Tamilnewyear Kanni,Nanthana Tamil New Year Predictions ஜோதிடம் , ராசி பலன் , தினபலன் , வார பலன் , ஆண்டு பலன் 2010 , ஆணடுபலன் 2011, "கர" வருட தமிழ் ஆண்டுபலன் , குருபெயர்ச்சி பலன் , சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் , வாஸ்து , நியூமராலஜி , எண்கணிதம் , Jothidam , Astrology , Vasthu , Neumerology , Rasi Balan 2010,Rasi Balan 2011 Balan, Weekly Raasi Balan, Guru Balan , Sani Balan , Dai Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji
tamilkurinji logo


 


ஜோதிடம் >>> தமிழ்ப் புத்தாண்டுபலன்கள் - Tamil new year

23018

Kanni

Friday , 6th April 2012 04:14:22 AM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Astrology_details.php on line 206
search
Kanni,Nanthana Tamil New Year Predictions கன்னி

உத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை

செயல்களைத் தேர்ந்தெடுத்து சரியான முடிவெடுக்கும் கன்னிராசி நேயர்களே!

மகனின் உடல்நிலை பற்றிய கவலைகள், பூர்வீகச் சொத்தின் பங்குகள் பற்றிய எச்சரிக்கைகளுடன் இந்த ஆண்டு ஆரம்பிக்கிறது. 16.7.2012க்கு பிறகு நல்ல வேலை கிடைக்கும். 8.1.2013க்குள் விரும்பிய இடமாற்றமும் வியாபாரிகளுக்கு சிறப்பான வேலை ஆர்டர்களும் கிடைக்கும். தொழில் விரிவாக்கம் செய்வீர்கள்.

உங்களுக்கு இந்த நந்தன ஆண்டு எப்படியிருக்கும் என்பதை பார்ப்போம்.

லாபாதிபதி சந்திரனை குரு பார்த்து இந்த ஆண்டு தொடங்குகிறது. அது மட்டுமல்ல, 3, 8-க்கு அதிபதியான செவ்வாயையும் குரு பார்க்கிறது. எனவே, சிக்கல்கள் தீரும், சிரமங்கள் குறையும். பக்கபலமாக இருப்பவர்கள் உங்கள் பணத்தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பர். முக்கிய புள்ளிகளை சந்தித்து, முன்னேற்றங்களை வரவழைத்து கொள்வீர்கள்.

ஜென்ம சனி வக்ரம் பெறுவதால், திருநள்ளாறு வழிபாடும், சனிக்கவசப் பாராயணமும் தித்திக்கும் விதத்தில் உங்கள் வாழ்க்கையை அமைத்து கொடுக்கும்.

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்று வர்ணிக்கப்படும் குரு பகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் சஞ்சரிக்க போகிறார். அசுர குரு வீட்டில் தேவ குரு சஞ்சரித்தாலும், அதன் பார்வை உங்கள் ராசியில் முழுமையாக பதிவதால், உடல் நலமும் சீராகும். அது மட்டுமல்லாமல், 1, 3, 5 ஆகிய இடங் களிலும் பதிவாகிறது.

ஒன்பதில் சஞ்சரிக்கும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 4, 7-க்கு அதிபதியாக விளங்குகிறார். தொழில் தொடங்க மூலதனம் பெற்றோர் வழியிலும், உற்றார், உறவினர்கள் வழியிலும் வந்து சேரும். எதை தொட்டாலும் தடைகளும், தாமதங்களும் வந்து கொண்டிருக்கிறதே என்ற கவலை இனி ஓயும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல் அகலும்.

குருவின் பார்வை சகோதர ஸ்தானத்தில் பதிவதால், உடன்பிறப்புகள் உற்சாகத்தோடு வந்திணைந்து, உதவிக்கரம் நீட்டுவர். எதையோ மனதில் நினைத்து கொண்டு, சரியாக பேசவில்லையே என்று நினைத்த சகோதரர்கள் எல்லாம், தானாகவே வந்து பேசி, தக்க ஆலோசனைகளையும் கூறுவர். பகைகளை உறவாக்கும் இந்த நேரத்தில் வழக்கு போட்டவர்கள் கூட வாபஸ் பெறுவர்.

குருவின் பார்வையால் புத்திர ஸ்தானம், பூர்வ-புண்ணிய ஸ்தானம் எல்லாம் புனிதமடை கின்றது என்பதால், சொத்து வாங்கும் யோகம் முதல் சுகபோகமான வாழ்க்கை நடத்த வீடு கட்டி குடியேறுவது முதல் ஒவ்வொன்றாக நடைபெறுவது கண்டு ஆச்சரியப் படுவீர்கள்.

ஆயினும், ஜென்மச்சனியின் ஆதிக்கம் உங்கள் ராசியில் அதிகமாகவே இருக்கிறது. எனவே, ஒரு சில காரியங்களை ஒரு முறைக்கு இரு முறை செய்யக்கூடிய சூழ்நிலை உருவாகலாம்.

ஆனி 9-ந் தேதி முதல் ஆடி 29-ந் தேதி வரை உங்கள் ராசியிலேயே செவ்வாயும், சனியும் ஒன்று கூடுகிறார்கள். இந்த காலம் தான் உங்களுக்கு எச்சரிக்கை அதிகம் தேவைப்படும் காலமாகும். உடலாலும் தொல்லை, உள்ளத்தாலும் தொல்லை, உடன் இருப்பவர்களாலும் தொல்லை என்று ஒவ்வொரு நாளும் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம்.

வாகனத்தில் செல்லும்போது கவனம் அதிகம் தேவை. பழைய வாகனத்தை மாற்ற நினைப்பவர்கள் மாற்றி கொள்வது நல்லது. மாற்ற இயலாதவர்கள் அதற்குரிய பரிகாரங்களை செய்து விட்டு, தொடர்ந்து வாகனங்களை வைத்து கொள்ளலாம்.

ஆவணி 27-ந் தேதி முதல் துலாம் ராசிக்குள் உச்சம் பெறும் சனி உங்களுக்கு இரண்டாமிடத்தில் உச்சம் பெறுவதால், குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளிலும் ஆதாயம் கிடைக்கும். மாற்றினத்தவர்களும் கைகொடுத்து உதவுவர்.

புரட்டாசி 26-ந் தேதி முதல் தை 24-ந் தேதி வரை ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசியை பொறுத்தவரை 4, 7-க்கு அதிபதியாக குரு விளங்குவதால், வக்ர காலம் வளர்ச்சிக்குரிய காலமாக இருக்குமென்றே கருதலாம்.

குடும்ப பிரச்சினைகள் ஒவ்வொன்றாக நல்ல முடிவிற்கு வரும். கொடுக்கல்-வாங் கல்களில் லாபம் கிடைக்கும். அஞ்சல் வழி அனுகூலமும், அன்னிய தேச தொடர்பும் கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும். வாழ்க்கை துணை வழியே வரவு வந்து சேரும். இந்த காலத்தில் திசை மாறிய தென்முக கடவுள் வழிபாடு தித்திக்கும் விதத்தில் வாழ்க்கை பாதையை அமைத்து கொடுக்கும்.

கார்த்திகை 17-ந் தேதி துலாம் ராசியில் ராகுவும், மேஷ ராசியில் கேதுவும் சஞ்சரிக்க போகிறார்கள். உங்கள் ராசியை பொறுத்த வரை இரண்டில் ராகுவும், எட்டில் கேதுவும் சஞ்சரிக் கிறார்கள்.

தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு, தன வரவை தாராளமாக அள்ளிக் கொடுக்கும்.

அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் கேதுவின் பலத்தால் ஆரோக்கியத்திற்கென்று ஒரு தொகையை செலவிடும் சூழ்நிலையை உருவாக்கலாம். தொழில் கூட்டாளிகளில் சில மாற்றங்களை செய்ய நேரிடும்.

தொல்லை தந்த எதிரிகளின் பலம் கூடும் இந்த நேரத்தில் நல்லவர்கள் யார்? பொல்லாத வர்கள் யார்? என்பதையும் இனம் கண்டு கொண்டு செயல்படுவது நல்லது. கோவில் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.

உங்களுக்கு அனுகூலம் தரும் சர்ப்ப ஸ்தலத்தை தேர்ந்தெடுத்து, சர்ப்ப சாந்தியை முறையாக செய்தால் அற்புதமான வாழ்க்கை அமையும்.

சித்திரை 1-ந் தேதி முதல் ஆனி 6-ந் தேதி வரையிலும், பிறகு மாசி 4-ந் தேதி முதல் பங்குனி 31-ந் தேதி வரையிலும் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசி அடிப்படையில் சனி 5, 6-க்கு அதிபதியாக விளங்குகிறார். எனவே, பூர்வீக சொத்துக்கள் விற்பனையில் திடீர் மாற்றங்கள் வந்து சேரலாம். பிள்ளைகளின் கல்யாண முயற்சிகள் கை நழுவி செல்லலாம். பங்காளி பகைகளை வளர்த்து கொள்ளாமல் பார்த்து கொள்வது நல்லது. பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகவோ, கடல் தாண்டும் முயற்சிக்காகவோ, நீங்கள் நிறைய தொகையை செலவிட்டும் காரியம் கை கூடாமல் தாமதத்தின் பிடியில் சிக்கி தவிக்கலாம்.

அதே நேரத்தில் ஆறுக்கு அதிபதியாகவும் சனி விளங்குவதால், உத்யோக உயர்வு, ஊதிய உயர்வு போன்றவைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு இடமாற்றங்கள் வந்து சேரலாம். விருப்ப ஓய்வு பெற நினைப்பவர்களுக்கு கணிசமான தொகை கைக்கு வந்து சேரும். இந்த காலத்தில் சனி ப்ரீதி செய்வது நல்லது.

மாணவர்களுக்கு:

இந்தி மற்றும் பிறமொழிச் சேர்க்கை உடைய பாடத் திட்டங்களில் பங்குபெறும் எண்ணம் சிறப்பானது. தொல்லியல் சார்ந்த பாடங்களை கூட தேர்வு செய்வீர்கள். தர்க்கம் மற்றும் சட்டம் போன்ற படிப்புகளில் இயற்கையாக வெற்றியடைவீர்கள். 28.9.2012 முதல் 22.10.2012 வரை நல்ல பலன்கள் என்றாலும் சுற்றுலா செலவுகள் அதிகரிக்கும். மகிழ்ச்சிகள் திசைமாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 1.11.2012 முதல் 17.11.2012 வரையான காலத்தில் தங்கள் அந்தஸ்து கல்லூரி அளவில்  பேசப்படும். 11.9.2012 முதல் 25.9.2012 வரை சிந்தனைகளில் தடுமாற்றமும் வஞ்சனையான எண்ணங்களும் தோன்றக் கூடும். கவனமாக தவிர்க்கப் பாருங்கள்.  22.1.2013 முதல் 1.2.2013 வரை நடைபெறும் காம்பஸ் இன்டர்வியூக்களில் வெற்றி பெறுவீர்கள்.

பெண்களுக்கு:

16.5.2012க்கு பிறகு திருமணமாகாதவர்களுக்கு பெரும் வசதியுள்ள வரன் வரும். இது அமைதியாயிருந்த உங்களுக்கான பரிசு. 1.9.2012க்கு பிறகு 27.9.2012 வரையான காலத்தில் நீண்ட கால எதிர்பார்ப்புகளான வீடு, கார், எஸ்டேட், பெயர், புகழ் என்று எல்லாமுமே அமையும். 28.9.2012க்கு பிறகு 3.11.2012 வரை தங்களுக்கு கெட்டபெயர் ஏற்படுத்தும் காலம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருங்கள். பேச்சில் மிகுந்த கவனமும் எச்சரிக்கையையும் கைக்கொள்ளுங்கள். வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு தீபமேற்றுவது அவசியம். 1.12.2012க்கு பிறகு குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். பொறுமையைக் கையாளவும்.

வியாபாரிகளுக்கு:

அரபு நாட்டுத் தொடர்புகளால் சிறப்பான வளம் பெறுவீர்கள். 1.9.2012 முதல் 27.9.2012 வரையான காலத்தில் உங்களுக்கு விசேஷமான லாபம் கிட்டும். மனைவி அல்லது மனைவியின் வர்க்கத்தார் தங்கள் முதலீடுகளுக்கு உதவி செய்வார்கள். 16.12.2012 முதல் 13.1.2012 வரையான காலத்தில் எதிர்பாராத வெளி வேலைகள் உங்களைத் தேடிவரும். பணவசதிகள் பெருகும். 14.3.2013க்கு பிறகான காலம் தொழில் விரிவு செய்யவும் அரசு உதவிகள் பெறவும் ஏற்ற காலம். சனியின் அமைப்பு தங்களை விவாதங்களிலும் குடி போன்ற தவறான வழிகளிலும் ஈடுபத்தும்; எச்சரிக்கையுடன் விலகப் பாருங்கள்.

உத்யோகஸ்தர்களுக்கு:

பொது இடங்களில் அவமானப்பட்ட காலம் மாறிவிட்டது. எதிலும் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். 16.7.2012 முதல் 16.8.2012 காலகட்டத்தில் நல்ல வேலை கூடி வரும். தைரியமாக செயல்படுவீர்கள். 16.5.2012 முதல் 29.5.2012 வரையான காலகட்டத்தில் ஏற்படும் புதிய நண்பர்களின் சேர்க்கை தங்களை மிக உயர்ந்த அலுவல்களுக்கு உதவி புரிபவராக மாற்றிவிடும். அலுவலகத்தில் உங்கள் நிலை உயரும். பண ஆதாயங்கள் கிடைக்கும். 8.1.2012 முதல் 26.1.2012 காலகட்டத்தில் முன்னேற்றத்திற்கான நல்ல சந்தர்ப்பம் ஒன்று வரும். அப்படி அது இடமாற்றமாக இருந்தால் விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள். இதனால் பல நன்மைகளும் லாபமும் விளையும். நீங்கள் விரும்பியபடியான வாழ்வு பெற இது உதவி செய்யும். 17.3.2013க்கு பிறகு வாழ்வின் அரிய அதிர்ஷ்டம் நிறைந்த நேரம் தொடங்குகிறது. சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அரசியல்வாதிகளுக்கு:

நிலையற்ற இடத்தில் இருக்கிறோமே என்ற மனக்கவலை தீரும். 16.5.2012க்கு பிறகு திடீர் உயர்வுகள் வாய்க்கப் பெறுவீர்கள். தந்திரமாகவும் கொஞ்சம் ரகசியமாகவும் பணியாற்ற வேண்டிவரும். பிரபலமடைவதும் உயர் அங்கீகாரம் பெறுவதும் வெளிப்படையானது. 20.6.2012 முதல் 9.7.2012 மற்றும் 2.8.2012 முதல் 22.8.2012 ஆகிய காலங்களில் தொண்டர்கள் உறவு சுமுகமாவதால் சர்வ வேலைகளும் தடையின்றி நடக்கும். 11.9.2012 முதல் 25.9.2012 வரை எதிரிகளுடன் கலகமும் அதனால் மனக்கவலையும் ஏற்படும். தலைமையப் பற்றி பேசும் போது கவனமாய் இருங்கள். அதே சமயம்  தங்களின் வழிகாட்டி ஒருவரை இழக்க நேரிடும். இதன் பிறகு ஆண்டின் இறுதிவரை பெரிய பதவிகளில் அமர்வீர்கள்.

எச்சரிக்கை:

இந்த ராசிப் பெண்கள் 26.9.2012 முதல் 3.11.2012 வரை தங்கள் கணவரோடல்லாமல் வெளியே செல்ல வேண்டாம். பெருத்த அபவாதங்கள் ஏற்படக்கூடும். 1.12.2012 முதல் 13.4.2013 வரை பணத்தை எவரை நம்பியும் தர வேண்டாம். நகை கொடுக்கல் - வாங்கள் எதுவும் வேண்டாம். பொருட்கள் திருடு போகும் நேரம். எச்சரிக்கை. 15.5.2012 முதல் 29.5.2012 வரை வேலை விஷயமாக வெளிநாடு செல்லும் முயற்சியில் பணம் நஷ்டமாகலாம். ஆகவே ஒத்திவையுங்கள்.

அச்சாரங்கள்:

1.9.2012 முதல் 27.9.2012 வரை மற்றும் 16.12.2012 முதல் 14.3.2013 வரை தொழில் தொடங்குதல், அதை விரிவாக்கம் செய்தலை மேற்கொள்ளுங்கள்.

பரிகாரம்:

திருவாரூர் அருகேயுள்ள குடவாசலில் கருடன் வழிபட்ட சிவனை தரிசனம் செய்யுங்கள். சப்த மாதரில் இந்திராணியை வழிபடுதல், தட்சனின் யாக படலத்தை படித்தல் போன்றவை இந்த ஆண்டு அதிக நன்மைகளை தரும்.


  Tags : Nanthana, ,Tamil, ,New, ,Year, ,Predictions, , , நந்தன, ,வருட, ,தமிழ்ப், ,புத்தாண்டு, ,பலன்கள் ,Kanni,Nanthana,Tamil,New,Year,Predictions


மகளிர்

பிற ராசிகளுக்கான பலன்கள்
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in

Warning: mysql_close(): 3 is not a valid MySQL-Link resource in /home/content/14/7948114/html/tamilkurinji/footer.php on line 164