Tamilnewyear Thulam,Nanthana Tamil New Year Predictions ஜோதிடம் , ராசி பலன் , தினபலன் , வார பலன் , ஆண்டு பலன் 2010 , ஆணடுபலன் 2011, "கர" வருட தமிழ் ஆண்டுபலன் , குருபெயர்ச்சி பலன் , சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் , வாஸ்து , நியூமராலஜி , எண்கணிதம் , Jothidam , Astrology , Vasthu , Neumerology , Rasi Balan 2010,Rasi Balan 2011 Balan, Weekly Raasi Balan, Guru Balan , Sani Balan , Dai Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji
tamilkurinji logo


 


ஜோதிடம் >>> தமிழ்ப் புத்தாண்டுபலன்கள் - Tamil new year

23019

Thulam

Friday , 6th April 2012 04:17:23 AM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Astrology_details.php on line 206
search
Thulam,Nanthana Tamil New Year Predictions துலாம்

சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள் வரை

வேண்டியவர் வேண்டாதவர் என்கிற பாகுபாடு பார்க்காமல் நடுநிலையோடு செயல்படும் துலா ராசி நேயர்களே!

வேலை தேடி அலைந்தாயிற்று. பிள்ளைகளின் திருமண ஏற்பாடுகள் பற்றிய கவலை வேறு ஒரு பக்கம். இவை அனைத்திற்கும் இந்த ஆண்டு நல்ல வழி பிறக்கும். 16.5.2012 வாக்கில் திருமண ஏற்பாடுகள் நிறைவடையும். 28.9.2012 முதல் 22.10.2012க்குள் நல்ல வேலை கிடைக்கும். பழக்க வழக்கங்களை மாற்றாமல் உயர்வுபெற வழி தேடுவது நலம். விரும்பும் இடமாற்றங்கள் பெற 27.1.2013 வரை பொறுத்திருக்க வேண்டும். குடும்பத்தில் கார்த்திகை இறுதியில் சுபச் செலவுகள் கூடும்.  

உங்களுக்கு இந்த நந்தன புத்தாண்டு எப்படி இருக்கும்? என்பதை பற்றி பார்ப்போம்.

உங்கள் ராசிநாதன் சுக்ரன் எட்டில் மறைந்து இருக்கும் நிலையில் ஆண்டு தொடங்கு கிறது. அதோடு கேதுவும், இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே, எந்த காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்ய இயலாது. உடன்பிறப்புகளின் அலட்சியம் உங்கள் மனதை நோகடிக்கும்.

விரயச்சனியின் சஞ்சாரத்தால் விரயங்கள் கட்டுக்கடங்காமல் போகலாம். இடமாற்றம், ஊர் மாற்றம் போன்றவைகள் இதயம் மகிழும் விதத்தில் வந்து சேரும்.

நவக்கிரகங்களில் நற்பலன்களை பார்வை பலத்தால் கொடுப்பவர் குரு என்றாலும், உங்கள் ராசியை பொறுத்தவரை ராசிநாதன் சுக்ரனுக்கு அவர் பகைவன் அல்லவா? எனவே, இருக்குமிடத்திற்கு ஓரளவு மட்டுமே பலன் கொடுப்பார். பார்க்குமிடத்திற்கு கொஞ்சம் கூடுதலான பலனை கொடுப்பார்.

எட்டில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே, பதியும் இடங்கள் பலன் கொடுத்தாலும் இருக்குமிடத்திற்கும் பலன் பார்க்க வேண்டு மல்லவா? உங்கள் ராசிக்கு 3, 6-க்கு அதிபதி குருபகவான்.

எட்டில் குரு வந்தால், இடமாற்றம் வந்து சேரும். திட்டங்கள் மாறி விடும். திருப்பங்கள் பலவும் வரும் என்று சொல்வார்கள். எனவே, நீங்கள் தீட்டிய திட்டங்கள் எல்லாம் திசைமாறி செல்லலாம். சான்றோர்களும், குடும்ப பெரியவர்களும் காட்டிய வழியில் செல்லாவிட்டால், கவலைகள் வந்து சேரும்.

அஷ்டமத்து குருவிற்கு பரிகாரமாக வியாழன்தோறும் விரதமிருந்து, குரு ஷேத்திரங் களுக்கு சென்று வழிபட்டு வருவது நல்லது. சுய ஜாதகத்தில் வியாழ திசை, வியாழ புத்தி நடப்பவர்கள், வியாழக்கிழமை பிறந்தவர்கள் ஆகியோர் இந்த நந்தன ஆண்டு நலம் பெற சிறப்பு பரிகாரங்களை தேர்ந் தெடுத்து செய்வதுதான் நல்லது.

குருவின் பார்வை பதியும் 2, 4, 12 ஆகிய இடங்களின் அடிப்படையில் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற
இயலும்.

வீடு, இடம் விற்பதன் மூலம் வரும் தொகையால் புதிய வீடுகள் வாங்கும் வாய்ப்புகள் கிட்டும். தாய் வழி ஆதரவு கூடும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை யும் வாங்கி மகிழ்வீர்கள்.

ஆனி 9-ந் தேதி முதல் ஆடி 29-ந் தேதி வரை உங்கள் ராசிக்கு 12-ல் செவ்வாயும், சனியும் ஒன்று கூடுகிறார்கள். விரய ஸ்தானத்தில் தனாதிபதி சனியோடு இணையும் போது வீண் விரயங்கள் அதிகரிக்கும். குடும்ப செலவுகள் கூடும். நண்பர்களை நம்பி கொடுத்த தொகை வந்து சேருமா என்பது சந்தேகம் தான். வாகனத்தால் தொல்லைகள் உருவாகலாம். தேக நலன் கருதி ஒரு தொகையை செலவிடும் சூழ்நிலை உருவாகும்.

எள் தீபம் ஏற்றி காக வாகனத்தானை வழிபடுவதோடு, அன்னதான வைபவங்களிலும் கலந்து கொண்டால் எண்ணங்களில் குழப்பங்கள் ஏற்படாது.

ஆவணி 27-ந் தேதி உங்கள் ராசியிலேயே சனி உச்சம் பெற போகிறார். விரயச்சனியை காட்டிலும், ஜென்மச் சனியின் ஆதிக்கம் ஓரளவு நன்மையை தரும்.

ஆவணி 27-ந் தேதிக்கு மேல் பிள்ளைகளின் கல்யாண கனவுகளை நனவாக்குவீர்கள். உறவினர் பகை மாறும். உங்களை விட்டு விலகியவர்கள் மீண்டும் வந்து சேரலாம்.

புரட்டாசி 26-ந் தேதி முதல் தை 24-ந் தேதி வரை ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசியை பொறுத்தவரை 3, 6-க்கு அதிபதியான குருபகவான் வக்ரம் பெறும்போது நன்மையையே கொடுப்பார். 6-க்கு அதிபதி வக்ரம் பெற்றால் `கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப திட்டமிடாது செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

திடீர், திடீரென நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். கடமைகளை சரிவர செய்யும் சூழ்நிலை உருவாகும் என்றாலும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் இடமாற்றங் கள் ஏற்படலாம். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகளும், பொறுப்புகளும் வந்து சேரும்.

கார்த்திகை 17-ந் தேதி ஜென்ம ராசியில் ராகுவும், மேஷ ராசியில் கேதுவும் சஞ்சரிக்க போகிறார்கள். உங்கள் ராசியை பொறுத்தவரை ஜென்ம ராகு பயணங்களை அதிகரித் தாலும், பொருளாதாரத்தில் நிறைவை கொடுப்பார். இதுவரை நடைபெறாத காரியங்கள் துரிதமாக நடக்கும்.

ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியிலும் ஆதாயம் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் விட்டு கொடுத்து செல்வது நல்லது.

சப்தம ஸ்தானத்தில் கேது பலம் பெறுவதால் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். நீண்ட தூர பயணங்களை ஒரு சிலர் ஏற்க நேரிடலாம். பழைய சொத்துக்களை விற்று விட்டு புதிய சொத்துக்களை வாங்கும் சூழ்நிலை உருவாகும்.

இந்த காலத்தில் சர்ப்ப சாந்திகளை முறையாக செய்வது நல்லது.

சித்திரை 1-ந் தேதி முதல் ஆனி 6-ந் தேதி வரையிலும், பிறகு மாசி 4-ந் தேதி முதல் பங்குனி 31-ந் தேதி வரையிலும் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசி அடிப்படையில் சனி 4, 5-க்கு அதிபதியாக விளங்குகிறார். எனவே, அதன் வக்ரம் பலவித மாற்றங்களை உங்களுக்கு கொடுக்க போகிறது. குறிப்பாக குடும்ப ஸ்தானம், புத்திர ஸ்தானம் ஆகிய இடங்களுக்கு அதிபதியாக விளங்கும் கிரகம் வக்ரமாகும் போது திருப்தி யான பலனை கொடுக்காது. குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நிலை தொல்லைகளை கொடுக்கலாம். பிள்ளைகள் வழியில் வந்த திருமண பேச்சுகள் விட்டு போகலாம்.

இந்த வக்ர காலத்தில் பிள்ளைகளின் திருமண பேச்சுகள் முடிவானாலும், அவை ஒற்றுமை குறைச்சலை உருவாக்கி விடலாம். எனவே வீடு கட்டுவது முதல் விவாக பேச்சுகள் வரை வக்ர இயக்கம் முடிந்த பிறகு முடிவெடுப்பதே நல்லது. ஆவணிக்கு மேல் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும். ஒற்றுமை பலப்படவும், உள்ளத்தில் அமைதி ஏற்படவும் சனி ப்ரீதி செய்வது நல்லது.

மாணவர்களுக்கு:

புதிய தொழில் நுட்பங்கள் பற்றி படிக்க முயற்சி செய்வீர்கள். 22.6.2012க்கு பிறகு கல்லூரி இயந்திரங்களில் பழுதுகளால் சற்று படிப்புத் தடைபடும். 28.9.2012க்கு பிறகு நல்ல நிலைமை ஏற்படும். 4.11.2012 முதல் 13.12.2012 வரையான காலம் லட்சியங்களை நோக்கி நகர்வீர்கள்.  16.12.2012க்கு பிறகு அரசின் சலுகைகள் கிடைக்கப் பெறுவீர்கள். 8.1.2013க்கு பிறகு விஞ்ஞான நுட்பங்கள் பற்றிய தெளிவான அறிவு ஏற்படும். ஆசிரியரின் உதவி கிட்டும். மொத்தத்தில் விடாமுயற்சியினால் இந்த ஆண்டில் சாதிப்பீர்கள்.  

பெண்களுக்கு:

வீட்டின் பழக்க வழக்கங்களை மாற்றும் எண்ணம் தொடர்கிறது. அதுவும் சரிதான் என்று பேசுவீர்கள். அதனால் குடும்பத்தில் சர்ச்சைகள் ஏற்படும். 20.6.2012 முதல் 9.7.2012 வரையுள்ள காலத்தில் விருப்பமில்லாமல் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். இது தங்கள் அடிப்படையை குணத்தை மாற்றும். தினமும் சிலருக்கு அன்னதானம் செய்வீர்கள். 2.8.2012 முதல் 22.8.2012க்குள் இதுவரை காணாத பொருட்களைப் பெறுவீர்கள். எல்லோரிடமும் நல்ல பெயர் பெறுவீர்கள். 1.12.2012க்கு பிறகு புதிய இடமாற்றம் ஏற்படும். உஷ்ணம் தொடர்பான நோய்கள் தொடரும். 14.12.2012 முதல் 21.11.2013 வரை வீட்டில் மின்சார பொருட்களில் தீப்பிடிக்கும். மிகுந்த கவனம் தேவை. 22.2.2013 முதல் 10.3.2013க்குள் குடும்பத்தில் திருமணச் செலவுகள் ஏற்படும்.

உத்யோகஸ்தர்களுக்கு:

அலுவலக உதவியாளர்களின் எதிர்ப்பை சந்திப்பீர்கள். எடுக்கும் செயல்கள் யாவும் தடைபடும். 1.9.2012 முதல் 27.9.2012 வரையான காலத்தில் அதிகாரிகளின் உதவி கிட்டும். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பொறுப்பு குறைந்த இடத்திற்கு மாற முயற்சி செய்யுங்கள். 1.10.2012 முதல் 3.11.2012 வரை குடும்பத்திற்குள் சிக்கலான பிரச்னைகள் ஏற்படும். 4.12.2012க்கு பிறகு தங்கள் உடல்நிலை தொய்வு காரணமாக பிரச்னைகளை ஒத்திப் போடுவீர்கள். 27.1.2013க்கு பிறகு மனம் கவர்ந்த சித்த புருஷரை அடைக்கலம் அடைவீர்கள். அமைதியான மனம் கிடைக்கப் பெறுவீர்கள். இதற்குப் பிறகு தங்கள் மதிப்பு உயரும். அதிகாரிகள் அரவணைப்பும் சம்பள உயர்வுடன் கூடிய பதவியும் கிடைக்கும். சங்கடங்களை பொறுத்துக்கொள்ள உயர்வு தரும் ஆண்டு.

வியாபாரிகளுக்கு:

28.4.2012க்கு பிறகு நூதனமான பொருட்களின் வியாபாரத்தில் ஈடுபடுவீர்கள். 30.5.2012 முதல் 19.6.2012 மற்றும் 10.7.2012 முதல் 1.8.2012 வரையான காலத்தில் கடும் அலைச்சல், உழைப்பு இவற்றால் லாபம் அடைவீர்கள். வாகனங்கள் அடிக்கடி தொந்தரவு செய்யும். தற்போது மாற்ற வேண்டாம், 4.11.2012 முதல் 3.2.2013 காலத்தில் பிறர் பெயரில் உள்ள வாகனங்களை பயன்படுத்தி வியாபாரத்தை நன்கு நடத்துவீர்கள். இந்தக் காலத்தில் குடும்பத்தில் சுபகாரியச் செலவுகள் ஏற்படும். இதன் பிறகு தங்கள் மரியாதைக்குரிய மூத்த நண்பர் ஒருவரின் உதவி கிடைக்கும். அவரது ஆலோசனைகள் மூலம் வாழ்வில் வளம் காண்பீர்கள். நல்ல உழைப்பு கூடிடும் ஆண்டு இது.

அரசியல்வாதிகளுக்கு:    

இருக்கும் நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்ளுங்கள். பொறுமை தேவை. அளவுக்கு மீறிய பணச் செலவு ஏற்படும். கடுமையான உங்கள் செயல்கள் தொல்லைகளையே ஏற்படுத்தும். அதிகார எல்லை கடந்த பகுதிகளில் வீண் அவமானங்கள் ஏற்படும். 9.9.2012 முதல் 25.9.2012 வரை மிக அபூர்வமாக தலைமையின் சந்திப்பு கிடைக்கும். விரும்பிய மாற்றங்களை அடைய இப்போது முயற்சி செய்யுங்கள். பணிவு மட்டுமே நன்மை தரும். பேச்சில் அலட்சியம் வேண்டாம். அது இருக்கும் அதிகாரத்தையும் பறித்துவிடும்.  1.12.2012க்கு பிறகு பதவி மாறுபடும். 14.1.2013 முதல் 21.1.2013 வரையான குறைந்த காலத்தில் தங்கள் எதிரிகளை வீழ்த்த சரியான சந்தர்ப்பம் கூடிவரும். சாமர்த்தியமாக பயன்படுத்தி வெற்றி பெறலாம். பொறுமையாக உள்ளவரை சீரான முன்னேற்றம் இருக்கும்.

எச்சரிக்கை:

22.6.2012 முதல் 12.8.2012 வரை பிரயாணங்களில் கவனம் தேவை. எதிர்பாராத விபத்துக்களை சந்திக்க நேரும். முடிந்த வரை இரவுப் பயணங்கள் வேண்டாம். 14.12.2012 முதல் 21.1.2013 வரை வீட்டு உபயோக மின் பொருட்கள் டி.வி. இவற்றில் தீப்பிடிக்க நேரும். கவனமாக இருங்கள்.11.9.2012க்கு பிறகு வீட்டில் மதிப்புள்ள பொருட்களை பாதுகாப்பாக வைத்திருங்கள் திருடு போகக் கூடும். கோர்ட் விவகாரங்களில் முழுமையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

அச்சாரங்கள்:

9.9.2012க்குப் பிறகு அரசாங்க விவகாரங்கள், கட்சித் தலைமையிடம் ஆதரவான போக்கு தென்படும்.  

பரிகாரம்:

கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருச்சேறை சாரநாதப் பெருமாளின் திருவடி தரிசனம் செய்தல் நல்லது. பெருமாளின் பாதுகா ஸஹஸ்ரத்தை படித்தல், கேட்டல் நன்மை தரும்.


  Tags : Nanthana, ,Tamil, ,New, ,Year, ,Predictions, , , நந்தன, ,வருட, ,தமிழ்ப், ,புத்தாண்டு, ,பலன்கள் ,Thulam,Nanthana,Tamil,New,Year,Predictions


மகளிர்

பிற ராசிகளுக்கான பலன்கள்
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in