Tamilnewyear Kumbam,Nanthana Tamil New Year Predictions ஜோதிடம் , ராசி பலன் , தினபலன் , வார பலன் , ஆண்டு பலன் 2010 , ஆணடுபலன் 2011, "கர" வருட தமிழ் ஆண்டுபலன் , குருபெயர்ச்சி பலன் , சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் , வாஸ்து , நியூமராலஜி , எண்கணிதம் , Jothidam , Astrology , Vasthu , Neumerology , Rasi Balan 2010,Rasi Balan 2011 Balan, Weekly Raasi Balan, Guru Balan , Sani Balan , Dai Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji
tamilkurinji logo
 


ஜோதிடம் >>> தமிழ்ப் புத்தாண்டுபலன்கள் - Tamil new year

23023

Kumbam

Friday , 6th April 2012 04:28:51 AM

கும்பம்

அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை

பயனுள்ளவற்றையே நினைத்து அதை செயல்படுத்தி முடிக்கும் திறமையுள்ள கும்பராசி நேயர்களே!

தொன்மையான பழக்க வழக்கங்கள் உள்ளவர்களுக்கு இந்த ஆண்டு சீரான உயர்வை தர இருக்கின்றது. புது வேலை வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது. 16.1.2012க்கு பிறகு பூமி, வீடு, வாகனங்கள் சிறக்கும். சற்றே நீரால் பாதிப்பு வரும் நோய்கள் ஆண்டு முழுவதும் தொல்லை தரும். 11.9.2012க்கு பிறகு காலில் அடிபடாமல் அதிக கவனத்துடன் செயல்படுங்கள். கிக்கர் உள்ள வாகனமெனில் கூடுதல் கவனம் தேவை.

உங்களுக்கு இந்த புத்தாண்டு எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

ஆண்டின் தொடக்கத்தில் அஷ்டமத்தில் சனி சஞ்சரிக்கிறார். சுகஸ்தானத்தில் கேது. எனவே ஆரோக்கியத்திலும் அக்கறை தேவை. நீங்கள் நன்மை செய்வதாக நினைத்து செய்த காரியம் வேறுவிதமாக மாறலாம்.

குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. திடீர் விரயங்கள் திக்கு முக்காட செய்யும். குடும்ப பெரியவர்களின் ஆரோக்கியத்திலும் அக்கறை செலுத்துங்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆஞ்சநேயரையும், சனிபகவானையும் வழிபடுவதோடு பவுர்ணமி கிரிவலத்திலும் கலந்து கொள்ளுங்கள்.

நவக்கிரகங்களில் நல்லவர் என்று அழைக்கப்படுவர் குருபகவான். அவர் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் சஞ்சரித்து அர்த்தாஷ்டம குருவாக சஞ்சரிக்கிறார். இதன் விளைவாக, பழைய வாகனங்களை பழுது பார்க்கும் சூழ்நிலையோ, புதிய வாகனங்கள் வாங்கி மகிழும் வாய்ப்போ கிடைக்கும். தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை.

2, 11-க்கு அதிபதியாக குரு விளங்குவதால், தனவரவில் சில ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். பழகிய கூட்டாளிகளே ஏமாற்றி விட்டார்களே என்று கவலைப்படுவீர்கள். இந்த காலத்தில் குரு திசை, குரு புத்தி நடப்பவர்கள், வியாழக்கிழமை பிறந்தவர்கள், அர்த்தாஷ் டம குருவிற்கு உரிய பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது.

குரு, கேதுவுடன் கூடியிருப்பதால் சர்ப்ப தோஷ பரிகாரங்களும், ராகு-கேது ப்ரீதியும் செய்வதன் மூலமே நீங்கள் தொல்லைகளில் இருந்து அகல முடியும்.

குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிவாகிறது. இதன் விளைவாக, சென்ற வருடத்தில் ஏற்பட்ட தொழில் இழப்புகளை ஈடுகட்ட புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்போடு கூட்டு முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். மாமன், மைத்துனர் வழியில் மங்கல நிகழ்ச்சிகள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வி.ஆர்.எஸ். பெற்றுக்கொண்டு, விரும்பிய துறையை தேர்ந்தெடுத்து, முன்னேறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவர்.

ஆனி 9-ந் தேதி முதல் ஆடி 29-ந் தேதி வரை உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் செவ்வாயும், சனியும் இணைகிறார்கள். இது அவ்வளவு நல்லதல்ல. இதுபோன்ற காலங்களில் எதையும் பலமுறை யோசித்து செய்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சம்பந்தமாக குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு தொல்லை வரலாம். பெற்றோர் வழியில் மனக்கசப்பு தரும் செய்திகள் வரலாம்.

அங்காரக வழிபாடும், காக வாகனத்தான் வழிபாடும் அன்றாட வாழ்க்கையை நன்றாக அமைத்து கொடுக்கும்.

ஒன்பதில் சஞ்சரிக்கும் சனி ஒளிமயமான எதிர்காலத்திற்கு வித்திடப்போகிறார். பொன், பொருள்கள் உங்களுக்கு சேரும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாகும். அத்தனைக்கும் மேலாக, பொருளாதார நிலை ஒரு படி உயர்ந்து உன்னத நிலையை கொடுக்கும். அந்த நிகழ்வு ஆவணி 27-ல் நிகழவிருக்கிறது.

புரட்டாசி 26-ந் தேதி முதல் தை 24-ந் தேதி வரை ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசியை பொறுத்தவரை வக்ரம் பெறுவது நல்லதல்ல. குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். தன லாபம் வருவதில் தடைகள் உருவாகலாம்.

பயணங்களை திடீர் திடீரென மாற்றி அமைப்பீர்கள். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் இட மாற்றம், ஊர் மாற்றங்கள் வரலாம். இல்லம் கட்டி குடியேறுவதிலும் தாமதம் ஏற்படும்.

கார்த்திகை 17-ந் தேதி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் கேதுவும், ஒன்பதாமிடத்தில் ராகுவும் சஞ்சரிக்க போகிறார்கள். இதன் விளைவாக, பூர்வீக சொத்துக்களில் லாபம் கிடைக்கும்.

மூன்றில் சஞ்சரிக்கும் கேது முன்னேற்றத்தில் சில முட்டுக்கட்டைகளை கொடுக்கலாம். குறிப்பாக, சகோதரர்கள் சச்சரவுகளை கொடுக்கலாம். பஞ்சாயத்துக்கள் பாதியிலேயே நிற்கலாம். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் வரும். கோவில் காரியங்களில் ஈடுபாடு செலுத்துவீர்கள்.

புற்று கோவில்களுக்கும், புராதன கோவில்களுக்கும் சென்று சர்ப்ப சாந்தியை செய்தால் அற்புதமான வாழ்க்கை அமையும்.

சித்திரை 1-ந் தேதி முதல் ஆனி 6-ந் தேதி வரையிலும், பிறகு மாசி 4-ந் தேதி முதல் பங்குனி 31-ந் தேதி வரையிலும் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசி அடிப்படையில் ராசிநாதனாகவும், பனிரெண்டுக்கு அதிபதியாகவும் சனி விளங்குகிறார். பனிரெண்டுக்கு அதிபதி வக்ரம் பெறுவது நன்மை தான். `கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்' என்பதற்கேற்ப, திட்டமிடாது செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். திறமை மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து உதவிக்கரம் நீட்டுவர். `வெற்றி' என்ற மூன்றெழுத்தை குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள். வியக்கும் செய்திகள் வீடு வந்து சேரும்.

அதே நேரத்தில் ராசிநாதனாகவும் சனி விளங்குவதால், திடீரென உடலில் நோய்கள் தோன்றலாம். எனவே மருத்துவ ஆலோசனைகளை பெற ஒரு தொகையை செலவிடும் சூழ்நிலை உருவாகும். இந்த காலத்தில் திருநள்ளாறு, பெரிச்சிக்கோவில் போன்ற ஸ்தலங்களுக்கு சென்று சனிபகவானை வழிபடுவதோடு, வார வழிபாடாக அனுமன் வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.

மாணவர்களுக்கு:

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் முன்னேற்றத்திற்கான கல்வியில் ஈடுபடுவீர்கள். சங்கீதம், ஓவியம் போன்ற கலைத்துறைகளில் ஈடுபடத் தோன்றும். சமயக் கல்வி சார்ந்த நிறுவனங்களில் சேர்வது நல்லது. 15.5.2012 முதல் 29.5.2012 வரையான காலத்தில் வகுப்பறைகளில் திடீரென்று கலகம் ஏற்படும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு எச்சரிக்கை செய்து வையுங்கள். 11.9.2012க்கு பிறகு படிப்பில் கவனம் அதிகரிக்கும். 17.9.2012 முதல் 16.10.2012 வரையுள்ள காலம் மிகவும் அதிர்ஷ்டமானது. ஆசிரியர்களின் உதவியுடன் கண்காட்சிகளில் ஈடுபடுவீர்கள்.

பெண்களுக்கு:

தற்போது இருக்கும் அனைத்து இடையூறுகளும் 1.9.2012க்கு பிறகு மாறிவிடும். 16.5.2012 முதல் 11.9.2012 வரை புத்தியின் இஷ்டத்திற்கு ஆட்பட்டு காரியமாற்றாதீர்கள். இளம் பெண்களுக்கு 4.12.2012 முதல் 22.12.2012க்குள் சந்தேகமின்றி குழந்தை பிறக்கும். 4.1.2013 முதல் 28.1.2013 வரையான காலங்களில் உடன் பிறந்தவர்களுக்கு திருமணம் கைகூடும். 16.2.2012 முதல் 7.1.2012 வரையான காலத்தில் மனை விற்பனை மற்றும் வாங்குவதில் அதிக லாபம் ஏற்படும். அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் 4.11.2012 முதல் 13.12.2012 வரையான காலங்களில் அதிகாரிகளால் பயமடைய நேரிடும். அதனால் இடமாற்றத்திற்கு துணிவீர்கள். இந்த நிலைமை 22.1.2013க்கு பிறகு மாறும்.

உத்யோகஸ்தர்களுக்கு:  

1.9.2012 முதல் 11.9.2012 வரையான காலத்தில் வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கும். வெளிநாடு செல்ல காத்திருப்போர்களுக்கு இதுவே நல்ல நேரம். இன்ஜினியரிங் தொழிற் கூடங்களில் முயற்சி செய்யுங்கள். 11.9.2012 முதல் 30.11.2012 வரையான காலத்தில் மனதில் ஒருவித அச்சம் ஏற்படுவதால் இடமாற்றம் தேடுவதும் வேலையை மாற்றுவதுமான எண்ணங்கள் அதிகரிக்கும். அதிகாரிகள் மற்றும் முதலாளிகளிடம் விரோதம் ஏற்படும். கவனமாக விஷயங்களை கையாண்டு பொறுமையுடன் இருக்கவும். 1.12.2012க்கு பிறகு கேதுவின் மாற்றத்தால் புதிய மனிதர் ஒருவரின் ஆதரவை பெற்றுத் தரப் போகிறது. 16.12.2012 முதல் 13.1.2013 வரையான காலத்தில் பதவி உயர்வு பணத்தோடு கிட்டும்.

வியாபாரிகளுக்கு:

தொழில் முடக்கம், வியாபார நஷ்டங்களுடன் துவங்கும் இந்த ஆண்டு 16.5.2012க்கு பிறகு மகிழ்ச்சியான திருப்பத்தை ஏற்படுத்தும். வீட்டு மனிதர்கள் பேச்சை கேட்பதும் அவர்கள் பெயரில் ஷேர் மார்க்கெட் வர்த்தகத்தில் ஈடுபடுவதும் நல்ல லாபத்தை தரும். 28.9.2012 முதல் 22.10.2012 வரையான காலகட்டத்தில் பெரிய மனிதர்கள், அரசியல்வாதிகளுக்கு தங்களின் உதவி தேவைப்படும். புத்திசாலித்
தனமாக இவர்களை தொழில் முறையில் பயன்படுத்தி கொள்ளுங்கள். பணத்தை எச்சரிக்கையாக செலவு செய்யுங்கள். 11.12.2012 முதல் 3.1.2013 வரையான காலத்தில் ரத்த ஓட்டம் சம்பந்தமான நோய்கள் ஏற்படும். குடும்ப ஒற்றுமை குறையும். ஆனாலும் தொழில் பிரச்னைகளை சமாளித்துக் கொள்வீர்கள். 2.3.2013க்கு பிறகு முன்னேற்றத்திற்கான வழிகளை ஸ்திரப்படுத்திக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு:

28.4.2012க்கு பிறகு தலைவர்களின் ஸ்நேகிதம் கிடைக்கும். 30.5.2012 முதல் 19.6.2012க்குள் தலைவர்கள் தரும் சன்மானத்தை பதவியாக மாற்ற முயற்சி செய்யுங்கள். இப்பொழுது தலைவர்களின் நெருங்கிய நண்பர்களுடன் விவாதம் செய்ய வேண்டாம். இது கிடைத்த அதிகாரத்தை நாசப்படுத்தும். 9.9.2012 முதல் 25.9.2012 காலத்தில் தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வெளிநாட்டு வியாபாரத் தொடர்புகளில் நீங்கள் பிறர் சார்பாக ஈடுபட நேரும். இந்த நேரம் தங்கள் தந்தையார் உடல்நிலை பாதிக்கப்படும். வரி விஷயங்களில் முன் எச்சரிக்கையாக இருப்பது பதவியை நிலைநிறுத்தும். 1.12.2012க்கு பிறகு கேதுவின் மாற்றம் உங்களின் தற்போதைய நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்வீர்கள். பல தர்ம ஸ்தாபனங்களுடன் இணைந்து மக்கள் சேவையில் முழுவீச்சுடன் இறங்கி செயல்படுவீர்கள். உங்களின் எதிர்கால தேவைக்கான வசதிகள் உறுதியாகும்.

எச்சரிக்கை:  

26.9.2012 முதல் 3.11.2012 வரையான காலம் வாகன விபத்து மற்றும் உயிருக்கு ஆபத்தான கண்டங்கள் உள்ள நேரம். எச்சரிக்கை. 4.11.2012 முதல் 13.12.2012 வரை குடும்பத்திலிருந்து விலகி இருக்க வேண்டியிருக்கும். பெண் சிநேகிதங்களில் எச்சரிக்கை தேவை. 11.12.2012 முதல் 3.1.2013 வரையான காலம் ரத்த அழுத்தத்துடன் நரம்பு சம்பந்தமான பிரச்னை ஏற்படும்.

அச்சாரங்கள்:

16.5.2012க்கு பிறகு பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள், ஹோட்டல்கள், சுற்றுலா தொழில்கள் ஆரம்பிக்கலாம். 28.9.2012 முதல் 22.10.2012 வரை தொழில்களை விரிவுபடுத்திக் கொள்ளலாம். 1.12.2012க்கு பிறகு 15.12.2012 நாட்களில் புதிய சிறுதொழில் துவங்க ஏற்பாடு செய்யலாம்.

பரிகாரம்:

வெள்ளிக் கிழமைகளில் திருவானைக்காவல், திருக்கடையூர் அபிராமி அம்பாளை தரிசனம் செய்யுங்கள். புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் தரிசனம், நவாவர்ண பூஜை, அபிஷேக தீர்த்தம், பிரசாதம் எடுத்துக் கொள்ளுதல் போன்றவை இந்த வருடம் நன்மையைத் தரும்.


  Tags : Nanthana, ,Tamil, ,New, ,Year, ,Predictions, , , நந்தன, ,வருட, ,தமிழ்ப், ,புத்தாண்டு, ,பலன்கள் ,Kumbam,Nanthana,Tamil,New,Year,Predictions


























மகளிர்













பிற ராசிகளுக்கான பலன்கள்








Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in