WeeklyRasi வார ராசிபலன்: 23-11-2012 முதல் 29-11-2012 வரை,வார ராசிபலன்: 23-11-2012 முதல் 29-11-2012 வரை ஜோதிடம் , ராசி பலன் , தினபலன் , வார பலன் , ஆண்டு பலன் 2010 , ஆணடுபலன் 2011, "கர" வருட தமிழ் ஆண்டுபலன் , குருபெயர்ச்சி பலன் , சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் , வாஸ்து , நியூமராலஜி , எண்கணிதம் , Jothidam , Astrology , Vasthu , Neumerology , Rasi Balan 2010,Rasi Balan 2011 Balan, Weekly Raasi Balan, Guru Balan , Sani Balan , Dai Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji
tamilkurinji logo


 


ஜோதிடம் >>> வாரபலன் - Weekly

27487

வார ராசிபலன்: 23-11-2012 முதல் 29-11-2012 வரை

Friday , 23rd November 2012 03:08:48 AM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Astrology_details.php on line 206
search
வார ராசிபலன்: 23-11-2012 முதல் 29-11-2012 வரை,வார ராசிபலன்: 23-11-2012 முதல் 29-11-2012 வரை

மேஷம்:  Mesam  குரு  அனுகூலமாக உலவுகிறார். என்றாலும் அவரும் வக்கிரமாக இருக்கிறார். ராசிநாதன் செவ்வாய் 9-ல் இருப்பது ஓரளவு சிறப்பாகும். சந்திரன் வாரப்பின்பகுதியில் அனுகூலமாக உலவுகிறார். இதனால் வரவுக்கு மேல் செலவு இருக்கும். சிக்கனம் தேவை. எதிரிகள் இருப்பார்கள் என்றாலும் சமாளிக்கும் சக்தி பிறக்கும்.

புதியவர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். கணவன் மனைவியிடையே சிறுசிறு சலசலப்புக்கள் ஏற்படும். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. அரசு விவகாரங்களில் விழிப்புடன் ஈடுபடுவது அவசியமாகும். மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. தந்தையாலும், மக்களாலும் மன அமைதி குறையும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். வாரப்பின்பகுதியில் பண வரவு சற்று கூடும். குடும்ப நலம் சீராகும். நண்பர்களும் உறவினர்களும் உதவி புரிய முன்வருவார்கள்.

புதிய பொருட்களும் சொத்துக்களும் சேரும். சொத்துக்களால் வருமானமும் கிடைக்கும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.

மேஷம்:  Mesam  
புதன், சனி ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் அறிவாற்றலும், செயல்திறமையும் பளிச்சிடும். வியாபார முன்னேற்றத்திட்டங்கள் நிறைவேறும். கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் புகழோடு பொருளும்பெறுவார்கள். பொது நலப்பணியாளர்களுக்கு நற்பெயர் கிட்டும்.

தொழிலாளர்களது கோரிக்கைகளில் சில நிறைவேறும். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள் லாபம் தரும். கறுப்பு நிறப்பொருட்களும், பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் பொருட்களும் ஆதாயம் கொண்டுவரும். 6-ல் சுக்கிரனும், 7-ல் சூரியன், ராகு ஆகியோரும் 8-ல் செவ்வாயும் இருப்பதால் கணவன் மனைவி உறவு நிலை சீராக இராது. விட்டுக் கொடுத்துப் பழகுவது நல்லது. பயணத்தின்போதும், இயந்திரங்களில் பணிபுரியும்போதும் எச்சரிக்கை தேவை. சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம். உடன்பிறந்தவர்களால் மன அமைதி கெடும். வீண் செலவுகளும் இழப்புகளும் ஏற்படும்.

எதிலும் அவசரப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடுவது அவசியமாகும். வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும்.

மிதுனம்:  Mithunamசூரியன், சந்திரன், சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இருப்பதாலும், குரு 12-ல் இருந்தாலும் வக்கிரமாக உலவுவதாலும் உங்கள் நிர்வாகத்திறமை பளிச்சிடும். அரசு சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதிய பதவி, பட்டங்கள் தேடிவரும். பொருளாதார நிலை உயரும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.

மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்கள் உதவுவார்கள். பேச்சாற்றல் கூடும். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். ஏற்றுமதி-இறக்குமதி இனங்கள் லாபம் தரும். 7-ல் செவ்வாய் உலவுவதால் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.

அனுசரித்துப் போவது நல்லது. கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. வாரப் பின்பகுதியில் சந்திரன் 12-ஆமிடம் மாறுவதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பெற்றோர் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். குடும்ப நலனுக்காகவும், வாழ்க்கைத்துணை நலனுக்காகவும் செலவு செய்ய வேண்டிவரும்.

கடகம்:  Kadakam
செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், கேது ஆகியோர் அனுகூலமாக உலவுவதால் உங்கள் பராக்கிரமம் வெளிப்படும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். உறவினர்கள், நண்பர்கள் வருகையால் மன மகிழ்ச்சி பெறுவீர்கள். விருந்து, உபசாரங்களிலும்; கேளிக்கை, உல்லாசங்களிலும் கலந்து கொள்வீர்கள். வியாபாரம் பெருகும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம். பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் ஈடுபாடு கூடும்.

எதிரிகள் அடங்குவார்கள். வழக்கில் வெற்றி கிட்டும். 5-ல் சூரியனும் ராகுவும் இருப்பதால் வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு விலகும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. 26-ஆம் தேதி முதல் புதன் வக்கிர நிவர்த்தி பெற்று நேர்கதியில் உலவத் தொடங்குவதால் மாணவர்களுக்கும் வியாபாரிகளுக்கும் செழிப்பான சூழ்நிலை உருவாகும். சனி 4-ல் இருப்பதால் அலைச்சலும் உழைப்பும் அதிகமாகும்.

சிம்மம்:   Simmam


சுக்கிரன், சனி, கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதாலும், குரு 10-ல் வக்கிரமாக உலவுவதாலும் உங்கள் தோற்றப்பொலிவு கூடும். செயல்திறமை வெளிப்படும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். போட்டிப் பந்தயங்களிலும் விளையாட்டு விநோதங்களிலும் வெற்றி காணலாம். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை உருவாகும்.

தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். பக்தி மார்க்கத்திலும் ஞானமார்க்கத்திலும் ஈடுபாடு உள்ளவர்கள் மனத்தெளிவு பெறுவார்கள். தகவல் தொடர்பு இனங்கள் லாபம் தரும்.  புத பலம் குறைந்திருப்பதால் வியாபாரத்தில் முழுக்கவனம் தேவை. 4-ல் சூரியனும் ராகுவும் உலவுவதால் அலைச்சல் அதிகமாகும்.

பெற்றோர் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். 5-ல் செவ்வாய் இருப்பதால் ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மக்களால் அளவோடு நலம் உண்டாகும்.  வாரப்பின்பகுதியில் முக்கியமான காரியங்கள் நிறைவேறும்.

கன்னி:  Kanniசூரியன், புதன், குரு, சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் நிர்வாகத்திறமை வெளிப்படும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். அரசு உதவி கிட்டும். அரசியல்வாதிகளுக்கும் அரசுப்பணியாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு சம்பந்தமான இனங்களைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பேச்சாற்றல் வெளிப்படும். பல வழிகளில் பணம் வந்து சேரும். திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கூடிவரும்.

திருமணம் ஆனவர்களுக்கு மகப்பேறும் மக்களால் பாக்கியமும் உண்டாகும். கலைஞர்கள் வெற்றிப்படிகளில் ஏறுவார்கள். மாதர்களது எண்ணம் நிறைவேறும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். விருந்து, விழாக்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள்.  அயல்நாட்டுத் தொடர்பு வலுக்கும். ஏற்றுமதி-இறக்குமதி இனங்கள் லாபம் தரும். வெளிநாட்டு வேலை

சிலருக்கு இந்த நேரத்தில் கிடைக்கும். 4-ல் செவ்வாய் இருப்பதால் தாய் நலனில் கவனம் தேவை. சொத்துக்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது.
துலாம்:  Thulam


3-ல் செவ்வாய் உலவுவதால் உங்கள் பராக்கிரமம் வெளிப்படும். துணிவோடும் தன்னம்பிக்கையோடும் காரியங்களில் திறம்பட ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். போட்டிப் பந்தயங்களிலும்; விளையாட்டு விநோதங்களிலும், வழக்கு, வியாஜ்ஜியங்களிலும் வெற்றி கிட்டும். பொறியியல்துறை லாபம் தரும். சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சாதனை பல ஆற்றுவார்கள். குரு 8-ல் இருந்தாலும் வக்கிரமாக இருப்பதால் பண நடமாட்டம் சீராகவே இருந்துவரும்.

ஜன்ம ராசியில் சுக்கிரன் இருப்பதால் கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். மாதர்கள் நலம் பெறுவார்கள். புதனும் சனியும் ஜன்ம ராசியில் இருப்பதால் அலைச்சலும் உழைப்பும் அதிகரிக்கவே செய்யும். 2-ல் சூரியனும் ராகுவும் இருப்பதால் குடும்பத்தில் சலசலப்புக்கள் இருந்துவரும். வீண்வம்புகளைத் தவிர்க்கவும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். 26-ஆம் தேதி முதல் புதன் வக்கிர நிவர்த்தி பெற்று நேர்கதியில் உலவத் தொடங்குவதால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும்.

விருச்சிகம்:  Viruchigam


குரு, சுக்கிர பலத்தால் உங்கள் அறிவாற்றலும், தோற்றப்பொலிவும் கூடும். பொருளாதார நிலை சீராக இருந்துவரும். மக்களாலும் வாழ்க்கைத்துணைவராலும் நலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் அனுகூலமான போக்குத் தென்படும். வாழ்க்கை வசதிகள் பெருகும். ஜன்ம ராசியில் சூரியனும் ராகுவும் இருப்பதால் அலைச்சல் அதிகமாகும்.

உஷ்ணாதிக்கத்தால் உடல்நலம் பாதிக்கும். 2-ல் செவ்வாய் இருப்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. எக்காரியத்திலும் யோசித்து ஈடுபடவும். 12-ல் புதனும் சனியும் இருப்பதால் எதிர்பாராத செலவுகளும் இழப்புகளும் ஏற்படும். சிக்கன நடவடிக்கை அவசியம் தேவை. பழைய சொத்துக்களை விற்க வேண்டிய நிலை சிலருக்கு உண்டாகும்.

உடன்பிறந்தவர்களாலும், நண்பர்களாலும், உறவினர்களாலும் செலவுகள் ஏற்படும். வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது அவசியமாகும். வாரப் பின்பகுதியில் முக்கியஸ்தர் ஒருவரது சந்திப்பு நிகழும். அதனால் அனுகூலமும் உண்டாகும். பயணத்தால் ஒரு காரியம் நிறைவேறும்.

தனுசு:  Dhanusuபுதன், சுக்கிரன், சனி, கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதாலும் ராசிநாதன் குரு 6-ல் உலவினாலும் கூட வக்கிரமாக இருப்பதாலும் உங்கள் அறிவாற்றல் பளிச்சிடும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் நிறைவேறும்.

கூட்டாளிகள் உதவுவார்கள். சொந்தத் தொழிலில் அபிவிருத்தி காணலாம். கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு, கமிஷன் ஏஜன்ஸி மூலம் ஆதாயம் அதிகம் கிடைக்கும். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைத்துவரும். லாப ஸ்தானத்தில் கிரகங்கள் ஒன்று கூடியிருப்பதால் பல வழிகளில் ஆதாயம் பெறுவீர்கள். ஜன்ம ராசியில் செவ்வாய் இருப்பதால் எதிலும் அவசரப்படாமல் நிதானமாக ஈடுபடவும்.

12-ல் சூரியனும் ராகுவும் இருப்பதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். அரசாங்கத்தாராலும் தந்தையாலும் பிரச்னைகள் சூழும். பயணத்தின்போது விழிப்புத் தேவை. கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு விலகும். தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். 26-ஆம் தேதி முதல் புதன் வக்கிர நிவர்த்தி பெறுவதால் செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம்.
மகரம்: Makaramசூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். அரசியல்வாதிகளின் லட்சியம் நிறைவேறும். அரசுப்பணியாளர்கள், உத்தியோகஸ்தர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள்.

பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்புக் கூடிவரும். வெளிநாட்டு வேலை சிலருக்கு கிடைக்கும். வியாபாரம் பெருகும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். வெளிநாட்டுத் தொடர்புடன் வர்த்தகம் புரிபவர்களுக்கு ஆதாயம் அதிகம் கிடைக்கும். முன்னேற்றத்துக்கான நல்ல தகவல் வந்து சேரும்.

நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். 12-ல் செவ்வாய் இருப்பதால் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. சகோதர நலனில் கவனம் தேவைப்படும்.


கும்பம்:  Kumbamசூரியன், செவ்வாய், சுக்கிரன், ராகு ஆகியோர் அனுகூலமாக உலவுவதாலும், ராசிநாதன் சனி பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதாலும் உங்கள் சுய பலம் கூடும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். அரசு உதவி கிடைக்கும்.

நிர்வாகத்திறமை பளிச்சிடும். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு உயரும். இயந்திரங்கள், எரிபொருட்கள், மின்சாதனங்கள், வெடிப்பொருட்கள் ஆகியவை லாபம் தரும். நிலபுலங்கள் சேரும். நிலபுலங்களால் ஆதாயமும் கிடைக்கும். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். கூட்டுத் தொழில் லாபம் தரும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும்.

பெண்களுக்கு மன உற்சாகம் பெருகும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். ஏற்றுமதி-இறக்குமதி இனங்கள் லாபம் தரும். 4-ல் வக்கிரகுருவும், கேதுவும் இருப்பதால் தாய் நலனில் கவனம் தேவை. 26-ஆம் தேதி முதல் புதன் வக்கிர நிவர்த்தி பெறுவதால் தான, தர்மப்பணிகளிலும்; தெய்வப்பணிகளிலும் ஈடுபாடு அதிகரிக்கும். தொலைதூரத் தொடர்பு பயன்படும்.

மீனம்:  Meenam


3-ல் கேதுவும், 10-ல் செவ்வாயும் உலவுவதால் உங்கள் பராக்கிரமம் வெளிப்படும். எதிர்ப்புக்களைக் கடந்து வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். பிரச்னைகள் தீர வழிபிறக்கும். மனோபலம் கூடும். துணிவோடும் தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு கூடும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். நிலபுலங்கள் சேரும்.

உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். குரு 3-ல் இருந்தாலும் வக்கிரமாக இருப்பதால் பண நடமாட்டம் அதிகரிக்கும். சுப காரியங்கள் நிகழும். 8-ல் புதன், சுக்கிரன், சனி ஆகியோர் உலவுவதால் எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடமுண்டு.

வியாபாரம் பெருகும். கலைத்துறை ஊக்கம் தரும். தொழிலாளர்கள் அதிகம் உழைக்க வேண்டிவரும். 9-ல் சூரியனும் ராகுவும் உலவுவதால் தந்தை நலனில் கவனம் தேவை. தொலைதூரப் பயணத்தின்போது விழிப்புடன் இருக்கவும். 26-ஆம் தேதி முதல் புதன் வக்கிர நிவர்த்தி பெறுவதால் மாணவர்களுக்கும் வியாபாரிகளுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். நண்பர்களும் உறவினர்களும் உதவி புரிவார்கள்.


  Tags : வார, ,ராசிபலன்:, ,23-11-2012, ,முதல், ,29-11-2012, ,வரை,வார,ராசிபலன்:,23-11-2012,முதல்,29-11-2012,வரை,வார,ராசிபலன்:,23-11-2012,முதல்,29-11-2012,வரை


மகளிர்

பிற ராசிகளுக்கான பலன்கள்
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in