Tamilnewyear Dhanusu,Nanthana Tamil New Year Predictions ஜோதிடம் , ராசி பலன் , தினபலன் , வார பலன் , ஆண்டு பலன் 2010 , ஆணடுபலன் 2011, "கர" வருட தமிழ் ஆண்டுபலன் , குருபெயர்ச்சி பலன் , சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் , வாஸ்து , நியூமராலஜி , எண்கணிதம் , Jothidam , Astrology , Vasthu , Neumerology , Rasi Balan 2010,Rasi Balan 2011 Balan, Weekly Raasi Balan, Guru Balan , Sani Balan , Dai Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji
tamilkurinji logo


 


ஜோதிடம் >>> தமிழ்ப் புத்தாண்டுபலன்கள் - Tamil new year

23021

Dhanusu

Friday , 6th April 2012 04:23:18 AM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Astrology_details.php on line 206
search
Dhanusu,Nanthana Tamil New Year Predictions தனுசு

மூலம், பூராடம், உத்ராடம், 1-ம் பாதம் வரை

பெற்றோர் பெருமையை நிலைநிறுத்துவதை குறிக்கோளாகக் கொண்ட தனுசு ராசி நேயர்களே!

நீண்ட ஆலோசனைகளுடன் நிலையான பல பணிகளை செயல்படுத்த வேண்டும் என்று இந்த ஆண்டை துவக்குகிறீர்கள். குடும்பங்களில் மழலைச் செல்வங்களின் வரவால் இனிமை கூடும். அரசுக் கடன் உதவிகள் தாமதமானாலும் தொழில் மற்றும் வியாபார விஷயங்கள் சீராக நடைபெறும்.  30.5.2012க்கு பிறகு பிள்ளைகளின் திருமண விஷயம் பற்றி முடிவெடுப்பீர்கள். அறிஞர்கள் அவையில் பெருமைப்படத்தக்க சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.
உங்களுக்கு இந்த நந்தனப் புத்தாண்டு எப்படியிருக்கும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசியைப் பார்க்கிறார். எனவே குருச்சந்திர யோகம் செயல்படுகிறது. வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வளர்ச்சி கூடும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும். பூமி சேர்க்கை அதிகரிக்கும்.

பாம்பு கிரகங்களின் ஆதிக்கத்தின்படி பயணங்கள் அதிகமாகும். பொதுவாக நண்பர்களின் நல் ஆதரவோடு முன்னேற்றம் காணும் நேரமிது.

நவக்கிரகங்களில் நல்ல பலனைக் கொடுப்பவர் குரு என்று சொல்வார்கள். அவர் உங்கள் ராசியைப் பொறுத்தவரை ராசிநாதனாகவும், 4-க்கு அதிபதியாகவும் விளங்கு கிறார். அவர் வைகாசி மாதம் 6-ம் தேதி பெயர்ச்சியாகி சகடயோகத்தை வழங்கப் போகிறார்.

எனவே ஒரு தொகை செலவழிந்த பிறகு அடுத்த தொகை வந்து சேரும். ராசிநாதன் 6-ல் சஞ்சரிக்கும் பொழுது இடமாற்றம், ஊர் மாற்றம், பதவி வாய்ப்புகள், புதிய பொறுப்புகள் வந்து சேரலாம்.

`தேவ குரு 6-ல் வந்தால் தேவைகள் பூர்த்தியாகும்' என்பார்கள். ஆவல்கள் தீரவேண்டின் அனுசரிப்பும் உங்களுக்குத்தேவை. 4-க்கு அதிபதியாகவும் குரு விளங்குவதால் பெற்றோர் வழிப் பகைகளும் உருவாகலாம். சொத்துக்கள் வாங்க, விற்க உகந்த நேரமாக இது அமையும்.

6-ல் சஞ்சரிக்கும் குருவிற்கு பரிகாரமாக வியாழன் தோறும் குரு வழிபாட்டை மேற்கொள்வதோடு, இல்லத்திலும் குரு கவசம்பாடி, குரு வழிபாடு செய்யலாம். சுய ஜாதகத்தில் வியாழ திசை, வியாழ புத்தி நடப்பவர்கள், ரிஷபம் அல்லது துலாம் ராசியில் குரு இருப்பவர்கள் திசை மாறிய தென்முகக் கடவுளை வழிபடுவது நல்லது. குருவின் அருட்பார்வை உங்கள் ராசிக்கு 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிவாகிறது.

அதன் பார்வை பலத்தால் குடும்ப ஸ்தானம் பலப்படுகிறது. எனவே திருமணத்தடை அகலும். தித்திக்கும் வாழ்க்கை அமையும். வருமானப் பெருக்கம் ஏற்படும். வசதி வாய்ப்புகள் பெருகும். தொழில் ஸ்தானம் புனித மடைவதால், தொழில்வளம் மேலோங்கும். குருவின் பார்வை சாதாரண மனிதர்களைக் கூட சக்கரவர்த்தியாக மாற்றிவிடும். அரி யணை ஏறும் யோகம் முதல் அன்றாட வாழ்க்கையை நன்றாக அமைத்துக் கொள்ளும் யோகம் வரை அனைத்தையும் கொடுப்பது குருவின் கையில்தான் இருக்கிறது. எனவே உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு மற்றும் பயணங்களால் பலன் களும் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

ஆனி 9-ம் தேதி முதல் ஆடி 29-ம் தேதி வரை உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் செவ்வாயும் சனியும் ஒன்று கூடுகிறார்கள். இக்காலத்தில் திடீர் திருப்பங்கள் பலவும் ஏற்படும். தொழிலில் இருப்பவர்களுக்குத் தொழில் மாற்றம், உத்யோகத்தில் இருப்பவர் களுக்கு உத்யோக மாற்றம், பதவியில் இருப்பவர்களுக்குப் பதவி மாற்றம் ஆகியவை ஏற்படலாம்.

பிள்ளைகளால் பிரச்சினைகளைச் சந்திக்கின்ற நேரமிது. மனக்குழப்பங்கள் ஏற்படும் பொழுதெல்லாம் அருகில் இருக்கும் ஆன்மிகப் பெரியவர் கள், சான்றோர்களின் ஆலோசனை களைக் கேட்டு நடப்பது நல்லது.

ஆவணி 27-ம் தேதி உங்கள் ராசிக்கு பதினோராமிடமான லாப ஸ்தானத்தில் சனி உச்சம் பெறப் போகிறார். இது மிகுந்த யோகம் தரும் நேரமாகும். பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும்.

குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு கிட்டும்.

புரட்டாசி 26-ம் தேதி முதல் தை 24-ம் தேதி வரை ரிஷபத்தில் குரு வக்ரம் பெறுகிறார். இக்காலம் உங்களுக்கு ஓர் பொற்காலமாகும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். விழிப்புணர்ச்சி இல்லாமல் செயல்பட்டால் கூட விரும்பும் நல்ல தகவல்கள் வந்து கொண்டேயிருக்கும். அரசியல் துறையில் ஈடுபட்டவர்களுக்குப் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும். எதிரிகள் விலகி சரணடைவர்.

உத்யோகத்தில் இருப்பவர்கள் ஊதிய உயர்வோடு இடமாற்றம் காண்பர். மஞ்சள் ஆடை அணிவித்து, முல்லைப்பூமாலை சூட்டி குரு பகவானை வழிபட்டால் எல்லையில்லாத நற்பலன்கள் கிட்டும்.

கார்த்திகை 17-ம் தேதி 11-ம் இடத்தில் ராகுவும், 5-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். ராகு பலத்தால் பொருளாதார நிலை உயரும். போற்றுகிற செல்வாக்கு மேலோங்கும். வீடு கட்டும் வாய்ப்பு முதல், நாடு விட்டு நாடு செல்லும் வாய்ப்பு வரைநடைபெறும்.

5-ல் சஞ்சரிக்கும் கேது, பிள்ளைகள் வழியில் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். அவர்களின் கல்வி நலன் கருதி எடுத்த செயல் வெற்றி பெறும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும்.

இக்காலத்தில் சர்ப்ப சாந்திகளை முறையாகச் செய்தால் சந்தோஷங்களைச் சந்திக்கலாம்.

சித்திரை 1-ம் தேதி ஆனி 6-ம் தேதி வரையிலும் பிறகு மாசி 4-ம் தேதி முதல் பங்குனி 31-ம் தேதி வரையிலும் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசி அடிப்படையில் சனி 2, 3 ஆகிய இடங்களுக்கு அதிபதியாக விளங்குவதால் அதன் வக்ர இயக்க காலத்தில் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவைப்படும். பணப்பற்றாக்குறை அதிகரிக்கலாம். எப்படி, எப்படியெல்லாம் தொழிலைப் பெருக்கினால் தொகை வந்து சேரும் என்று சிந்திப்பீர்கள். குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்குத் தொல்லைகள் உருவாகலாம். வந்த வரன்கள் வாயிலோடு நின்றுவிடலாம்.

சனி மூன்றாமிடத்திற்கு அதிபதி என்பதால் தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக் கும். உடன் பிறப்புகள் உங்களை விட்டு விலகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும் என்பது சந்தேகம்தான். ஆவணி மாதத்திற்கு மேல்தான் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும். அந்த நேரத்தில் திருநள்ளாறு, பெருச்சிக் கோவில், திருக்கொள்ளிக்காடு போன்ற சிறப்பு ஸ்தலங் களுக்குச் சென்று வழிபட்டு வருவது நல்லது.

மாணவர்களுக்கு:

தொழிற்கல்வியை தேர்ந்தெடுக்கும் முனைப்பில் மாணவர்கள் ஈடுபடுவார்கள். 16.5.2012க்கு பிறகு படிப்பு சம்பந்தமாக அதிக செலவு ஏற்படும். குறுகிய காலத்தில் மாணவர்கள், தலைமை ஆசிரியர், முதல்வர் இவர்களுடன் மோதல் போக்கை ஏற்படுத்திக் கொள்ளும் சூழ்நிலை உருவாகும். பெற்றோர் குழந்தைகளை எச்சரித்து வையுங்கள். 11.12.2012 முதல் 22.12.2012 வரையான காலகட்டத்தில் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி நல்ல பெயர் எடுப்பார்கள். 29.1.2013 முதல் 21.2.2013 வரையான காலகட்டத்தில் இந்த ஆண்டின் அனைத்து பாடங்களிலும் நல்ல தேர்ச்சியும் முன்பிருந்த பள்ளியின் பெருமையையும் மீட்டெடுப்பதும் நடைபெறும். சுக்கிரனின் உதவியால் பெற்றோருக்கு தரும் வாக்கினை காப்பாற்றுவீர்கள்.

பெண்களுக்கு:

11.9.2012 முதல் 16.9.2012 வரையான காலம் குறுகியதாய் இருந்தாலும் இந்த நாட்கள் தான் தங்கள் திருமணத்தை முடிவு செய்யும். 10.7.2012 முதல் 1.8.2012 வரை குடும்பங்களில் மிகுந்த சௌபாக்கியம் நிலவும். நீங்கள் நினைத்த பணலாபம் வந்து சேரும். 16.5.2012 முதல் 30.11.2012 வரையான காலம் தங்களுடைய உடல் ஆரோக்யத்தையும் மகள், மருமகள் குடும்பங்களின் சுபிட்சத்தையும் உணர வைக்கும். 1.12.2012க்கு பிறகு அலுவலக பண பொறுப்புகளில் உள்ள பெண்களுக்கு பணத்தால் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும். 4.1.2013 முதல் 28.1.2013 வரையான காலத்தில் அலுவலகத் தலைமை மாறுபடுவது தவிர்க்க இயலாது. உள்ளபடியே ஏற்றுக் கொள்வதும் நல்லது. மொத்தத்தில் எச்சரிக்கையுடன் இருக்க இந்த ஆண்டு நஷ்டமில்லா ஆண்டாக அமையும்.

உத்யோகஸ்தர்களுக்கு:    

அரசு உதவிகள் ஆரம்பத்திலேயே கிடைக்கும். அதிகாரிகளின் அனுகூலமான இருப்பால் அலுவலகத்தில் 21.6.2012 வரை தங்களின் வழித் தோன்றல்களை உருவாக்குவீர்கள். 26.9.2012 முதல் 3.11.2012க்குள் தாங்கள் எதிர்பார்த்த பழைய இடத்திற்கு திரும்பலாம். இது பண லாபத்துடன் கூடிய பதவி உயர்வாக இருக்கும். 4.1.2013 முதல் 28.1.2013 வரையான காலத்தில் தங்கள் சம்பாத்தியத்தில் சகோதருடன் ஒற்றுமையாக இருப்பதும் அவர்கள் தங்களால் முன்னேற்றம் அடைவதும் நடைபெறும். 1.12.2012க்கு பிறகு ராகு-கேது பெயர்சிகளால் அலுவலக விஷயங்களில் நீங்கள் நினைத்தபடி லாபமடைவதும் அதிகாரிகளால் பாராட்டப்படுவதும் நிச்சயம். தங்கள் ஆலோசனைகள் எல்லோராலும் ஏற்கப்படும். இந்த ஆண்டு முன்னேற்றமான ஆண்டுதான்.

வியாபாரிகளுக்கு:    

9.9.2012 முதல் 25.9.2012 வரையான காலத்தில் அநேக வழிகளில் தொழிலில் வளர்ச்சியைக் காணலாம். வெளிநாட்டுத் தொடர்புகளால் அயல்நாட்டுப் பொருட்கள் மற்றும் மூலதனங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்கள் மூலமாக ஆதாயமான பலன்களும் வந்துசேரும். 11.12.2012 முதல் 3.1.2013 வரையான காலத்தில் மாற்று மத அரசு அதிகாரிகளோடு மோத வேண்டாம். 29.1.2013 முதல் 21.2.2013 வரையான காலகட்டத்தில் மூடப்பட்ட தொழிற்சாலைகளிலுள்ள நிறுத்தி வைக்கப்பட்ட இயந்திரங்களை வாங்கி செயல்படுத்தலாம். இதில் அதிக லாபம் கிடைக்கும். பிற்பகுதியில் கேதுவின் அமைப்பால் வருமானவரி தொந்தரவுகள் அதிகமாகும். எனவே அரசு வரிகளை கவனமாக செலுத்தவும்.

அரசியல்வாதிகளுக்கு:    

நினைத்த காரியங்கள் கைகூடுவதும் தலைமை பதவிகள் கிடைக்கப் பெறுவதுமான ஆண்டாக இது ஆரம்பிக்கிறது. எனினும் 16.5.2012க்கு பிறகு குருவின் மாற்றத்தால் செல்வந்தர்களை பகைத்துக் கொள்வதால் அரசியல் தலைமையும் மந்திரிகளும் உங்களுக்கு பகையாக ஆவார்கள். பணம் படைத்தவர்களை குறைத்து மதிப்பிட்டு ஏமாற வேண்டாம். 11.9.2012க்கு பிறகு மாற்று மத பணக்காரர் ஒருவரால் தங்களது போராட்டத்தில் வெற்றி கிடைக்கும். எதிரிகள் பணிந்து போவார்கள். 26.9.2012 முதல் 3.12.2012 வரை உங்களுக்கு நண்பராகிவிட்ட அந்த புதியவரால் தலைமையின் வசீகரத்தை பெறுவீர்கள். தங்களுக்கு அழகான வீடு அமைவதும் ஒரு உயர் பதவி கிடைப்பதும் நிச்சயம். தொண்டர்கள் அதிகரிப்பார்கள். மொத்தத்தில் எல்லா மதிப்பீட்டையும் சீர் செய்து கொள்ள முன்னேற்றம் தரும் ஆண்டு.

எச்சரிக்கை:

13.4.2012 முதல் 11.9.2012 வரையான காலத்தில் இதய செயல்பாடுகளை அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 1.12.2012 முதல் 13.4.2013 வரையான காலகட்டத்தில் கர்ப்பிணிப் பெண்கள் மிகுந்த எச்சரிக்கையோடு மருத்துவக் கண்காணிப்பில் இருக்கவும்.  22.2.2013 முதல் 24.2.2013 ஆகிய தேதிகளில் நீடித்த பிரயாணம் எதுவும்
செய்யாமல் இருப்பது நல்லது.

அச்சாரங்கள்:

1.12.2012க்கு பிறகு ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபடலாம். 29.1.2013 முதல் 21.2.2013 வரையான காலத்தில் மூடப்பட்ட தொழிற்சாலைகளை வாங்கும் முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

பரிகாரம்:

அக்கினியை உபாசிப்பவர்களை தரிசித்தல், யாகங்களுக்கு உதவி செய்தல் மற்றும் காளிகாம்பாளை தரிசனம் செய்வது நல்ல பலனைத் தரும். வெங்கடேச சுப்ரபாதம் சொல்வதும் கேட்டலும் இந்த ஆண்டு நல்ல பலனை அளிக்கும்.


  Tags : Nanthana, ,Tamil, ,New, ,Year, ,Predictions, , , நந்தன, ,வருட, ,தமிழ்ப், ,புத்தாண்டு, ,பலன்கள் ,Dhanusu,Nanthana,Tamil,New,Year,Predictions


மகளிர்

பிற ராசிகளுக்கான பலன்கள்
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in