Tamilnewyear Simmam,Nanthana Tamil New Year Predictions ஜோதிடம் , ராசி பலன் , தினபலன் , வார பலன் , ஆண்டு பலன் 2010 , ஆணடுபலன் 2011, "கர" வருட தமிழ் ஆண்டுபலன் , குருபெயர்ச்சி பலன் , சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் , வாஸ்து , நியூமராலஜி , எண்கணிதம் , Jothidam , Astrology , Vasthu , Neumerology , Rasi Balan 2010,Rasi Balan 2011 Balan, Weekly Raasi Balan, Guru Balan , Sani Balan , Dai Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji
tamilkurinji logo


 


ஜோதிடம் >>> தமிழ்ப் புத்தாண்டுபலன்கள் - Tamil new year

23017

Simmam

Friday , 6th April 2012 04:11:39 AM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Astrology_details.php on line 206
search
Simmam,Nanthana Tamil New Year Predictions சிம்மம்

மகம், பூரம், உத்ரம் 1-ம் பாதம் வரை

எண்ணம் பலவாயினும் ஸ்திர புத்தியோடு செயல்களை நேர்த்தியாக செய்யும் சிம்மராசி நேயர்களே!

செலவுகள் கட்டுக்குள் வரும். பூர்வீகச் சொத்திலிருந்து பங்குகள் கிடைக்கும்.  தர்ம காரியங்களில் ஈடுபட வேண்டும் என்று புத்தாண்டு அறிவுறுத்துகிறது. நரம்புத் தளர்ச்சி, கழுத்துவலி தோன்றினாலும் 14.5.2012க்கு பிறகு உடல்நிலை சீராகும். எதிர்பார்த்த வீடு, வாகனம் கிடைக்கப் பெறுவீர்கள். பெண் குழந்தைகளின் திருமண ஏற்பாடுகள் 1.9.2012க்கு பிறகு நடைபெறும்.

உங்களுக்கு இந்த நந்தன புத்தாண்டு எப்படியிருக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

ஆண்டின் தொடக்கத்தில் குருமங்கல யோகமும், குருச்சந்திர யோகமும் ஏற்படுகிறது. விலகிய ஏழரைச்சனி மீண்டும் வக்ர இயக்கத்தில் குடும்பச்சனியாக சஞ்சரிக்கிறது. பத்தில் கேது, சுக்ரனுடன் கூடிபலம் பெறுகிறார்.

எனவே, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். தொகை வரவில் இருந்த குழப்பங்கள் அகலும். ஆரோக்கியத்திற்காக சிறிது தொகையைச் செலவிடும் சூழ்நிலை உருவாகலாம்.

வீடுகட்டும் முயற்சியில் அல்லது வீடு வாங்கும் முயற்சியில் அனுகூலம் உண்டாகும். தன்னம்பிக்கையும், உற்சாகமும் குடிகொள்ள தானாகவே பதவிகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

நவக்கிரகங்களில் நற்பலன்களை பார்வையாலேயே வழங்கும் கிரகம் குரு. அந்த குரு அசுர குரு வீட்டில் சஞ்சரித்து, அதன் ஆற்றல்மிக்க பார்வையை உங்கள் ராசிக்கு 2, 4, 6 ஆகிய இடங்களில் செலுத்துகிறது. பார்வை படும் இடமெல்லாம் பலன்கள் அபரிமிதமாக நடைபெறும்.

பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு பதவி மாற்றங்களைக் கொடுக்குமா? என்று நீங்கள் நினைக்கலாம். பொதுவாக, 5, 8-க்கு அதிபதியான குரு 10ல் சஞ்சரிக்கும் பொழுது, தொழிலில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்கும் பொழுது, யோசித்து செய்வது நல்லது. இட மாற்றம், ஊர் மாற்றம், இலாகா மாற்றம் போன்று ஏதேனும் ஒருமாற்றம் வந்து சேரலாம்.

அதுமட்டுமல்லாமல், பத்தாமிடத்து குருவிற்கு பரிகாரம் அவசியம் செய்ய வேண்டும். முத்தான குரு புத்தாண்டில் பலன் தர குரு கவசம் பாடி குருவை வழிபாடு செய்யுங்கள்.

உங்கள் ராசிக்கு 10 ல் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே, அந்த இடத்து ஆதிபத்யங்கள் எல்லாம் படிப்படியாக நடைபெறப் போகிறது. வாக்கு, தனம், குடும்பம், தாய், எதிர்ப்பு, வாகனம், வழக்கு, கடன் சுமை ஆகியவற்றைப் பற்றிய சிந்தனைகளில் எல்லாம் நீங்கள் நினைத்தது போலவே நல்ல பலன்கள் கிடைக்கப்போகிறது.

குடும்பத்தில் ஒற்றுமை கூடும். தாயின் உடல் நலம் சீராகும். இடம், பூமி வாங்கும் யோகம் ஏற்படும். வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள். கடிதம் கனிந்த தகவலைத்தரும். எதிரிகள் சரணடைவர். எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறும். கடன்சுமை குறைந்து, கவலைகள் தீர்ந்தது என்று சொல்லி மகிழ்வீர்கள்.

ஆனி 9 முதல் ஆடி 29 வரை கன்னி ராசியில் செவ்வாயும், சனியும் சேருகின்றன. வாக்கு ஸ்தானத்தில் இவை கூடுவதால் எதையும் யோசித்து சொல்வது நல்லது. கோபத் தைக் குறைத்துக் கொள்வது நல்லது.

விரயங்கள் அதிகரிக்கும். வாகன மாற்றம், இடமாற்றம், வீடு மாற்றங்கள் திடீர் மாற்றங் களாக வந்து சேரும். அங்காரக வழிபாடும், அனுசரிக்கும் தன்மையுமே இக்காலத்தை பொற் காலமாக்கும்.

ஆவணி 27-ம் தேதி முதல் துலாம் ராசிக்குள் உச்சம் பெறும் சனி உங்களுக்கு மிகுந்த நன்மைகளை வழங்கும். ஏழரைச்சனியின் பிடியில் இருந்து நீங்கள் முழுமையாக விலகப்போகிறீர்கள். எனவே, தொட்டகாரியங்கள் வெற்றி பெறும்.

துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவர். வெற்றிச் செய்திகள் அடுக்கடுக் காக வந்து சேரும். வீடு வாங்கும் யோகம் முதல் வியக்கும் விதத்தில் பதவிகள் அமையும் யோகம் வரை ஒவ்வொன்றாக செயல்படும்.

புரட்டாசி 26-ம் தேதி முதல் தை 24-ம் தேதி வரை ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 5, 8-க்கு அதிபதியாக குரு விளங்குவதால் நன்மை, தீமைகள் இரண்டும் கலந்தே நடக்கும்.

எட்டுக்கு அதிபதி வக்ரம் பெறுவதால், இழப்புகளை ஈடுசெய்யும் வாய்ப்பு கிட்டும். அதே நேரத்தில் 5-க்கு அதிபதி வக்ரம் பெறுவதால், பிள்ளைகள் வழியில் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட பஞ்சாயத்துக்கள் இழுபறி நிலையி லேயே இருக்கும். பொதுவாக, குரு வழிபாட்டில் முறையாக ஆர்வம் காட்டினால், குழப்பங் களில் இருந்து விடுபட இயலும்.

கார்த்திகை 17-ம் தேதி துலாம் ராசியில் ராகுவும், மேஷ ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இந்த கிரகப்பெயர்ச்சி உங்களுக்கு யோகம் தரும் பெயர்ச்சிதான். உங்கள் ராசிக்கு மூன்றில் ராகுவும், ஒன்பதில் கேதுவும் சஞ்சரிக்கப்போகிறார்கள். மூன்றாமிடத்து ராகு வெற்றியைக் கொடுக்கும். முக்கிய புள்ளிகளைச் சந்தித்து எடுக்கும் முடிவுகள் ஒவ்வொன்றையும் செயல்படுத்தி பார்ப்பீர்கள்.

ஒன்பதாமிடத்தில் கேது சஞ்சரிக்கப் போவதால், ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கோவில் திருப்பணிகள் செய்யும் சூழ்நிலை உருவாகும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறை வேற்றிக் கொள்வீர்கள். பிரியங்கள் குறையாமல் பார்த்து கொள்வது நல்லது. உற்றார், உறவினர்களின் அனுசரிப்பும் இக்காலத்தில் தேவை.

உங்களுக்கு அனுகூலம் தரும் சர்ப்ப ஸ்தலங்களில் முறையாக சர்ப்பசாந்திகளைச் செய்தால், முன்னேற்றங்களில் இருந்த முட்டுக்கட்டைகள் அகலும்.

சித்திரை 1-ம் தேதி முதல் ஆனி 6-ம் தேதி வரையிலும், பிறகு மாசி 4-ம் தேதி முதல் பங்குனி 31-ம் தேதி வரையிலும் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசி அடிப்படையில் சனி 6, 7-க்கு அதிபதியாக விளங்குகிறார். 6-க்கு அதிபதி வக்ரம் பெறு வது யோகம்தான். `கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்' என்பதற்கேற்ப எதிர் பாராத விதத்தில் சில நன்மைகள் ஏற்படும். எதிரிகள் விலகுவர். உதிரி வருமானங்கள் பெருகும். உத்யோகம், தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் கிடைத்து, ஊதிய உயர்வும், சலுகையும் பெறுவீர்கள். ஆரோக்யம் சீராகும். மருத்துவச் செலவு குறையும்.

ஏழுக்கு அதிபதியாகவும் சனி விளங்குவதால், குடும்பத்தில் சில குழப்பங்கள் உருவாக லாம். மூன்றாம் நபரின் பேச்சை கேட்டு, குடும்ப பிரச்சினைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதன் மூலமும் சில பிரச்சி னைகள் உருவாகலாம். எனவே வீடு சம்பந்தப்பட்ட காரியங்களில் முடிவெடுக்கும் போது, குடும்ப பெரியவர்களை கலந்தாலோசித்து செய்வதோடு, சனிக்குரிய சிறப்பு வழிபாட்டை யும் மேற்கொள்வது நல்லது.

ஞாயிற்றுக்கிழமை தோறும் அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று சூரிய பகவானை வழிபட்டு வருவது நல்லது. புகழ், கீர்த்தி மேலோங்கும். சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் வழிபாட்டையும், அதனருகில் உள்ள வைரவன்பட்டி வளரொளி நாதர், வடிவுடையம்மன், வைரவன் வழிபாட்டையும், அடுத்துள்ள கீழ்ச்சீவல்பட்டியில் உள்ள அருள் வழங்கும் பாடுவார் முத்தப்பர் வழிபாட்டையும் யோகபலம் பெற்ற நாளில் மேற்கொண்டால், யோகங்கள் அனைத்தும் வந்து சேரும்.

சித்திரை 1-ம் தேதி முதல் ஆனி 6-ம் தேதி வரையிலும், பிறகு மாசி 4-ம் தேதி முதல் பங்குனி 31-ம் தேதி வரையிலும் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசி அடிப்படையில் சனி 6, 7-க்கு அதிபதியாக விளங்குகிறார். 6-க்கு அதிபதி வக்ரம் பெறுவது யோகம்தான். `கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்' என்பதற்கேற்ப எதிர்பாராத விதத்தில் சில நன்மைகள் ஏற்படும். எதிரிகள் விலகுவர். உதிரி வருமானங் கள் பெருகும். உத்யோகம், தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் கிடைத்து, ஊதிய உயர்வும், சலுகையும் பெறுவீர்கள். ஆரோக்யம் சீராகும். மருத்துவச் செலவு குறையும்.

ஏழுக்கு அதிபதியாகவும் சனி விளங்குவதால், குடும்பத்தில் சில குழப்பங்கள் உருவா கலாம். மூன்றாம் நபரின் பேச்சை கேட்டு, குடும்ப பிரச்சினைகளை வளர்த்துக் கொள்ளா தீர்கள். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதன் மூலமும் சில பிரச்சினைகள் உருவாகலாம். எனவே வீடு சம்பந்தப்பட்ட காரியங்களில் முடிவெடுக்கும் போது, குடும்ப பெரியவர்களை கலந்தாலோசித்து செய்வதோடு, சனிக்குரிய சிறப்பு வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.

மாணவர்களுக்கு:

நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். படிப்புக்காக வீட்டையோ, நகையையோ அடகுவைக்க நேரிடும். கவனமாகப் படிக்கவும். 1.9.2012 முதல் 27.9.2012 வரையான காலங்களில் பீச், பார்க் என சுற்றத் தோன்றும். அறிவியல் பாடங்களில் ஊக்கமாக இல்லை என்று பெற்றோர் கவலை கொள்ள வேண்டாம். 4.12.2012க்கு பிறகு மாணவர்களின் திறமை வெளிப்படும். 11.9.2012 முதல் 25.9.2012 வரை வெளியூரில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு தைரியம் குறைந்து பதட்டமாக இருக்க வேண்டியிருக்கும்.  26.9.2012 முதல் நிலைமை தலைகீழாக மாறும். கவலை வேண்டாம். வலது கண் தொல்லை தரும். தொடையில் புண் ஏற்படும்.

பெண்களுக்கு:

கணவருடன் உரசல்கள், முகத்தில் பொலிவு குறைந்திருத்தல் என்று இந்த ஆண்டு துவங்கினாலும் 28.7.2012க்கு பிறகு நிலைமை சீரடையும். சுபச் செலவுகள் ஏற்படும். 12.11.2012 முதல் 10.12.2012 வரையான காலத்தில் சுக்கிரனோடு சனி சேர்வதால் கணவரால் தங்களுக்கு பிரச்னைகள் வரலாம். நிதானமும் பொறுமையும் அவசியம். 11.12.2012 முதல் 3.1.2013க்குள்  சொந்த வீடு, வாகனம் அமையும். 22.11.2012 முதல் 1.3.2013 வரையான காலகட்டத்தில் கணவரது உடல் நிலையில் கவனமாக இருக்கவும். தொழில் மற்றும் கடன் உபத்திரங்கள் குடும்பத்தில் சச்சரவுகளை ஏற்படுத்தும்.

வியாபாரிகளுக்கு:

சற்றே இறுக்கமான நிலையில் இருந்த தொழில், ஆகஸ்ட் மாதம் சீரடையும். எதிர்பாராத பணம் வரும். ஷேர் மார்க்கெட்டில் ஈடுபட 28.7.2012 முதல் 30.8.2012 வரையான காலம் மிகச் சிறந்தது. பெரும் லாபம் கிடைக்கும். குடும்பத்துடன் சுற்றுலா செல்வீர்கள். 28.7.2012 முதல் 27.9.2012 வரையான காலங்களில் ரியல் எஸ்டேட் துறையினர் பரிமளிப்பார்கள். சொத்துகளை வாங்கவும் வங்கிகளில் முதலீடுகள் செய்யவும் ஏற்ற காலம் இது. 4.1.2013 முதல் 28.1.2013 வரையான காலத்தில் எந்தச் செயலிலும் சக்திக்கு மீறி இறங்க வேண்டாம். 22.2.2013 முதல் 16.3.2013 வரை தொழிலாளர்களோடு சுமுகமான உறவு இருக்கும். பொதுவாக 1.12.2012க்கு பிறகு மாற்று மதத்தவரின் நட்புறவால் முன்னேற்றம் பெறுவீர்கள்.

உத்யோகஸ்தர்களுக்கு:

வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு 14.5.2012 முதல் 14.6.2012க்குள் வேலை கிடைக்கும். அலுவலர்களுக்கு அரசாங்க விவகாரங்களில் வெற்றி கிட்டும். அலுவலக வழக்கு தங்களுக்கு சாதகமாகும். 10.5.2012 முதல் 19.6.2012 வரையான காலத்தில் அயல்நாடு செல்ல உத்தேசித்திருப்பவர்கள் சற்று நிதானிக்கவும். ஏனெனில், வெளிநாடு சென்று வேலையின்றி தவிப்பதும் அந்நிய மனிதர்களால் தொல்லையுறவும் நேரும். இந்த முயற்சியை 16.12.2012க்கு பிறகு மேற்கொள்ளுதல் நலம். இதயம் மற்றும் தலை பாதிப்புகள் 14.1.2013க்கு பிறகு சுகமாகும். 14.1.2013 முதல் 28.1.2013 காலகட்டத்தில் உங்களுக்கு பதவி உயர்வோடு சம்பளமும் அதிகரிக்கும். 1.12.2012க்கு பிறகு ராகுவின் மாற்றத்தால் நண்பர்கள், உடன் வேலை செய்வோரின் ஆதரவு கிட்டும்.

அரசியல்வாதிகளுக்கு:

கட்சியின் அமைப்பில் பலவிதமான நிதிப் பொறுப்புகளை ஏற்று நடத்த வேண்டிவரும். 11.9.2012க்கு பிறகு உங்கள் நடைமுறைகளிலும் சூழ்நிலைகளிலும் பல மாறுதல்கள் ஏற்படும். வெளிமாநிலத் தொடர்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். குரு பலமாக இருந்தால் எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றிகரமாக முடியும். 1.12.2012க்கு பிறகு மோசமான வார்த்தைகள் பயன்படுத்த நேரும். கவனமாக இருக்கவும். 16.12.2012 முதல் 18.12.2012 வரை தொண்டர்களோடு விரோதம் ஏற்படும். எச்சரிக்கையாக இருங்கள். 1.12.2012க்கு பிறகு ராகுவின் மாற்றத்தால் மாற்று மதத்தவரால் நன்மைகள் பெருகும்.  11.12.2012 முதல் 3.1.2013 வரையான காலகட்டத்தில் பொதுச் சேவைகளில் ஈடுபடுவீர்கள். 23.3.2013க்கு பிறகு வெளியூர் செல்லும்போது தகுந்த விசுவாசிகளை உடன் கட்டிச் செல்லவும். உடன் இருப்பவர்களால் அவமானப்பட நேரலாம்.

எச்சரிக்கை:

20.6.2012 முதல் 9.7.2012 வரை வெளியூர் சென்று தங்க நேர்ந்தால் அவமானமடையும் சம்பவம் நிகழலாம்; கவனம்.  16.12.2012 முதல் 13.1.2012 வரை அதர்ம வேலைகளில் ஈடுபடாதீர்கள். வழக்கு விஷயங்களில் முன் ஜாக்கிரதையாக இருக்கவும். 4.1.2013 முதல் 28.1.2013 வரை புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.  14.3.2012 முதல் 13.4.2013 வரை மறதியாலோ அல்லது நினைத்ததற்கு மாறானதாகவோ பலன்கள் ஏற்படும்.  வருமான வரி, இன்சூரன்ஸ் கட்டணங்களை முன்னதாகவே செலுத்துதல் நல்லது.

அச்சாரங்கள்:

28.9.2012 முதல் 17.11.2012 வரை வாக்கு  தவறாத காலமாதலால் முதலீடுகள் செய்ய நல்லது.  ஏற்றுமதி தொழில் செய்ய 18.11.2012 முதல் 10.12.2012 வரை நல்ல காலம். விவசாயம் மற்றும் காய்கறிப் பண்ணைகளில் நல்ல லாபம் கிடைக்கும்.

பரிகாரம்:

திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்யுங்கள். ஐயப்பன் பாடல்களை கேளுங்கள். அமாவாசைகளில் முன்னோர்களுக்கான நீத்தார் கடனை முறையாகச் செய்யுங்கள்.


  Tags : Nanthana, ,Tamil, ,New, ,Year, ,Predictions, , , நந்தன, ,வருட, ,தமிழ்ப், ,புத்தாண்டு, ,பலன்கள் ,Simmam,Nanthana,Tamil,New,Year,Predictions


மகளிர்

பிற ராசிகளுக்கான பலன்கள்
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in

Warning: mysql_close(): 3 is not a valid MySQL-Link resource in /home/content/14/7948114/html/tamilkurinji/footer.php on line 164