sanibalan Meenam,Meenam ஜோதிடம் , ராசி பலன் , தினபலன் , வார பலன் , ஆண்டு பலன் 2010 , ஆணடுபலன் 2011, "கர" வருட தமிழ் ஆண்டுபலன் , குருபெயர்ச்சி பலன் , சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் , வாஸ்து , நியூமராலஜி , எண்கணிதம் , Jothidam , Astrology , Vasthu , Neumerology , Rasi Balan 2010,Rasi Balan 2011 Balan, Weekly Raasi Balan, Guru Balan , Sani Balan , Dai Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji
tamilkurinji logo


 


19692

Meenam

Sunday , 13th November 2011 02:46:13 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Astrology_details.php on line 206
search
Meenam,Meenam மீனம்:


இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருந்து வந்த சனி பகவான் இப்போது எட்டாமிடத்துக்கு அஷ்டம சனியாக வரப் போகிறார்.அஷ்டம சனியின் காலம் சிறப்பாகாது. எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது அவசியமாகும். குறுக்கு வழிகளில் ஈடுபடலாகாது. நேரான பாதையில் செல்வதன் மூலம் சங்கடங்களுக்கு ஆளாகாமல் மீளலாம். வீண் வம்பு, வழக்கு; சண்டை, சச்சரவுகளைத் தவிர்க்கவும். உடல் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். தண்டச் செலவுகள் ஏற்படும். செய்யாத குற்றத்துக்கு நீங்கள் தண்டனையைப் பெற நேரலாம். கெட்டவர்களின் தொடர்பை அறவே விட்டு விலகுவது அவசியமாகும். தொழிலில் முன்னேற்றம் காண்பது அரிது. விரும்பத்தகாத இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை உண்டாகும். பொருள் களவு போகும். எடுத்த காரியத்தை முடிக்க அரும்பாடுபட வேண்டிவரும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றம் பாதிக்கும். சொத்துக்களை இழக்க வேண்டிவரலாம். பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும். உடன்பிறந்தவர்களின் நலம் பாதிக்கும். தந்தையால் அதிகம் அனுகூலமிராது. அரசு தண்டனை பெறவோ, அரசு அபராதம் கட்டவோ வேண்டிவரும்.

பேச்சிலும் உணவுப் பழக்கத்திலும் கட்டுப்பாடு தேவை. மக்களால் மன அமைதி குறையும். செய்தொழில் எதுவானாலும் அதில் அதிகம் கவனம் செலுத்தி, அயராது பாடுபடுவது அவசியமாகும். உங்களுடைய பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கலாகாது. அகப்பட்டவனுக்கு அஷ்டம சனி என்பார்கள். இதனால் எதிலும் எச்சரிக்கை தேவை. ஜனன கால ஜாதகப்படி தற்சமயம் யோக பலம் உள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானால் கவலைப்படத் தேவையில்லை. இறைவழிபாட்டிலும், கிரக வழிபாட்டிலும் முழு நம்பிக்கையுடன் ஈடுபடவும். அதன்மூலம் சங்கடங்களைக் குறைத்துக்கொள்ள முடியும். ஹனுமன் சாலீசா படியுங்கள்; கேளுங்கள். சனிக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபடுங்கள். கோளறு பதிகம் சொல்லுங்கள்.

15-11-2011 முதல் 10-10-2012 வரை எதிர்பாராத பொருள்வரவு உண்டாகும். குடும்பத்தில் குதூகலம் கூடும். சுப காரியங்கள் நிகழும். பேச்சால் ஜீவனம் செய்பவர்கள் வளர்ச்சி காண்பார்கள். கடன் உபத்திரவம் குறையும். தந்தையால் ஓரளவு நலம் உண்டாகும். செய்து வரும் தொழிலில் முழு ஈடுபாடு இருந்தால் வளர்ச்சி காணமுடியும். 17-5-2012 முதல் பொருளாதாரப் பிரச்னை உண்டாகும். பிறரால் ஏமாற்றப்பட நேரலாம். செய்தொழில் எதுவானாலும் அதில் முழுக்கவனம் தேவை. விரும்பத்தகாத இடமாற்றமோ, நிலைமாற்றமோ உண்டாகும். தேவைகளைச் சமாளிக்கக் கடன்பட நேரலாம். உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். பொறாமைக்காரர்களாலும் போட்டியாளர்களாலும் தொல்லைகள் பெருகும். யாரிடத்திலும் வெளிப்படையாகப் பழகலாகாது. யாருக்கும் ஜாமீன் கொடுக்கவேண்டாம். உங்கள் கடமைகளை நீங்களே ஆற்றி வருவது அவசியமாகும்.

11-10-2012 முதல் 4-11-2012 வரை தொலைதூரத் தொடர்பு ஓரளவு நலம் தரும். பெற்றோரால் அளவோடு அனுகூலம் உண்டாகும். புதியவர்கள் உதவி புரிய முன்வருவார்கள். 23-12-2012 முதல் பயணத்தால் சங்கடத்துக்கு ஆளாக நேரலாம்; எச்சரிக்கை தேவை. சொத்துக்கள் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். வண்டி வாகனங்களில் செல்லும்போது விழிப்புடன் இருப்பது நல்லது. ஆகாயம், காற்று சம்பந்தப்பட்ட இனங்களால் சங்கடங்கள் உண்டாகும். உடல்நலம் பாதிக்கும். தோல், பல், கண், வாய், குடல் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். ஃபுட் பாய்ஸன் ஆகலாம். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம் தேவை. எதிலும் வேகம் கூடாது.

5-11-2013 முதல் 1-11-2014 வரை பிரச்னைகள் சற்று குறையும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். பண நடமாட்டம் சற்று அதிகரிக்கும். ஆன்மிக ஈடுபாடு மன அமைதியைத் தரும். நிலம், மனை, வீடு, வாகனங்கள் சேரும். சொத்துக்களால் அளவோடு ஆதாயமும் கிடைத்துவரும். 19-6-2014 முதல் எதிர்பாராத பொருள்வரவு உண்டாகும். மக்கள் நலம் சீராகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். திரவப் பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். தெய்வ தரிசனம், சாது தரிசனம் ஆகியவை கிடைக்கும். புத்திசாலித்தனத்தால் எதையும் சமாளிப்பீர்கள். தெய்வானுகூலம் உண்டாகும்.

மொத்தத்தில் இந்தச் சனிப் பெயர்ச்சிக் காலம் சோதனையானது. இறைவழிபாட்டின் மூலமும் கிரக வழிபாட்டின் மூலமும் மட்டுமே அமைதி பெறமுடியும். ஜாதக பலம் உள்ளவர்கள் கவலைப்பட வேண்டாம். தர்ம நியாயப்படி நடப்பவர்களைச் சனி எப்போதும் தண்டிக்கமாட்டார் என்பதால் நேர்வழியில் ஈடுபடுங்கள். பெரியோர்களது அறிவுரைகளைக் கேட்டு அதன்படி செயல்படுங்கள். நல்லதே நடக்கும்.

பரிகாரம்:

1. பிரதி சனிக் கிழமை சனி பகவானுக்கு நல்லெண்ணெயில் எள் முடிச்சிட்டு தீபம் ஏற்றி வழிபட நன்று.

2. அஷ்ட கணபதி, மற்றும் சனீஸ்வரர் மகன் மாந்தி வழிபட்ட ஆலயம், நர்த்தன பள்ளியறை கொண்ட மணக்குல வினாயகர், பாண்டி, எட்டு கைகளுடன் கூடிய துர்க்கை, எமகண்டீஸ்வரம் பிரம்மஸ்தான ஆஞ்சனேயர்., சுவாமிமலை முருகன் இதன் ஸ்தலங்களுக்கு சென்று அர்ச்சனை, ஆராதனை , சனி, வியாழக் கிழமைகளில் வழிபடுதல் நலம்.

3. சுயம்பு லிங்கமாகக் காட்சி தரும் குச்சானூர் சனீஸ்வரர், ஆரணி ஏரிக்குப்பத்தில் எழுந்தளியுள்ள எந்திர வடிவிலான சனீஸ்வரர், கோளாறு நீக்கும் திருநள்ளாறு சனீஸ்வரர் இவர்களைத் தரிசித்து தகுந்த பரிகாரங்களை செய்து வரவும்.


  Tags : Meenam,Meenam,Meenam


மகளிர்

பிற ராசிகளுக்கான பலன்கள்
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in