Tamilnewyear Risabam,Nanthana Tamil New Year Predictions ஜோதிடம் , ராசி பலன் , தினபலன் , வார பலன் , ஆண்டு பலன் 2010 , ஆணடுபலன் 2011, "கர" வருட தமிழ் ஆண்டுபலன் , குருபெயர்ச்சி பலன் , சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் , வாஸ்து , நியூமராலஜி , எண்கணிதம் , Jothidam , Astrology , Vasthu , Neumerology , Rasi Balan 2010,Rasi Balan 2011 Balan, Weekly Raasi Balan, Guru Balan , Sani Balan , Dai Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji
tamilkurinji logo
 


ஜோதிடம் >>> தமிழ்ப் புத்தாண்டுபலன்கள் - Tamil new year

23014

Risabam

Friday , 6th April 2012 03:47:35 AM

ரிஷபம்




கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீர்ஷம் 1, 2 பாதங்கள் வரை

தான தருமங்களில் விருப்பம் மிகுந்த ரிஷபராசி நேயர்களே! உறவினர்களின் அர்த்தமற்ற எதிர்ப்புகளால் பட்ட கஷ்டங்கள் நீங்கும். அளவுக்கதிகமாக உள்ள குடும்பக் கடன்கள் தீரும். 18.12.2012 முதல் 3.12.2013க்குள் நீங்கள் விரும்பியபடி வாழ்க்கைத்துணை அமையும்.

இந்த புத்தாண்டு நந்தன வருடம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

ஆண்டின் தொடக்க நாளில் அஷ்டமத்தில் சந்திரன் உலா வந்தாலும், சுக்ரபலம் கூடுதலாக இருப்பதால், செலவிற்கேற்ற வரவு வந்து கொண்டேயிருக்கும். பொன், பொருள் சேர்க் கைக்கு அஸ்திவாரம் இடும் விதத்திலும், வீடு கட்டி குடியேற இடம் வாங்கும் விதத்திலும் விரய குருவின் பார்வை பலம் தருகிறது. சித்திரை 17-க்கு மேல் மேஷ புதனின் சஞ்சாரத்தில் ஒருசிலருக்கு வீடுமாற்றங்கள், பிள்ளைகளின் உத்யோக வாய்ப்புகள் அரங்கேறலாம்.

ஜென்ம கேது ஆன்மிக நாட்டத்தை அதிகரிக்கச் செய்யும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வக்ரச் சனியின் இயக்கத்தால் தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு ஓரளவு குறையலாம். எனவே, வேலைப்பளு அதிகரிக்கும்.

நவகிரகங்களில் சுபகிரகமான குரு பகவான் தற்சமயம் உங்கள் ராசிக்கும் பனிரெண்டாமிடத்தில் சஞ்சரித்து கொண்டிருக்கிறார். இனி வைகாசி 4-ல் உங்கள் ராசிக்குள் அடியெடுத்து வைக்கப்போகிறார். உங்கள் ராசிநாதனோ சுக்ரன், அவருக்கு பகைவனான குருபகவான் உங்கள் ராசிக்கு வரும் பொழுது, எப்படி நன்மை செய்வார்? என்று நீங்கள் நினைக்க வேண்டாம்.

குரு பார்த்தாலும், குரு சேர்ந்தாலும் கோடி நன்மை அல்லவா? எனவே, கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிளந்து கொண்டு கொடுக்கும் என்பதைப் போல, தேடி வந்த குரு உங்களை கோடீஸ்வரராகவும் ஆக்கலாம். கொடி கட்டிப் பறக்கும் வாழ்க்கையையும் அமைத்து கொடுக்கலாம்.

இல்லம் தேடி வரும் குருவை வருவதற்கு முன்னதாகவே, நாம் தேடிச் சென்று வழி படுவதும், வரும் நாளில் வரவேற்று கொண்டாடுவதும் நந்தன வருடத்தை நல்ல வருடமாக உங்களுக்கு மாற்றி அமைத்து கொடுக்கும். `வானவர்க்கு அரசனான வளம்தரும் குருவே' என்ற குரு கவசப் பாடலை தினமும் ஒரு முறையும், வியாழன் தோறும் மூன்று முறையும் குரு முன்னிலையில் நீங்கள் படித்து வழிபட்டால், அதன் அருட்பார்வையால் உங்களுக்கு அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிவதால் அந்த இடத்து ஆதிபத்யங்கள் எல்லாம் உடனுக்குடன் நடைபெற்று உற்சாகத்தை வர வழைத்துக் கொடுக்கும்.

`ஜென்மத்தில் குரு வந்தால் செலவுகளே அதிகரிக்கும்!' என்றாலும், சுபச் செலவுகளே உங்களுக்கு உருவாகும்.

இடம் வாங்க போட்ட திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும். வாரிசுகளுக்கு வெளிநாட்டு வாய்ப்புகளை உபயேகப்படுத்திக் கொடுப்பீர்கள்.

அந்நிய தேசத்திலிருந்து அனுகூலச் செய்தி வந்து சேரும். பூர்வீக சொத்துக்களில் இதுவரை இருந்த இழுபறியான பஞ்சாயத்துக்கள் இனிநல்ல முடிவுக்கு வரலாம். மாமன், மைத்துனர் வழியில் மங்கல நிகழ்ச்சிகள் உருவாகும்.

செவ்வாய், சனி சேர்க்கை ஏற்படும் பொழுது, உலகில் பல பிரச்சினைகள் உருவாகின்றன. உங்கள் ராசியைப் பொறுத்தவரை ஐந்தாமிடத்தில் அதன் சேர்க்கை இருப்பதால், பிள்ளை கள் வழியில் கொஞ்சம் முன்னெச்சரிக்கை தேவை. அவர்கள் உங்களை கேட்காமலேயே தன்னிச்சையாக ஒருசில முடிவுகளை எடுக்கலாம்.

பூர்வீக சொத்து பிரச்சினை மீண்டும் தலைதூக்கலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது யோசித்து செய்வது நல்லது. ஆனி 9 முதல் ஆடி 29 வரை கூடுதல் கவனம் தேவை.

வருடத் தொடக்கத்தில் கன்னி ராசிக்குள் சஞ்சரித்த சனி துலாம் ராசிக்குள் ஆவணி 27-ம் தேதி வருகிறார். உச்ச சனி அச்சமில்லாத வாழ்க்கைக்கு அடித்தளமிடும். 6-ல் சனி உலாவரும் பொழுது, சீரும், சிறப்பும், செல்வாக்கும் மேலோங்கும். பேரும், புகழும் வந்து சேரும். எதிரிகள் விலகுவர். உதிரி வருமானங்கள் மலைபோல் குவியும். வழக்குகள் ஓயும். வாய்ப்புகள் வாசற்கதவைத் தட்டும்.

புரட்டாசி 26-ம் தேதி முதல் தை 24-ம் தேதி வரை உங்கள் ராசிக்குள்ளேயே குரு வக்ரமடையப்போகிறார். அஷ்டமாதிபதி வக்ரம் பெறும் பொழுது, ஆச்சரியப்படத்தக்க வகையில் நல்ல பலன்களையும் நீங்கள் சந்திக்க நேரிடும். அரசு வழியில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். ஆயினும், ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கி சங்கிலித் தொடர் போல, கடன்களை வரவழைத்து கொள்வீர்கள்.

பதினோராமிடத்திற்கு அதிபதியாகவும் குரு விளங்குவதால், கடல் பயண வாய்ப்புகளில் மாற்றம் உருவாகும். மூத்த சகோதரர் உங்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடலாம். குருவுக்கு ப்ரீதி செய்வதன் மூலம் உங்கள் குழப்பங்கள் அகலும்.

கார்த்திகை 17-ம் தேதி துலாம் ராசியில் ராகுவும், மேஷ ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப்போகிறார்கள். இந்த பெயர்ச்சி உங்களுக்கு யோகம் தரும் விதத்திலேயே அமைகிறது.

கடந்த சில மாதங்களாக கேதுவின் ஆதிக்கத்தால் நிறைய காரிய தடைகளைச் சந்தித்து வந்திருக்கலாம். கேது பெயர்ச்சிக்குப் பிறகு தாமதப்பட்ட காரியங்கள் அனைத்தும் தானாகவே தடையின்றி நடந்து வரும்.

ஆறாமிடத்து ராகுவும், ஜென்ம குருவும் முறையாக சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் அஷ்டலட்சுமி யோகம் செயல்படப்போகிறது. எனவே, காலாவதியான கடன்கள் கூட உங்கள் கைக்கு வந்து சேரலாம். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் உருவாகும்.

சர்ப்ப சாந்தியை முறையாகச் செய்தால், சகல பாக்யங்களும் ராகு-கேதுக் களின் ஆதிக்கத்தால் வந்து சேரும்.

சித்திரை 1-ம் தேதி முதல் ஆனி 6-ம் தேதி வரையிலும், பிறகு மாசி 4-ம் தேதி முதல் பங்குனி 31-ம் தேதி வரையிலும் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசி அடிப்படையில் 9, 10-க்கு அதிபதியாக விளங்குபவர் சனி பகவான். இக்காலத்தில் முன்னோர் சொத்துக்களை விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலை ஒருசிலருக்கு உருவாகலாம். உடன்பிறப்புகளை அனுசரித்து செல்வதன் மூலமே ஆதாயத்தைப் பெற முடியும்.

தொழில் கூட்டாளிகள் தொகைகளை ஒழுங்காக கொண்டு வந்து சேர்ப்பார்களா? என்பது சந்தேகம்தான். ஆதாயம் ஏட்டில் இருக்குமே தவிர, எதிரில் இருக்காது. சிலவாய்ப்புகள் கைகூடுவதுபோல தோன்றி, நழுவிச் செல்லலாம். எனவே, இக்காலத்தில் சனீஸ்வரருக்கு எள்தீபம் ஏற்றி, வழிபாடு செய்வதோடு `கருநிறக்காகம் ஏறி, காசினி தன்னைக் காக்கும்' என்ற சனி கவசத்தைப் பாடி காக வாகனத்தானை கைகூப்பி வழிபடுவதன் மூலம் கவலைகளிலிருந்து விடுபடலாம்.

மாணவர்களுக்கு:

படிப்பில் முழுக் கவனமாக இருப்பீர்கள். நல்ல தன்னம்பிக்கையுடன் திடமான மனதும் இருக்கும். புதிய வகுப்புகள் தொடர்பாக சகோதரர்களுடன் பிரச்னைகள் ஏற்படும். 15.5.2012க்கு பிறகு அது நீங்கிவிடும். எனவே உண்மை நிலையை அமைதியுடன் சமாளிக்கவும். வருட ஆரம்பத்தில் ராகு-கேது சஞ்சாரத்தால் நீங்கள் யோக, தியானங்களில் மனதை செலுத்துவது நல்ல பலன் தரும். 9.9.2012 முதல் 25.9.2012 வரை அடிவயிற்றுக் கோளாறுகளால் படிப்பில் கவனம் சிதறும். மருத்துவச் செலவுகள் தவிர்க்க முடியாதவை. 1.12.2012க்கு பிறகு மிகுந்த பலமுள்ளவராகவும் அனைத்து போட்டிகளிலும் ஜெயிப்பவராகவும் இருப்பீர்கள்.

பெண்களுக்கு:

கணவருடைய செலவுகளைக் கட்டுப்படுத்தப்பட வேண்டிய நேரம் இது. 28.7.2012க்கு பிறகு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்யம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு நற்பலன் கிட்டும் நேரம். 26.9.2012க்கு பிறகு சகோதர சகோதரிகள் உதவுவார்கள். கூட்டுக் குடும்பமாக மகிழ்ச்சியாக இருக்கலாம். இந்த ஆண்டு பிள்ளைகள் தங்களைப் பிரிந்து படிப்புக்காக வெளியில் செல்ல வேண்டியது இருக்கும். ஏற்றுக் கொள்ளுங்கள். 11.9.2012 முதல் 1.3.2013 வரை வேலை பார்க்கும் பெண்களுக்கு அலுவலகத்தில் பலவித சிக்கல்கள் உண்டாகும். 2.3.2013க்கு பிறகு மூத்த சகோதரர்களின் உதவியுடன் அனைத்து பிரச்னைகளும் தீரும்.

உத்யோகஸ்தர்களுக்கு:

அரசு அதிகாரிகள் சற்றே எதிர்பார்ப்புடன் காணப்படுவார்கள். 28.7.2012க்குப் பிறகு செலவுகள் வந்தாலும் புகழும் சேர்ந்து வரும். அலுவலக வேலைகளில் முதன்மையானவர் என்று பெயரெடுக்கலாம். 13.8.2012 முதல் 25.9.2012 வரை மனைவியின் உடல்நிலை காரணமாக அதிக செலவு ஏற்படலாம். 11.9.2012 வரை எந்த அலுவலக வழக்கு விவகாரங்களிலும் ஈடுபடாதீர்கள்; பிரச்னை வரலாம். 1.12.2012க்கு பிறகு அலுவலக அலைச்சல் அதிகமாகும். 8.1.2012 முதல் 26.1.2012 வரை நுட்பமான ஆய்வுகளுக்கு தங்களின் உதவி தேவைப்படும். 27.1.2012க்கு பிறகு தங்களின் திறமை மேலோங்கி நற்பெயர் பெறுவீர்கள்.

வியாபாரிகளுக்கு:

11.9.2012க்கு பிறகு எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியை காணலாம். 17.10.2012 முதல் 15.11.2012 வரை, எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள். சகோதரர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்யலாம். 23.12.2012 முதல் 7.1.2013 வரை புதியதாக எதையும் தொடங்க வேண்டாம். இருப்பதில் கவனம் வைத்தால் போதும். அனுபவஸ்தர்களின் யோசனையைக் கேட்கத் தயங்காதீர்கள். 27.1.2013க்கு பிறகு சாதகமான காலம்தான். பிறரை குறைகூறாமல் வேலையில் கருத்துடன் இருந்தால் நல்லது. தந்தை வழி உறவுகளுக்கு உதவுவதும் தர்ம காரியங்களில் ஈடுபடுவதும் நல்லது. 17.3.2013க்கு பிறகு நிறைய பணம் மிச்சப்படும்.

அரசியல்வாதிகளுக்கு:

எதிரிகளால் தொல்லை ஏற்படுகிறது. வருட ஆரம்பத்தில் 14.5.2012 முதல் 14.6.2012 வரை தலைவர்களால் அனுமதிக்காத செயல்களில் ஈடுபடத் தோன்றும். தங்களுக்கு துணை செய்து வந்தவருக்கு உடல் நிலை மோசமாகும். தங்கள் நிலை தாழ்வதுபோல் தோன்றும். பழமையான சிவாலயத்தில் ருத்ர ஜபம் செய்விப்பது உடனடியாக நல்லது. 9.9.2012க்கு பிறகு அடிக்கடி வீடு மாறி குடியிருக்க நேரும். இதுவும் தங்களுக்கு நன்மையானதே. 4.12.2012க்கு பிறகு அதிகார உயர்வு ஏற்படும். தலைவர்களின் இஷ்டப்படி ஆதரிக்கப்படுவீர்கள். இது உயர்வான நேரம். பொறுமையுடன் பயன்படுத்திக் கொள்ளுங்கள். 1.12.2012க்கு பிறகு வரும் ராகு-கேது பெயர்ச்சியில் முழு உயர்வையும் காணலாம். கைவிட்ட அனைத்தும் திரும்பக் கிடைக்கும். திட்டமிட்டப்படி எல்லாம் நடக்கும். பொதுவாக சிவனருளால் இந்த ஆண்டு முன்னேற்றம்தான்.

எச்சரிக்கை:

11.9.2012 வரை பல விவகாரங்கள் அடிதடியில் முடிவதும் அதனால் வழக்குகள் தோன்றுவதும் நேரிடலாம். 24.11.2012 முதல் 13.12.2012 வரை வீட்டில் பொருட்கள் களவு போகக் கூடும்.
30.11.2012 வரை ராகுவின் சாரத்தால் அதர்ம வழிகளில் செல்வதும், காதல் விவகாரங்கள் தோல்வியடைவதும் நேரிடும். 18.11.2012 முதல் 10.12.2012 வரை பூர்வீக தொழில்களில் நஷ்டத்திற்கான அறிகுறிகள் தென்படும். உற்பத்தியை குறைத்துக் கொள்ளவும். 21.6.2012 வரை குழாய்க் கிணறு அமைக்கும் முயற்சிகள் வேண்டாம். 13.12.2013 முதல் 13.3.2013 வரை தவறான வழிகளில் ஈடுபடத் தூண்டும் காலமாக இருக்கிறது; எச்சரிக்கையாக இருக்கவும்.

அச்சாரங்கள்:

புதிய திட்டங்கள், தொழில் ஆகியவை துவங்க 16.5.2012 முதல் 29.5.2012 வரையுள்ள காலகட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். கடன் வாங்கி தொழில் துவங்கவும் பெரிய தொழிற்சாலைகள் அமைக்கவும் 13.8.2012 முதல் 25.9.2012 வரையான காலம் நன்மையைத் தரும். குழாய்க் கிணறு தோண்டும் முயற்சிகளை 23.08.2012 முதல் 8.9.2012 வரைக்குள் வைத்துக் கொள்ளுங்கள். செய்யும் தொழிலை விரிவாக்கம் செய்ய 14.1.2013 முதல் 12.2.2013 வரை ஏற்ற காலம்.

பரிகாரம்:

கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகேஸ்வரரை தரிசனம் செய்யுங்கள். திருவண்ணாமலை கிரிவலம் வாருங்கள். ஆண்டாள் பாசுரங்களை கேட்பது நல்லது.


  Tags : Nanthana, ,Tamil, ,New, ,Year, ,Predictions, , , நந்தன, ,வருட, ,தமிழ்ப், ,புத்தாண்டு, ,பலன்கள் ,Risabam,Nanthana,Tamil,New,Year,Predictions,




























மகளிர்



















பிற ராசிகளுக்கான பலன்கள்










Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in