sanibalan Makaram,Makaram ஜோதிடம் , ராசி பலன் , தினபலன் , வார பலன் , ஆண்டு பலன் 2010 , ஆணடுபலன் 2011, "கர" வருட தமிழ் ஆண்டுபலன் , குருபெயர்ச்சி பலன் , சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் , வாஸ்து , நியூமராலஜி , எண்கணிதம் , Jothidam , Astrology , Vasthu , Neumerology , Rasi Balan 2010,Rasi Balan 2011 Balan, Weekly Raasi Balan, Guru Balan , Sani Balan , Dai Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji
tamilkurinji logo


 


19694

Makaram

Sunday , 13th November 2011 02:56:38 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Astrology_details.php on line 206
search
Makaram,Makaram சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - 15-11-2011 முதல் 2-11-2014 வரை

மகரம்:


இதுவரை உமது ராசிக்கு ஒன்பதாமிடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் இப்போது உமது ராசிக்கு பத்தாமிடத்தில் சஞ்சரிக்கப்போகிறார். சனி தன் உச்ச ராசியில் இருப்பதால் நலமே உண்டாகும். எடுத்த காரியங்கள் நிறைவேறும். அந்தஸ்தும் மதிப்பும் உயரும். புதிய முயற்சிகள் கைகூடும். செல்வ நிலையில் விசேடமான வளர்ச்சி காணலாம். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடமுண்டு. குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். பதவிச் சிறப்பு உண்டாகும். தலைமை தாங்கும் தகுதியைப் பெறுவீர்கள். உடல்நலம் சீராகும். மன பலம் கூடும். பொது நலப்பணிகளில் ஈடுபட்டு நற்பெயர் பெறுவீர்கள். பூமியால் லாபம் உண்டாகும். புதிய சொத்துக்களும் சேரும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் நிச்சயம் கிடைக்கும். சகோதர, சகோதரிகளின் நலனில் கவனம் தேவை. பெற்றோருக்கும் மக்களுக்குமிடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். விட்டுக்கொடுத்துப் பழகுவது அவசியமாகும். தொழில் ரீதியாகச் சிலர் இடமாற்றம் பெறுவார்கள். சனி சுக்கிரனின் வீட்டில், சர ராசியில், தன் உச்ச ராசியில் இருப்பதால் சட்டம், கலை, வாக்கு, பொருள் கொடுக்கல்-வாங்கல், சுரங்கம், இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள், பழைய பொருட்கள், கலைப்பொருட்கள் போன்றவற்றால் வருமானம் கூடப் பெறலாம். வெளிநாட்டுத் தொடர்பு வலுக்கும். அதனால் ஆதாயமும்கிடைக்கும்.

15-11-2011 முதல் 10-10-2012 வரை புதிய பொருட்களும் சொத்துக்களும் சேரும். மாணவர்களது நிலை உயரும். இயந்திரங்கள் லாபம் தரும். மூத்த சகோதர, சகோதரிகளால் சிறுசிறு பிரச்னைகள் சூழும். குறுக்கு வழிகளில் ஈடுபடலாகாது. 17-5-2012 முதல் மக்கள் நலம் சீராகும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். சகோதர நலம் சீராகும். நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறச் சந்தர்ப்பம் உருவாகும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். மக்கள் நல முன்னேற்றப்பணிகளில் ஈடுபடுவீர்கள். மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் ஆக வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு மந்திர சித்தி ஏற்படும். தொலைதூரத் தொடர்பு பயன்படும்.

11-10-2012 முதல் 4-11-2013 வரை பயணம் செய்வதில் நாட்டம் கூடும். பயணத்தால் அனுகூலமும் பெறுவீர்கள். பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்கள் இந்த நேரத்தில் பெரிதும் உதவி புரிவார்கள். போக்குவரத்துச் சாதனங்களால் லாபம் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். ஏற்றுமதி-இறக்குமதி இனங்களைச் சேர்ந்தவர்கள் அதிக ஆதாயம் பெறுவார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளால் வருமானம் கிடைத்துவரும். வேலையாட்களால் அனுகூலம் உண்டாகும். தோல் பொருட்கள் லாபம் தரும். ஆராய்ச்சியாளர்கள் புகழ் பெறுவார்கள். புதிய கண்டுபிடிப்புக்களின் மூலம் செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காண்பீர்கள். அரசு விருதும் பாராட்டுகளும் கிடைக்கும். மாறுபட்ட கருத்துக்களை வெளியிடுவீர்கள். நவீன விஞ்ஞானத்துறைகளில் ஈடுபாடு உண்டாகும். இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். தொழில் ரீதியாக ஒரு மாற்றம் ஏற்படும்.

5-11-2013 முதல் 1-11-2014 வரை உடன்பிறந்தவர்கள் உதவி புரிய முன்வருவார்கள். சுப காரியங்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். வெளிநாட்டு வேலை சிலருக்கு இந்த நேரத்தில் கிடைக்கும். மக்களால் சில இடர்ப்பாடுகள் உண்டாகும். எலக்ட் ரானிக், கம்ப்யூட்டர் மற்றும் நவீன விஞ்ஞானத்துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். ரேடியோ, வீடியோ, டி.வி., பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்குச் செழிப்புக் கூடும். மாணவர்களது நிலை உயரும். நிலபுலங்களால் ஆதாயம் கிடைக்கும். நல்லவர்களது தொடர்பால் நலம் பல பெறுவீர்கள். 19-6-2014 முதல் செல்வ வளம் மேலும் கூடும். கணவன் மனைவி உறவு நிலை சிறக்கும். கூட்டாகத் தொழில் செய்பவர்கள் லாபம் கூடப் பெறுவார்கள். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். செய்தொழிலில் அபிவிருத்தி காணலாம். தெய்வப் பணிகள் நிறைவேறும். புனித நதிகளில் நீராடும் பாக்கியம் கிட்டும். பெரியவர்கள், தனவந்தர்கள், சித்தர்கள் ஆகியோரது ஆசிகளைப் பெறுவீர்கள். த்யானம், யோகா ஆகியவற்றில் ஈடுபடுவீர்கள். மனத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் உண்டாகும்.

மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சிக் காலம் ஓரளவுக்குச் சிறப்பானதாக அமையும். பொருளாதார நிலை அபிவிருத்தி அடையும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.


  Tags : Makaram,Makaram,Makaram


மகளிர்

பிற ராசிகளுக்கான பலன்கள்
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in