Tamilnewyear Mithunam,Nanthana Tamil New Year Predictions ஜோதிடம் , ராசி பலன் , தினபலன் , வார பலன் , ஆண்டு பலன் 2010 , ஆணடுபலன் 2011, "கர" வருட தமிழ் ஆண்டுபலன் , குருபெயர்ச்சி பலன் , சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் , வாஸ்து , நியூமராலஜி , எண்கணிதம் , Jothidam , Astrology , Vasthu , Neumerology , Rasi Balan 2010,Rasi Balan 2011 Balan, Weekly Raasi Balan, Guru Balan , Sani Balan , Dai Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji
tamilkurinji logo
 


ஜோதிடம் >>> தமிழ்ப் புத்தாண்டுபலன்கள் - Tamil new year

23015

Mithunam

Friday , 6th April 2012 04:05:08 AM

மிதுனம்

மிருக சீர்ஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3 பாதங்கள் வரை

உண்மையையே பேசுவது என்கிற திட வைராக்கியமுள்ள மிதுனராசி நேயர்களே!

ஏதோ ஒரு வேலை செய்தோம் என்றிருந்தாயிற்று. படிப்பிற்கேற்ற வேலை இந்த ஆண்டு உறுதியாகிவிடும். திருமணத்திற்கு காத்திருக்கும் இரு பாலருக்கும் இந்த ஆண்டு மணக் கோலம்தான். மாமன் வழி உறவுகள் கைதூக்கி விடுவார்கள். இடம் வாங்கும் முயற்சிகளில் பழைய வீடு கிடைக்கப் பெறுவீர்கள். 22.6.2012 முதல் 12.8.2012க்குள் தங்களுக்கு அதிர்ஷ்ட மகள் பிறப்பாள். கடந்த வருட அடிவயிற்று உபாதைகள் 16.5.2012க்கு பிறகு சீராகும்.

உங்களுக்கு இந்த நந்தன வருடம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

ஆண்டின் தொடக்கத்தில் சந்திர பலம் நன்றாக இருக்கிறது. சனியின் வக்ர இயக்கமும், நினைக்க இயலாத ராஜயோகத்தைக் கொடுக்கும். விரய கேது, ஆறாமிடத்து ராகு காரணமாக பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்ப வழிவகுக்கும்.

சித்திரை 17-க்கு மேல் மேஷ புதனின் சஞ்சாரத்தால் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். மாமன், மைத்துனர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்.

சூரிய பலம் கூடுவதால் அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைத்து ஆனந்தப் படுவீர்கள். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து காரிய வெற்றிக்கு கைகொடுத்து உதவுவர்.

என்ன இருந்தாலும் அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் நடப்பதால் இறைவனைப் பூஜித் தும், இணைந்து செயல்படுபவர்களை நேசித்தும், எதையும் தொடங்கும் முன் யோசித்தும் செய்தால் வெற்றி கிட்டும்.

நவக்கிரகங்களில் நல்லவர் என்று வர்ணிக்கப்படுபவர் குரு. உங்கள் ராசிக்கு 7, 10-க்கு அதிபதியாக குரு விளங்குவதால், 12-ல் சஞ்சரிக்கும் பொழுது, பக்கபலமாக இருப்பார். பணத் தேவைகளைப் பூர்த்தி செய்வார். சிக்கல்களை விலக்குவார்.

12-ல் சஞ்சரிக்கும் விரய ஸ்தான குரு, விரயத்தை அளவிற்கு அதிகமாகச் செய்வாரோ என்று நீங்கள் நினைக்க வேண்டாம். அவரோடு கேதுவும், சுக்ரனும் இணைந்திருப்பதால் ஆலயத்திற்காகவும், ஆன்மிகத்திற்காகவும் ஒரு தொகையைச் செலவு செய்வீர்கள். வீட்டிற்குத் தேவையானவற்றைப் பட்டியல் போட்டு வாங்கி, பணத்தை நல்ல வழியில் விரயம் செய்யும் சூழ்நிலை உருவாகும்.

வியாழக்கிழமையன்று குரு தட்சிணாமூர்த்திக்கு முல்லைப் பூ மாலை அணிவித்து, அர்ச்சித்து வழிபட்டு வந்தால் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

உங்கள் ராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 4, 6, 8 ஆகிய இடங்களில் பதிவதால், அந்த இடத்து ஆதிபத்யங்கள் எல்லாம் உடனுக்குடன் நடைபெற்று உற் சாகத்தை வரவழைத்துக் கொடுக்கும். கடன் சுமை குறையவும், கடமைகளை நிறை வேற்றவும், பெயர்ச்சியாகும் குருவின் பார்வை பலன் கொடுக்கும்.

வீடு வாங்கலாமா, இடம் வாங்கலாமா என்று மனதில் நடத்திய பட்டிமன்றத்திற்கு தீர்ப்பு கிடைக்கும். வெள்ளை உள்ளம் படைத்தவர்கள் இல்லம் தேடி வந்து உங்களுக்கு பக்கபலமாக இருப்பர். வழக்குகள் சாதகமாக முடியும்.

கன்னி ராசியில் செவ்வாயும், சனியும் சேரும் நாட்கள் மட்டும் நீங்கள் மிக மிக கவனத்துடன் நடந்து கொள்ளவேண்டும். நல்லதையே செய்தாலும் மற்றவர்கள் உங்கள் மீது பழி சுமத்துவர்.

வாங்கிய வீட்டை விற்கும் நிலை வந்ததே என வாடலாம். வளர்ச்சியை கருதி ஏற்படுத்திய தொழிலை பங்குதாரர்களே எடுத்துக் கொள்ளலாம். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

ஆனி 9 முதல் ஆடி 29 வரை தேனினும் இனிய வாழ்க்கை அமைய தெய்வ தரிசனங்கள்தான் தேவை.

ஆவணி 27-ம் தேதி முதல் துலாம் ராசிக்குள் உச்சம் பெறும் சனி யோகத்தை அள்ளி வழங்குவார். பிள்ளைகளின் கடன், கடமைகளை முடித்து நிம்மதி பெறுவீர்கள். உறவினர் பகை அகலும். உயரிய பொறுப்புகளும், பதவிகளும் ஒரு சிலருக்கு வந்து சேரும்.

புரட்டாசி 26-ம் தேதி முதல் தை 24-ம் தேதி வரை ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு வக்ரம் பெறுகிறார். 7,10-க்கு அதிபதியான குரு வக்ரம் பெறும் பொழுது, நன்மைகளையே வழங்கும். விலகிச் சென்ற வரனை மீண்டும் வரவழைத்து கொடுக்கும். கைவிட்டுப்போன தொழில் மீண்டும் உங்களுக்கே வந்து சேரலாம்.

புதிய ஒப்பந்தங்கள் மகிழ்ச்சி தரும் விதத்தில் அமையும். பிற இனத்தாரின் ஒத்துழைப்போடு கடன் சுமையில் இருந்து விடுபடுவீர்கள். செலவு வரும் முன்னதாகவே வரவு வந்து கைகொடுக்கும்.

பொதுவாக, இக்காலத்தில் குருவிற்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவது நல்லது.

கார்த்திகை 17-ம் தேதி துலாம் ராசியில் ராகுவும், மேஷ ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இந்த கிரகப் பெயர்ச்சி உங்களுக்கு யோகம் தரும் விதத்திலேயே அமைகிறது. அந்நியதேச அனுகூலம் எண்ணியபடியே கிடைக்கும். கூட்டு முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். அதன் கல்வி நலன் கருதியும், கல்யாண வாய்ப்புக் கருதியும், ஒரு தொகையைச் செலவிடுவீர்கள்.

கேதுவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் அச்சு றுத்தல் ஏற்பட்டு அகலும். நோய்க்கான அறிகுறி தோன்றும்பொழுதே மருத்துவ ஆலோ சனை பெறுவது நல்லது.

யோக பலம் பெற்ற நாளில் சர்ப்பசாந்தியை முறையாகச் செய்தால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

மார்கழி மாதம் செவ்வாய்-சனி இரண்டின் பார்வையும் கேதுவின் மீது பதிவதால் வாங்கிய சொத்தை விற்கவும், மீண்டும் புதிய சொத்துக்கள் வாங்கவும் வாய்ப்புகள் உருவாகும்.

சித்திரை 1-ம் தேதி முதல் ஆனி 6-ம் தேதி வரையிலும், பிறகு மாசி 4-ம் தேதி முதல் பங்குனி 31-ம் தேதி வரையிலும் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசி அடிப்படையில் 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியாக விளங்கும் சனி பகவான் வக்ரம் பெறும்பொழுது, பூர்வீக சொத்துக்களைக் கைப்பற்றிக் கொள்வதில் தாமதம் ஏற்படும். பார்வைக்கு மிடுக்காக நீங்கள் தோன்றினாலும், மனதுக்குள் கவலை குடிகொண்டிருக்கும். மாற்று மருத்துவத்தின் மூலம் உடல்நலத்தை சீராக்கிக் கொள்ளலாம்.

தொழில் கூட்டாளிகள் நம்பிக்கை மாறி, உங்கள் விழிப்புணர்ச்சியையும் மீறி சில தவறுகளைச் செய்ய நேரிடலாம். வராத பாக்கிகள் வந்து மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், வரவேண்டிய தொகை வருவதில் தாமதம் ஏற்படும். நழுவிச் சென்ற வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்ள சனி பகவானைத் தான் சரணடைய வேண்டும். சனிக்கிழமை விடிந்ததும் காகத்திற்கு சோறு வையுங்கள். சனியின் சந்நிதியில் `கருநிறக் காகம் ஏறிக் காசினி தன்னைக் காக்கும்' என்ற சனி கவசத்தைப் பாடி எள்தீபம் ஏற்றுங்கள். பணியில் ஏற்பட்ட தொய்வுகள் அகலும்.

மாணவர்களுக்கு:

எதிர்கால திட்டங் களை மனதில் வைத்து படிப்புத் துறைகளை தேர்வு செய்வீர்கள். கடல் தாண்டிய உறவுகள் கை கொடுக்கும். 13.8.2012 முதல் 25.9.2012 தவறான நட்பு வட்டம் உருவாகலாம்.  குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படும். மிகுந்த அமைதியுடன் இருங்கள். 26.9.2012 முதல் 3.12.2012 வரை பழைய தவறுகளால் வயிற்று கோளாறுகள் ஏற்படும்.  4.11.2012 முதல் 21.1.2013 வரை செவ்வாயால் உணர்ச்சி வசப்படுவீர்கள். படிப்பில் கடினமாக உழைத்து நல்ல பெயர் ஈட்ட வேண்டிய காலமாதலால் கவனம் தேவை. நினைத்ததை சாதிக்கும் தன்மையை கேது ஏற்படுத்துவார். 2.3.2013 பிறகு ஏற்படும் தைரியத்தை கொண்டு படிப்பில் முழு கவனம் செலுத்தி வெற்றி பெறுவீர்கள்.

பெண்களுக்கு:

அதிக சளித் தொந்தரவுகள், சிறுநீர்ப் பாதை தொற்று ஆகியவை தற்போது சீரடையும்.  16.9.2012 முதல் 28.9.2012 வரையான காலத்தில் அபூர்வமான பொருட்கள் சேரும். 1.2.2012க்கு பிறகு பிள்ளைகளுக்கு திருமண ஏற்பாடுகள் கூடிவரும். 29.1.2013 முதல் 21.2.2013 வரை தங்கள் உடல் நிலையை கவனியுங்கள். ரத்த அழுத்தம் அதிகமாகும். 2.3.2013க்கு பிறகு தங்கள் நிலத்தின் விளைச்சலால் பலன் கிடைக்கப் பெறுவீர்கள்.

உத்யோகஸ்தர்களுக்கு:

அடுத்தவர் சூதுகளால் ஏற்பட்ட துன்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். சட்டத்திற்கு புறம்பான வழிகளிலிருந்து விடுபடுவீர்கள். 16.7.2012 முதல் 16.8.2012 வரையிலான காலத்தில் தங்கள் திறமைகள்  வெளிப்படும்.  தனியார் துறை அலுவலர்கள் அதிக சம்பளத்தில் வேறு வேலைக்கு மாற 20.5.2012 முதல் 9.7.2012 மற்றும் 2.8.2012 முதல் 22.8.2012 வரையிலான காலகட்டமே சிறந்தது. 28.9.2012 முதல் 22.10.2012 வரையிலான காலத்தில் நிதி வசதிகள் தாராளமாக கிடைக்கும். விரும்பிய துறைகளில் வேலை பார்த்துக் கொண்டே மேற்படிப்பும் படிக்க முயலுவீர்கள். சகோதரிகளுக்கு திருமணம் செய்வித்தல், வீடு கட்ட இடம் வாங்குதல் போன்ற முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். 14.1.2013 முதல் 21.1.2013 வரையிலான காலகட்டத்தில் ஆயுதங்களினால் அடிபட நேரிடும். பொதுவாக நேர்மையாக இருப்பது நல்லது.

வியாபாரிகளுக்கு:

ரியல் எஸ்டேட் வியாபாரம் ஆண்டின் துவக்கத்தில் நல்ல லாபம் தரும். 20.6.2012 முதல் 9.7.2012 வரையிலும் 2.8.2012 முதல் 22.8.2012 வரையிலுமுள்ள காலகட்டங்களில் திறமையை வெளிப்படுத்தி செயல்படுவீர்கள். பெரிய பிரச்னைகளையும் சுலபமாகத் தீர்ப்பீர்கள். படிப்படியாக நம்பிக்கையற்ற ஆட்களை மாற்றும் நேரமும் இதுதான். தொழிலில் மிகுந்த லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த, 4.12.2012 முதல் 22.12.2012 வரையான காலத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.  22.6.2012 முதல் 12.8.2012 வரை தங்கள் அதிர்ஷ்ட மகள் பெயரில் புதிய தொழில்கள் துவங்க நல்லது. 29.1.2013 முதல் 21.2.2013 வரை வேலைகள் தேங்கிப் போகும். 22.2.2013க்கு பிறகு பழைய நண்பர்கள் நல்ல செய்தியை தருவார்கள். பெரிய வேலைக்கான வாய்ப்பு கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு:

உங்களைப் பற்றிய விளம்பரங்களுக்கு செலவு செய்வதை நிறுத்துங்கள். 14.5.2012க்கு முன் தலைமை பொறுப்புகள் கைவரப் பெறுவீர்கள். அனேக வழிகளில் பண வரவும் பெருமையும் வாய்க்கப் பெறுவீர்கள். ஞாயிறு, வியாழக் கிழமைகளில் தலைவர்களை சந்திக்கச் செல்லுங்கள். 14.5.2012 முதல்  14.6.2012 வரை ஏழை மக்களிடம் தங்களின் உதவிகள் நேரிடையாகச் சென்றடையும். இது தங்கள் வலிமையைக் கூட்டும். 31.11.2012 வரையிலான காலங்களில் வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். 1.12.2012க்கு பிறகு ஆலயப் பணி ஒன்றை தொடங்குவீர்கள். இவ்வாறு செய்யப்படும் தேவதா பிரதிஷ்டை, தங்களுக்கு மிகுந்த நன்மையை
தரும். பெண்ணுக்கு திருமணம் வெகு சிறப்பாக நடக்கும். 2.3.2013க்கு பிறகு வடதிசையிலுள்ள பெரிய தலைவர்களை சந்தித்து உயர்வான பலன்களை பெறுவீர்கள்.

எச்சரிக்கை:

நந்தன ஆண்டு முதல் மாதம் மட்டும் ஷேர் துறையில் ஈடுபடாதீர்கள். பைனான்ஸ் கம்பெனியில் முதலீடு செய்தவர்கள் 30.8.2012க்கு முன் பணத்தை எடுத்து விடுங்கள். 14.1.2013 முதல் 21.1.2013 வரை ஆயுதங்களினால் காயம் ஏற்படலாம். 29.1.2013 முதல் 21.2.2013 வரை உடல் நிலையில் முழு கவனம் தேவை. ரத்த அழுத்தம் தலையை பாதிக்கக் கூடும்.

அச்சாரங்கள்:

17.8.2012 முதல் 30.8.2012 மற்றும் 17.9.2012 முதல் 27.9.2012 வரையிலான காலகட்டங்களில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல், துணிக் கடைகள், ரெடிமேட் ஆடைகள். துரித உணவகம் போன்றவை தொடங்கலாம். 26.9.2012 முதல் 16.10.2012 வரையுள்ள காலத்தை இரும்பு உலோக பொருட்கள், அதன் தொழில் நுட்பம் ஆகிய துறைகளை விரிவுபடுத்த பயன்படுத்திக் கொள்ளலாம்.

பரிகாரம்:

சுயம்பு மூர்த்தியாக உள்ள சிவாலய ஈசனை தரிசியுங்கள். சுதர்சன ஹோம நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள். நன்மை விளையும்.


  Tags : Nanthana, ,Tamil, ,New, ,Year, ,Predictions, , , நந்தன, ,வருட, ,தமிழ்ப், ,புத்தாண்டு, ,பலன்கள் ,Mithunam,Nanthana,Tamil,New,Year,Predictions,




























மகளிர்



















பிற ராசிகளுக்கான பலன்கள்










Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in