sanibalan Kumbam,Kumbam ஜோதிடம் , ராசி பலன் , தினபலன் , வார பலன் , ஆண்டு பலன் 2010 , ஆணடுபலன் 2011, "கர" வருட தமிழ் ஆண்டுபலன் , குருபெயர்ச்சி பலன் , சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் , வாஸ்து , நியூமராலஜி , எண்கணிதம் , Jothidam , Astrology , Vasthu , Neumerology , Rasi Balan 2010,Rasi Balan 2011 Balan, Weekly Raasi Balan, Guru Balan , Sani Balan , Dai Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji
tamilkurinji logo
 


19693

Kumbam

Sunday , 13th November 2011 02:55:10 PM

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - 15-11-2011 முதல் 2-11-2014 வரை

கும்பம்:


இந்த சனிப் பெயற்சி மூலம் உங்களுக்கு அஷ்டம சனியிலிருந்து விடுதலை கிடைத்திருக்கிறது. இதுவே பெரிய நன்மைதான். சனியின் அசுப பலன்கள் அமையாமல் இருந்தாலே பெரிய நன்மைதான்.

தற்போது சனி பகவான் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்திலிருந்து ஒன்பதாமிடத்திற்கு மாறப் போகிறார். ஒன்பதாமிடத்திற்கு பாக்கிய ஸ்தானம் என்றும் மகாலட்ஸ்மி ஸ்தானம் என்றும் பெயருண்டு. உமது ராசிநாதனான சனி பகவான் ஒன்பதில் உச்சம் பெறுவது மிகவும் விஷேஷம். இதனால், ஓரளவு யோகத்தையும் தரும். தெய்வ காரியங்களிலும் தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். தொலைதூரத் தொடர்பு பயன்படும். உடல் ஆரோக்கியம் சீராகும். மன பலமும் கூடும். 12-ஆம் வீட்டோன் 9-ல் இருப்பதால் தந்தையால் செலவுகள் ஏற்படும். தந்தையை விட்டுப் பிரிந்திருக்க வேண்டிவரலாம். சுபச் செலவுகள் ஏற்படும். குடும்பத்தாரால் சில குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். தாய் நலனில் கவனம் தேவைப்படும்.

15-11-2011 முதல் 10-10-2012 வரை மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எதிரிகள் அகலுவார்கள். போட்டிப் பந்தயங்களில் வெற்றி கிட்டும். செய்து வரும் தொழிலில் முழு ஈடுபாடு கொண்டு வளர்ச்சி காண்பீர்கள். பண நடமாட்டம் அதிகரிக்கும். கடன் தொல்லை குறையும். தெய்வ காரியங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சொத்துக்கள் சேரும். 16-5-2012 முதல் குடும்பத்தில் சலசலப்புக்கள் உண்டாகும். பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. வீண்வம்பு கூடாது. மக்கள் நலனில் கவனம் தேவை. தொழில் ரீதியாகச் சில மாற்றங்கள் உண்டாகும். என்றாலும் திருப்திகரமாக அமையாது. 4-8-2012 முதல் நற்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும்.

11-10-2012 முதல் 4-11-2013 வரை அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் லாபம் தரும். வெளிநாட்டுப் பயணத்திட்டம் நிறைவேறும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். ஆராய்ச்சியாளர்களுக்கு மதிப்பு உயரும். போக்குவரத்துத் துறை லாபம் தரும். செய்தொழிலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். அதனால் ஏற்றமும் உண்டாகும். வீடு மாற்றமும் சிலருக்கு இந்த நேரத்தில் அமையும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். 23-12-2012 முதல் தொலைதூரத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும். தந்தை நலம் பாதிக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும். வாழ்க்கைத்துணைவரின் குடும்பத்தாரால் பிரச்னைகள் சூழும். 31-5-2013 முதல் சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காண வழிபிறக்கும். தந்தை நலம் சீராகும். மதிப்புக்குக் குறைவிராது. மகப்பேறும் மக்களால் பாக்கியமும் உண்டாகும்.

5-11-2013 முதல் 1-11-2014 வரை குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். பேச்சாற்றல் வெளிப்படும். செல்வ வளம் பெருகும். பல வழிகளில் வருமானம் வந்து சேரும். தன, லாபம் பெருகும். அரசியல், நிர்வாகம், ஆன்மிகம், சட்டம், மருத்துவம், இரசாயனம், விஞ்ஞானம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். உயர் பதவிகளும் பட்டங்களும் வந்து சேரும். 19-6-2014 முதல் சோதனைகள் அதிகரிக்கும். எதிலும் யோசித்து ஈடுபடவும். பொருளாதார சிக்கல் உருவாகும். கடன் தொல்லை உண்டாகும். குடும்பத்தாராலும், பிற மொழி, மதக்காரர்களாலும் பிரச்னைகள் சூழும். வீண் வம்பு வேண்டாம். உடல்நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். பயணத்தால் அனுகூலமிராது. எதிலும் வேகத்தைக் குறைத்துக் கொள்ளவும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது.

மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சிக் காலம் சுமாரானது.


  Tags : Kumbam,Kumbam,Kumbam






























மகளிர்













பிற ராசிகளுக்கான பலன்கள்








Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in