sanibalan Kadakam,Kadakam ஜோதிடம் , ராசி பலன் , தினபலன் , வார பலன் , ஆண்டு பலன் 2010 , ஆணடுபலன் 2011, "கர" வருட தமிழ் ஆண்டுபலன் , குருபெயர்ச்சி பலன் , சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் , வாஸ்து , நியூமராலஜி , எண்கணிதம் , Jothidam , Astrology , Vasthu , Neumerology , Rasi Balan 2010,Rasi Balan 2011 Balan, Weekly Raasi Balan, Guru Balan , Sani Balan , Dai Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji
tamilkurinji logo
 


19703

Kadakam

Sunday , 13th November 2011 03:04:36 PM

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - 15-11-2011 முதல் 2-11-2014 வரை

கடகம்:


களத்திர ஈன ஸ்தானாதிபதியான சனீஸ்வர பகவான், சுகஸ்தானத்தில் உச்ச நிலையில் பெயர்ந்து, ஜீவனத்தில் நிற்கும் வக்கிர குருவை பார்க்கவும், குருவும் சனியை மறுபார்வை செய்யவும், அர்த்தாஷ்டம சனியாய் செயல்படுகிறார். மேலும் தன் பார்வையால், சத்ரு ஸ்தானத்தையும் ஜென்ம ராசியையும் பார்வையிடுகிறார். இதனால், உங்களுக்கு சனியினால் அதிகமாக நன்மைகள் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. கொஞ்சம் சோதனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். சுகபங்கம் ஏற்படும். சொத்துக்கள் சம்பந்தமான பிரச்னைகள், வழக்குகள் ஏற்படும். தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும்.

இருப்பிட மாற்றம் உண்டாகும். விவசாயிகளுக்கு முன்னேற்றம் பாதிக்கும். கால்நடைகளால் அதிகம் ஆதாயமிராது. வீண் விரயங்கள் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் முழுமையான கவனம் செலுத்தினால்தான் முன்னேற்றம் காணமுடியும். அலட்சியப் போக்கு அடியோடு கூடாது. எதிலும் யோசித்து ஈடுபடுவது நல்லது. சனிக்கு 8-ஆம் வீட்டு ஆதிபத்தியமே வலுப்பெறுவதால் துன்பம், துயரம் ஆகியவை உண்டாகும். முக்கிய நண்பர்கள், உறவினர்களை விட்டுப் பிரிய நேரலாம். சிலர் மனதுக்குப் பிடிக்காத இடத்தில் வசிக்க வேண்டிவரும். கெட்டவர்களின் தொடர்பு கூடாது. சனிப் பிரீதி செய்து கொள்வது மிகவும் அவசியம்.

15-11-2011 முதல் 10-10-2012 வரை எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். ஸ்பெகுலேஷன் துறைகளால் ஆதாயம் கிடைக்கும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களின் நலம் கூடும். செய்துவரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம்.

இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். சகோதரரால் முக்கியமான ஓரிரு எண்ணங்கள் இப்போது ஈடேறும்.

11-10-2012 முதல் 4-11-2013 வரை பயணத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் நலம் தரும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கு, வியாஜ்ஜியங்களில் நல்ல திருப்பம் உண்டாகும். முக்கியஸ்தர்களது தொடர்பால் நலம் பெறுவீர்கள்.

23-12-2012 முதல் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்களால் பிரச்னைகள் உண்டாகும். முக்கிய உறவினரையோ, நண்பரையோ பிரிய வேண்டிவரும். இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். தாய் நலனில் அக்கறை தேவை. சொத்துக்கள் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். 31-5-2013 முதல் சுபச் செலவுகள் கூடும். புதிய நிலம், மனை, வீடு, வாகனச் சேர்க்கை நிகழும். கடன் தொல்லை குறையத் தொடங்கும். சங்கடங்களும் விலக ஆரம்பிக்கும்.

5-11-2013 முதல் 1-11-2014 வரை புனிதமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பு சிலருக்கு உண்டாகும். மாணவர்கள் வளர்ச்சிகான மார்க்கத்தைக் காண்பார்கள். பிதுரார்ஜித சொத்துக்கள் கிடைக்கும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கு, வியாஜ்ஜியங்களில் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும்.

மொத்தத்தில் இந்தச் சனிப் பெயர்ச்சிக் காலத்தில் கெடுபலன்களே அதிகம் உண்டாகும் என்பதால், உடல்நலத்தில் கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம். எதிலும் கவனமும் எச்சரிக்கையும் மிகமிக அவசியம்.

பரிகாரம்:

1. பிரதோஷ காலத்தில் சிவாலயத்தில் சிவ பெருமானுக்கு காராம் பசுவின் பாலினால் அபிஷேகம் செய்யவும்.

2. பிரதி சனிக் கிழமை சனி பகவானுக்கு எள் தீபமேற்றி இயன்ற அளவு தான தருமம் செய்க.

3. நான்கு திசை கணபதி ( நாகை ), ஸ்ரீவைகுண்டம் சனீஸ்வரர், திருக்கடையூர் அம்மன், அமிர்தகடையேஸ்வரர், யோக நரசிம்மர், கிருஷ்ணர், தேரெழுந்தூர், சதூர்கல பைரவர் திருவீச்சநள்ளூர், பஞ்சமுக ஆஞ்சநேயர்-சிவகாசி காளி, விசாலாட்சி, சுடலேஸ்வரர், ஜாம்பவான், ஆகர்ஷண பைரவர் ஐந்து கடவுள்களும் ஒன்றாக இணைந்த விருதுநகர் ஸ்ரீ ஜாம்பவான் சுவாமிகள் ஆலய பௌர்ணமி தரிசனம் இதன் ஆலயங்களுக்கு சென்று குறிப்பாக அர்ச்சனை, ஆராதனை, அன்னதானம் செய்து உள்ளன்புடன் சனி, திங்கள் கிழமைகளில் வழிபடுவது மிக உத்தமம்.


  Tags : Kadakam, ,சனிப், ,பெயர்ச்சிப், ,பலன்கள், ,-, ,15-11-2011, ,முதல், ,2-11-2014, ,வரை, , Kadakam,Kadakam




























மகளிர்















பிற ராசிகளுக்கான பலன்கள்








Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in