Tamilnewyear Kadakam,Nanthana Tamil New Year Predictions ஜோதிடம் , ராசி பலன் , தினபலன் , வார பலன் , ஆண்டு பலன் 2010 , ஆணடுபலன் 2011, "கர" வருட தமிழ் ஆண்டுபலன் , குருபெயர்ச்சி பலன் , சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் , வாஸ்து , நியூமராலஜி , எண்கணிதம் , Jothidam , Astrology , Vasthu , Neumerology , Rasi Balan 2010,Rasi Balan 2011 Balan, Weekly Raasi Balan, Guru Balan , Sani Balan , Dai Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji
tamilkurinji logo


 


ஜோதிடம் >>> தமிழ்ப் புத்தாண்டுபலன்கள் - Tamil new year

23016

Kadakam

Friday , 6th April 2012 04:08:36 AM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Astrology_details.php on line 206
search
Kadakam,Nanthana Tamil New Year Predictions கடகம்

புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய

வளைந்து கொடுத்து வாழ்வில் வெற்றியை ஈட்டும் கடகராசி நேயர்களே!

சென்ற வருடத்தில் வெளிதேச வேலை வாய்ப்புகள் பற்றிய நிலை தெரியாது தவித்தீர்கள். இருக்கும் வேலையில் அதிருப்திதான் மிஞ்சியது. மனைவியின் ஆசைகள் பூர்த்தியாக வேண்டுமே என்று ஏக்கத்தோடு இருந்தீர்கள். ஆனால் இந்தப் புத்தாண்டு எல்லாவற்றையும் நிறைவேற்றும். 11.9.2012க்கு பிறகு வரும் வக்கிர சனியின் மாற்றம்  வெளிநாட்டு தொடர்புள்ள வேலை வாய்ப்பினை ஏற்படுத்துவார். 16.5.2012ல் மாறும் குரு பகவான் தங்கள் கஷ்டங்களை தீர்ப்பார். ஆனாலும் வெளிநாட்டு பயணம் பற்றிய சிந்தனைகளை மேலே சொன்ன தேதிவரை சற்று ஒத்திவைப்பது நல்லது.

உங்களை பொறுத்தவரை, உங்கள் ராசிநாதன் சந்திரனை குரு பார்த்து ஆண்டின் தொடக்க நாள் அமைகிறது. விரயாதிபதி நீச்சம் பெற, அஷ்டமாதிபதி வக்ரம் பெற தொடங்கும் இந்த ஆண்டு உண்மையிலேயே உன்னதமான ஆண்டாகவே அமையப் போகிறது.

என்றாலும், சில மாதங்கள் கழித்து சனி மீண்டும் 4-ல் சஞ்சரிக்க போகிறார். அர்த் தாஷ்டம சனியின் ஆதிக்கம் மீண்டும் தலைதூக்க போகின்றது. அந்த நேரத்தில் தேவையில்லாத வீண் குழப்பங்களும், மனச்சஞ்சலங்களும் தேடி வந்து கொண்டே இருக்கும்.

அந்த நேரத்தில் வரும் இனம்புரியாத கவலைகளை நீக்க இறைவழிபாட்டை முறையாக மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

கேதுவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் குடும்ப பொறுப்பை வாழ்க்கை துணையிடம் ஒப்படைக்க முன் வருவீர்கள். தேக நலன் கருதி புதிய மருத்துவ சிகிச்சைகளை நாடுவீர்கள். குருப்பெயர்ச்சிக்கு பின்னால் உங்கள் ராசிக்கு 5-ல் குருவின் பார்வை பதிவதால் அதன் பின்னரே சகல வழிகளிலும் நன்மைகள் அதிகம் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

எதையும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுபவர்கள் நீங்கள். உங்கள் மனதில் புதுப்புது கருத்துகள் தோன்றி கொண்டே இருக்கும். மனோசக்தி மிக்க நீங்கள் தன்னம்பிக்கையை மட்டும் கூட்டிக்கொண்டால் தரணியில் புகழ் பெற்ற மனிதர்களில் முதலிடம் பிடிப்பீர்கள்.

பெரிய விஷயங்களை பற்றி பேசாமல் விட்டு விடுவீர்கள். சிறிய விஷயங்களை பெரி தாக்கி பார்த்து பேசுவீர்கள். உங்களுக்கு இந்த புத்தாண்டு எப்படி இருக்கும்? என்பதை பற்றி பார்ப்போம்.

ஆண்டின் தொடக்கத்தில் குருச்சந்திர யோகமும், குரு மங்கள யோகமும் இருக்கிறது. ஆயினும், குரு பத்தில் அல்லவா சஞ்சரிக்கிறார், எனவே பொறுப்புகள் மாறுவதும், இருப்புகள் கரைவதும், விருப்பங்கள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படுவதும் இயல்பான தாகவே அமையும்.

மூன்றில் சனி வக்ரம் பெறுவதால் சகோதரர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். தொழில் வளர்ச்சிக்கு கை கொடுக்க புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். அரசியலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தியும் வந்து சேரலாம். ஆச்சரியப்படக்கூடிய செய்தியும் வந்து சேரலாம்.

நவக்கிரகங்களில் சுபகிரகம் என்று சொல்லப்படும் குரு உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியாகிறார். அவர் இதுவரை 10-ல் சஞ்சரித்து பதவிகளில் சில மாற்றங்களை கொடுத்திருக்கலாம். இனி பதினோராமிடத்தில் சஞ்சரித்து, நீங்கள் மதி நுட்பத்தால் செய்யும் ஒவ்வொரு காரியங்களையும் மகத்தான அளவில் வெற்றிகளை பெற வைக்க போகிறார்.

பதினோராமிடத்தில் சஞ்சரிக்கும் குரு லாப ஸ்தான குரு என்று அழைக்கப்படுகிறார். எனவே, வரவு வந்து கொண்டே இருக்கும். வளர்ச்சி பாதைக்கு வள்ளல்களின் ஒத்துழைப் பும், வங்கிகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும். வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக நிறைவேறும். உதிரி வருமானங்களை உள்ளம் மகிழ கொண்டு வந்து சேர்க்கும் குருவை பெயர்ச்சிக்கு முன்னதாகவே பார்த்து வழிபட்டு வந்தால், பெருமைக்குரிய சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும்.

உங்கள் ராசிக்கு பதினொன்றில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே, அந்த இடத்து ஆதிபத்தியங்கள் எல்லாம் அற்புதமாக நடைபெற வைத்து விடும். குறிப்பாக, சகோதர சகாய ஸ்தானம், புத்திர ஸ்தானம், களத்திர ஸ்தானம் ஆகியவை புனிதமடைய போகின்றன. இதன் விளைவாக, நல்ல மாற்றங்களை நீங்கள் சந்திக்க போகிறீர்கள்.

சகோதர ஒத்துழைப்பு கிடைத்து தக்க விதத்தில் வாழ்க்கை பாதையை அமைத்து கொள்ள போகிறீர்கள்.

கன்னி ராசியில் செவ்வாயும், சனியும் சேரும் நாட்கள் மட்டும் நீங்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். அந்த நிகழ்வு ஆனி 9 முதல் ஆடி 29 வரை இருக் கிறது. சகோதர ஸ்தானத்தில் ஒன்று கூடும் இந்த கிரகங்களால், பொருள் இழப்புகளும், விரயங்களும் உருவாகலாம்.

பொல்லாதவர்களின் சிநேகத்தால் இல்லத்தில் குழப்பங்கள் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி ஆபரணங்கள் வாங்கி சேர்க்கும் எண்ணம் மோலோங்கும். எதை சொன்னாலும் யோசித்து சொல்வது நல்லது.

ஆவணி 27-ந் தேதி முதல் துலாம் ராசிக்குள் உச்சம் பெறும் சனி உங்களுக்கு நன்மை, தீமைகளை கலந்தே வழங்குவார். சொத்துக்களை வாங்கும் சூழ்நிலையும் உருவாகும். விற்கும் சூழ்நிலையும் உருவாகும்.

சொந்தங்களை பகை பாராட்டாமல் நடந்து கொள்வது நல்லது. வாகனங் கள் வைத்து இருப்பவர்கள் கவனமுடன் ஓட்டி செல்வதோடு, வாகன மாற்றமும் செய்ய முன்வர முயற்சிப்பர். தாய் வழி தொல்லைகளை சந்திக்க நேரிடும்.

புரட்டாசி 26-ந் தேதி முதல் தை 24-ந் தேதி வரை ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசியை பொறுத்தவரை 6, 9-க்கு அதிபதியாக குரு விளங்குவதால், வராத கடன்கள் வசூலாகும். எதிரிகள் விலகுவர். உடல் ஆரோக்கியத்திற்கு ரண சிகிச்சை செய்வதுதான் நல்லது என்று சொன்ன மருத்துவர்கள் இனி சாதாரண சிகிச்சையிலேயே நோய் குணமாகி விடும் என்று ஒரு ஆச்சரியப்படத்தக்க செய்தியை தருவர்.

பங்காளி பகைகள் உருவாவதை தவிர்க்க முடியாது. தந்தை வழி விரோதங்களும், விற்ற சொத்துக்களால் பிரச்சினைகளும் உருவாகலாம். சிறப்பு ஸ்தலங்களுக்கு சென்று வழிபட்டு வருவதன் மூலம் சிக்கல்களிலிருந்து விடுபட இயலும். அரசியலில் ஈடுபட்டு இருப்பவர் களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரலாம்.

கார்த்திகை 17-ந் தேதி துலாம் ராசியில் ராகுவும், மேஷ ராசியில் கேதுவும் சஞ்சரிக்க போகிறார்கள். இந்த கிரக பெயர்ச்சி உங்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை கொடுக்க போகிறது. உத்யோகத்தில் இருப்பவர்கள் வி.ஆர்.எஸ். வாங்கி கொண்டு புதிய கூட்டாளி களுடன் இணைந்து தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர்.

நான்காமிடத்தில் சஞ்சரிக்க போகும் ராகு தாயின் உடல் நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி அகற்றுவார். பயணங்கள் அதிகரிக்கும். வீடு மாற்ற சிந்தனைகள் மேலோங்கும்.

துலாம் ராகு தொட்ட காரியத்தில் வெற்றியடைய வைக்க முறையான ராகு ப்ரீதிகளை செய்வது நல்லது.

அர்த்தாஷ்டம ராகு என்பதால், சர்ப்ப சாந்தியை யோக பலம் பெற்ற நாளில் செய்தால், செல்வத்தை அது அள்ளி கொடுக்கும். பழைய வாகனங்களை கொடுத்து, புதிய வாகனங்களை வாங்கி மகிழ உகந்த நேரமிது.

சித்திரை 1-ந் தேதி முதல் ஆனி 6-ந் தேதி வரையிலும், பிறகு மாசி 4-ந் தேதி முதல் பங்குனி 31-ந்தேதி வரையிலும் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசி அடிப்படையில் சனி 7, 8-க்கு அதிபதியாவார். அஷ்டமாதிபதி வக்ரம் பெற்றால் யோகம் தான் என்றாலும், சப்தமாதிபதியாகவும் அல்லவா சனி சஞ்சரிக்கிறார். எனவே, வந்த வரன்கள் வாயிலோடு திரும்பி விடலாம். எந்த நேரத்திலும் வாழ்க்கை துணையோடு மோதல் உருவாகலாம். ஆகவே, அருகில் இருப்பவர்களை அனுசரித்து செல்லவேண்டிய நேரமிது. சேமிக்க தான் முடியாதே தவிர செலவிற்கு பணம் வந்து கொண்டே இருக்கும்.

மாணவர்களுக்கு:

நுட்பமான அறிவு பெற்றவர்களாக நீங்கள் திகழ்வதும் மேற்படிப்பிற்கான இடங்கள் கிடைக்கப் பெறுவதும் இந்தாண்டு உறுதியாக உள்ளது. ஆனால் பிரயாணத்திற்கும் படிப்பிற்கும் செலவுகள் மிகுதியாகும் என்று கேதுவின் அமைப்பு காட்டுகிறது. 26.9.2012 முதல் 30.11.2012 வரையுள்ள காலகட்டத்தில் தொழிற் படிப்பு மாணவர்கள் சிறந்த பலன்களை பெறுவார்கள். தங்கள் திறமைகளால் பண ஆதாயமும் கிடைக்கப் பெறுவீர்கள். 1.12.2012க்கு பிறகு ஆசிரியர்களுடன் ஒற்றுமைக் குறைவு ஏற்படும்; கவனமாக இருங்கள். உங்களுடைய பொறுப்பு கூடுதலாகும். தேவையற்ற ஈடுபாடுகளை குறைத்துக் கொண்டு, படிப்பு விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. இடமறிந்து சேர்ந்தால் இந்த ஆண்டு வலிமையாக இருக்கும்.

பெண்களுக்கு:

சகோதரர்களால் ஆதாயம் உண்டு. பூர்வீகச் சொத்துகள் கைவரப் பெறுவீர்கள். 8.1.2013 முதல் 21.1.2013 வரையுள்ள கால கட்டங்களில் அழகான வீடு அமையும். இதற்கான ஆயத்தங்களை 13.8.2012க்கு பிறகு ஆரம்பிப்பீர்கள். பெண்களுக்கு 16.5.2012 முதல் 29.5.2012 வரையிலான காலத்தில் நிச்சயமாக புத்திர பாக்கியம் கிட்டும். 29.1.2013க்கு பிறகு குடும்ப விஷயங்களுக்காக வெளியிடங்களுக்கு செல்வது அதிகமாகும். அனைத்து விவகாரங்களிலும் முழுமையான சுப பலன்கள் உண்டாகும்.

உத்யோகஸ்தர்களுக்கு:

மனைவிக்காக ஏராளமாக செலவு செய்யும் விதமாக ஆண்டு ஆரம்பிக்கிறது. பணபலத்துடன் கூடிய பதவியும் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. 28.7.2012 முதல் 30.8.2012 வரையிலான காலத்தில்  அலுவலக அலைச்சலும் பெண்களால் கலகமும் உண்டாகும். மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கவும். எவ்வளவு தூரம் பெருமை பெற்றிருந்தீர்களோ அந்த அளவுக்கு பெயரும் கெடலாம். 26.9.2012 முதல் 3.11.2012 வரை வெடி விபத்துக்களை கண்கூடாக சந்திப்பதும் அதனால் மனபாதிப்புக்கு ஆளாவதும் உண்டாகும். தைரியமாக செயல்படவும். 17.3.2013 முதல் 10.4.2013 வரை கடன்கள் முழுவதும் அடைபட்டுவிடும். சமயோசிதமாக செயல்பட்டு வெற்றி பெறுங்கள். இந்த சமயத்தில்தான் சக ஊழியர்கள் தொல்லை தருவார்கள். வாகனங்களால் நஷ்டம் ஏற்படக் கூடும்.

அரசியல்வாதிகளுக்கு:

20.6.2012 முதல் தங்கள் தலைமையின் நோக்கம் நிறைவேற, அதனால் உங்கள் நிலை உயரப் பெறும். குடும்பத்தோடு அரசியல் விஷயங்களுக்காக அடிக்கடி வெளியூர்கள் செல்ல நேரிடும். சிவபக்தி மிகும். 16.5.2012 முதல் 30.11.2012 வரை பல பொது சேவை, சமயக் கூட்டங்களில் கலந்து கொள்வீர்கள். 4.12.2012 முதல் 22.12.2012 வரை வேண்டிய அளவு பணம் பல வழிகளிலும் கிடைக்கும். இந்த காலத்தில் மாந்திரீகர்களின் தொடர்புகள் ஏற்படும். ஆகவே கவனமாக இருங்கள். சொந்த முயற்சிகளிலேயே வேண்டியது கிடைக்கிறதே என்றிருப்பது நல்லது. கலாசார சம்பந்தமான துறைகளில் உறுப்பினராகும் அமைப்பும் தெரிகிறது.  

வியாபாரிகளுக்கு:

குடும்பத்தில் சிக்கல்கள் இருக்கும். கடன் தொல்லையும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாததும் ஆரம்பத்தில் இருக்கும். 15.6.2012க்கு பிறகு நற்பலன்கள் ஆரம்பிக்கும். 22.6.2012க்கு பிறகு 12.8.2012க்குள் நல்ல மனோதிடம் ஏற்படும். தொழிற்சாலைகளை முழுவதும் சீரமைப்பீர்கள். இது சற்று  சிரமத்தை ஏற்படுத்தினாலும் எதிரிடையான போக்கு குறையும். 4.11.2012க்கு பிறகு 13.12.2012க்குள் எதிர்பார்த்த கடன் உதவிகளும் வரவேண்டிய தொகைகள் வசூலாவதும் வியாபாரத்தை சுலபமாக செயல்படுத்த உதவும். கூட்டாளிகளின் தொடர்புகளை மெல்ல குறைத்து விட இந்த நேரம்தான் நல்லது, பயன்படுத்திக் கொள்ளுங்கள். இது ராகு-கேது பெயர்ச்சிக் காலம் என்பதால் தங்களின் தற்போதைய நிலையை அப்படியே நிலை நிறுத்தி வெற்றியடையுங்கள்.

எச்சரிக்கை:

9.9.2012 முதல் 25.9.2012 வரை கழுத்து, பிடரி வலி ஏற்பட்டால் நரம்பு நிபுணர்களை உடனடியாக சந்தித்து தீர்வு காணுங்கள். 26.9.2012 முதல் 3.11.2012 வரை காவல்துறையின் எச்சரிக்கைகளை முழுவதும் மதித்து நடப்பதுதான் நல்லது. 1.12.2012க்கு பிறகு கல்லூரி மற்றும் கல்வி நிறுவனப் போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம். 22.1.2013 முதல் 1.3.2013 காலத்தில் வீட்டை காப்பீடு செய்து வைப்பது நஷ்டத்தை ஈடு செய்யும்.

அச்சாரங்கள்:

புதிய தொழில் அமைத்தல், வியாபாரம் தொடங்குதல் ஆகியவை முன்கூட்டியே திட்டமிட்டிருந்தால் மட்டுமே செய்யவும். பார்த்து வரும் தொழிலை 22.6.2012 முதல் 12.8.2012, 4.11.2012 முதல் 13.12.2012 வரையுள்ள காலங்களில் சீர்செய்து கொள்வது நல்லது.

பரிகாரம்:

வெவ்வேறு காலங்களில் இந்த ஆண்டில் இருமுறை, தனி ஆஞ்சநேய சந்நதிகள் உள்ள கோயில்களுக்குச் சென்று ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றுங்கள். யோக நரசிம்மர் தரிசனம், சிவ சஹஸ்ரநாம பாராயணம் செய்தல் அல்லது கேட்டல் நன்று.


  Tags : Nanthana, ,Tamil, ,New, ,Year, ,Predictions, , , நந்தன, ,வருட, ,தமிழ்ப், ,புத்தாண்டு, ,பலன்கள் ,Kadakam,Nanthana,Tamil,New,Year,Predictions


மகளிர்

பிற ராசிகளுக்கான பலன்கள்
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in