Tamilnewyear Mesam,Nanthana Tamil New Year Predictions ஜோதிடம் , ராசி பலன் , தினபலன் , வார பலன் , ஆண்டு பலன் 2010 , ஆணடுபலன் 2011, "கர" வருட தமிழ் ஆண்டுபலன் , குருபெயர்ச்சி பலன் , சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் , வாஸ்து , நியூமராலஜி , எண்கணிதம் , Jothidam , Astrology , Vasthu , Neumerology , Rasi Balan 2010,Rasi Balan 2011 Balan, Weekly Raasi Balan, Guru Balan , Sani Balan , Dai Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji
tamilkurinji logo


 


ஜோதிடம் >>> தமிழ்ப் புத்தாண்டுபலன்கள் - Tamil new year

23013

Mesam

Friday , 6th April 2012 03:40:28 AM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Astrology_details.php on line 206
search
Mesam,Nanthana Tamil New Year Predictions

மேஷம்
அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை

திடவாக்கும் துணிந்த மனமும் உடைய மேஷ ராசி நேயர்களே!

பல்வேறு விதமான வேலைகளையும் பொறுப்புகளையும் ஏற்றீர்கள். உடல் சோர்வோடு பிடிமானமில்லா மனநிலையும் தான் மிச்சம் என்றிருந்தது. இனி கவலை வேண்டாம். புதிய வழிமுறைகளில் நூதனமாக காரியம் சாதிக்க பொறுமையாக அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். இந்த புத்தாண்டு உங்களின் தேக்க நிலையை தகர்த்து விடும்

குரு பெயர்ச்சிக்கு பிறகு நீங்கள் கொடி கட்டி பறக்க போகிறீர்கள். ராசிநாதன் செவ்வாயும், சனியும் கூடும் நேரத்தில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. அதேபோல், ஜென்ம ராசியில் கேது சஞ்சரிக்கும் போதும், சாதனை நிகழ்த்தி வந்த நீங்கள் சில தடைகளை சந்திக்கலாம்.

நந்தன ஆண்டு மட்டுமல்லாமல், எந்த ஆண்டும் இனிய ஆண்டாக அமையவும், தடைகள் அகன்று தன லாபம் குவியவும், உங்கள் சுய ஜாதகத்தில் பாக்யாதிபதியின் பாதசார பலமறிந்து, அதன் நவாம்ச நிலை அறிந்து யோக பலம் பெற்ற நாளில், யோகம் தரும் கிரகத்திற்குரிய தெய்வங்களை தேர்ந்தெடுத்து, சிறப்பு வழிபாடுகளையும், பரிகாரங்களை யும் மேற்கொண்டால், நினைத்த காரியம் நினைத்த படியே நிறைவேறும்.

நினைத்ததை முடிக்க வேண்டுமென்று உறுதியான மனம் பெற்றவர்கள் நீங்கள். தன்னம்பிக்கை உங்களுக்கு அதிகமாக இருப்பதால், எது நடந்தாலும் நடக்கட்டும் பார்த்து கொள்ளலாம் என்று சொல்வீர்கள்.

உங்கள் சுய ஜாதகத்தில் சுக்ர பலத்தை பொறுத்தே வாழ்க்கை துணையும் அமையும், வருமானமும் கிடைக்கும். சனியின் பலத்தை பொறுத்தே தொழில் வளம் அமையும்.

உங்களுக்கு இந்த நந்தன வருடம் சித்திரை முதல் பங்குனி வரை செயல்பாடுகளில் கிரக நிலைகள் சாதகமான சூழ்நிலையை கொடுக்குமா? என்பதை பற்றி பார்ப்போம்.

ஆண்டின் தொடக்கம் தனுசு ராசியில் நிகழ்கிறது. உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் சந்திரன் உலா வந்து ஆண்டு தொடங்குவதால், பொன், பொருட்கள் சேரும் விதத்தில் நந்தன வருடம் உங்களுக்கு நற்பலன்களை கொடுக்க போகிறது. ராசிநாதன் செவ்வாய் பஞ்சம ஸ்தானத்தில் இருந்தபடி குருவின் பார்வையை பெற்று கொள்வதால், குரு-மங்கள யோகம் செயல்பட போகிறது.

சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். தொழில் வளர்ச்சிக்கு சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சித்திரை 17-ம் தேதி மேஷத்தில் புதன் சஞ்சரிக்க போகிறார். 3, 6-க்கு அதிபதி ராசியில் சஞ்சரிக்கும் போது, உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஜென்ம குரு தடைகளை அகற்றவும், தனவரவை கொடுக்கவும், வியாழன் தோறும் தென்முக கடவுள் வழிபாட்டினை மேற்கொள்ளுங்கள்.

நவ கிரகங்களில் சுப கிரகம் என்று வர்ணிக்கப்படுவது குரு ஒன்றுதான். அந்த குரு பார்த்தால் கோடி நன்மை. அந்த குருவோடு பகை கிரகங்கள் சேர்ந்திருந்தால் கூட தோஷம் நிவர்த்தியாகி விடுகின்றன.

எல்லா வருடங்களிலும் பெயர்ச்சியாகும் குருவை காட்டிலும், இப்போது வரும் குரு பெயர்ச்சி கொஞ்சம் வித்தியாசமானதாகவும், திடீர், திடீரென பலருக்கும் மாற்றங்களை கொடுக்க கூடியதாகவும் அமைகிறது.

காரணம், தேவ குருவான வியாழ பகவான், அசுர குருவான சுக்ரன் வீட்டில் அல்லவா சஞ்சரிக்க போகிறார். பகை கிரகத்தின் வீட்டில் குரு சஞ்சரிக்க போவதால், நமக்கு வரும் பலன்கள் நல்லதாக அமைய, குரு வழிபாட்டை முறையாக செய்வது நல்லது.

உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை, உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிந்து, அந்த இடத்து ஆதி பத்தியங்களை துரிதமாக நடை பெற வைக்க போகிறது. `இரண்டில் குரு வந்தால் இல்லத்தில் மகிழ்ச்சி வரும். திரண்ட செல்வமுடன் தேனான வாழ்வும் வரும்' என்பார்கள்.

குருவின் பார்வை பலத்தால் எதிர்ப்பு, வியாதி, கடன், இழப்பு, வழக்கு, உடல்நிலை, இட மாற்றம், தொழில் மாற்றம் போன்ற அனைத்திலும் நல்ல மாற்றங்களை கொடுக்க போகி றார். பட்ட கடன் தீரும். பரிதவிப்பு மாறும். கெட்டவர்களின் சகவாசம் மாறும்.

ஆதாயம் தரும் காரியங்கள் ஏராளமாக நடைபெறும். போதுமான அளவு பொருளாதாரம் வந்து சேரும். பாயில் படுத்தவரின் நோய்கள் அகலும். மாற்று மருத்துவம் மகத்தான பலன் தரும். கிளை தொழில்கள் செய்யவும் வாய்ப்புகள் கைகூடி வரும். கேட்ட இடத்தில் உதவிகளும் கிடைக்கும்.

இந்த வருடம் தொடக்கத்தில் கன்னி ராசிக்குள் சஞ்சரித்த சனி, துலாம் ராசிக்குள் ஆவணி 27-ந் தேதி வருகிறார். இதன் விளைவாக, உடல் ஆரோக்கியத்திற்கு என்று ஒரு தொகையை செலவழிக்கும் சூழ்நிலை உருவாகலாம். உத்யோகம், தொழிலில் பற்றாக்குறை பட்ஜெட் ஏற்படலாம்.

கல்யாண வாய்ப்புகள் திடீரென மாறிப்போய் கவலையை உருவாக்கலாம். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லாவிட்டால், குழப்பங்களையே அதிகரிக்க செய்யும்.

புரட்டாசி 26-ந் தேதி முதல் தை 24 வரை குரு வக்ரமாக ரிஷப ராசிக்குள் சஞ்சரிக் கிறார். உங்கள் ராசிக்கு 9, 12-க்கு அதிபதியாக விளங்கும் குரு வக்ரம் பெறும்போது, தந்தை வழியில் தனலாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமான பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.

சொத்துக்கள் வாங்கி சேர்க்கும் ஆர்வமும், சொந்த பந்தங்களின் ஒத்துழைப்பும் இந்த காலத்தில் ஏற்படலாம். புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள், வீட்டுக்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களையும் ஒவ்வொன்றாக வாங்கி சேர்ப்பீர்கள்.

வரும் நந்தன வருடத்தில் கார்த்திகை 30 முதல் தை 9 வரை மகரத்தில் செவ்வாய் உச்சம் பெறுகிறார். இந்த காலம் ஒரு பொற்காலமாகும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவர். வீடு கட்டும் அமைப்போ அல்லது வாங்கும் அமைப்போ உருவாகும்.

கார்த்திகை 17-ந் தேதி துலாம் ராசியில் ராகுவும், மேஷ ராசியில் கேதுவும் சஞ்சரிக்க போகிறார்கள். மேஷத்தில் சர்ப்ப கிரகம் சஞ்சரிக்கும் போது, மேன்மைகள் உருவாகும் என்பர். பொருளாதார நிலை உயரும்.

புண்ணிய நதிகளில் தீர்த்தமாட செல்வீர்கள். குழந்தைகளின் கல்வி நலன் கருதியும், கல்யாண முயற்சி கருதியும் செய்த செயல்பாடுகள் வெற்றி தரும். நாடு மாற்றங்கள் ஒரு சிலருக்கு நன்மையை தரும்.

கூட்டு தொழில் தனித்தொழிலாக மாறலாம். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகள் ஒவ்வொன்றாக வெற்றி பெறும். வாழ்க்கை தேவைகளை ராகு, கேது பெயர்ச்சி பூர்த்தி செய்தாலும், உடல் ஆரோக்கியத்தில் சிறு, சிறு தொல்லைகளை கொடுக் கலாம். சர்ப்ப சாந்திகளை முறையாக செய்தால் சகல பாக்கியங்களும் உங்களுக்கு கிடைக்கும்.

சித்திரை 1-ந் தேதி முதல் ஆனி 6-ந் தேதி வரை சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அதன் பிறகு மாசி 4-ம் தேதி முதல் பங்குனி 31-ம் தேதி வரை மீண்டும் வக்ரத்தில் சஞ்சரிக்கிறார். இந்த வக்ர காலம் உங்களுக்கு தொழில் ரீதியான மாற்றங்களை கொடுக்கலாம். 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியாக விளங்கும் சனிபகவான், தொழில் மற்றும் லாப ஸ்தானத்தை ஆதிபத்யமாக கொண்டிருப்பதால், தொழிலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது.

எதிரிகளால் ஏமாற்றங்களை சந்திக்க நேரிடலாம். உதிரி வருமானம் குறையலாம். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு மீண்டும் உங்களிடமே வந்து சேரும். வெளிநாட்டில் இருப்பவர்கள் தாய்நாட்டை நோக்கி வரலாம். தாய் நாட்டில் இருப்பவர்கள் வெளிநாட்டை நோக்கி செல்லலாம். உற்றார், உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. அனுமன் வழிபாட்டில் ஆர்வம் காட்டினால் அன்றாட வாழ்க்கை நன்றாக அமையும்.

மாணவர்களுக்கு:

உழைப்புக்கு ஏற்ற பலன் கிட்டும். உயர் படிப்புகளை நீங்கள் விரும்பும் துறையில் தொடரலாம். கலை மற்றும் நுண்கலைத் துறைகளில் தேர்ந்தெடுத்தால் சிறந்து விளங்கலாம். இந்த ஆண்டில் புதிய சூழ்நிலையில் படிப்பைத் தொடங்கும்போது 22.6.2012 வரை சற்று வருத்தமான மனநிலை இருக்கும். ஜுரம், மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் வரலாம். பொறுமை தேவை. ஆகஸ்ட் மாதத்தில் கண் நோய் வந்து போகும். செப்டம்பர் மாதத்திலிருந்து எதிர்கால நோக்கங்களை கருத்தில் கொண்டு உழைக்கத் தயாராகிவிடுவீர்கள்.

பெண்களுக்கு:

உங்களின் பொறுமையான செயல்பாடுகள் இந்த வருடத்தில் நல்ல பலனை அளிக்கும். செப்டம்பர் வரை முதலீடுகள் செய்வதைப் பற்றி யோசிப்பீர்கள். எக்காரணம் கொண்டும் இந்த ராசிக் குழந்தைகள் பெயரில் 30.8.2012 முதல் 26.9.2012 வரை எந்த முதலீடும் எந்த அமைப்பையும் துவங்க வேண்டாம். ஜூன் 20ந் தேதி வரை யாரிடமும் கடன் பெறாதீர்கள். 26.9.2012 முதல் 1.12.2012 வரையிலான காலகட்டத்தில் திடீர் கலகங்களை சந்திக்க வேண்டியிருக்கும். பேச்சில் மிகுந்த எச்சரிக்கை தேவை. அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் 1.12.2012க்குப் பிறகு விவாதங்களில் ஈடுபடுவதால் இடமாற்றம் பெற வேண்டியிருக்கும். தங்கள் பெயரில் அபவாதம் ஏற்படக் கூடும். எந்த செயலையும் இந்த காலகட்டத்தில் சனிக்கிழமைகளில் தொடங்காதீர்கள். டிசம்பர் முதல் வாரத்தில் சமுத்திர ஸ்நானம் செய்வது நலம் தரும். 17.3.2013க்கு பிறகு பொன்னான காலம் பிறக்கப் போகிறது.

வியாபாரிகளுக்கு:

குடும்பப்  பிரச்னைகளை மனதில் கொண்டு வியாபாரம், அலுவலக இடங்களில் அதை வெளிப்படுத்த வேண்டாம். 16.5.2012 வரை சுபவிசேஷங்களைத் தள்ளிப் போடுங்கள். அடுத்த ஐந்து மாதங்களும் மிகச் சிறப்பானவை. பெரிய மனிதர்களின் தொடர்புகளால் வியாபாரத்தில் முதலீடுகள் செய்து மேன்மை பெறலாம். 22.06.2012 முதல் 12.08.2012 வரை கோபம் அதிகரிக்கும்; பொறுமை தேவை. 16.11.2012 முதல் 15.12.2012க்குள் அரசின் உதவிகள் கிடைக்கும். கூட்டுத் தொழில் வேண்டாம்.

உத்யோகஸ்தர்களுக்கு:

தலைமைப் பதவியை ஆண்டின் துவக்கத்திலேயே எதிர்பார்க்கலாம். இடம், மனை வாங்க கடன் பெறும் வாய்ப்புகள் கிடைக்கும். இருப்பினும் ஜூன் 22 வரை தாமதித்து பலனை எதிர்பாருங்கள். ஜூலை 15 தேதிகளில் நிலைமை சீராகும். அரசாங்க வரிகள் பாதிப்புகளை ஏற்படுத்தும். அக்டோபர் 10ம் தேதிக்குப் பிறகு தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். தாங்களும் அரசின் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஷேர் முதலீடுகள் செய்ய ஏற்ற காலமும் இதுதான். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் கூடும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்னைகளை பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது. 1.12.2012 முதல் 16.3.2012 வரை சில நஷ்டங்கள் ஏற்படும். தந்தையின் உடல்நிலை பாதிக்கும். வாகன நஷ்டம் ஏற்படும். 17.3.2012 முதல் தொடங்கும் பொன்னான நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அரசியல்வாதிகளுக்கு:

அலங்கார பதவிகளுடன் வருடம் ஆரம்பிக்கிறது. 22.6.2012 முதல் 12.8.2012 வரை, இடம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் மாட்டிக் கொள்ள நேரும். 15.8.2012 முதல் 14.9.2012 வரை சூரியன் சில சிக்கல்களை உருவாக்குவார். சொத்துப் பிரச்னைகள் இருந்தால் வருட ஆரம்பித்தில் முன்கூட்டியே சரி செய்துவிடுங்கள். 15.9.2012க்கு பிறகு பொன்னான காலமாகும். 28.9.2012 முதல் 22.10.2012 மற்றும் 22.2.2013 முதல் 16.3.2013 வரை உள்ள காலகட்டங்கள் தங்களை பிரபலமடையச் செய்யும்.

எச்சரிக்கை:

15.8.2012 முதல் 14.9.2012 வரை எவருக்கும் கடன் தரவேண்டாம். 28.7.2012 முதல் 30.8.2012 மற்றும் 29.1.2013 முதல் 21.2.2013 வரை தங்களுக்கு எதிர் சக்தியாக இயங்கும் காலம். பிரயாணங்களில் முழு எச்சரிக்கை தேவை. 26.9.2012 முதல் 30.11.2012 வரை தீக்காயம், விஷபயம் ஏற்படும். 15.8.2012 முதல் 14.9.2012 வரையிலும் மற்றும் 14.2.2013 முதல் 15.3.2013 வரையிலும் உயர்கல்வி மற்றும் வெளியிடங்களில் படிக்கும் இந்த ராசி குழந்தைகளின் பெற்றோர் அடிக்கடி சந்தித்து குடும்ப சூழ்நிலை குறித்துச் சொல்லி, அவர்கள் தவறான வழிகளில் செல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

அச்சாரங்கள்:

இந்த ராசிக்காரர்கள் இவ்வாண்டு அனைத்து முதலீடுகளையும் அரசு சார்ந்தே செய்ய வேண்டும். வீடு, ரியல் எஸ்டேட்  16.5.2012 முதல் 10.10.2012 வரை சிறப்பாக அமையும். நலிவடைந்த தொழிற்சாலைகளை வாங்கலாம். எந்தத் தொழில் விரிவாக்கத்தையும் 16.11.2012 முதல் 15.12.2012 க்குள் மேற்கொள்ளுங்கள் 1.09.2012 முதல் 22.10.2012 மற்றும் 17.3.2013 முதல் 10.4.2013 வரையிலான காலம் நன்மையையே தரும்.

பரிகாரம்:

இந்த ஆண்டு முழுவதும் அபிராமி அந்தாதி சொல்லுதல், கேட்டல் நன்று. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியை தரிசனம் செய்து வாருங்கள்.


  Tags : Nanthana, ,Tamil, ,New, ,Year, ,Predictions, , , நந்தன, ,வருட, ,தமிழ்ப், ,புத்தாண்டு, ,பலன்கள் ,Mesam,Nanthana,Tamil,New,Year,Predictions,


மகளிர்

பிற ராசிகளுக்கான பலன்கள்
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in