sanibalan Dhanusu,Dhanusu ஜோதிடம் , ராசி பலன் , தினபலன் , வார பலன் , ஆண்டு பலன் 2010 , ஆணடுபலன் 2011, "கர" வருட தமிழ் ஆண்டுபலன் , குருபெயர்ச்சி பலன் , சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் , வாஸ்து , நியூமராலஜி , எண்கணிதம் , Jothidam , Astrology , Vasthu , Neumerology , Rasi Balan 2010,Rasi Balan 2011 Balan, Weekly Raasi Balan, Guru Balan , Sani Balan , Dai Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji
tamilkurinji logo
 


19695

Dhanusu

Sunday , 13th November 2011 02:57:24 PM

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - 15-11-2011 முதல் 2-11-2014 வரை

தனுசு:


இதுவரை சனி பகவான் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருந்து பதினோராமிடத்துக்கு மாறி வருகிறார். இது உங்களுக்கு ஒரு நல்ல மாற்றமே. இந்த மாற்றத்தை நீங்கள் இருகரம் நீட்டி வரவேற்கலாம். ஏனென்றால் பதினோராமிடம் என்பது லாபஸ்தானம் ஆகும். பதினோராம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்களுக்கு அதிர்ஷ்டமான பலன்களை அள்ளிக் கொடுத்து உங்களை ஆனந்தத்தில் ஆழ்த்துவார். உங்கள் வாழ்க்கைத் தரத்தை சனி பகவான் உய்ர்த்திக் காட்டுவார். இந்த இரண்டரை ஆண்டுக் காலமும் உங்களுக்கு யோகமான பலன்களாக நிகழப் போகிறது.

பொருளாதாரச் செழிப்பு உண்டாகும். பல வழிகளில் வருமானம் கிடைக்கும். குடும்ப நலம் சிறக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். இளைய சகோதர, சகோதரிகளால் அனுகூலம் உண்டாகும். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். தகவல் தொடர்பு, கொடுக்கல்-வாங்கல், கலைத்துறை, சட்டத்துறை, கல்வித்துறை ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளவர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள்.

கறுப்பு, கருநீலநிறப்பொருட்கள், எண்ணெய் வகையறாக்கள், இரும்பு, எஃகு பொருட்கள், பழைய பொருட்கள், பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் பொருட்கள், கரி, ஆகாய மார்க்கம், காற்று சம்பந்தப்பட்ட இனங்கள் ஆகியவற்றால் ஆதாயம் கிடைக்கும். சமுதாய நலப்பணியாளர்கள் புகழ் பெறுவார்கள். உயர்பதவி, பட்டங்கள் தேடிவரும். பொதுஜனத் தொடர்பு வலுக்கும். சனி சர ராசியில், சுக்கிரனின் வீட்டில், தன் உச்ச ராசியில் இருப்பதால் வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளால் அதிகம் பயன் கிடைக்கும். அழகுப் பொருட்கள் சேரும். புதிய துறைகளில் முதலீடு செய்ய வாய்ப்புக் கூடிவரும். பல வழிகளில் ஆதாயமும் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். சகோதரர் வெளிநாடு செல்வார். தாய் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். அடிவயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு விலகும்.

15-11-2011 முதல் 10-10-2012 வரை பொருளாதார நிலை உயரும். பல வழிகளில் ஆதாயம் வந்து சேரும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் அதிகம் பயன்பெறுவார்கள். இயந்திரங்கள் லாபம் தரும். இஞ்சினீயர்களது எண்ணம் நிறைவேறும். மந்திர சித்தி சிலருக்கு உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். திருமணம் ஆனவர்களுக்கு மகப்பேறும் மக்களால் பாக்கியமும் உண்டாகும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படும் என்பதால் சிக்கனத்தைக் கையாள்வது நல்லது. சிலருக்கு இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். 16-5-2012 முதல் 4-8-2012 வரை சகோதர நலனில் கவனம் தேவைப்படும். தொழிலில் முன்னேற்றம் காணக் குறுக்கீடுகள் முளைக்கும். மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். அதன்பிறகு பொருளாதார நிலை உயரும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். உடன்பிறந்தவர்களின் நலம் சீராகும்.

11-10-2012 முதல் 4-11-2013 வரை வெளிநாட்டுத் தொடர்பால் அதிகம் நலம் உண்டாகும் நேரமிது. வேற்று மத, மொழி, இனக்காரர்கள் உங்களுக்குப் பெரிதும் உதவுவார்கள். ஆராய்ச்சியாளர்களுக்கு மதிப்பு உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். புதையல் போன்ற பெரும் தனம் கிடைக்கும். குறுக்கு வழிகளிலும் ஆதாயம் பெறுவீர்கள். ராகுவும் சனியும் 23-12-2012 முதல் லாப ஸ்தானத்தில் உலவும் நிலை அமைவதால் வீடு மாற்றம், தொழில் மாற்றம் ஆகியவை உண்டாகும். பல வழிகளிலும் ஆதாயம் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணத்திட்டம் கைகூடும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். போக்குவரத்து, ஏற்றுமதி,இறக்குமதி, தோல், எலக்ட் ரானிக்ஸ், கம்ப்யூட்டர், கொரியர், தகவல் தொடர்பு, நவீன விஞ்ஞானக் கருவிகள், கறுப்பு, கருநீலநிறப்பொருட்களால் ஆதாயம் பெருகும். தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். மக்களாலும் சில இடர்ப்பாடுகள் உண்டாகும். காது, கால் சம்பந்தப்பட்ட உபாதைகள் சிலருக்கு ஏற்படும்.

5-11-2013 முதல் 1-11-2014 வரை. செல்வாக்கும் மதிப்பும் உயரும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் இப்போது கிடைக்கும். மாணவர்கள் வெற்றி நடைபோடுவார்கள். தாய் நலம் சீராகும். சுகானுபவம் கூடும். உடல் நலம் திருப்தி தரும். நல்லவர்கள் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காண வாய்ப்புக்கூடிவரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். திருமணம் ஆகாதவர்கள் அதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். திருமணம் ஆனவர்களுக்கு மகப்பேறு பாக்கியம் கிட்டும். வாழ்வில் முன்னேற்றம், காண நல்ல வாய்ப்புகள் கூடிவரும். விவசாயிகளும் தொழிலாளர்களும் உத்தியோகஸ்தர்களும் தங்கள் எண்ணம் ஈடேறப் பெறுவார்கள். அயல்நாட்டுத் தொடர்பு வலுக்கும்.

மொத்தத்தில் இந்தச் சனிப் பெயர்ச்சிக் காலத்தில் சுபிட்சம் கூடும். எல்லா விஷயங்களிலும் வெற்றி உங்களுக்குத்தான் என்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். வாழ்க்கைத்தரம் உயரும்.

பரிகாரம்:

1. பிரதி சனிக் கிழமை சனி பகவானுக்கு கருங்குவளை மலர் சாற்றி வன்னி இதழ்களால் அர்ச்சித்து வணங்கவும்.
2. குருப் பிரதோஷம், சனிப் பிரதோஷம். சோமப் பிரதோஷமாகிய காலங்களில் சிவாலயத்தில் காராம் பசுவின் பாலினால், அபிஷேகம் செய்க.
3. சனீஸ்வரரின் திருத் தலங்களான திருநள்ளாறு, குச்சானூர், ஏரிக்குப்பம் முதலிய ஸ்தலங்களுக்கு சென்று சனீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு செய்து வழிபடவும்.



  Tags : Dhanusu, ,சனிப், ,பெயர்ச்சிப், ,பலன்கள், ,-, ,15-11-2011, ,முதல், ,2-11-2014, ,வரை, , Dhanusu,Dhanusu


























மகளிர்













பிற ராசிகளுக்கான பலன்கள்








Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in