sanibalan Mithunam,சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - 15-11-2011 முதல் 2-11-2014 வரை,Mithunam ஜோதிடம் , ராசி பலன் , தினபலன் , வார பலன் , ஆண்டு பலன் 2010 , ஆணடுபலன் 2011, "கர" வருட தமிழ் ஆண்டுபலன் , குருபெயர்ச்சி பலன் , சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் , வாஸ்து , நியூமராலஜி , எண்கணிதம் , Jothidam , Astrology , Vasthu , Neumerology , Rasi Balan 2010,Rasi Balan 2011 Balan, Weekly Raasi Balan, Guru Balan , Sani Balan , Dai Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji
tamilkurinji logo
 


19701

Mithunam

Sunday , 13th November 2011 03:02:25 PM

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - 15-11-2011 முதல் 2-11-2014 வரை

மிதுனம்:


இதுவரை உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் இப்போது ராசிக்கு ஐந்தாமிடத்தில் பிரவேசிக்கப் போகிறார். இவ்வாறு ராசி மாறி வரும் சனிபகவான், முன்போல கடுமையான பலன்களைக் கொடுக்க மாட்டார்.ஓரளவுக்கு நற்பலன்களையே கொடுப்பார்.தற்போதுள்ள சனிப் பெயர்ச்சியில் உங்களுடைய பொருளாதார நிலையில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லையென்றாலும் செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு வருமானம் வரும். நகை நட்டு, வீட்டுக்குத் தேவையான பொருட்களையும் வாங்க முடியும். அது மட்டுமல்ல. வீடு மனை வாங்கவோ அல்லது சொந்தமாக வீடு கட்டவோ கூட முடியும். இருக்கும் இடத்தைப் பழுது பார்த்து வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ளவும் முடியும்.

15-11-2011 முதல் 10-10-2012 வரை பொருளாதார நிலை உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களையும் பெறுவீர்கள். தொழிலில் முன்னேற்றம் காணலாம்.

குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். பிரச்னைகள் குறையும். குழந்தைகளுக்கு சுப காரியங்கள் நிகழும். கடன் உபத்திரவம் குறையும்.

16-5-2012 முதல் 25-6-2012 வரை உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். தாயாராலும், உற்றார்-உறவினர்களாலும் பிரச்னைகள் சூழும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது.

11-10-2012 முதல் 4-11-2013 வரை எதிரிகள் விலகுவார்கள். நூதனமான பொருட்களின் சேர்க்கை நிகழும். அயல்நாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்கள் அதில் வளர்ச்சி காண்பார்கள். வெளிநாட்டு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கூடிவரும்.

முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் கூட இப்போது உங்களுக்கு உதவுவார்கள். மக்கள் நலனில் கவனம் தேவைப்படும். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் சிலருக்கு ஏற்படும். இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை உண்டாகும்.

5-11-2013 முதல் 1-11-2014 வரை செல்வாக்கும் மதிப்பும் உயரும். பொருள் வரவு அதிகமாகும். பெரியவர்கள், ஞானிகள், மகான்கள், சித்தர்கள் ஆகியோரது ஆசிகளையும் ஆதரவையும் பெறுவீர்கள். மக்கள் நலம் பாதிக்கும் என்றாலும் தெய்வ அருளால் சீராகிவிடும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். தந்தையாலும், தந்தை வழி உறவினராலும் நலம் உண்டாகும்.

அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். ஸ்பெகுலேஷன் துறைகளால் லாபம் கிடைக்கும். சொத்துக்கள் சேரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். அலைச்சலும் உழைப்பும் இந்த நேரத்தில் அதிகரிக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சிக் காலத்தில் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு உண்டாகும்.

பரிகாரம்:

1. சனியின் குருவான பைரவருக்கு, அஷ்டமி திதியில் ஹோமம் மற்றும் பூஜைகளை மேற்கொண்டு, சாந்தி செய்துகொள்வது நல்லது.

2. குடும்பப் பெண்கள் அஷ்ட லட்சுமிகளும் கூடிய உருவப் படத்தை வைத்து, விளக்கேற்றி, காலை 6.00 மணியளவிலும், நவக்கிரக மாக்கோலமிட்டு, துளசி மற்றும் முல்லை, நந்தியாவட்டைசெண்பக பூக்களால், லக்ஷ்மி அஷ்டோத்ரத்தைப் பாராயணம் செய்து பால் பாயசம் நைவேத்தியம் செய்வது நல்லது.

3.இவை தவிர சனிபகவானுக்குரிய வழிபாட்டு ஸ்தலங்களான குச்சானூர், திருநள்ளாறு முதலிய தலங்களுக்குச் சென்று உரிய வழிபாடுகளை முறைப்படி செய்து வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும்.

4. சனிக்கிழமைதோறும், காக்கைக்கு அன்னமிடல், நவக்கிரக கோவிலுக்குச் சென்று சனீஸ்வரனுக்கு எள்ளுதீபம் ஏற்றுதல், முதலியவை தொல்லைகளையும் குழப்பங்களையும் தீர்க்கும் . வாழ்க வளமுடன்!

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - 15-11-2011 முதல் 2-11-2014 வரை


  Tags : Mithunam,Mithunam,சனிப்,பெயர்ச்சிப்,பலன்கள்,-,15-11-2011,முதல்,2-11-2014,வரை,Mithunam,




























மகளிர்















பிற ராசிகளுக்கான பலன்கள்








Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in