sanibalan Kanni,Kanni ஜோதிடம் , ராசி பலன் , தினபலன் , வார பலன் , ஆண்டு பலன் 2010 , ஆணடுபலன் 2011, "கர" வருட தமிழ் ஆண்டுபலன் , குருபெயர்ச்சி பலன் , சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் , வாஸ்து , நியூமராலஜி , எண்கணிதம் , Jothidam , Astrology , Vasthu , Neumerology , Rasi Balan 2010,Rasi Balan 2011 Balan, Weekly Raasi Balan, Guru Balan , Sani Balan , Dai Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji
tamilkurinji logo


 


19700

Kanni

Sunday , 13th November 2011 03:01:32 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Astrology_details.php on line 206
search
Kanni,Kanni சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - 15-11-2011 முதல் 2-11-2014 வரை

கன்னி:


இந்த சனிப் பெயர்ச்சியில் சனி பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாமிடமான துலா ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். ஏழரைச்சனியின் கடைசி இரண்டரையில் அடியெடுத்து வைக்கிறீர்கள். இதுவரை நடந்துவந்த ஜென்ம ராசியில் நீங்கள் பட்ட கஷ்டங்களும் , அனுபவித்த தொல்லைகளும் உங்களுக்கு மட்டும்தான் தெரியும். இப்போது வரப் போகும் சனிப் பெயர்ச்சி அந்த அளவுக்கு வாட்டி எடுக்காது என்றாலும். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கலாம் என்பது போலவும் இருக்கும். இவ்வாறு ராசி மாறிவரும் சனி பகவானை முழுமனதுடன் வரவேற்க முடியாவிட்டாலும், ஓரளவு நிம்மதியுடன் வரவேற்கலாம். இதுவரை ஜென்ம ராசியிலிருந்த சனி பகவான் இனி பாதச்சனியாக சஞ்சரிக்கப் போகிறார். இது ஏழரைச் சனியின் மூன்றாவது பகுதியும் இறுதிப் பகுதியுமாகும்.

மக்களால் அனுகூலமும் உண்டாகும். பங்கு மார்க்கெட், ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் மூலம் ஆதாயம் கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். பிற மொழி, மத, இனக்காரர்கள் உங்களுக்கு உதவுவார்கள். சனி 6-ஆம் வீட்டுக்கு அதிபதியாகி 2-ல் உலவுவதால் குடும்பத் தேவைகளைச் சமாளிக்கக் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகலாம். கண், முகம், வாய், பல் மற்றும் வாயு சம்பந்தமான உடல் உபாதைகள் ஏற்படும்.

15-11-2011 முதல் 10-10-2012 வரை முயற்சி வீண்போகாது. கடுமையாக உழைப்பதன் மூலம் வருமானம் கூடும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். எதிர்பாராத பொருள்வரவு உண்டாகும். உடல்நலம் சீராகும். குடும்பத்தாரால் அனுகூலம் உண்டாகும். 17-5-2012 முதல் செல்வ நிலையில் விசேடமான வளர்ச்சியைக் காணலாம். வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் பெறுவீர்கள். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்திகரமாக இருந்துவரும். கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். ஆகஸ்ட் 2012 முதல் குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் ஏற்படும்.

பணம் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. சகோதர நலம் பாதிக்கும். உங்களுடைய ஆரோக்கியத்திலும் கவனம் தேவைப்படும். கண், வாய், பல், முகம் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். வீண் வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும்.

11-10-2012 முதல் 4-11-2012 வரை பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்கள் உங்களுக்கு உதவும் காலகட்டமிது. பயன்படுத்திக் கொள்ளுங்கள். தோல், போக்குவரத்து, ஏற்றுமதி-இறக்குமதி, நவீன விஞ்ஞானத்துறை, ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட இனங்களால் வருமானம் பெருகும். அயல்நாட்டுப் பயணத்திட்டம் ஈடேறும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். 23-12-2012 முதல் குடும்ப நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். யாருக்கும் ஜாமீன் கொடுக்கவேண்டாம். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியமாகும். விஷத்தாலும் விஷ ஜந்துக்களாலும் பாதிக்கப்பட நேரலாம். புதியவர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம் தேவை.

5-11-2013 முதல் 1-11-2014 வரை புதிய சொத்துக்கள் இந்த நேரத்தில் சேரும். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் அனுகூலம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் அபிவிருத்தி காணலாம். குடும்ப நலம் சீராகும். சுகானுபவம் உண்டாகும். எதிர்ப்புக்கள் குறையும். செய்து வரும் தொழில் லாபம் தரும். நோய்நொடி உபத்திரவங்கள் குறையும். 19-6-2014 முதல் முயற்சி வெற்றி தரும். மகன் அல்லது மகளால் முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். செல்வச் செழிப்புக் கூடும். திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கூடிவரும். திருமணம் ஆனவர்களுக்கு இல்வாழ்க்கை சிறக்கும். எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் புகழும் பொருளும் பெறுவார்கள். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். வெளிநாடு சென்று பொருள் திரட்ட வாய்ப்பு உருவாகும். சொத்துக்களால் வருமானம் கிடைக்கும். 12-7-2014 முதல் அலைச்சல் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவராலும், கூட்டாளிகளாலும் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும்.

மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சிக்காலத்தில் துன்பங்கள் மலிந்திடினும், பாதிப்புகள் அதிகம் தோன்றா நிலையிலும், நன்மைகளே அதிகம் இடம்பெறுவதால், ராசிக்காரர்கள் நிம்மதி காண்பார்கள். சனிப் பிரீதி, பரிகாரங்களைத் தொடர்ந்து செய்துவரவும்.

பரிகாரம்:

1. பிரதி சனிக்கிழமை விஷ்ணு ஆலயம் சென்று அங்குள்ள பெருமாளையும், தாயாரையும் பக்தி சிரத்தையுடன் வணங்கியபின்பு சக்கரத்தாழ்வாரை துளசிமாலை சாற்றி உள்ளன்புடன் வழிபட உள்ளக் கவலைகள் விலகும்.

2. தினசரி காக்கைக்கு அன்னமிடவும்.

3. பிரதி சனிக்கிழமை சனி பகவானுக்கு எள்தீபம் ஏற்றவும்.

4. சனி பகவானுக்கு கருங்குவளை மலர் சாற்றி வன்னி இதழ்களால் அர்ச்சனை செய்க.

5. திருநள்ளாறு சென்று அங்குள்ள நவ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம், அம்ச தீர்த்தம் என்னும் ஐந்து வகை தீர்த்தங்களில் நீராடி, சனீஸ்வரரை தரிசித்து, , இயன்ற அளவு பரிகார வழிபாடுகளை செய்து வரவும்.

7. குச்சானூர் சனிபகவானை தரிசித்தல் நலம்.


  Tags : Kanni, ,சனிப், ,பெயர்ச்சிப், ,பலன்கள், ,-, ,15-11-2011, ,முதல், ,2-11-2014, ,வரை, , Kanni,Kanni


மகளிர்

பிற ராசிகளுக்கான பலன்கள்
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in