Tamilnewyear Makaram,Nanthana Tamil New Year Predictions ஜோதிடம் , ராசி பலன் , தினபலன் , வார பலன் , ஆண்டு பலன் 2010 , ஆணடுபலன் 2011, "கர" வருட தமிழ் ஆண்டுபலன் , குருபெயர்ச்சி பலன் , சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் , வாஸ்து , நியூமராலஜி , எண்கணிதம் , Jothidam , Astrology , Vasthu , Neumerology , Rasi Balan 2010,Rasi Balan 2011 Balan, Weekly Raasi Balan, Guru Balan , Sani Balan , Dai Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji
tamilkurinji logo


 


ஜோதிடம் >>> தமிழ்ப் புத்தாண்டுபலன்கள் - Tamil new year

23022

Makaram

Friday , 6th April 2012 04:26:14 AM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Astrology_details.php on line 206
search
Makaram,Nanthana Tamil New Year Predictions மகரம்

உத்ராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள் வரை

பல கலைகளைக் கற்று சொந்தக் காரியத்தில் கருத்தாய் இருக்கும் மகர ராசி நேயர்களே!

குடும்பத்துடன் விருந்து கேளிக்கை என்று ஆர்ப்பாட்டத்துடன் இந்த ஆண்டு துவங்குகிறது. உழைப்பின் மகத்துவம் புரிந்து சிறு முதலீடுகளுடன் குறுவர்த்தகங்கள் துவங்குவீர்கள். பகுதி நேரத் தொழில்களிலும் ஈடுபடுவீர்கள். 15.6.2012க்கு பிறகு உணர்ச்சிக் குவியலாக இருந்து பொறுமை இழக்க நேரிடும். அமைதியை கைகொள்வது நல்லது. 17.9.2012 முதல் 25.9.2012 வரையான காலத்தில் பிள்ளைக்கு திருமண ஏற்பாடுகள் செய்வீர்கள். சித்தர்களின் தரிசனத்தால் வாழ்வின் நோக்கங்களை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு இந்த புத்தாண்டு எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே, ஆரோக்கியத்தில் அடிக்கடி தொல்லைகள் ஏற்பட்டு அகலும். செவ்வாயும் நீண்ட நாட்களுக்கு அஷ்டமத்திலேயே சஞ்சாரம் செய்கிறார்.

செவ்வாயின் ஆதிக்கம் துலாம் ராசிக்கு வரும் வரை சற்று பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. அதுவரை காரியங்களில் தாமதங்களும், கடமைகளை நிறைவேற்ற முடியாமல் தத்தளிக்கும் சூழ்நிலையும் ஏற்படலாம். துர்க்கை வழிபாடு துயரங்களை தீர்க்கும்.

நவக்கிரகங்களில் சுப கிரகமாக விளங்குவது குருவாகும். அந்த குரு உங்கள் ராசியை பொறுத்தவரை 3, 12-க்கு அதிபதியாக விளங்குகிறார். சகாய ஸ்தானத்திற்கும், விரய ஸ்தானத்திற்கும் அதிபதியாக விளங்கும் குரு பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது, சொத்து விற்பனையால் லாபத்தை கிடைக்க செய்வார். சொந்த-பந்தங்களின் கருத்து வேறுபாடுகள் அகலும்.

வரவு-செலவுகளில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். வாரிசுகளுக்கு திருமணம் நடத்தி பார்க்கும் சூழ்நிலை உருவாகும். குருவின் ஆதிக்கம் சிறப்பாக செயல்பட குரு பகவான் கோவில் களுக்குச் சென்று வழிபட்டு வருவது நல்லது. விரயாதிபதியாக குரு விளங்குவதால், இந்த காலத்தில் கூடுதல் விரயங்களை கொடுக்க நேரிடலாம்.

வியாழ திசை, வியாழ புத்தி நடப்பவர்களும், வியாழக்கிழமை பிறந்தவர்களும் குரு ப்ரீதி செய்து கொள்வது நல்லது. அதோடு, ராகுவின் பார்வையும் உங்கள் ராசியில் பதிவதால் சர்ப்ப சாந்தியையும், குரு வாரத்தில் யோகம் தரும் நட்சத்திர நாளில் செய்தால் குழப்பங்களில் இருந்து விடுபட இயலும்.

குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதோடு, 9, 11 ஆகிய இடங்களிலும் பதிவாகிறது. குருவின் பார்வை 1, 9, 11 ஆகிய இடங்களில் பதியும்போது, உடல் ஆரோக்கியத்தில் உள்ள குறைபாடுகள் அகல, மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது. வெற்றிக் கனியை எட்டி பிடிக்க சில வாய்ப்புகள் வந்து அலைமோதும். கன்னி ராசியில் செவ்வாயும், உங்கள் ராசிநாதன் சனியும் இணையும் நேரத்தில் குருவின் பார்வை இருப்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது.

சொத்து பிரச்சினைகள் சுமூகமாக முடியும். தந்தை வழியில் ஏற்பட்ட விரிசல்கள் அகலும். பகை பாராட்டாமல், கோபப்படாமல் பக்குவமாக நடந்து கொள்வதன் மூலம், பல காரியங்களை நீங்கள் முடித்து கொள்ள இயலும். குருவின் பார்வை பதினோராமிடத்தில் பதிவதால், பொருளாதார நிலை உயரும்.

வரும் நந்தன ஆண்டில் செவ்வாய், சனி சேர்க்கை காலம் தான் மிகவும் யோசித்து, அருகில் உள்ளவர்களிடமும், ஆன்மிக பெரியவர்களிடமும் ஆலோசனைகளை கேட்டு பக்குவமாக நடந்து கொள்ளவேண்டிய நேரமாகும்.

இரண்டு பகை கிரகங்கள் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடமான பூர்வ-புண்ணிய ஸ்தானத் தில் அல்லவா ஒன்று சேருகிறார்கள்.

எனவே, மனக்குழப்பம் அதிகரிக்கும். இருந்தாலும், குருவின் பார்வை இந்த கூட்டுகிரகத் தின் மீது பதிவதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது.

உண்மையிலேயே துலாம் ராசியில் சனி சஞ்சரிக்கும் போது, துயரங்களை போக்கும். தொட்ட காரியங்களில் வெற்றி பெற வைக்கும். ஆவணி 27-ந் தேதி முதல் அற்புத பலன்கள் உங்களை தேடி வரப்போகின்றது. சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். அனுமன் வழிபாடு உங்களுக்கு ஆனந்தம் வழங்கும்.

புரட்டாசி 26-ந் தேதி முதல் தை 24-ந் தேதி வரை ரிஷப ராசியில் குரு வக்ரம் பெறுகிறார். இந்த காலம் உங்களுக்கு நற்பலன்களை வழங்கும் காலம் என்றே சொல்ல லாம். காரணம் 3, 12-க்கு அதிபதியான குருபகவான் வக்ரம் பெறுகிறார். 12-க்கு அதிபதி வக்ரம் பெறும்போது, `கெட்டவன் கெட்டிடின் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற் கேற்ப தொட்ட காரியங்களில், திட்டமிடாது செய்தால் வெற்றி கிடைக்கும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஓரளவே வெற்றி கிட்டும், சகோதர வழியில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு நல்ல முடிவிற்கு வரும்.

கார்த்திகை 17-ந் தேதி துலாம் ராசியில் ராகுவும், மேஷ ராசியில் கேதுவும் சஞ்சரிக்க போகிறார்கள். உங்கள் ராசியை பொறுத்தவரை 4, 9 ஆகிய இடங்களில் அரவு கிரகங்கள் சஞ்சரிக்கும் போது சில நல்ல மாற்றங்களை கொடுக்கும் என்றாலும் சுகக்கேடு களையும் கொடுக்கும்.

விலங்குகளாலும், விஷ ஜந்துக் களாலும் ஆபத்துக்கள் ஏற்பட்டு அகலும். கடன் சுமையால் சில சொத்துக்களை விற்க நேரிடலாம்.

குறிப்பிட்ட ஸ்தலங்களில் சர்ப்ப சாந்திகளை முறையாக செய்து, ராகு- கேதுக்களை திருப்திப்படுத்தினால் தான் செயல்பாடுகளில் இருந்த தாமதம் அகலும். திடீர் தாக்குதல்களில் இருந்து விடுபடுவீர்கள்.

சித்திரை 1-ந் தேதி முதல் ஆனி 6-ந் தேதி வரையிலும், பிறகு மாசி 4-ந் தேதி முதல் பங்குனி 31-ந் தேதி வரையிலும் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசி அடிப்படையில் ராசிநாதனாகவும், தனாதிபதியாகவும் சனி விளங்குகிறார். எனவே, எதை யும் யோசித்தும், பூஜித்தும் செய்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் மீண்டும் பழைய பிரச்சினை தலைதூக்கலாம். குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். கொள்கை பிடிப் போடு செயல்பட இயலாது. கடுமையாக முயற்சித்தும் கடைசி நேரத்தில் சில காரியங்கள் கைநழுவி போகலாம்.

இதுபோன்ற வக்ர காலத்தில் வள்ளல்களின் உதவியாலோ, வங்கிகளின் உதவியாலோ கடன் பெற்று வீடு கட்டுதல் போன்ற சுபச்செலவுகளை மேற்கொள்ளலாம். உறவினர் பகை ஏற்படாமல் பார்த்து கொள்வது நல்லது. எள் தீபம் ஏற்றி, இரு கரம் கூப்பி சனிபகவானை வழிபடுவதுதான் சாலச்சிறந்தது.

மாணவர்களுக்கு:

1.9.2012 முதல் 25.9.2012 வரை இந்த ராசிக் குழந்தைகள், மாணவர்கள் மரம் மற்றும் உயரமான கட்டடங்களின் ஏறாமல் கவனமாக இருக்க வேண்டும். 22.6.2012 முதல் 12.8.2012 வரையான காலத்தில் நன்கு படிப்பதும் சக மாணவர்களுக்கு திறமையாகச் சொல்லித் தருவதுமாக இருப்பீர்கள். ஆதிக்க மனப்பான்மை காரணமாக நண்பர்கள் பகையாளிகளாக மாறுவார்கள். 14.12.2012 முதல் 21.1.2013 வரையான காலத்தில் ஆய்வகங்களில் அமிலங்களால் ரத்தகாயம் ஏற்படலாம்.

பெண்களுக்கு:

16.05.2012க்கு பிறகு 29.6.2012க்குள் நல்ல செல்வ வளமிக்க வரன் கிடைத்து திருமண வாழ்க்கை நல்லபடியாக துவங்கும். சூழ்நிலைக்கு ஏற்றபடி எல்லோரும் நன்றாக பழகுவார்கள். 11.9.2012 வாக்கில் சகோதரர்களுடன் பகையை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். பூர்வீகச் சொத்துக்களைப் பற்றி பேச வேண்டாம். 18.11.2012 முதல் 30.11.2012க்குள் மிக முக்கியமான திருப்புமுனை வாய்ந்த ஐஸ்வர்யம் ஒன்று கிடைக்கும். இது உங்களை பெருமையோடு வாழவைக்கும். 1.12.2012க்கு பிறகு சமையலறை உபகரணங்கள் பழுதாகிப் போய்டும். எச்சரிக்கை தேவை. இதே காலத்தில் தங்களுக்கு ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படலாம். இப்பொழுது தங்கள் பெயரில் இடம் வாங்கும் யோகம் கிட்டும். 8.1.2013க்கு பிறகு மேற்கு திசை நோக்கி ஒரு நீண்ட பிரயாணம் செய்வீர்கள். அபூர்வமான வஸ்துக்களை தரிசித்தலும் அதனால் நிறைந்த காரியங்கள் நடைபெறுவதும் சாத்தியமாகும்.

உத்யோகஸ்தர்களுக்கு:

அலுவலகத்தில் கிடைத்த உயர் பொறுப்புகளை தக்கவைத்துக் கொள்ள கடுமையாக உழைக்க வேண்டிவரும். கணவரோடு இல்லாத பெண் தோழமையை தவிர்க்கவும்.  13.4.2012 லிருந்து 27.7.2012க்குள் வீட்டில் திருமண ஏற்பாடு கைகூடும். 4.11.2012 முதல் 13.12.2012 வரையுள்ள காலத்தில் அலுவலக வேலையாட்களால் கலகங்கள் அனுபவிக்க நேரும். இட மாற்றம் பற்றிய சிந்தனை ஏற்படும். 22.12.2012 முதல் 3.1.2013க்குள் தங்களுக்கு ஏற்படும் இடமாற்றத்தை அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். இதனால் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு கிட்டும். 27.1.2013க்கு பிறகு அலுவலகங்களில் சரளமான போக்கும் தைரியமான ஆற்றலும் உண்டாகும். அதிகாரிகளின் மறைமுக ஆதரவு கிட்டும். 4.1.2013 முதல் 13.1.2013 வரையான காலத்தில் பொதுஜன சேவை அமைப்பின் மூலம் பெருமை ஏற்படும். பல புதிய நட்புகள் உங்கள் வேலைக்கு உதவிகரமாக இருப்பார்கள். இந்த சந்தர்ப்பத்தில்தான் பணம் ஏமாறும் வாய்ப்பு தெரிகிறது. கவனம் தேவை.

வியாபாரிகளுக்கு:

எப்படியோ தட்டுத் தடுமாறி ஒருநிலைக்கு வந்தாகிவிட்டது. 11.9.2012 வரை கஷ்டப்பட்டு ஸ்திரப்படுத்திக் கொள்ளுங்கள். கூட்டு வியாபாரங்கள் என்றால் மெல்ல 11.9.2012க்குள் தனிமையாக்கிக் கொள்ளுதல் நல்லது. 11.9.2012க்கு பிறகு தொழில் முடக்கம், பெருத்த நஷ்டம், கூட்டு வியாபாரத்தில் துரோகங்கள் என்று சங்கடங்கள் நேரும். 1.12.2012க்கு பிறகு கல், ஓடு, கிரானைட் வியாபாரங்களில் ஈடுபடுதல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கும். நினைத்த எதையும் சாதிக்க முடியாத நிலை உண்டாகலாம். 11.12.2012 முதல் 3.1.2013 வரையான காலத்தில் மனைவிவழி உறவினரின் உதவி கிடைக்கும்.  23.2.2012 முதல் 7.1.2013க்குள் உறவினர்களின் உதவி தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ள வழி செய்யும்.

அரசியல்வாதிகளுக்கு:

மேற்கு, தென்மேற்கு திசையின் ஆளுமை தொடரும். 16.5.2012க்கு பிறகு தங்கள் நிலை மேலும் உயரும். தங்கள் கட்டுப்பாட்டு எல்லை விரிவடையும். 11.9.2012க்கு பிறகு 3.12.2012 வரை விஷம் மற்றும் ஆயுதங்களினால் அபாயம் தோன்றுவதை உணர்வீர்கள்; எச்சரிக்கை. விசுவாசிகளின் சேர்க்கையை உறுதி செய்து கொள்ளுங்கள். 1.12.2012க்கு பிறகு தங்களுடைய தாயாரின் உடல்
நிலையை உடனிருந்து கவனிக்க வேண்டியிருக்கும். 11.12.2012 முதல் 3.1.2013 வரை பெண்களுடன் போராட்டம் இருக்கும். தங்களுக்கு தலை சம்பந்தப்பட்ட நோய், வயிற்றுவலி போன்ற உபாதைகளால் ஏற்படும் மருத்துவ செலவுகள் தவிர்க்க முடியாதது.

எச்சரிக்கை:  

வியாபாரிகள் கூட்டு முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். 11.9.2012க்கு பிறகு கூட்டு வியாபாரங்களை நிறுத்திக் கொள்வது நல்லது. 21.12.2012 முதல் கல், ஓடு, கிரானைட் வியாபாரங்களில் முழுவதும் ஈடுபட வேண்டாம். 14.12.2012 முதல் 21.1.2013 காலத்தில் கண்ணாடி மற்றும் ரசாயனப் பொருட்களால் ரத்த காயம் ஏற்படலாம். இந்த ஆண்டு புதிய வியாபாரங்கள் துவங்குவதைத் தள்ளி வைக்கவும்.

அச்சாரங்கள்:  

23.12.2012 முதல் 7.1.2013க்குள் இருக்கும் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள ஏற்ற காலத்தை தேர்வு செய்து கொள்ளவும்.

பரிகாரம்:

ஐயப்பன் தரிசனம், மயில் மேல் அமர்ந்திருக்கும் ஆறுமுகப் பெருமான் தரிசனம், சப்த கன்னியர் திருவிழாக்களில் பங்கேற்றல் நல்லது. சுப்ரமண்ய புஜங்கம் பாராயணம் செய்தல் மிகுந்த நன்மையை தரும்.


  Tags : Nanthana, ,Tamil, ,New, ,Year, ,Predictions, , , நந்தன, ,வருட, ,தமிழ்ப், ,புத்தாண்டு, ,பலன்கள் ,Makaram,Nanthana,Tamil,New,Year,Predictions


மகளிர்

பிற ராசிகளுக்கான பலன்கள்
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in

Warning: mysql_close(): 3 is not a valid MySQL-Link resource in /home/content/14/7948114/html/tamilkurinji/footer.php on line 164