Tamilnewyear Viruchigam,Nanthana Tamil New Year Predictions ஜோதிடம் , ராசி பலன் , தினபலன் , வார பலன் , ஆண்டு பலன் 2010 , ஆணடுபலன் 2011, "கர" வருட தமிழ் ஆண்டுபலன் , குருபெயர்ச்சி பலன் , சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் , வாஸ்து , நியூமராலஜி , எண்கணிதம் , Jothidam , Astrology , Vasthu , Neumerology , Rasi Balan 2010,Rasi Balan 2011 Balan, Weekly Raasi Balan, Guru Balan , Sani Balan , Dai Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji
tamilkurinji logo
 


ஜோதிடம் >>> தமிழ்ப் புத்தாண்டுபலன்கள் - Tamil new year

23020

Viruchigam

Friday , 6th April 2012 04:20:17 AM

விருச்சிகம்

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை வரை

நல்ல விஷயங்களை மட்டுமே நாடி அல்லாதவற்றுக்கு கோபம் கொள்ளும் விருச்சிக ராசி நேயர்களே!

பரம்பரையை விளங்க வைக்க குழந்தைச் செல்வம் வேண்டுமே என்ற கவலையோடும் தொழில்களை  விரிவாக்கம் செய்ய வேண்டுமே என்கிற ஆர்வத்தோடும் இருப்பீர்கள். 16.11.2012க்கு பிறகு குழந்தை பாக்கியம் ஏற்படும். 1.12.2012க்கு பிறகு தைரியம் கூடும். துணிவுடன் பிரச்னைகளை எதிர்கொண்டு வெற்றி பெறலாம்.

உங்களுக்கு இந்த நந்தன புத்தாண்டு எப்படியிருக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் செயல் ஸ்தானத்தில் சஞ்சரிக் கிறார். எனவே, எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும். இல்லம் தேடி இனிய செய்தி வந்து கொண்டேயிருக்கும். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள்.

ஏழரைச் சனி மாறி, லாப ஸ்தானம் பலப்படுகிறது. எனவே, பொருளாதார நிலை உயரும். புகழ் மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து, புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வைப்பார்கள்.

நவக்கிரகங்களில் `சுபகிரகம்' என்று வர்ணிக்கப்படுபவர் குரு பகவான். உங்கள் ராசியைப் பொறுத்தவரை அவர் தனாதிபதியாகவும், பஞ்சமாதிபதியாகவும் விளங்குகிறார். அவர் உங்கள் ராசியை நேர்பார்வையாகப் பார்க்கும்பொழுது, நிகழ்காலத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள்.

இமயம் போல் புகழ் பெறவும், இதயம் மகிழும் விதம் வாழ்க்கை நடத்தவும், வருமானத்தை குவிக்கவும், வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்கவும் ஏழில் சஞ்சரிக்கும் குருபகவான் இனிய வாய்ப்புகளை வழங்கப்போகிறார். குடும்ப ஒற்றுமை கூடும். எதிரிகள் மனம் மாறி உங்கள் இனிய பணிக்கு ஒத்துழைப்புச் செய்வர்.

உறவினர்களின் ஆதரவோடு உயர்ந்த நிலையை அடையப்போகிறீர்கள். பூர்வீக சொத்து தகராறுகள் அகலும். குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதோடு, 3, 11 ஆகிய இடங்களிலும் பதிவாகிறது. குருவின் பார்வை 1, 3, 11 ஆகிய இடங்களில் பதியும் பொழுது, தேக ஆரோக்கியம் சீராகும்.

வழக்குகளில் வெற்றி கிட்டும். வாரிசுகள் பிறக்கவில்லையே என்ற கவலை அகலும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். உள்ளம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடை பெறும். லாப ஸ்தானம் பலப்படுவதால் தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் லாபம் இருமடங்காக வந்து சேரும். பூமி விற்பனையால் ஆதாயம் கிட்டும். சாமி துணையோடு சகல காரியங்களிலும் வெற்றி பெறுவீர்கள்.

இக்காலத்தில் குரு கவசம் பாடி, குரு வழிபாடு செய்வதோடு, சனிக்கவசம் பாடி லாப ஸ்தான சனியையும் பலப்படுத்தும் விதத்தில் சனீஸ்வர வழிபாட்டையும் மேற்கொண்டால், சகல யோகங்களும் வந்து சேரும். அந்நிய தேச வாய்ப்புகளும் எண்ணியபடியே உருவாகும்.

ஆனி 9-ம் தேதி முதல் ஆடி 29-ம் தேதி வரை உங்கள் ராசிக்கு 11-மிடத்தில் செவ்வாயும், சனியும் ஒன்று கூடுகிறார்கள். ராசிநாதனும், சகாய ஸ்தானாதிபதியும் லாப ஸ்தானத்தில் ஒன்று சேருவதால், வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வங்கிச் சேமிப்பு உயரும். அலைபாயும் மனதிற்கு அமைதி கிடைக்கும் விதத்தில் உல்லாசப் பயணங்களை மேற்கொள்வீர்கள். ஊர்மாற்றச் சிந்தனைகள் மேலோங்கும். குடும்பச் செலவு கூடும் இந்த நேரத்தில் அன்ன தானத்திற்கும், ஆன்மிகப் பணிக்கும் செலவிடுவது நல்லது.

ஆவணி 27-ம் தேதி உங்கள் ராசிக்கு 12-மிடத்தில் சனி உச்சம் பெறப்போகிறார். எனவே, வரவைக் காட்டிலும், செலவு கூடும். வருமானம் அதிகரிக்க என்ன வழி என்று யோசிப்பீர்கள்.

பிள்ளைகளின் கல்யாண கனவுகளை நனவாக்கவும், பெரிய தொழில் கள் செய்ய அரசு வழியில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கவும், அந்த உச்ச சனி வழிவகுத்துக் கொடுக்கும். நீண்டதூரப் பயணங்களுக்கு ஏற்பாடு செய்து, நீடித்த நாட்கள் ஆகியதே என்று கவலைப்பட்டவர்களுக்கு கடல் பயணவாய்ப்புகள் கைகூடும்.

புரட்டாசி 26-ம் தேதி முதல் தை 24-ம் தேதி வரை ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு வக்ரம் பெறப்போகிறார். உங்கள் ராசியைப் பொறுத்த வரை 2, 5-க்கு அதிபதியான குரு பகவான் வக்ரம் பெறும் பொழுது, தொழிலில் கூடுதல் விழிப்புணர்ச்சி காட்டுவது நல்லது. தொழிலில் உள்ள கூட்டாளிகளிடம் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள்.

கோபம், படபடப்பு ஆகியவற்றை குறைத்துக் கொண்டு அன்பு மேலோங்கி மற்றவர்களோடு பேசுவதன் மூலம் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகள் வளர்ப்பில் கொஞ்சம் கவனம் தேவை. அவர்கள் உங்கள் சொற்படி கேட்டு நடக்கும் விதத்தில், அறிவுரை கூறுவது நல்லது. குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம்.

கார்த்திகை 17-ம் தேதி துலாம் ராசியில் ராகுவும், மேஷ ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். உங்கள் ராசியைப் பொறுத்தவரை பனிரெண்டாமிடத்து ராகுவும், ஆறாமிடத் தில் சஞ்சரிக்கும் கேதுவும் மிகுந்த நன்மைகளை வழங்கப் போகிறார்கள்.

பாம்பு கிரகங்கள் மறைவிடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, நிறைவான பலன்களை வழங்கும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.

ஆறில் கேது சஞ்சரிப்பதால், உத்தியோகத்தில் இருப்பவர்கள் வி.ஆர்.எஸ். பெற்றுக் கொண்டு, விரும்பிய தொழிலைச் செய்ய முன் வருவர். கூட்டாளிகள் தானாகவே வந்திணைவர். கடன் சுமை குறையும். அண்டை, அயலாருடன் ஏற்பட்ட பிரச்சினைகள், நல்ல முடிவிற்கு வரும்.

இக்காலத்தில் சர்ப்ப சாந்திகளை முறையாகச் செய்து சந்தோஷங்களை வரவழைத்துக் கொள்ளுங்கள்.

சித்திரை 1-ம் தேதி முதல் ஆணி 6-ம் தேதி வரையிலும், பிறகு மாசி 4-ம் தேதி முதல் பங்குனி 31-ம் தேதி வரையிலும் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசி அடிப்படையில் 3, 4-க்கு அதிபதியாக விளங்குகிறார். எனவே, அதன் வக்ரம் நன்மையÛச் செய்யும் என்றே சொல்லலாம். மூன்றுக்கு அதிபதி வக்ரம் பெறும் பொழுது, முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முடிவு எடுத்த சில காரியங்களில் மாற்றம் செய்வீர்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது.

நான்காமிடத்திற்கு அதிபதியாகவும் சனி விளங்குவதால், தாய்வழி உறவினர்களை அனுசரித்து செல்வது தகுந்த பலனைக் கொடுக்கும். வீடு கட்டும் முயற்சி அல்லது பழுது பார்க்கும் முயற்சிக்காக செலவிடுவீர்கள். ஒரு சொத்தை விற்கும் பொழுது, மற்றொரு சொத்தை உடனடியாக வாங்கி விடுவதுதான் நல்லது.

மாணவர்களுக்கு:

புதிய இடங்கள் மற்றும் விருப்பப்பட்ட பாடத்தில் சேரலாம். மாமன், அத்தையின் ஆதரவு கிடைக்கும் என்பதால் அவர்கள் பக்கத்திலுள்ள கல்வி நிலையங்களை தேர்ந்தெடுக்கலாம். 11.9.2012க்கு பிறகு சற்று கடுமையான நாட்களாக உள்ளன. அளவுக்கு மீறி செலவுகளுக்கு பணம் தர வேண்டாம். 4.12.2012 முதல் 22.12.2012 காலங்களில் நன்கு படிக்கும் பிள்ளைகளின் சேர்க்கையும் மூத்த மாணவர்களின் அரவணைப்பும் கிடைக்கும். 14.1.2013 முதல் 12.2.2013 வரையான காலத்தில் ஆசிரியர்களால் பாராட்டப்படுவதும் போட்டிகளில் வெற்றியும் மாவட்ட அளவில் முதன்மை பெறுதலும் நடைபெறும். மொத்தத்தில் அத்துமீறாமல் செயல்பட்டால் இந்த ஆண்டு வெற்றியை அள்ளித் தரும்.

பெண்களுக்கு:

மந்திரித்து விட்டது போல் பெரியவர்கள் பேச்சை கேட்பீர்கள், 16.5.2012க்கு பிறகு தன் வர்க்கத்தார் உதவியில் திருமண செலவுகள் காணலாம். விருப்பப்பட்ட புதிய பொருட்கள் கிடைக்கும். ஒரு ஆலயம் கட்டப்படும் ஊரில் சில காலம் உதவியாக இருப்பீர்கள். 16.11.2012 முதல் 15.12.2012 ஆகிய காலத்தில் குழந்தை பாக்கியத்திற்கான வாய்ப்பு இருக்கிறது. 1.12.2012க்கு பிறகு அலுவலகப் பெண்களுக்கு சாமர்த்திய குறைவு ஏற்படும். கடன் அதிகரிக்கும். இந்தக் காலத்தில் பிள்ளைகளுக்கு அயல்நாட்டு வேலைக்கான முயற்சிகளில் பணம் பறிகொடுக்க நேரிடும். எனவே தள்ளிப் போடுங்கள். 28.2.2013க்கு பிறகு 16.3.2013க்குள் வீடு, மனை வாங்கலாம், பொதுவாக கவனமாக இருக்க வேண்டிய ஆண்டு.

உத்யோகஸ்தர்களுக்கு:

திடீர் இடமாற்றத்துடன் இந்த ஆண்டு தொடங்கக் கூடும். அதிகாரிகளின் ஆதரவு கிட்டும், வேலையை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு 15.5.2012க்குள் நிச்சயமாக உத்யோகம் கிடைக்கும். உடனடியாக வாகனம் வாங்குவீர்கள். 23.10.2012 முதல் 17.11.2012 வரையான காலத்தில் அதிகாரிகள் கடிந்து கொள்ளக் கூடும். தங்களுக்கு எதிராக சிலர் விளையாடுவர். 25.11.2012க்கு பிறகு இந்த நிலை மாறுவதும் நீங்கள் அதிகார உயர்வு பெறுவதும் நடைபெறும். 26.9.2012 முதல் 3.12.2012 வரையான காலத்தில் நண்பர்களிடம் ஏற்படும் மனஸ்தாபத்தை நேரிடையாகப் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். 22.2.2013க்கு பிறகு உங்கள் உயர்வுக்கு தடையாக இருந்த எல்லாம் விலகிவிடும். பணவசதி எதிர்பார்த்தபடி கிடைக்கும். சீரான முன்னேற்றம் தரும் ஆண்டு.

வியாபாரிகளுக்கு:

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அனைத்து உதவிகளும் சரியான நேரத்திற்கு கிடைக்கும். கடித தொடர்புகள் மூலமாகவே பல காரியங்களை சாதித்துக் கொள்ள முடியும். 29.5.2012 வரை திட்டங்கள் தீட்டுவதும் ஏஜென்சி, கமிஷன் தொழில்கள் ஆரம்பிப்பதும் இருக்கும். தொழிலை விரிவாக்கம் செய்வதையும் நடைமுறைப்படுத்தலாம். 11.12.2012 முதல் 15.12.2012 வரையான காலத்தில்  எதிர்பார்த்த காரியங்கள் சுபமாக முடியும். வாழ்க்கையில் பல சொகுசான சௌகரியங்களை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். குடும்பத்தில் திருமண செலவுகள் ஏற்படும். தங்களுக்கு ஒரு பெண்ணினால் அவமானம் ஏற்படக்கூடும். முன்கூட்டியே கவனமாக இருக்கவும். 13.2.2013 முதல் 1.3.2013 வரையான காலத்தில் கோபத்தினால் சண்டை ஏற்பட்டு பாதகங்களை தரும் நேரம். துணிவுடன் செயல்பட்டு நிலைமையை சமாளிக்க வேண்டும்.

அரசியல்வாதிகளுக்கு:

நல்ல அமைப்புடன் தோற்றமளிக்கிறீர்கள். அதிகார குறைவு வெளியில் தெரியவில்லை என்று ஆண்டு ஆரம்பிக்கிறது. சில முயற்சிகள் தள்ளிப்போகும். 18.11.2012 முதல் 10.12.2012 வரையான காலம் தங்கள் சிந்தனைப்படி செயல்கள் நடைபெறும். மந்திரிகளின் நட்பு கை கூடும். நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம். 11.12.2012க்கு பிறகு வாகன வசதிகளுடன் கூடிய பதவி வாய்க்கும். கொஞ்சம் பணச் செலவுகள், வீண் அலைச்சல்கள் இருக்கும். ஆனால் பதவியில் இருக்கும்போது கடமைகளை சரிவரச் செய்வீர்கள். 14.1.2013க்கு பிறகு எதிர்பார்த்த பதவி தள்ளிப்போகும். இருப்பதை பயன்படுத்தி முன்னேறுவது நல்லது. 27.1.2013க்கு பிறகு 13.3.2013க்குள் விசேஷமான புதிய பொறுப்புகள் கூடும். மந்திரிகளின் உதவியுடன் பல நற்காரியங்களில் ஈடுபடுவீர்கள். மொத்தத்தில் சீரான உயர்வைத் தரும் ஆண்டு.

எச்சரிக்கைகள்:  

1.12.2012க்கு பிறகு அயல்நாடு செல்லும் முயற்சிகளில் அதிக தொகையை செலவு செய்ய வேண்டாம். 14.1.2013 முதல் 21.1.2013 வரையான காலத்தில் சமையல் பாத்திரங்களின் தூய்மையில் கவனமாக இருக்க வேண்டும்.

அச்சாரங்கள்:

15.5.2012 முதல் 29.5.2012 வரையான காலத்தை புதிய தொழில்கள், ஏஜென்சி, கமிஷன், மண்டிகள் என்று தொழில் விரிவாக்கத்திற்கு தேர்வு செய்யுங்கள். 27.1.2013 முதல் 13.3.2013 வரை எதிர்பார்க்கும் தொகைகள் கிடைக்கப் பெறும். ஆதலால் தொழில் விரிவாக்கத்தை துரிதப்படுத்துவதற்கு இதுதான் ஏற்ற காலம்.

பரிகாரம்:

பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்தல், வைத்தீஸ்வரன் கோயிலில் தையல் நாயகி தரிசனம், திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமியை தரிசிப்பது நல்லது. திருக்கோயில் கல்யாண உற்சவங்களுக்கு பூக்கள் அளித்தல் அதிக நன்மையைத் தரும்.


  Tags : Nanthana, ,Tamil, ,New, ,Year, ,Predictions, , , நந்தன, ,வருட, ,தமிழ்ப், ,புத்தாண்டு, ,பலன்கள் ,Viruchigam,Nanthana,Tamil,New,Year,Predictions




























மகளிர்



















பிற ராசிகளுக்கான பலன்கள்










Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in