sanibalan Mesam,Mesam, சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - 15-11-2011 முதல் 2-11-2014 வரை ஜோதிடம் , ராசி பலன் , தினபலன் , வார பலன் , ஆண்டு பலன் 2010 , ஆணடுபலன் 2011, "கர" வருட தமிழ் ஆண்டுபலன் , குருபெயர்ச்சி பலன் , சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் , வாஸ்து , நியூமராலஜி , எண்கணிதம் , Jothidam , Astrology , Vasthu , Neumerology , Rasi Balan 2010,Rasi Balan 2011 Balan, Weekly Raasi Balan, Guru Balan , Sani Balan , Dai Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji
tamilkurinji logo
 


19697

Mesam

Sunday , 13th November 2011 01:09:43 PM

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - 15-11-2011 முதல் 2-11-2014 வரை

மேஷம்:


இதுவரை சனிபகவான் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் சஞ்சரித்து வந்தார். நற்பலன்களைக் கொடுக்கவேண்டிய யோகம்தான் என்றாலும் குருவின் மாறுபட்ட நிலைகளால், நற்பலன்களை நீங்கள் முழுதுமாக அனுபவிக்க முடியாமல், இருந்தீர்கள். குருவின் நல்ல நிலைகள்கூட உங்களுக்கு சாதகமாக அமையவில்லை. குரு அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருந்ததால், உங்களால், எந்த நற்பலனையும் முழுதுமாக அடைய முடியாமல்தான் போனது. இப்போது, இந்த சனிப் பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு 10, 11-ஆம் இடங்களுக்குரிய சனி 7-ஆமிடத்தில் உலவுகிறார். இது கண்டகச் சனியின் காலமாகும். சனி 10-ஆம் வீட்டோனாகி, 10-க்கு 10-ஆமிடமான 7-ல் தன் உச்ச ராசியில் உலவுவதால் தொழிலில் விசேடமான வளர்ச்சியைக் காணலாம். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்புக் கூடிவரும். வெளிநாட்டு வேலைக்காக காத்திருப்பவர்களின் எண்ணம் ஈடேறும். பகுதி நேரத் தொழிலில் ஈடுபட்டு வருமானம் பெற வாய்ப்புக் கூடிவரும்.

சரராசிக்கு அதிபதியான சனி மற்றொரு சர ராசியில் உலவுவதால் வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழிலில் விசேடமான ஆதாயம் கிடைக்கும். சனி காற்று ராசியில் இருப்பதால் ஆகாயம் சம்பந்தப்பட்ட இனங்களாலும் ஆதாயம் கிடைக்கும். பயணம் பயன்படும். சொத்துக்கள் சேரும். காப்பீட்டுத் தொகை, ஓய்வூதியம் மற்றும் எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கூடிவரும். சனி 11-ஆம் இடமான பாதக ஸ்தானத்துக்கு உரியவராகி 7-ல் உலவுவதால் கணவன் மனைவியிடையே சலசலப்புக்கள் ஏற்படும். நண்பர்கள், உறவினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்து செல்லவும் நேரலாம். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் சுமுகமாகப் பழகுவதன் மூலம் அவர்களால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் மீளலாம். அணுகுமுறையைச் சரிப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.

16-5-2012 முதல் 25-6-2012 வரை சனி கன்னியில் வக்கிரமாக சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையில் அபிவிருத்தி காணலாம். செய்தொழிலும் சீராக இருக்கும். எதிர்ப்புக்கள் குறையும். திறமைக்குரிய பயன் கிடைக்கவே செய்யும்.

26-6-2012 முதல் 4-11-2013 வரை வெளிநாட்டுத் தொடர்பால் அதிகம் நலம் உண்டாகும். போக்குவரத்துச் சாதனங்கள், ஏற்றுமதி-இறக்குமதி இனங்கள், தோல் பொருட்கள் ஆகியவற்றால் ஆதாயம் கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதியவர்கள் அறிமுகமாகி, உங்களுக்கு நலம் புரிவார்கள். குறுக்கு வழிகளில் திடீர்ப் பொருள்வரவு உண்டாகும்.

5-11-2013 முதல் 1-11-2014 வரை புனிதப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தொலைதூரப் பயணத்தின் மூலம் பயன் பெறுவீர்கள். பொருளாதார நிலையில் அபிவிருத்தி காணலாம். மகன் அல்லது மகளின் முன்னேற்றத்துக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். குழந்தைகள் வெளிநாட்டில் படிக்கவோ, வேலை செய்யவோ வாய்ப்புக் கூடிவரும். ஆன்மிகம் தத்துவம் ஆகியவற்றில் ஈடுபாடு உண்டாகும். நீதிபதிகள், சட்ட வல்லுனர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள்.

மொத்தத்தில் இந்தச் சனிப் பெயர்ச்சிக்காலத்தில் தொழில் ரீதியாக முன்னேற்றம் காண்பீர்கள். ஏதேனும் பாதிப்புகள் நேரிடினும், அதனின்று மீள்வதற்கு கிரகங்கள் குறிப்பாக ராகு கேதுக்கள் அனுசரணையாக செயல்படுவதால், சனியின் தாக்கம் தற்காலிக பாதிப்பாக இருக்குமேயன்றி, பெரிதாக அமையாது.


  Tags : Mesam,Mesam,Mesam, சனிப்,பெயர்ச்சிப்,பலன்கள்,-,15-11-2011,முதல்,2-11-2014,வரை




























மகளிர்



















பிற ராசிகளுக்கான பலன்கள்










Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in