்க்கை நிகழும். நல்லவர்களது தொடர்பால் நலம் பல பெறுவீர்கள். சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு உண்டாகும். கூட்டுத் தொழிலில் அபிவிருத்தி காணலாம்.

சனி பகவான் கீழே குறிப்பிட்டுள்ள தருணங்களில் மூன்று முறை வக்கிரகதியில் சஞ்சரிக்கிறார். அந்தக் காலக் கட்டத்தின் சிறப்புப் பலன்கள்:

1. 9.2.12.முதல், 24.6.12வரையில் 4 மாதம், 15 நாட்கள்(சனி வக்கரம்) :

இந்தக் காலகட்டத்தில் தாயின் உடல் நலனில் அக்கறை தேவை. நிலம், வீடு, வாகனம் வாங்குவது, விற்பதை தள்ளீப் போடவும். காரியத் தடைகள் ஏற்படலாம். சுற்றத்தாரிடம் கவனமாக உறவாடவும். பயணங்களைத் தவிர்க்கவும் அல்லது தள்ளிப் போடவும்.

2. 16.2.2013 முதல் 12.7.13 வரையில் 4 மாதம் 26 நாட்கள்( சனி வக்கிரம்):

இந்தக் காலக் கட்டத்தில் நல்ல அற்புதமான பலன்களாக நிகழும். எதிரிகள் அனைவரும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போவார்கள். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி ஏற்படும். வசூலாகாத பழைய கடன்கள் அனைத்தும் வசூலாகும். புதிய கடன்கள் அனைத்தும் நன்மையைத் தரும். நோய்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். உடல் நலம் சிறப்படையும். பங்காளித் தகறாறுகள் நல்ல முறையில் தீர்வடையும்.

3. 3.3. 2014 முதல்,23.7.14 வரையிலான 4 மாதம் 20 நாட்கள்( சனி வக்கிரம் ):

இந்தக் காலத்தில் 19.6.2014 வரையில் வாக்கு வன்மை ஏற்படும். பணம் வரவு இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற நல்ல நிகழ்ச்சிகள் உண்டாகும். கல்வி சிறப்படையும். குடும்பத்தில் கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியம் ஏற்படும். செல்வாக்கு, அந்தஸ்து, கௌரவம் கூடும். சொல்வாக்கும் சிறப்படையும். வாழ்க்கைத்துணைவரின் மூலம் நலம் உண்டாகும். பூர்விகச் சொத்துக்கள் கிடைக்கும்.

இந்தக் காலத்தில் கடைசி 23.7. 14 வரையில் எதிலும் காரியத் தடைகள் ஏற்படும். முயற்சிகள் பலனடையாது. தோல்விகள் ஏற்படும். வேலைக்காரர்களிடம் மனஸ்தாபம் ஏற்படலாம். சகோதரர்களிடம் வீண் சண்டைகள் வரும். தைர்யம், தன்னம்பிக்கை குறையும். பொன்னாபரணங்கள் வாங்குவதிலும் விரயம் ஏற்படும். உத்தியோகம், இடமாற்றம் போன்றவைகளால் வருத்தம் ஏற்படும்.

எந்த காரியத்தை எடுத்தாலும் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டால், அமைதியோடு வாழலாம். இந்த சனிப் பெயர்ச்சி உங்களுக்கு யோகமானதே. வக்கிர காலங்களைத் தவிர மீதி காலங்கள் சிறப்பான பலன்களையே தரும்.

இந்த சனிப் பெயர்ச்சி உங்களுக்கு யோகமானதே. வக்கிர காலங்களைத் தவிர மீதி காலங்கள் சிறப்பான பலன்களையே தரும்.


  Tags : Risabam,Risabam,Risabam,சனிப்,பெயர்ச்சிப்,பலன்கள்,-,15-11-2011,முதல்,2-11-2014,வரை,




























மகளிர்



















பிற ராசிகளுக்கான பலன்கள்










Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in